காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும்முன் காலகட்டம், வயது, சார்ந்திருப்போரின் எண்ணிக்கை, பாதுகாப்பு தொகை, போன்ற சில காரணிகளை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆகையால், காப்பீடு துவங்கும் முன் ஒரு சிறு ஆராய்ச்சி நல்ல பலன் தரும். நாம் கால காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுகளை எடுத்து கொண்டால் இரண்டும் ஒரு சில நன்மைகளையும் , வரம்புகளையும் கொண்டுள்ளது. கால காப்பீட்டு திட்டத்தின் வரையறைகளை பார்ப்போம், அதன் மூலம், நீங்கள் காலகாப்பீடை தேர்வு செய்வதா? அல்லது ஆயுள் காப்பீ்டுத் திட்டத்தை தேர்வு செய்வதா? என்று பாப்போம்.
இழப்பு நன்மை–
இரண்டு திட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று பார்த்தால், கால காப்பீடு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் காப்பீடு செய்தவரின் மரணம் ஏற்பட்டால், இறப்பு நன்மையை மட்டும் தருகிறது. ஆனால், ஆயுள் காப்பீடு இறப்பு நன்மை மற்றும் முதிர்ச்சியடைந்த தொகை இரண்டையும் கொடுக்கிறது. கால காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் இறப்பு நன்மை தொகை, ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் மொத்த தொகையை விட அதிகமாகும். பெரும்பாலான பாலிசிதாரர்கள் ஆயுள் திட்டத்தையே அதன் இரட்டை நன்மை காரணமாக தேர்வு செய்தாலும், கால காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்த பிரீமியம் தொகையில் அதிக இறப்பு நன்மை தொகை கிடைப்பதால், குறைந்தது ஒரு கால காப்பீட்டு திட்டத்தில் இருப்பது நல்லது.
ஆபத்து கால நன்மை மற்றும் சேமிப்பு -
கால காப்பீட்டு திட்டம் பாலிசிதாரரின் மரணத்தின் போது, அவரது குடும்பத்திற்கு இறப்பு நன்மை தொகை வழங்கி உதவுகிறது. ஆனால், இந்த திட்டம் முதிர்ச்சி அடைந்த தொகை மற்றும் ஆபத்து கால நிவாரணம் ஆகியவற்றை, ஆயுள் காப்பீட்டு திட்டத்தை போல் அளிப்பதில்லை. எனவே, ஒருவர் இறப்பு நன்மை தொகை மற்றும் குறைந்த பிரீமியம் தொகையை மட்டும் தேர்வு செய்வதாக இருந்தால், கால காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால், அவர் இறப்பு நிவாரணம் மற்றும் முதலீடு தேர்வு செய்வதாக இருந்தால் ஆயுள் காப்பீடு திட்டத்தையே கருத்தில் கொள்ள வேண்டும்.
(View in English : Term Insurance)
இலகுத் தன்மை -
கால காப்பீட்டு திட்டத்தில் இருந்து விலக வேண்டும் எனில், நாம் பிரீமியம் கட்டுவதை நிறுத்தினால் போதும். காப்பீடு ரத்து செய்யப்பட்டு, காப்பீட்டுத் தொகையும் கைக்கு வந்து விடும். ஆனால், ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் முழுவதும் செலுத்தினால் மட்டுமே, காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலக முடியும். காப்பீட்டுத் தொகையும் கையில் கிடைக்கும். ஒரு வேளை காப்பீடு முடியும் முன்பே காப்பீட்டாளர் முடிவு செய்தால், பாலிசியின் மொத்த சேமிப்பு தொகையையும் பெற முடியாது. கட்டிய பிரீமியம் மட்டும் தான் கிடைக்கும், அதுவும், குறிப்பிட்ட தொகையை கழித்துவிட்டு தான் கொடுப்பார்கள்.ஆனால், பெரும்பாலான கால காப்பீட்டு திட்டங்கள் அனைத்தும் புதுப்பிக்க கூடியவை. காப்பீடு திட்டத்தை எண்டவுமென்ட் திட்டமாக மாற்றி கொள்ளும் வசதியும் இதில் உண்டு. பிரீமியம் தொகை மட்டும் கூடும்.
*இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் அனுமதி பெற்ற காப்பீடு திட்டத்தின் படி காப்பீடு நிறுவனங்கள் அனைத்து சேமிப்புகளை வழங்குகிறது. வழக்கமான நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் பொருந்தும்.
பிரீமியம் தொகை -
ஒரு தனிப்பட்ட நபர் அதிக பாதுகாப்பு தொகை வைத்திருக்க விரும்பினால், அவர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் அதிக பிரீமியம் செலுத்த வேண்டியது அவசியம். இதனால், அதிக பிரீமியம் கட்ட இயலாமல் நிறைய காப்பீட்டாளர்கள் போதுமான அளவு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். மேலும், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் குறைந்த 5%-7% வருமானமே தருகிறார்கள் . காப்பீட்டாளர் தனது காப்பீட்டை இடையிலே முடிக்க நேரிட்டால் இது இன்னும் குறைகிறது. மேலும், நிர்வாகம் தொடர்பாக வேறு, வருமானம் இன்னும் குறைகிறது. இதற்கு நேர்மாறாக, கால காப்பீட்டு திட்டங்கள் குறைந்த பிரீமியம் தொகையில், அதிக பாதுகாப்பு தொகை வழங்குவதால் அவை எளிதில் கிடைக்க கூடியதாக இருக்கிறது.
உதாரணமாக, 30 வயதுள்ள ஒரு நபர் கால காப்பீட்டு திட்டத்தில் ₹10,00,000 ஐ 20 வருடங்களுக்கு உள்ள திட்டத்தில், சேர்ந்தால் அவர் கட்ட வேண்டிய ஆண்டு பிரீமியம் ₹3000 மட்டும் ஆகும். ஆனால், அதே அளவு தொகையை லாபமில்லா எண்டவுமென்ட் திட்டத்தின் மூலம், அதே நன்மைகள் பெற வருடம் ₹30,000 கட்ட வேண்டும். லாபமுடைய எண்டவுமென்ட் திட்டத்தில்,₹50,000 ஆண்டுக்கு கட்ட வேண்டும்.
கால காப்பீட்டுத் திட்டங்கள் நிரந்தர வருமானம் அற்ற, தனது குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்க இயலாத, தனி நபர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் .
வரி நன்மை -
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக பிரீமியம் தொகை காரணமாக வருமான வரி சட்டம் 80C இன் கீழ், அதிக வரி நன்மை பெற ஒரு தனிநபரால் முடியும் என்றும், முதிர்ச்சி தொகைகளுக்கு வரி இல்லை என்றும், தவறாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் , கால காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்த பிரீமியம் தொகையில் அதிக வரி நன்மை பெற முடியும் . எனவே வரி நன்மையை கருத்தில் கொண்டு காப்பீட்டுத் திட்டம் துவங்குவதாக இருப்பின் , கால காப்பீட்டுத் திட்டம் மிக சிறந்தது. இரண்டு திட்டத்தின் பிரீமியம் தொகைக்கு இடைப்பட்ட, வேறுபாட்டு தொகையை மட்டும் கொண்டே வேறு சில ELSS, PPF திட்டங்களை நாம் துவங்கி கொள்ளலாம்
உங்களுடைய நல்ல புரிதலுக்கு கீழே கால காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஒப்பிட்டு பார்ப்போம்.
அளவுருக்கள்
|
கால காப்பீட்டுத் திட்டம்
|
எண்டவுமென்ட் திட்டம்
|
யூலிப் திட்டம்
|
முதிர்ச்சி நன்மை
|
முதிர்ச்சி தொகை அளிக்கும் நன்மை, இதில் இல்லை
|
உண்டு.
|
உண்டு.
|
இறப்பு நன்மை
|
பாதுகாப்பு தொகை, இறப்பு நன்மையாக வழங்கப்படும்.
|
பாதுகாப்பு தொகையுடன், போனஸ் (இருந்தால்) அதுவும் சேர்த்து வழங்கப்படும்.
|
பாதுகாப்பு தொகை அல்லது நிதி தொகை இவற்றில், எது அதிகமோ அது வழங்கப்படும்.
|
பிரீமியம் ( 30 வயது தனி நபருக்கு மற்றும் 25 லட்ச பாதுகாப்பு தொகை, 25 வருடங்களுக்கு )
|
பிரீமியம் ஏறத்தாழ: ₹4000 ஆண்டுக்கு , காப்பீட்டின் காலம் , வயது மற்றும் தொகை பொறுத்து
|
பிரீமியம்ஏறத்தாழ: ஆண்டுக்கு ₹21,000 காப்பீட்டு திட்டத்தின் காலம் , வயது மற்றும் தொகை பொறுத்து கூடும்.
|
பிரீமியம் ஏறத்தாழ : ₹2.5 லட்சம் ஆண்டுக்கு. காப்பீட்டு திட்டத்தின் பாதுகாப்பு தொகை பொறுத்து பிரீமியம் தொகை நாமே முடிவு செய்து கொள்ள முடியும்.
|
இறுதியாக!
முதலீடு செய்பவர்களுக்கு, ஆயுள் காப்பீடு , தமது நிதி மேம்பாடு திட்டத்தின் அடிப்படை என்று புரிந்து கொள்வது அவசியம். ஒரே நேரத்தில் கால காப்பீட்டு திட்டம் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் இரண்டையும் சேர்த்து வைத்திருப்பது நன்மையே! ஏனெனில், ஒரு திட்டம் முதலீடு செய்த தொகை அதிக மதிப்புடன்,மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு பெற உதவுகிறது. இன்னொன்று நமது பாசத்திற்கு உரியவர்கள் எதிர்காலத்தை, குறைந்த பிரீமியம் கட்டுவதால் பாதுகாக்க உதவுகிறது. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், நமது தேவைக்கு ஏற்ப சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்க முடியும்.