உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை அந்த பாலிசி அளிக்கும் பயன் ஆனால் காப்பீட்டு தொகை என்பது அந்த பாலிசியில் காப்பீடு செய்யப்பட்ட பொருளுக்கு நேர்ந்த அழிவை ஈடு செய்ய கொடுக்கப்படும் தொகை ஆகும்.
காப்பீட்டு தொகை:
மோட்டார் வாகன காப்பீடு, வீட்டு காப்பீடு, மருத்துவ காப்பீடு, போன்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் வராத திட்டங்கள், காப்பீடு என்ற பெயரில் சேதத்தை ஈடு செய்யும் கொள்கையில் இயங்குகின்றன. இவை காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த அழிவு, சேதாரம், மற்றும் காயங்கள் போன்றவற்றிற்கான நஷ்ட ஈடாகும். காப்பீடு செய்யப்படும் பொருளுக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதனால் உண்டாகும் நஷ்டத்தை ஈடு செய்ய இந்த பாலிசிகள் காப்பீடு அளிக்கின்றன. உதரணமாக, ஒரு நபர் ரூ 1 லக்ஷம் காப்பீடு அளிக்கும் மருத்துவ பாலிசி எடுத்து இருக்கிறார். இதன் கீழ் காப்பீடு செய்தவரின் மருத்துவ செலவு ரூ 1 லட்சம் வரை ஆகுமானால் காப்பீட்டு நிறுவனம் மொத்த தொகையையும் அளிக்கும். செலுத்த வேண்டிய தொகை ரூ 1 லட்சத்திற்க்கு மேல் இருந்தால், காப்பீட்டு நிறுவனம் ரூ 1 லட்சம் வரை மட்டுமே கொடுக்க கடமைப்பட்டுள்ளது, மீத தொகையை பாலிசிதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கொடுக்கும் நஷ்ட ஈடு பாலிசிதாரருக்கு ஏற்பட்ட உண்மையான நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டுமே அன்றி அவருக்கு எவ்விதமான அதிகப்படியான நிதி உதவியாக இருக்கக்கூடாது என்பதே இதன் கருத்தாகும். எனவேதான், இப்படிப்பட்ட ஆயுள் பாதுகாப்பு திட்டங்களில் அடங்காத மற்ற காப்பீடுகளுக்கு காப்பீட்டு தொகை என்று சொல்லப்படுகிறது.
உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகை:
எந்த ஒரு நஷ்டத்தை ஈடு செய்வதாக காப்பீடு அளிக்கப்பட்டதோ,அப்படி ஒரு நஷ்டம் ஏற்படும் சமயம், காப்பீட்டு நிறுவனம் முன்னரே முடிவு செய்து அவ்வளவு தொகை அளிப்பதாக உத்திரவாதம் அளித்ததோ அதுவே உத்திரவாத தொகையாகும். உதாரணமாக, ஒருவர் ஆயுள் காப்பீடு திட்டத்தை வாங்க முயலும்பொழுது, காப்பீடு செய்துகொண்ட நபர் இறந்து விட்டால் அவருடைய நியமனதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக உத்திரவாதம் கொடுக்கிறது. இவ்வாறு உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையே பாலிசிதாரர் கட்ட வேண்டிய ப்ரீமியம் தொகையை நிர்ணயிக்கிறது.
இரண்டு நன்மைகளையும் அளிக்கும் பாலிசிகள்
சுருக்கமாக, ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் ‘உத்திரவாத தொகை’ யும், ஆயுள் காப்பீடு அல்லாத மற்ற திட்டங்கள் ‘காப்பீட்டு தொகை’ யும் அளிக்கின்றன. ஆனால் இன்றைய காலங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ செலவுகளை திரும்ப அளிக்கும் பாலிசிகள் மட்டுமின்றி முன்னரே குறித்த தொகையை சில வரையறுக்கப்பட்ட நோய் வாய்படும் காலங்களில் அளிக்கின்றன. இவ்வகையான இரட்டை பலன்கள் உள்ள திட்டங்கள் ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு தவிர மற்ற காப்பீடு அளிக்கும் நிறுவனங்கள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அளிக்கின்றன. இவ்வகையான சிக்கலான நோய் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு பாலிசியில் குறிப்பிட்ட நோய்களில் ஏதோ ஒன்று உதாரணமாக இதய நோய், கேன்சர், முடக்கு வாதம் போன்றவை ஏறப்பட்டால் அச்சமயம் அவருக்கு ஒரு குறித்த தொகை ஒரு சமயம் மட்டுமே அளிப்பதற்க்கு வசதி இருக்கின்றன. உதாரணமாக ‘ஹாஸ்பிடல் கேஷ் பாலிசி” யில் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலத்திற்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தினபண உதவி அளிக்கப்படும். . அதேபோல்., ‘சர்ஜிகல் பெனிஃபிட் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் அறுவை சிகிச்சைகக்காக முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் முகவர் நீங்கள் வாங்கிய மருத்துவ காப்பீட்டு பாலிசியுடன் உத்திரவாத தொகை பயனையும் அளித்தால், நீங்கள் வாங்கிய பாலிசி அந்த அதில் குறிப்பிட்ட பயன்களை உள் அடக்கியது. ஆனால் உங்கள் மருத்துவ செலவுகளை திரும்ப அளிக்கும் அடிப்படை மருத்துவ காப்பீட்டு திட்டமே ஒரு அவசிய தேவையாகும்.