ஆனால் எல்லாரும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் மரணத்தை தவிர்க்கவும் முடியாது கணிக்கவும் முடியாது. இதில் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய உண்மை என்னவென்றால் மரணம் ஒருவரின் குடும்பத்தாரை மனதளவிலும் நிதியளவிலும் மிகவும் பாதிக்கும்.
இதனாலேயே ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு முழுவதுமான ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதை முதன்மையாக கொள்ள வேண்டும். இறந்த பின்னர் தன் குடும்பம் கஷ்டப்படுவதை (பணத்திற்காக) யாருமே விரும்ப மாட்டார்கள், அல்லவா?
ஆனால் நீங்கள் ஆயுள் காப்பீடு திட்டம் வாங்கிய பின்னரும் உங்கள் குடும்பத்தார் காப்பீடு எப்படி கோர வேண்டும் என்று அறியாமல் நிதி நெருக்கடியில் மாட்டி இருந்தால்? அதற்கு ஒரே தீர்வு, நீங்கள் உங்களை சார்ந்தவர்களுக்கு காப்பீடு கோரும் முறை பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் விளக்கிக் கூறுவது அவசியம். கவலை வேண்டாம் உங்களுக்காக நாங்களே அனைத்து விவரங்களையும் தொகுத்துள்ளோம். இந்த வலைப்பதிவை வாசித்து ஆயுள் காப்பீடு திட்டத்தில் மரணத்திற்கான காப்பீடு உரிமையை கோருவது எப்படி என அறிந்து கொள்ளுங்கள்.
ஆனால் உங்களுக்கு காப்பீடு முறையை பற்றி கூறுவதற்கு முன்பு நாம் அடிப்படையாக அறியவேண்டிய விவரங்களிலிருந்து தொடங்குவதே உசிதமாகும் அல்லவா?
ஆயுள் காப்பீடு திட்டம் என்றால் என்ன?
எளிமையான முறையில் கூற வேண்டுமென்றால், ஆயுள் காப்பீடு என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒரு தனிமனிதர் இடையே நடக்கும் ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தின்படி காப்பீட்டாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் காப்பீடு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். இதன் மூலம் காப்பீட்டாளர் இறந்து விட்டால் அவரது நாமினிகளுக்கு ஒரு தொகை வழங்கப்படும். காப்பீட்டாளர் மாதமாதம் அடைக்கும் குறிப்பிட்ட தொகையின் பெயர் பிரீமியம் தொகை மற்றும் இறுதியாக நாமினியின் கையில் கிடைக்கும் மொத்த தொகையின் பெயர் இறப்பு பயனாகும்.
பரவலாக ஆயுள் காப்பீடு திட்டங்கள் இருவகைப்படும் ஒன்று இறப்பு பயன் இன்னொன்று முதிர்வு பயன். இந்தப் பதிப்பில் நாம் இறப்பு பயனை கோருவது எப்படி என்றும் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்றும் பார்க்கலாம்.
இறப்பு பயன்
காப்பீட்டாளர் அவரது காப்பீடு காலம் முடிவதற்குள் இறந்துவிட்டால் பயனாளி இறப்பு பயனை கோரலாம். இந்தக் கோரிக்கையின் பெயர் ஆயுள் காப்பீடு கோரிக்கை அல்லது இறப்பு காப்பீடு கோரிக்கை ஆகும்.
மரணப் பயனை கோருவது எப்படி?
மரண பயனை எப்படி கோருவது என்று படிப்படியாக நடைமுறை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:
படி 1. முதலாவதும் மிகவும் முக்கியமானதுமான படி என்னவென்றால் காப்பீடு நிறுவனத்திடம் காப்பீட்டாளர் இறந்ததைக் குறித்து தெரிவிப்பது. மரணங்கள் காப்பீடு நிறுவனங்களால் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது விரைவு மரணம் அடுத்தது விரைவில்லா மரணம். இது காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பாலிசி எப்போது வாங்கப்பட்டது என்பதை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. பாலிசி வாங்கி மூன்று வருடத்திற்குள் காப்பீட்டாளர் இறந்துவிட்டால், அது விரைவு மரணமாகும்.
படி 2. காப்பீட்டு நிறுவனத்தை அணுகி கோரிக்கை விண்ணப்பத்தை வாங்கவும்.
படி 3. காப்பீடு நிறைவுபடுத்த தேவையான ஆவணங்கள் என்னவென்று விசாரிக்கவும். ஆயுள் காப்பீடு திட்டம் இணையதளம் மூலம் வாங்க பெற்றிருந்தால் விண்ணப்பத்தையும் இணையதளம் மூலமாகவே அனுப்பவும்.
இப்போது கோரிக்கைக்கான நடைமுறைகளை நாம் அறிந்ததால் அடுத்து இறப்பு பயனை கோர என்னென ஆவணங்கள் தேவை என்று பார்க்கலாம்.
ஆவண சரிபார்ப்பு பட்டியல்
பொதுவாக இறப்பு பயனை கோர கீழ்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:
- மரண சான்றிதழ்
- அசல் காப்பீடு ஆவணங்கள்
- பயனாளியின் அடையாள அட்டை
- காப்பீட்டாளர் வயதிற்கு ஆதாரம்
- வெளியேற்ற படிவம் (சாட்சியுடன் செயல்படுத்தப்பட்டது)
- மருத்துவ சான்றிதழ் (இறப்பின் காரணத்திற்காக ஆதாரமாக)
- போலீஸ் எப்.ஐ.ஆர் (இயற்க்கைக்கு புறம்பான மரணம் என்றால்)
- பிரேத பரிசோதனை அறிக்கை (இயற்க்கைக்கு புறம்பான மரணம் என்றால்)
- மருத்துவமனை பதிவுகள் அல்லது சான்றிதழ் (இறந்தவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருந்தால்)
- தகனம் சான்றிதழ் மற்றும் அலுவலக சான்றிதழ் (விரைவு மரணம் என்றால்)
மரணப் பயன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றால் காப்பீட்டாளர் இறந்தபின் தாமதிக்க வேண்டாம். மேற்கூறிய ஆவணங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் காப்பீட்டாளர் நிறுவனத்திடம் புதிய ஆவண சரிபார்ப்பு பட்டியல் இருக்கிறதா என்பதை கேட்டு, அறிந்து, எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இத்துடன் முடித்துக் கொள்வோம்.
ஆயுள் காப்பீட்டு மரண பயன் உரிமை கோருவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து விட்டீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் இந்த விவரங்களால் உங்களது ஆயுள்காப்பீடு கோரிக்கை செயல்முறை மிகவும் எளிதாகி இருக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் நீங்கள் நீங்கள் இதை படிக்க விரும்பலாம்:ஆயுள் காப்பீடு கோரிக்கைகள் ரத்து ஆவதன் முக்கிய காரணங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்ததா? ஒரு வேளை ஏதேனும் கேள்விகள் உள்ளதா
என்னவாக இருந்தாலும் கீழே உங்களது கருத்தை பதிவிடுங்கள்.