இதுநாள் வரை, இவ்வகையான வரையறுக்கப்பட்ட கால காப்பீட்டு திட்டங்கள் பொதுவாக இள வயது பாலிசி தாரர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன ஆனால் தற்போது ஆயுள் காப்பீட்டு கம்பனிகள் இந்த திட்டத்தை மூத்த குடிமக்களுக்கும் அறி முகப்படுத்தியுள்ளனர். 50 வயது முதல் 60 வயது வரையுள்ள தனி நபர்கள் தற்போது பல்வேறு காப்பீட்டு திட்டங்களை வாங்க இயலும். இவ்வகையான காப்பீட்டு திட்டங்கள் 75-80 வயது வரை காப்பீட்டு வசதிகளை மூத்த குடிமக்களுக்கு நீட்டித்துள்ளன.
மூத்த குடிமக்கள் எதற்காக இந்த கால வரையிட்டு மூத்த குடிமக்கள் காப்பீட்டு திட்டத்தை வாங்க வேண்டும் என்பதை நாங்கள் இங்கே விரிவாக விளக்கியுள்ளோம். அது மட்டுமின்றி, மக்கள் விரும்புகின்ற சிறந்த கால காப்பீட்டு திட்டங்கள் பற்றிய நுணுக்கமான தகவல்களையும் இங்கே பகிர்ந்திருக்கிறோம்.
மூத்த குடிமக்கள் ஏன் கால காப்பீட்டு திட்டத்தை வாங்க வேண்டும்?
கீழே குறிப்பிடுள்ள காரணங்களை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் சேர்வதை பற்றி பரிசீலிக்க வேண்டும்.
- கால காப்பீட்டு திட்டத்தில், பாலிசிதாரர் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால், பாலிசியில் குறிப்பிடுள்ள இறப்பு சலுகை பாலிசிதாரர் குறிப்பிடுள்ளஅவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த தொகை இறந்தவரின் குடும்பத்தினர் திருப்பி செலுத்த வேண்டிய கடன் அல்லது வில்லங்கம் ஏதேனும் இருப்பின் அவற்றை எதிர்கொள்ள பேருதவியாக இருக்கும்.
- பாலிசிதாரரை சார்ந்துள்ளவர்களின் எதிர் கால நிதி நிலைமையை பாதுகாத்துக்கொள்ள கால காப்பீடு திட்டம் உதவுகிறது.
- சில காப்பீட்டு பாலிசிகள், பாலிசி தொகையை திரும்ப பெறுவதற்க்கு பல்வேறு விருப்பங்களை அளிக்கின்றன. இதன் மூலம் பாலிசிதாரர் அவருடைய விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு முடிவு தொகையை திரும்ப பெறும் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
- நீண்ட கால திட்டங்கள் பாலிதாரர் தனது நிதி நிலமையை சீராக வைத்து கொள்ள உதவும்.
- பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் குடும்பத்தின் மாதாந்திர வருவாய்க்காக வேறு பணிகள் செய்துவரும் நபர்கள் இந்த முதியோர்க்கான கால காப்பீட்டு திட்டத்தில் அவசியம் முதலீடு செய்யவேண்டும், ஏனென்றால், துரதிருஷ்டவசமாக அவர்கள் இறக்க நேரிட்டால் இந்த பாலிசி தொகை அவர்கள் குடும்பத்தினரின் எதிர்கால நிதி வரவிற்கு ஒரு மாற்று பாதுகாப்பாக அமையும்.
மூத்த குடிமக்களுக்கான சிறந்த கால காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
- வயது வரம்பு- பொதுவாக இவ்வகையான கால காப்பீட்டு திட்டங்களில் சேர்வதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு 18 ஆக இருந்தாலும் அதிக பட்ச வயது வரம்பு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. இருப்பினும் பல வேறு வகைப்பட்ட கால காப்பீட்டு திட்டங்களிலும் உயர்ந்த பட்ச வயது வரம்பு 55 முதல் 65 வயதிற்கு உட்பட்டே உள்ளது. மற்றும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாலிசிகளின் அதிகபட்ச முதிர்ச்சிகாலம் 85 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. .
- காப்பீட்டில் அனுமதிக்கப்பட்டவை- மூத்த குடிமக்களுக்கான இந்த கால காப்பீட்டு திட்டம் ஒரு சாதாரண பாதுகாப்பு திட்டம் மட்டுமே என்பதால் பாலிசி நடப்பு காலத்தில் பாலிசிதாரார் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால், பாலிசியில் குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு இறப்பு பாதுகாப்பு தொகை மட்டுமே வழங்கப்படும். ஆனால் பாலிசிதாரர், பிரீமியம் திரும்ப அளிக்கப்படும் காப்பீட்டு திட்டத்தில் (டெர்ம் ரிட்டர்ன் ஆஃப் பிரிமியம் பிளான்) இணைந்து இருந்தால், பாலிசி காலத்தில் அவர் கட்டிய மொத்த தொகையும் பாலிசி முதிர்வு அடைந்த பிறகு அவருக்கு திருப்பி அளிக்கப்படும்.
- ப்ரீமிய விகிதங்கள்- ஆயுள் பாதுகாப்பு திட்டங்களிலேயே அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் குறைந்த பிரீமியம் கொண்டவை இந்த கால காப்பீட்டு திட்டங்களாக இருந்தாலும், பிரீமிய விகிதங்கள் இதில் பங்குகொள்வோரின் வயதை கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஒரு நபர் தனது முதிர்ந்த வயதில் இந்த பாலிசி வாங்கினால் அவர் கட்ட வேண்டிய பிரிமியம் அதிகமாகவே இருக்கும்.
- மருத்துவ பரிசோதனைகள்- இந்த திட்டத்தில் பாலிசி வாங்க விரும்பும் மூத்த குடிமக்கள், அவர்களுக்கு எந்தவிதமான உடல் வியாதிகளும் அச்சமயம் இல்லை என்பதை காப்பீட்டு நிறுவனம் உறுதிசெய்து கொள்ள ஏதுவாக, பாலிசி காலத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்துகொள்ள வேண்டிய நபர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவில்ளையேல், அவர்/அவள் தான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்கள் உறுதிப்பத்திரம் அளிக்க வேண்டும். பாலிசி வாங்கும்போது உங்கள் தேக ஆரோக்கியத்தை பற்றி எந்த உண்மையும் மறைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- ரைடர்ஸ்- மூத்த குடிமக்களின் கால காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டவை தவிர மேலும் சில அதிகப்படியான நலன்கள் ‘ரைடர் பெனிஃபிட்’ வடிவில் அளிக்கப்படுகின்றன. இவை திட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும். பாலிசிதாரர்கள் அவர்கள் விரும்பும் ‘ரைடர் பெனிபிட்’களை உரிய பிரீமியம் செலுத்தி இணைத்துக்கொள்ளலாம்.
*இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் ஐஆர்டிஏஐ அனுமதித்துள்ள காப்பீட்டு திட்டங்களின் கீழ் காப்பீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் மட்டுமே செல்லு படியாகும்
பற்றி அறிய கால காப்பீடு
(View in English : Term Insurance)
மூத்த குடிமக்களுக்கான சிறந்த கால காப்பீட்டு திட்டங்கள்
மூத்த குடிமக்களுக்கான சில பிரபலமான சிறந்த திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த திட்டங்களின் விவரங்களை இங்கே காணுவோம்.
திட்டத்தின் பெயர்
|
நுழைவு வயது
|
முடிவு வயது
|
உறுதி தொகை
|
|
ஏகோன் லைப் ஐடெர்ம் திட்டம்
|
குறைந்தது –20 வருடம்
அதிகபட்ச
வயது – 65 வருடங்கள்
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது –ரூ. 10 லட்சம்
அதிகபட்சம் – வரம்பு இல்லை
|
இப்போதே விண்ணப்பிக்கவும்
|
அவைவா ஷீல்ட் பிளாட்டினம் டெர்ம் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 60
|
65 ஆண்டுகள்
|
குறைந்தது –ரூ 50 லட்சம்
அதிகபட்சம் – வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
பாரதி ஆக்ஸா ஈ புராடேக்ட்
டெர்ம் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 65
|
70 ஆண்டுகள்
|
குறைந்தது – 25 லட்சம்
அதிகபட்சம் – வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
கனரா எச்எஸ்பிசி ஈ ஸ்மார்ட் டெர்ம் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது –70
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது – 25 லட்சம்
அதிகபட்சம் – வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
ஏடெல்வெய்ஸ் டோக்கியோ லைப் பாதுகாப்பு திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 60
|
70 ஆண்டுகள்
|
குறைந்தது – 15 லட்சம்
அதிகபட்சம் – வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
எக்ஸைட் லைப் மை டெர்ம் இன்சூரன்ஸ்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 65
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது – 25 லட்சம்
அதிகபட்சம் – 25 கோடி
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
ஃப்யூச்சர் ஜெனரலி ஃப்லெக்ஸி ஆன்லைன் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம்
|
குறைந்தது –18/25 வருடம்
அதிகபட்ச
வயது –55
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது –50 லட்சம்
அதிகபட்சவரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
ஐடிபிஐ சீனியர் சிட்டிசன் டெர்ம் திட்டம்
|
குறைந்தது –25 வருடம்
அதிகபட்ச
வயது – 60
|
70 ஆண்டுகள்
|
ரூ.5 லட்சம்
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
இந்தியா ஃபர்ஸ்ட் லைப் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 60
|
70 ஆண்டுகள்
|
குறைந்ததரூ.1 லட்சம்
அதிகபட்சம் -ரூ 50 கோடி
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
கோடக் பிரிபர்டு ஈ டெர்ம் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 65
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது ரூ.25 லட்சம்
அதிக பட்ச வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
எல்ஐசி ஈ டெர்ம் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 60
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது ரூ.25 லட்சம்
அதிக பட்ச வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
மாக்ஸ் லைப் இன்சூரன்ஸ் ஆன்லைன் டெர்ம் பிளான் பிளஸ்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 60
|
85 ஆண்டுகள்
|
குறைந்தது ரூ.25 லட்சம்
அதிகபட்சம் -ரூ1 கோடி
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
பிரமெரிக யு புராடேக்ட் டெர்ம் திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது –55
|
65 ஆண்டுகள்
|
குறைந்தது ரூ.25 லட்சம்
அதிக பட்ச வரம்பு இல்லை
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
எஸ்பிஐ லைப் பூர்ண ஸுரக்ஷா திட்டம்
|
குறைந்தது –18 வருடம்
அதிகபட்ச
வயது – 65
|
75 ஆண்டுகள்
|
குறைந்தது ரூ.20 லட்சம்
அதிக பட்ச வரம்பு ரூ 2 கோடி
|
இப்போது விண்ணப்பிக்கவும்
|
பொறுப்பு துறப்பு: பாலிசி பஜார் குறிப்பிட்ட எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தையோ, திட்டங்களையோ மதிப்பிடவோ, ஆமோதிக்கவோ அல்லது சிபாரிசோ செய்யவில்லை.
ஏகோன் லைப் ஐ டெர்ம் பிளஸ் திட்டம்
பாலிசிதாரரின் குடும்பத்தினர் துரதிர்ஷ்டவசமாக சந்திக்க நேரிடும் அசம்பாவிதங்களின் போது அவர்களின் நிதி நிலைமையை சமாளிக்க பாதுகாப்பாக விளங்கும் இந்த திட்டம் ஒரு விரிவான கால காப்பீட்டு திட்டமாகும். காப்பீட்டு பாதுகாப்பு அளிப்பது மட்டும் இன்றி இந்த திட்டம் விபத்தில் அகால மரணம் மற்றும் சிக்கலான நோய்கள் போன்ற பல்வேறு வகையான அதிகப்படியான நன்மைகளையும் அளிக்கின்றன. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களையும் அதன் நன்மைகளையும் இங்கே காண்போம்.
ஏகோன் லைப் ஐ டெர்ம் பிளஸ் திட்டத்தின் அம்சங்களும் அதன் நன்மைகளும்:
- இந்த திட்டம் காப்பீட்டு காலததை 80 வருடங்கள் வரை நீட்டிக்க விருப்பம் அளிக்கிறது.
- இந்த திட்டத்தின் கீழ் 10 வகையான அடிப்படை தீவிர நோய்களுக்கும் 38 வகையான அதி தீவிர நோய்களுக்கும் காப்பீட்டு வசதியை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.
- தீவிர நோய்களுக்கும் நிரந்தர இயலாமைக்கும் பிரீமியத்தை தள்ளுபடி செய்யும் வசதியும் உள்ளது.
- இந்தியா வருமான வரி சட்டம் பிரிவு 80C ன் படி வரி சலுகை அளிக்கப் படுகிறது.
- புகை பிடிக்காதவர்களுக்கும் பெண்களுக்கும் ப்ரீமியத்தில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப் படுகிறது.
- இந்த பாலிசியில் உள்ள வாழ்க்கை காப்பீட்டு காலத்தை அதிகரிக்கும் வசதியால், பாலிசிதாரர் பாலிசியின் பாதுகாப்பு காலத்தை அதிகரிக்க இயலும்.
- பாலிசி காலத்தில் காப்பீடு செய்தவர் அகால மரணமடைந்தால், இறப்பு சலுகை தொகை அவர் பாலிசியில் குறிப்பிடுள்ள நியமனதாரருக்கு வழங்கப்படும்.
ஐடிபிஐ சீனியர் சிட்டிசன் டெர்ம் இன்சூரன்ஸ்
இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட கால காப்பீட்டு திட்டமாகும். மூத்த குடிமக்களுக்கு விரிவான பாதுகாப்பு அளிப்பது மட்டும் இன்றி எதேனும் அசம்பாவிதம் நேரும் காலத்தில் அவர்கள் குடும்பத்தினருக்கு இந்த பாலிசி ஒரு சிறந்த பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களையும் அதன் நன்மைகளையும் இங்கே காண்போம்.
ஐடிபிஐ சீனியர் சிட்டிசன் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் அம்சங்களும் அதன் நன்மைகளும்:
- குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.
- பாலிசிதாரர் முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இன்றி பாலிசி அளிக்கும் பாதுகாப்பை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் உத்திரவாதம் கொடுக்கிறது.
- பாலிசி எடுத்த தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உயர்ந்த பட்ச பாதுகாப்பு ரூபாய் 5 லட்சம் வரை அளிக்கிறது.
- பாலிசி எடுத்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள், பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், அவர் குறிப்பிடுள்ள நியமனதாரருக்கு அவர் செலுத்திய ப்ரீமியம் தொகையை போல 125% திருப்பி கொடுக்கப்படும்.
- பாலிசிதாரர் செலுத்தியப்ரீமியம் தொகையில் ரூ.1.50 லட்சம் வரை இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80C யின் கீழ் வரி சலுகை அளிக்கிறது.
- இது ஒரு கால காப்பீட்டு திட்டம் என்பதால் இறப்பு சலுகை (மட்டுமே அளிக்கப்படும். பாலிசி முதிர்ச்சி சலுகை எதுவும் திரும்பி அளிக்கப்படமாட்டாது.
எல் ஐ சி ஈ-டெர்ம் திட்டம்
எல்ஐசி ஈ டெர்ம் பிளான் ஒரு விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு திட்டம். இந்த திட்டம் பாதுகாப்பு எடுத்த நபருக்கு ஏற்படும் அசம்பாவிதங்களால் அவர் குடும்பதினர் சந்திக்க நேரிடும் பொருளாதார சிக்கலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. எந்த வித சிக்கலும் இன்றி இந்த திட்டத்தை ஆன் லைனில் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் நன்மைகளும் கீழே கொடுக்கப்பட்டது உள்ளன.
எல் ஐ சி ஈ டெர்ம் திட்டம்: சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- இது ஒரு ஆன்லைன் கால காப்பீட்டு திட்டம் திட்டம் என்பதால், பாலிசி எடுக்கும் முறை எந்த சிக்கலும் இன்றி மிகவும் எளிய முறையில் உள்ளது.
- புகை பிடிக்காதவர்களுக்கும் பெண்களுக்கும் பரீமியத்தில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
- இது ஒரு கால காப்பீட்டு திட்டம் என்பதால் இறப்பு சலுகை மட்டுமே அளிக்கப்படுகிறது.
- காப்பீட்டு பாதுகாப்பு வசதி மட்டும் இன்றி, பாலிசிதாரருக்கு வருமான வரி சலுகையும் அளிக்கப்படும். இந்த பாலிசியின் கீழ் செலுத்திய ப்ரீமியம் தொகையில் ரூ.1.50 லட்சம் வரை இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80C யின் கீழ் வரி சலுகை அளிக்கிறது.
- இந்த திட்டத்தின் கீழ் 75 வயது வரை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- பாலிசிதாரர் குறைந்தது 10 வருடங்களில் இருந்து அதிக பட்சம் 35 வருடங்கள் வரை பாலிசி காலத்தை தேர்ந்து எடுக்கும் வசதி உள்ளது.
மாக்ஸ் லைப் இன்சூரன்ஸ் ஆன்லைன் டெர்ம் பிளான் பிளஸ்
எவ்வித சிரமமும் இன்றி எளிய முறையில் ஆன்லைன் வழியே வாங்க இயலும் இத்திட்டம் மூத்த குடிமக்களுக்கான ஒரு விரிவான திட்டமாகும். இத்திட்டம் நீங்கள் தேர்ந்து எடுக்க மூன்று வெவ்வேறு வகைப்பட்ட பாதுகாப்பு விருப்பங்களை அளிக்கிறது. நெருக்கடி காலத்தில் பாதுகாப்பு எடுத்தவரின் குடும்பத்தினருக்கு ஒரு பொருளாதார பாதுகாப்பை இந்த திட்டம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் நன்மைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
மாக்ஸ் லைப் இன்சூரன்ஸ் ஆன்லைன் டெர்ம் பிளான் பிளஸ் சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- இத்திட்டத்தில் மூன்று வகையான வெவ்வேறு வகை விருப்பங்களை அளிக்கும் காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. அவையாவன
- அடிப்படை உயிர் காப்பீடு
- உயிர் காப்பீடு + மாதாந்திர வருமானம்
- உயிர் காப்பீடு + அதிகரிக்கும் மாதாந்திர வருமானம்
- காப்பீட்டாளருக்கு 85 வயது வரை மேலே குறிப்பிட்ட மூன்று வெவ்வேறு வகைப்பட்ட ஆயுள் காப்பீட்டு பாதுகாப்புகளும் உள்ளன.
- ப்ரீமியம் செலுத்த இரண்டு வகையான விருப்பங்களை இந்த திட்டம் அளிக்கிறது.
- சீரான ப்ரீமியம் செலுத்துதல்
- 60 வயது வரை மட்டுமே செலுத்துதல்
- இந்த பாலிசியின் கீழ் செலுத்திய ப்ரீமியம் தொகையில் ரூ.1.50 லட்சம் வரை இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80 c யின் கீழ் வரி சலுகை அளிக்கிறது.
- திட்டத்தின் காப்பீட்டை அதிகரிக்க தேவைப்பட்ட ‘ரைடர்” களை இணைத்துக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது
- .இந்த திட்டம் ஆன் லைனில் அளிக்கப்படுவதால், பாலிசி எடுக்கும் முறை எந்த சிக்கலும் இன்றி மிக எளிய முறையில் உள்ளது
எஸ்பிஐ லைப் பூர்ண ஸுரக்ஷா பிளான்:
வெகு தீவிர நோய் பாதுகாப்பு அம்சங்கள் உள் புகுத்தப்பட்ட இந்த பாலிசி மூத்த குடிமக்களுக்கான எந்த திட்டத்தோடும் இணைக்கப்படாத ஒரு கால காப்பீட்டு திட்டமாகும். நெருக்கடிகாலங்களில் காப்பீட்டாளரின் குடும்பதினருக்கு விரிவான பாது காப்பு அளிக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களும் நன்மைகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன
எஸ்பிஐ லைப் பூர்ண ஸுரக்ஷா பிளான் சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- சிக்கலான நோய்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க இத்திட்டம் வழி வகுக்கிறது.
- சிக்கலான நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டால், ப்ரீமியம் தள்ளுபடி செய்யும் நலன் இந்த பாலிசியில் சேர்க்கப்படுள்ளது.
- ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் ஆயுள் காப்பீடு மற்றும் சிக்கலான நோய் காப்பீடு இவை இரண்டிற்கும் இடையே பாலிசியில் உறுதி செய்யப்பட்ட தொகையை தானாகவே சரி செய்து கொள்ளும் வசதி.
- இந்த பாலிசியின் ப்ரீமியம் திட்ட காலம் முழுவதும் நிலையானது.
- இந்த பாலிசியின் கீழ் செலுத்திய ப்ரீமியம் தொகையில் ரூ.1.50 லட்சம் வரை இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80 c யின் கீழ் வரி சலுகை அளிக்கிறது.
- இத்திட்டத்தில் அளிக்கப்படும் அதிக பட்ச வயது வரம்பு 75 ஆண்டுகள்.
நீங்கள் விரும்பும் மற்ற டெர்ம் காப்பீட்டு திட்டங்கள்
- ப்ரீமியம் திரும்ப அளிக்கப்படும் டெர்ம் திட்டங்கள்
- குரூப் டெர்ம் திட்டங்கள்
- மருத்துவ பரிசோதனை இன்றி டெர்ம் காப்பீடு
- டெர்ம் காப்பீடு பலன்கள்
- பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா