இந்தியாவில், முழு ஆயுட் காப்பீட்டு திட்டதின் கீழ் பாலிசிதாரர் 100 வயதிற்குமேல் உயிர்வாழின் முதிர்ச்சி எண்டவ்மென்ட் பாதுகாப்பு, முதிர்ச்சி நன்மையாக அளிக்கபடுகிறது.
நீங்கள் உயிர்வாழும்வரை இந்த பாலிசி பாதுகாப்புஅளிக்கிறது. இது முழுவாழ்விற்கும் பாதுகாப்பு அளிப்பதால், நிரந்தர ஆயுட்காப்பீட்டு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் போனஸ் இரட்டை நன்மையாக வழங்குகிறது. முதல்10-15 வருடங்களுக்கு பிரிமியம் செலுத்தி வாழ்க்கை முழுவதும் ஆயுட்காப்பீடை அனுபவிக்கலாம். உதாரணமாக, நீங்கள் 30 ஆவதுவயதில் 30 லட்சம் மதிக்கதக்க ஒரு காப்பீடு திட்டதில் சேர்ந்தால், உங்களுக்கு 45 வயது வரை மட்டும் பிரிமியம் செலுத்தி வாழ்க்கை பாதுகாப்பை பெறலாம். குறிப்பிட்ட காலத்திற்குமட்டுமே பிரிமியம் கட்டுவதால் தொகை அதிகமாக செலுத்த வேண்டும்.
முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் எப்படி செயல்படுகிறது?
முழு ஆயுட்காப்பீடு திட்டம் , வாழ்நாள் பாதுகாப்பு அளித்து காப்பீடு செய்தவரின் நிதிநிலைமையை மேம்படுத்துவவோடு, அவருக்குபின் அவரது குடும்பத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதையும் கருத்தில்கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆயுள்காப்பீட்டுதிட்டம் ஆகும்.
இந்த திட்டங்கள் முதிர்ச்சி நன்மை மற்றும் உயிர்வாழும் நன்மையோடு இறப்பு நன்மையும் வழங்குகிறது. காப்பீட்டு நிறுவனங்களால் அளிக்கப்படும் பல்வேறு வகையான திட்டங்களில் இருந்து நமது தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் நாமே திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வருடமும் காப்பீட்டாளர் ஒரு பிரீமியம் தொகையை கட்டவேண்டும். இதில் ஒரு பங்கு பாதுகாப்பு செலுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது மீதம் உள்ள பங்கு முதலீடாக கருதப்படுகிறது. லாபம் கிடைத்தால், பாலிசிதாரர் முதலீடு செய்த தொகையில் போனஸ் வழங்கபடுகிறது, மீதத்தொகை முதலீடாகவே நிறுவனத்தில் இருக்கிறது. முதலீடு வளர்ந்து கொண்டேவந்து, முதலீட்டாளர் திருப்பபெறும் போதோ அல்லது முதிர்ச்சி அடையும்போதோ வழங்கப்படுகிறது.
மொத்தமாக, முழு ஆயுட்காப்பீட்டுதிட்டங்கள், முழு வாழ்விற்கும் பாதுகாப்பு மற்றும் ஒரு வருமானத்தையும் உருவாக்குகிறது. தங்களுடைய முதலீடு பட்டியலில் இதை சேர்த்துக் கொள்வது நன்று.
முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் - பண்புகள்
இந்த திட்டம் பாலிசிதாரருக்கு முழு வாழ்க்கை பாதுகாப்பு அளிக்கிறது. பாலிசிதாரரின் இறப்புக்குபின்ப ரிந்துரைக்கப்பட்டவரிடம் காப்பீட்டு தொகையை வழங்குகிறது. இது கீழ்கண்ட பண்புகளுடன் வருகிறது.
இறப்பு நன்மை
எதிர்பாராத நிகழ்வாக பாலிசிதாரரின் மரணம் காப்பீடு முதிர்ச்சிக்கு முன்பே ஏற்படின் இறப்பு நன்மையானது, பரிந்துரைக்கப்பட்டவரிடம் வழங்கப்படுகிறது. அனைத்து பிரிமியம் தொகையும் ஒழுங்காக கட்டப்பட்டுவந்த நிலையில், காப்பீடு நிறுவனம் இறப்பு நன்மையாக மொத்த தொகையையும் வழங்குகிறது.
பிரிமியம் உத்திரவாதம்
இந்த திட்டத்தில், பிரிமியவட்டிவீதமானது காப்பீட்டு திட்டத்தின் முழுகாலத்திற்கும் ஒரேமாதிரியாக ஏற்ற இறக்கமின்றி இருக்கிறது. அதனால், காப்பீட்டாளர் ப்ரதி மாதம் ரூ.2500 செலுத்துகிறாரெனில், காப்பீட்டின் மொத்தகாலத்திற்கும் அதே செலுத்த வேண்டும்.
வாழ்க்கை பாதுகாப்பு
முழு ஆயுட்கால திட்டங்கள் காப்பீடாளரின் எதிர்பாரா மரணத்தின்போது அவரது குடும்பத்தை ஒரு குறிப்பிட்ட உத்திரவாத தொகை மற்றும் அதன் போனஸின்மூலம் பாதுகாத்துவருவதை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது.
வரி நன்மை
இந்த திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட பிரிமியம் வருமான வரி சட்டம் பிரிவு 80C மற்றும் 10(10D) இன் கீழ்வரி விதிப்பிற்க்குஅ ப்பாற்பட்டது ஆகும்.
கடன் வசதி
பாலிசி துவங்கி 3 வருடத்திற்கு பிறகு காப்பீட்டாளர் பாலிசியின் அடிப்படையில் கடன்பெற்றுகொள்ளும் வசதிஉள்ளது.
முழுஆயுட்காப்பீடுதிட்டம் - நன்மைகள்
முழுவாழ்க்கை பாதுகாப்பு
காப்பீட்டாளரின் 100 வயது வரை, இந்த திட்டம் இறப்பு நன்மையை வழங்குகிறது. பாலிசிதாரருக்கு இறப்புவரை பாதுகாப்பு தருகிறது.
வாழ்க்கை பாதுகாப்பு உத்திரவாதம்
இந்த திட்டம் குடும்பத்தில் சம்பாதிப்பவர் இல்லாத போதும் தேவையான நிதிபாதுகாப்பு அளிக்கிறது.
குறிப்பிட்ட காலகட்டணங்கள்
காப்பீடு முதிர்ச்சி அடையும்போது போனஸ் இருப்பின், அதன் உடன் கூடிய ஒரு பெருந்தொகையை பாலிசிதாரர் முதிர்ச்சி நன்மையாக பெறுகிறார். பெரும்பாலான ஆயுட்காப்பீடு திட்டங்கள் முதிர்ச்சி நன்மையை நிரந்தர வருமானம் போலவே தருகிறது. எனவே, காப்பீடு முதிர்ச்சியின்போது காப்பீட்டாளர் முதிர்ச்சி தொகையை மொத்தமாகவோ அல்லது நிரந்தர வருமானம் போன்றோ பெற்றுகொள்வது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்
வரி நன்மைகள்
இந்த திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட பிரிமியம், வருமான வரி சட்டம் பிரிவு 80C இன் கீழ் வரி விதிப்பிற்க்கு அப்பாற்பட்டது ஆகும். மேலும், முதிர்ச்சி தொகையும் வருமான வரி சட்டம் 10(10D) 1961 இன் கீழ் வரிகளுக்கு அப்பாற்பட்டது ஆகும்.
பணத்தின் மூலாதாரம்
தனிநபர் ஒவ்வொருவரும் எதிர்காலத்திற்கு முதலீடுகளை சேமிப்பது வாழ்கையின் நிலையற்ற தன்மைக்கு உறுதுணையாக அமையும் என்பது வல்லுனர்களின்கருத்து ஆகும். ஆனால், குறைந்த காலகட்டதில் அதிக வருமானத்தை உருவாக்குவது இயலாது. எனவே, இந்தியாவில் முழு ஆயுட் காப்பீட்டு திட்டத்தின் மூலம் எதிர்காலத்தை பாதுகாப்பதுடன், நீண்டகால நிதிநிலை கனவுகளை நிறைவேற்றி கொள்ளலாம்.
கடன் வசதி வழங்குதல்
முழு ஆயுட் காப்பீட்டு திட்டங்கள் 100 வயது வரை பாதுகாப்பு வழங்குவதால், காப்பீட்டாளர் அந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். ஆனால், காப்பீடு துவங்கி ஒழுங்காக பிரிமியம் கட்டிஇருப்பதோடு, 3 வருடகாலம் முடிந்திருக்க வேண்டும்.
திட்டத்தை சார்ந்திருப்போருக்கான நன்மைகள்
குடும்பதினருக்கு நிதிபாதுகாப்பு வழங்க , முழு ஆயுட்காப்பீட்டுதிட்டம் நல்ல தேர்வாக அமையும். உதாரணமாக, ஒரு தனிநபர் முழு ஆயுட்காப்பீட்டுதிட்டத்தில் இணைந்தால் வாழ்க்கை துணை இருவருக்கும் அதிக நிதிபாதுகாப்புகி டைக்கும். அதை ஓய்வூதியமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவர் இறந்தால் மற்றவரை பரிந்துரையாளராக கருதி இறப்புந ன்மை வழங்கப்படுகிறது.
மேலும், வாழ்க்கை துணையின் காப்பீடானது, துர்சம்பவங்களில், குழந்தைகளுக்கு நிதி உதவியாக அமைகிறது. ஆகவே, முழு ஆயுட்காப்பீட்டுதிட்டமானது செல்வநிலை உயர்வதற்க்கும், பாதுகாப்பிற்கும் ஒரு சிறந்த வழி. இதன்மூலம் நாம், நம் குடும்பத்திற்க்கு நிதி பாதுகாப்பு மற்றும் நல்லவாழ்க்கை அமைத்து கொடுக்க முடியும்.
முழு ஆயுட்காப்பீட்டுதிட்டத்தின் வகைகள்
முழு ஆயுட்காப்பீட்டுதிட்டம் என்பது ஆயுட்காப்பீட்டுதிட்டத்தின் வகைகளுள் ஒன்றாகும். இது, காப்பீட்டாளருக்கு இறப்பு பாதுகாப்பு அளிக்கிறது. இதன்மூலம் இத்திட்டத்திற்கு என்று குறிப்பிட்ட காலம் கிடையாது. பெரும்பாலான காப்பீடு திட்டங்கள் காப்பீட்டாளருக்கு தொகையைதந்து ஓய்வூதியமாக உதவிபுரிகிறது. இந்தமாதிரியான காப்பீடு திட்டங்கள் காப்பீடாளருக்கு இறப்புவரை பாதுகாப்பு வழங்குகிறது. முழு ஆயுட்காப்பீட்டுதிட்டத்தின் வகைகளாவன,:
பங்கேற்பற்ற முழுஆயுட்காப்பீட்டு திட்டம்
இது ஒரு குறைந்த தொகை திட்டம் ஆகும். இது அளவுதொகை மற்றும் பிரிமியம் பிரிவுகள் ஆகிய பண்புகளை கொண்டது. ஒரு பங்கேற்பற்ற திட்டம் என்பதால் , இதற்கு போனஸ் போன்றவை கிடையாது.
பங்கேற்கும் முழுஆயுட்காப்பீட்டு திட்டம்
பங்கேற்பற்ற முழு ஆயுட்காப்பீட்டுதிட்டத்திற்கு எதிராக இந்த திட்டமானது, போனஸ் வசதி கொண்டுள்ளது. இதில் பிரிமியம் தொகை காப்பீட்டு நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் லாபமானது போனசாக வழங்கப்படுகிறது.
முழுமையான முழுஆயுட்காப்பீட்டு திட்டம்
இந்த திட்டத்தில், காப்பீட்டாளர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிமியம் கட்ட வேண்டும். ஆபத்துகால பாதுகாப்பு, வாழ்நாள் முழுவதும் உண்டு, காப்பீட்டு தொகையானது அவரது மரணத்திற்க்கு பிறகே வழங்கப்படும்.
குறிப்பிட்ட கட்டண முழுஆயுட்காப்பீட்டு திட்டம்
இந்த திட்டத்தில், பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட மாறாத தொகையை பிரிமியமாக ஒழுங்கானமுறையில் செலுத்த வேண்டும். காப்பீட்டின் மாதாந்திர தொகை இருதிவரையிலும் மாறாதிருக்கும்.
காப்பீட்டளர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரையோ பிரிமியம் செலுத்த வேண்டும். ஆபத்துகால நன்மை காப்பீட்டளரின் வாழ்க்கை முழுவதும் உண்டு.
ஓரே பிரிமிய முழுஆயுட்காப்பீட்டு திட்டம்
இந்த திட்டத்தில், மொத்த பிரிமியம் தொகையும் ஒரேமுறையிலேயே செலுத்தப்பட்டுவிடும். இதில், காப்பீட்டின் பயனாளிக்கு ஒரு பெருந்தொகையானது உத்திரவாதமாக அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள சிறந்த முழுஆயுட்காப்பீட்டு திட்டங்கள்
திட்டங்கள்
|
நுழைவுவயது (குறைந்தபட்சம் - அதிகபட்சம் )
|
முதிர்ச்சிவயது
|
காப்பீட்டுகாலம்
|
உத்திரவாததொகை
|
ஏய்கன்லைஃப்கேரன்டீட்இன்கம்அட்வான்டேஜ்இன்சூரன்ஸ்திட்டம்
|
20-55 வயது
|
85 வயது
|
85-நுழையும்வயது
|
குறைந்தபட்சம்- ரூ. 1,00,000 அதிகபட்சம்–இல்லை
|
ஹெச்டிஎஃப்சிசம்பூரன்சம்ரித்திப்ளஸ்
|
30-60 வயது
|
75 வயது
|
15-40 வயது
|
குறைந்தப்பட்சம் - ரூ .65,463 அதிகபட்சம்-இல்லை
|
ஐடிபிஐஃபெடரல்முழுஆயுட்காப்பீட்டுதிட்டம்
|
18-55 வயது
|
100 வயது
|
100 வயது
|
குறைந்தபட்சம் - நுழைவுவயதைபொறுத்தது,அதிகபட்சம்- இல்லை
|
இந்தியாஃபர்ஸ்ட்சிஎஸ்சிஷுப்லாப்திட்டம்
|
18 -55 வயது
|
65 வயது
|
10 அல்லது 15 வயது
|
காப்பீடாளரின்வயதுபொறுத்து
|
கோடக்பிரிமியர்லைஃப்திட்டம்
|
3க்கு 8 வயதுபிபிடி-55 வயது 12 வயதுக்குபிபிடி 53 வயது- 15 வயதுக்குபிபிடி-50 வயது 20 வயதுக்குபிபிடி 45 வயது
|
99 வயது
|
நுழைவுவயது 99 க்குகுறைவு
|
குறைந்தப்பட்சம் ( முதிர்ச்சியின்போது) - ரூ 2,00,000
|
மேக்ஸ்லைஃப்முழுஆயுள்சூப்பர்
|
18-50 வயது
|
100 வயது
|
100 வயதுவரை
|
குறைந்தப்பட்சம் - ரூ 50,000 அதிகபட்சம் - இல்லை
|
பிஎன்பிமெட்லைஃப்முழுஆயுள்வெல்த்திட்டம்
|
30நாள் - 65 வயது
|
99வயது
|
நுழைவுக்கு 99க்குகுறைவானவயது.
|
பாதுகாப்புதொகையின்மடங்குகள்: நுழைவின்போதுவயது 45 எனில், - 0.5* (நுழைவில் 70 வயதுஎனில்) , 10 க்குபாத்தியப்பட்டது.
நுழைவின்போதுவயது 45க்குஅதிகம்எனில், - 0.25* ( நுழைவுவயது 70 எனில்) , 7 க்குபாத்தியப்பட்டது.
|
ப்ராமெரிக்காசாஹஜ்சுரக்க்ஷா
|
18 - 50 வயது
|
75 வயது
|
15 மற்றும் 20 வயது
|
குறைந்தபட்சம் ரூ 1,00,000 அதிகபட்சம் - இல்லை
|
ரிலையன்ஸ்லைஃப்லாங்க்சேவிங்க்ஸ்
|
15-30 வயது
|
70 வயது
|
15- 30 வயது
|
குறைந்தபட்சம் - ரூ 80,000அதிகபட்சம் -இல்லை
|
எஸ்பிஐலைஃப்ஷுப்நிவேஷ்
|
18-60 வயது
|
65 வயது
|
15 வயது ( கூடுதலாக, 100 வயதுவரைவாழ்க்கைபாதுகாப்பு )
|
குறைந்தபட்சம் - ரூ 75,000 (x1000/-) அதிகபட்சம் - இல்லை
|
ஸ்டார்யூனியன்டா-ய்ச்சி'ஸ்ஜீவன்ஆஷ்ரே
|
8-50 வயது
|
70 வயது
|
15-25 வயது
|
குறைந்தபட்சம் - ரூ 2,00,000 அதிகபட்சம் - ரூ 50,00,000
|
டாடாஏஐஏலைஃப்இன்சுரன்ஸ்ஃபார்ச்சூன்மேக்ஸிமா
|
30 நாள் - 60 வருடம்
|
100 வயது
|
100 க்குகுறைந்தவயது
|
ஒருமுறைதொகை - ஒருமுறைபிரிமியம்போன்று 1.25 மடங்கு
குறிப்பிட்டதொகை - 10 *ஏபிஅதிகம்அல்லது 0.5*காப்பீடுகாலம்*ஏபி
|
பொறுப்புதுறப்பு :"காப்பீட்டாளரால் வழங்கப்படும் காப்பீட்டு திட்டங்களை, ஒரு குறிப்பிட்ட காப்பீடாளரை பாலிசிபஸார் மதிப்பிடவோ , பரிந்துரைக்கவோ, விற்பதோஇல்லை".
ஏய்கன் லைஃப் கேரன்டீட் இன்கம் அட்வான்டேஜ் இன்சூரன்ஸ் திட்டம்
இந்த திட்டம் ஒருவர் ஓய்வு பெற்றபின்பும் சுகமான வாழ்வை வழங்குகிறது. காப்பீட்டுகாலத்திற்கு முடிவில், காப்பீடுசெய்தவருக்கு உத்திரவாதமான வருடாந்திரஈ ட்டுதொகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் வாகன ஓட்டுனர் நன்மையுடன் வருவதால், ஒருவர் அவரது தேவைக்குஏற்ப அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஹெச்டிஎஃப்சி சம்பூரன்சம்ரித்தி ப்ளஸ்
இந்த திட்டம் பாலிசிதாரருக்கு, எண்டோவ்மென்ட் அல்லது எண்டோவ்மென்ட் முழு ஆயுட்காப்பீட்டுதிட்டம் இவற்றுள் விருப்ப தேர்வு செய்யும் சலுகையை தருகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை எண்டோவ்மென்ட்திட்டமாக, இது வாழ்க்கை பாதுகாப்பை 100 வயது வரை உயர்த்திகொள்ள உதவுகிறது. வாழ்க்கை பாதுகாப்புடன் இது வரிசலுகையும் பெற்றுதருகிறது.
ஐடிபிஐ ஃபெடரல் முழுஆயுட்காப்பீட்டு திட்டம்
இந்த திட்டம் காப்பீட்டாளருக்கு 100 வயது வரை வாழ்க்கை பாதுகாப்பு அளிக்கிறது. இதில், காப்பீடு முடிவடைந்தவுடன் காப்பீட்டாளருக்கு ஒரு பெருந்தொகை முதிர்ச்சி நன்மையாக வழங்கப்படுகிறது. வாழ்க்கை பாதுகாப்புடன் இந்த திட்டம் போனஸ்களை வழங்குகிறது. உத்திரவாதமாக, கூடுதல் போனஸ்கள் இருந்தால் அதுவும் சேர்த்து வழங்கப்படுகிறது.
இந்தியாஃபர்ஸ்ட்சிஎஸ்சிஷுப்லாப்திட்டம்
இந்த திட்டம் , குறைந்த சேமிப்பு மற்றும் குறைந்த பிரிமியம் மூலமாகவும் ஒருவர் முதலீடை அதிகப்படுத்துவதற்கும் வருங்கால பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது. படிப்படியாக பணத்தைபெறும் வழி மூலம் 5 வருடம் முடிந்த பிறகு, நமது முதலீட்டை நாம் பெற்றுகொள்ள முடியும். இந்த திட்டத்தில் இணைவது நமக்கு அதிக நன்மைபயக்கும்.
கோடக் பிரிமியர் லைஃப் திட்டம்
இந்த திட்டம் காப்பீட்டாளர் சுகமாக சலுகைகளை பெற வழிவகுக்கிறது. மேலும் இது ஒருவர் பொறுப்புடன் நடந்து தனது குடும்பத்தை பாதுகாக்க உதவுகிறது. இது 99 வயதுவரை நம்மை பாதுகாக்கும். குறிப்பிட்டபி ரிமியத்துடன்கூடிய முழுவாழ்க்கை திட்டத்தில் ஒருவர் பிரிமியம் காலம் முடிந்தவுடன், போனஸ் வசதியை பயன்படுத்திகொள்ளலாம். இந்த வசதி நாம் நம் வாழ்க்கையின் குறிக்கோள்களை அடையவும் நமது வாழ்க்கையின் பொற்காலத்தை அனுபவிக்கவும் உதவுகிறது.
மேக்ஸ் லைஃப் முழுஆயுள் சூப்பர்
இது ஒரு பங்கேற்கும் முழு ஆயுட்காப்பீட்டு திட்டமாகும். இதில் 100 வயதுவரை நாம் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இது காப்பீட்டாளருக்கு போனஸ் வசதியையும் தருகிறது. இதன் அதிகபடியான காப்பீட்டு பாதுகாப்பு, யார் ஒருவர் தனது அன்பிர்க்குரியவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க விருப்பபடுகிறார்களோ அவர்களுக்கு உரியது.
பிஎன்பி மெட்லைஃப் முழுஆயுள்வெல்த் திட்டம்
இந்த திட்டம் ஆபத்திற்குரியகாலத்திலும் நல்லநிலையை அடைய உதவுகிறது. எந்தவொரு இடையூறும் இன்றி நமது வாழ்வை பாதுகாக்க உதவுகிறது. இது ஒரு சில சலுகைகளுடன் நமது நிதிநிலையை மேம்படுத்த உதவுகிறது. இதன் எளிதான வழிகள்மூலம் பொருளாதார குறிகோள்களை அடைந்து எதிர்காலத்தை உருவாக்கலாம்.
ப்ராமெரிக்கா சாஹஜ்சுரக்க்ஷா
இந்த திட்டம் ஆபத்துகாலங்களிலும் நமது வாழ்வின் பொற்காலத்தை, குழந்தைகளின் படிப்பை அல்லது திருமணத்தை மற்றும் சில முக்கியமானவற்றைகுறித்து கவலைஇன்றி இருக்க உதவும். இந்ததிட்டம் இனிவரும் காலங்களில் நமக்கு நாமே நிதிமேன்மை மற்றும் நிரந்தர வருமானம் தருவதால், நாம் இறக்க நேரிட்டலும்கூட, இதில் முதலீடு செய்தல் ஒரு புத்திசாலித்தனமான முடிவாக அமைகிறது.
ரிலையன்ஸ்லைஃப்லாங்க்சேவிங்க்ஸ்
இந்த திட்டம், ஒருவருக்கு சேமிக்கும் மனப்பான்மையை வளர்ப்பதுடன், வாழ்க்கை மற்றும் குடும்ப பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த திட்டம் நமது நெடுங்கால கனவுகளான வீடுவாங்குதல், குழந்தையின் எதிர்காலம், உலக சுற்றுலா ஆகியவற்றை பெற உதவும். இதை பெறுவது நல்ல நிதிநிலையை அடைவதற்கு சமம். இந்த திட்டமானது நமக்கு பிறகு நமது குடும்பம் நன்மைகளை பெறுவதற்கும் எதிர்காலம் பாதுகாப்பாக அமைவதற்கும் வழிசெய்கிறது.
எஸ்பிஐ லைஃப் ஷுப்நிவேஷ்
இது ஒரு லாபமில்லா எண்டோவ்மென்ட் திட்டம். இது காப்பீட்டாளருக்கு முழு பாதுகாப்பு வழங்கும். இது வருங்கால தேவைக்காக இன்றே சேமிக்க உதவுகிறது. இது காப்பீடாளர் காப்பீட்டின் மொத்த காலத்திற்கும் உயிர் வாழ்ந்தால் முதிர்ச்சி நன்மையாக எதுவும் போனஸ் இருந்தால் அதையும் சேர்த்துபெற உதவும்.
ஸ்டார் யூனியன் டா-ய்ச்சி'ஸ் ஜீவன் ஆஷ்ரே
இந்த திட்டம் ஒருவரை இன்றே நாளையைபற்றி திட்டம் தீட்ட உதவும். எதுவும் நிலையற்ற தன்மையில், இது வருங்காலத்தை வடிவமைக்கவும், மன அமைதியை பெறவும், நல்ல சமயங்களில் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் உதவும். இது எதிர்பாரா சமயங்களில் நிதிபாதுகாப்பாக அமைவதோடு , ஒரே நேரத்தில் சேமிக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது.
டாடா ஏஐஏ லைஃப் இன்சுரன்ஸ் ஃபார்ச்சூன் மேக்ஸிமா
இந்த திட்டம் அன்பிற்குரியவர்களின் நிதி நிலைமையை பாதுகாக்கிறது, இது நமது தேவைகளை மிகநேர்த்தியாக கையாளும் ஒரு பங்கேற்பற்ற காப்பீடாகும். இது சந்தை சார்ந்து நமது வருமானம் உயர வழிவகுக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் நமது நீண்டகால ஆசைகளான ஓய்வு பாதுகாப்பு, குழந்தைகளின் படிப்பு, இவற்றை நிறைவேற்றலாம். இது நமது வாழ்நாள் கனவை நிறைவேற்ற உறுதுணையாக விளங்குகிறது.
கால காப்பீடு மற்றும் முழுஆயுட்காப்பீடு - வேறுபாடுகள்
கால காப்பீட்டு திட்டம் அல்லது முழு ஆயுட்காப்பீட்டுதிட்டம் இவற்றுள் எதை வாங்குவது என்பது தனிப்பட்ட விஷயம் மற்றும் அது அவரவர் தேவைகள் மற்றும் நிதிநிலைமையை பொறுத்து அமைகிறது..
ஆனாலும், ஆயுட்காப்பீடுதிட்டங்களை தேர்ந்தெடுப்பதில் உள்ள முக்கிய கருத்து, வாழ்க்கை பாதுகாப்பு தேவைகள், இவையே நிதிமேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையாக அமைகிறது. கால காப்பீடு மற்றும் முழு ஆயுட்காப்பீட்டு திட்டங்களின் இடையே உள்ள வேறுபாட்டை இங்கு நன்றாக காண்போம்.
முழு ஆயுட்காப்பீட்டு திட்டம்
|
கால காப்பீட்டு திட்டம்
|
இதில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு நன்மைகளும் உள்ளது.
|
இது ஒரு முழுமையான ஆயுட்காப்பீட்டு திட்டம் ஆகும். இதில் இறப்பு நன்மை தவிர வேறு இல்லை.
|
இதில் காலம் இலகுத்தன்மையுடன் இருக்கிறது மற்றும் பாலிசிதாரரின் 100 வயதுவரை செல்லும். 100 வயது முடியும்போது திட்டத்தின் அனைத்து நன்மைகளும் வழங்கபடும்.
|
இதில் குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே
செல்லக்கூடியது, நன்மைகளும் அப்படியே!
|
பிரிமியம் பல்வேறு முதலீடுகளிலும், பாதுகாப்பு நிதியிலும் முதலீடு செய்யப்படும். எனவே லாபம் ஏற்படும்போது, பாலிசிதாரருக்கு இவற்றின் அடிப்படையில் லாபம் அளிக்கப்படுகிறது.
|
கால காப்பீட்டில் இந்த வசதி இல்லை
|
பிரிமியம் கட்டிவர ஒரு தொகை ஏற்படும். அதனால் குறைந்த வட்டியில் கடன்பெறலாம். கடன்தொகை காப்பீட்டு தொகையில் கழிக்கப்பட்டபோதும், வட்டியானது தனிப்பட்ட முறையில் இன்சுரன்ஸ் நிறுவனங்களால் பாதுகாக்கப்படுகிறது. ஆக, பிரிமியத்திற்கு பாதிப்பு இல்லை.
|
கால காப்பீட்டில் இந்த வசதி இல்லை.
|
கால காப்பீட்டின் பிரிமியத்துடன் ஒப்பிட்டால் முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் பிரிமியம் அதிகம்.
|
இது குறைந்த பிரிமியம் கட்டுவதன்மூலம் பெற முடியும்.
|
காப்பீடு காலம் முழுவதும் பிரிமியம் நிலையானது.
|
இது நிலையற்ற பிரிமியம் கொண்டது. அதிலும் , புதுப்பிக்கும்போது பிரிமியம் மாறக்கூடியது .
|
இது பாலிசிதாரர் காப்பீட்டுகாலத்தில் உயிருடன் இருக்கும்வரை பிரிமியம் செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
|
பாலிசிதாரரின் இறப்பிற்குபின் பிரிமியம் திரும்ப கோரப்பட்டால் உத்திரவாத தொகை வழங்கப்படும்.
|
இதன்மூலம் தேவைக்குஏற்ப இன்சுரன்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
முழுஆயுட்காப்பீட்டுதிட்ட ரைடர்கள்
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு வகையான ரைடர் நன்மைகளை வழங்குகிறது. இது முழு ஆயுட்காப்பீட்டுதிட்டத்தை இன்னும் விரிவுபடுத்துகிறது. இவை தேவைக்கு ஏற்பப யன்படுத்தப்படுபவை.
கீழ்க்கண்டவைகள் காப்பீட்டு திட்டத்தில் உள்ள சில ரைடர் நன்மைகள்:
ஒட்டுனர் சலுகை பிரிமியம்:
இந்த திட்டத்தில், பாலிசிதாரருக்கு இறப்போ அல்லது ஊனமோ ஏற்படின் மீதமுள்ள பிரிமியம் தொகைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, காப்பீட்டு காலம் முடியும்வரை காப்பீட்டு பாதுகாப்பு மட்டும் நடைமுறையில் வைக்கப்படுகிறது.
ஏதிர்பாரா இறப்பு ரைடர்:
இது, பாலிசிதாரரின் இறப்பின்போது, பரிந்துரைக்கபட்டவருக்கு கூடுதல்நிதி உதவிகள் அளிக்கிறது. பரிந்துரைக்கப்பட்டவர் திட்டத்தின் அடிப்படை தொகையுடன்கூடிய விபத்து நன்மையும் பெறுவார்கள்.
ஒட்டுனர்நிரந்தர/ நிரந்தரமற்றஊனம் :
இந்த திட்டத்தின்கீழ் இருக்கும்போது, நோய் அல்லது விபத்து காரணமாக ஊனம் ஏற்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு வருமானத்தை வழங்கும். ஊனத்தை பொறுத்து தொகையானது வேறுபடும்.
கொடியநோய் ரைடர்:
இத்திட்டம் நோய் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. இதில் நோயாவன, உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை , கொடிய இருதயநோய் முதலியனவாகும். இந்த வகையான நோய்கள் நிரந்தர அல்லது நிரந்தரமற்ற வருமான இழப்பினை ஏற்படுத்தும்.
வருமான நன்மை ரைடர்:
முழு ஆயுட்காப்பீட்டுதிட்டத்தில், நன்மைகள் மொத்தமாக ஒரு பெருந்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின்கீழ் பயனாளி ஒரு உத்திரவாதமிக்க வருமானத்தை தவணை முறையிலும் பெற முடியும். இது பாலிசிதாரர் அருகில் இல்லாதபோது, தினசரி செலவுகளை ஈடுகட்ட உதவும்.
ரைடர் நன்மைகள் ஒவ்வொரு காப்பீட்டாளருக்கும் வேறுபடும். ஆகவே தெளிவான விளக்கங்களுக்கு இன்சுரன்ஸ் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துகொள்ளவும்.
முழுஆயுட்காப்பீட்டு திட்டத்தை யார் தேர்ந்தெடுக்க வேண்டும் ?
முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் என்பது இன்றியமையாத ஒரு காப்பீட்டு திட்டமாக தனிநபர்களுக்கு விளங்குகிறது. ஒவ்வொரு வருமானமுள்ள தனி நபரும் தனது குடும்பத்திற்கு நிதிபாதுகாப்பு வழங்க வேண்டும்.
- வருங்கால நிதி பாதுகாப்பு உருவாக்க நினைக்கும் தனிநபர்கள்
- இந்த திட்டம் முதலீடு மற்றும் கால காப்பீட்டுடன் கூடிய வருமானத்தை விரும்பும் தனி நபர்கள் சிறந்த வாய்ப்பாகும்.
- ஓய்வின்போது செல்வத்தையும் பெற விரும்பும் தனிநபர்கள் இந்த திட்டத்தை வாங்குவது குறித்து யோசிக்கவேண்டும்.
- இந்த திட்டமானது, முதலீடுடன்கூடிய வரி நன்மை மற்றும் பாதுகாப்பு நன்மை தருவதால், முதலீடுகளுக்கு சிறந்ததாகும்.
அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏ க்யு ‘ஸ்) –முழு ஆயுட்காப்பீட்டு திட்டம்
கே : முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் சரியானதா?
பதில் : முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் , ஒருவர் தனது குடும்பதிற்க்கு என்று தனி வருமானம் விட்டு செல்ல நினைக்கும் போது தேந்தெடுக்கப்படும் ஒரு நல்ல முதலீடாகும்.இந்த திட்டமானது காப்பீட்டாளர் 100 வயது வரை உயிருடன் இருக்கும் போதோ அல்லது இடையிலேயே இறக்க நேரிட்டாலோ பாதுகாப்பு அளிக்கும். ஒரு முதலீட்டாளருக்கு இது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டமாகும்.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை வாங்குவது விலை மதிப்பானதா?
பதில்: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை வாங்கும் போது, அதனை போல் உள்ள மற்ற திட்டங்களுடன் ஒப்பிட்டு அவற்றின் பிரிமியம் தொகையின்படி முடிவெடுக்க வேண்டும். இந்த திட்டத்தின் அடிப்படை நன்மை குடும்பத்திற்க்கான வருமான செல்வத்தை உருவாக்குவது ஆகும்.
கே: எந்த வயதில் நான் முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை வாங்க வேண்டும்?
பதில்: யார் ஒருவர் தற்சார்பு உடையவராக இருக்கிராரோ அவர் இந்த திட்டத்தை வாங்கலாம். இதன் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 60 மற்றும் 65 க்கு இடையிலும் உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இடையில் வேறுபாடு நிகழ்வதால், காப்பீடு செய்பவரிடம் இதை கேட்டு தெரிந்து கொள்வது நன்று.
கே:எது சிறந்தது கால காப்பீட்டு திட்டமா அல்லது முழு ஆயுட்காப்பீட்டு திட்டமா?
பதில்: கால காப்பீடு மற்றும் முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் இரண்டுமே அதனதன் வகையில் சிறந்தது. ஆகவே ஒருவர் தனது தேவைகள் மற்றும் அத்தியாவசியங்களை பற்றி தெரிந்துகொள்வது முக்கியமாகும். இவை இரண்டும் தெரிந்திருந்தால் நாம் நமக்கு வேண்டிய திட்டத்தை எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டமானது பணமதிப்பை பெற எவ்வளவுநாட்கள் ஆகும்?
பதில் : முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் எடுத்துக்கொள்ளும் காலம் பற்றி அறிந்து கொள்ள காப்பீடு செய்பவரை தொடர்பு கொள்வது நன்று. ஆனால், பணமதிப்பை பெற குறைந்தது 10 வருடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணத்தை செலுத்த முடியுமா?
பதில்: பணத்தை வெளியில் எடுத்துக்கொள்வது என்பது திட்டத்தை பொறுத்து மாறுபடும். திட்டத்தின் தன்மையை நாம் எளிதாக எடுத்துகொள்ள கூடாது.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் வயது வரம்பை தாண்டி நான் உயிர் வாழின் என்ன நேரிடும்?
பதில்: முழு ஆயுட்காப்பீட்டு திட்டம்காப்பீட்டாளர் இறப்பின் அல்லது முதிர்ச்சி வயதை அடையும் வரை செயல்பாட்டில் இருக்கும். அதற்கு பிறகு அது ஒரு முதிர்ச்சி அடைந்த எண்டௌமென்ட் திட்டமாக மாறிவிடும். இங்கு காப்பீட்டாளர் முதிர்ச்சி வயதை தாண்டி உயிர் வாழின் காப்பீட்டு தொகையானது அவரிடம் கொடுக்கப்படும்.
கே: நான் எனது கால காப்பீட்டு திட்டத்தை முழு ஆயுட்காப்பீட்டு திட்டமாக மாற்றவேண்டுமா?
பதில்: பெரும்பாலான கால காப்பீடு திட்டங்கள் மாற்றப்படகூடியவை. ஆனால்,ஒப்பிட்டு பார்த்தால். முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை அதிகம். தவிரவும், அவை நேரத்திற்கு செலுத்தபட வேண்டும்.
கே: நான் முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாமா?
பதில் : முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தில் காலவதியின்றி பணமதிப்பு இருப்பதால், நீங்கள் கடன் வசதி பெறலாம். இது குறித்து மேலும் அறிந்துகொள்ள காப்பீடு செய்பவரை தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
கே: நான் எனது குழந்தைக்கு முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் வாங்கவா?
பதில்: இந்த திட்டத்தின் அடிப்படை கருத்தானது, குடும்பத்தில் சம்பாதிப்பவரக்கு எதிர்பாரா தீங்குகள் நேரின் குடும்பம் நிதி கஷ்டத்தை அனுபவிப்பதை தவிர்ப்பது ஆகும்.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டம் ஒய்வு காலத்திற்க்கு ஏற்ற முதலீடா?
பதில் : ஆம். இது ஒய்விற்கு சிறந்தது. ஏனெனில், இது பிரிமியம் கட்டி முடிந்தவுடன் எப்பொழுது வேண்டுமானாலும் தனித்தனியான பணமதிப்பை பெறும் வசதி கொண்டது. ஆகையால், இது ஒய்வு கால திட்டங்களுக்கு சிறந்தது.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டம்முதியோர்களுக்கு ஏற்றதா?
பதில்: இது முதியோர்களுக்கு அவ்வளவு சலுகை அளிப்பதில்லை. இது ஒய்வு கால திட்டங்களுக்கு ஏற்ற வகையில் இருப்பதால், குறைந்த வயதில் தொடங்கபட வேண்டிய திட்டம் ஆகும்.
கே: நான் எனது முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்தால் என்னவாகும்?
பதில்: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்தால், திட்டத்தின் தொகையானது திருப்பி அளிக்கப்படும்.
கே:முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை வாங்கும் போது என்ன வகையான பாதுகாப்புகள் கிடைக்கிறது?
பதில் : ஒருவர் இத்திட்டத்தை வாங்குவதற்கு முன்பே அதன் பண்புகள் குறித்து தெரிந்துகொள்வது நல்லது. எந்த திட்டம் நமது ஆண்டு வருமானத்தில் 15-20 மடங்கு நன்மை தருகிறதோ அதை தேர்ந்தெடுப்பது நன்று.
கே:முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தில் எதுவும் ஒட்டுனர் பாதுகாப்புகள் இருக்கிறதா?
பதில்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் வெவ்வேறு வகையான் ஒட்டுனர் வருமான நன்மை , ஒட்டுனர் கொடிய நோய் போன்ற பல்வேறு வகையான ஒட்டுனர் பாதுகாப்புகள் வழங்குகின்றன. ஒருவர் தனது தேவைக்கு ஏற்ப பாதுகாப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் அனைத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து இன்னொரு காப்பீடு நிறுவன திட்டங்களில் நிறைய வேறுபாடுகள் உள்ளன
கே: நான் எனது முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தில் இருந்து பணத்தை பெற்றுகொள்ளலாமா?
பதில்: ஆம். தனிதனியான பணம் பெற்றுகொள்ளும் முறை உண்டு.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் கீழ் இறப்பு நன்மை என்பது என்ன?
பதில்: பொதுவாகவே, காப்பீட்டு திட்டங்களில் பரிந்துரைக்கப்பட்டவரிடம் இறப்பு நன்மைகள் வழங்கபடும். இத்திட்டதில், காப்பீட்டாளர் இறப்பின், பரிந்துரைக்கபட்டவர் மொத்த தொகையாகவோ அல்லது தொடர்ச்சியான வருமானமாகவோ பெற்றுகொள்ளும் வசதி உண்டு.
கே: எனது வயதை போலவே முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தின் பிரிமியம் தொகையும் கூடுமா?
பதில்: இல்லை. பாலிசி காலம் முடியும் வரை பிரிமியம் தொகை ஒரே மாதிரியாக மாறாமல் அமையும்.
கே: நான் எனது முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தை திரும்ப கொடுத்துவிட்டால் என்ன நிகழும்?
பதில் : திட்டத்தை பொறுத்து சரணடையும் தொகை அளிக்கப்படும். இது நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபட்டு இருக்கும்.
கே: முழு ஆயுட்காப்பீட்டு திட்டத்தில் பணமதிப்பை முன்பே பெற்றுகொள்ளலாமா?
பதில்: காப்பீடு தொகையில் இருந்து எந்தவொரு பணமதிப்பையும் பெற முடியாது. இருந்தாலும் அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள பரிந்துரைக்கபடுகிறது.
கே: நான் ஒய்வு பெற்ற பிறகு எவ்வாறு பிரிமியம் செலுத்துவது?
பதில்: முதல் பிரிவு முடியவும் எந்தவொரு பிரிமியம் தொகையும் செலுத்தும் நிலை பெரும்பாலும் இருக்காது.
கே: பணமதிப்பிற்கு பதிலாக எனது காப்பீட்டு திட்டத்தை நான் தரலாமா?
பதில்: ஆம். ஒருவர் பணமதிப்பிற்கு காபீடு திட்டத்தை தரலாம். ஆனால், அவ்வாறு செய்தால், வாழ்க்கை பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர் இறப்பு நன்மை பெற முடியாது.
கே: வரி நன்மையாக பெறகூடிய தொகை என்ன?
பதில்: வருமான வரி சட்டம் பிரிவு 80C இன் கீழ் இத்திட்டத்தில் கட்டிய பிரிமியம் தொகைகள் அனைத்தும் வரிவிதிப்பிற்கு அப்பாற்பட்டது. அதிகப்படியாக₹ 1,50,000 வரை வரி நன்மையாக பெற்று கொள்ளலாம்.