ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

(181 Reviews)
Insurer Highlights

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Get insured from the comfort of your home
Get insured from the comfort of your home
  • 1
  • 2
  • 3
  • 4

Who would you like to insure?

  • Previous step
    Continue
    By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
    Previous step
    Continue

      Popular Cities

      Previous step
      Continue
      Previous step
      Continue

      Do you have an existing illness or medical history?

      This helps us find plans that cover your condition and avoid claim rejection

      Get updates on WhatsApp

      Previous step

      When did you recover from Covid-19?

      Some plans are available only after a certain time

      Previous step
      Advantages of
      entering a valid number
      You save time, money and effort,
      Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

      ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் 2006 இல் அல்லைட் இன்ஷ்யூரன்ஸுடன் ஒரு கூட்டுத் தொழில் முயற்சியாகத் துவங்கியது. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கட்டுப்படியாகக் கூடிய பிரிமியத்தில் பல்வேறு வகையான மருத்துவக் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. மருத்துவமனைச் செலவுகள், மருத்துவப் பரிசோதனை, தீவிரமான நோய்கள், ஆயுர்வேத சிகிச்சை ஆகியவற்றை பாலிசி்கள் கவர் செய்கின்றன. ஆடிஸம் உள்ள குழந்தைகளுக்கும் மருந்து வழங்கும் திட்டத்தையும் ஸ்டார் மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு கவரேஜ் வழங்கவும் ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி சமீபத்தில் ஒரு பைலட் புராடக்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

      Read More

      ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் கம்பெனி பற்றி

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இந்தியாவின் முதல் இன்ஷ்யூரன்ஸுக்கு மட்டுமேயான நிறுவனம் ஆகும். இன்ஷ்யூரன்ஸ் செய்து கொண்ட உறுப்பினர்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் வசதி கொண்ட 11000 + நெட்வொர்க் மருத்துவமனைகள் இந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு உள்ளன. மேலும் இந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் உலகெங்கும் 340 க்கும் மேலான கிளைகளுடன் ஒரு பரவலான நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 90% (நிதியாண்டு 2018-19) என்பது அதன் வாடிக்கையாளர்களின் பாஸிடிவ் அனுபவத்துக்கு ஆதரவாக இருக்கிறது. அதன் முக்கியமான நன்மைகளில் ஒன்று 60 வயதுக்குக் கீழாக உள்ள தனிநபர்களுக்கு கோ-பேமென்ட் தேவையில்லை.

      இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுக்கு இணையாகத் தொடர்ந்து ரேங்க் செய்யப்படும் ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் பல பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.

      மிக முக்கியமானவற்றில் சில:

      • ஆண்டின் மிகப் புதுமையான புதிய புராடக்ட், 2020
      • மிகச் சிறந்த BSFI பிராண்டுகள், 2019.
      • ஆண்டின் மிகச் சிறந்த மருத்துவக் காப்பீடு வழங்கியோர், 2018-19.

      இன்ஷ்யூரன்ஸ் செய்து கொண்ட உறுப்பினர்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் வசதி கொண்ட 1100 + நெட்வொர்க் மருத்துவமனைகள் ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு உள்ளன. மேலும் இந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் உலகெங்கும் 340 க்கும் மேலான கிளைகளுடன் ஒரு பரவலான நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் கிளைம் செட்டில்மென்ட் விகிதம் 90% (நிதியாண்டு 2018-19) என்பது அதன் வாடிக்கையாளர்களின் பாஸிடிவ் அனுபவத்துக்கு ஆதரவாக இருக்கிறது.

      ஸ்டார் மருத்துவக் காப்பீடு பாலிசி மருத்துவமனைச் செலவுகள், தீவிர நோய்கள் கூடுதல் சேர்க்கை, மருத்துவப் பரிசோதனைச் செலவுகள், இரண்டாவது மருத்துவர் கருத்து, உடல் உறுப்பு தானம் கவர், ஆயுஷ் சிகிச்சை மற்றும் பலவற்றை கவர் செய்கிறது. அதன் முக்கியமான நன்மைகளில் ஒன்று 60 வயதுக்குக் கீழாக உள்ள தனிநபர்களுக்கு கோ-பேமென்ட் தேவையில்லை.


      உங்கள் விருப்பப்படி ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

      ₹2லட்சம்
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
      ₹3லட்சம்
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
      ₹5லட்சம்
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
      ₹10லட்சம்
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
      ₹20லட்சம்
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
      ₹50லட்சம்
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
      ₹1கோடி
      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஒரு பார்வை

      அம்சங்கள் ஸ்பெஸிஃபிகேஷன்கள்
      நெட்வொர்க் மருத்துவமனைகள் 11000+
      2 மணி நேரத்தில் கிளைம் செட்டில் செய்யப்படுகிறது. 90%
      முன்பே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் 4 வருடங்கள்
      செலவிடப்பட்ட கிளைம் விகிதம்* 63%
      பாலிசி புதுப்பித்தல் ஆயுள் முழுவதும்

      *செலவிடப்பட்ட கிளைம் விகிதம் - நிதியாண்டு 2018-19

      ఆరోగ్య బీమా సంస్థ
      Expand

      ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்கள்

      ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்களின் ஒட்டுமொத்தப் பட்டியலும் அவைகளின் அம்சங்கள் மற்றும் கவரேஜ் நன்மைகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      • ஸ்டார் குடும்ப ஆரோக்கிய ஆப்டிமா இன்ஷ்யூரன்ஸ் திட்டம்

        ஸ்டார் குடும்ப ஆரோக்கிய ஆப்டிமாஒரே காப்பீட்டுத் தொகையின் கீழ் ஒரு தனி நபருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கவரேஜ் அளிக்கும் ஒரு குடும்ப ஃப்ளோட்டர் மருத்துவக் காப்பீடு திட்டம்.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்/p>

        • இந்த பாலிசி உறுதிப்படுத்தப்பட்ட தொகையில் 300% வரை ஆட்டோ-ரீசார்ஜ் அளிக்கிறது.
        • இந்த பாலிசியின் முக்கியமான நன்மைகளில் ஒன்று புதிதாகப் பிறந்த குழந்தைக்கு 16-ஆவது நாளிலிருந்து அது கவரேஜ் அளிக்கிறது.
        • உடல் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கான செலவுகள், மருத்துவமனைச் செலவுகளுடன், சாலை ஆம்பலன்ஸ், சர்ஜன், மருத்துவர், மயக்க மருந்து நிபுணர் கட்டணங்கள் இவை கூட
        • ஆம்புலன்ஸ் நன்மை, விபத்தினால் நிகழும் மரணம் மற்றும் ஊனம் இவற்றுக்கான கவர், வெளிப்புற நோயாளியாக பல் மருத்துவ மற்றும் கண் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான கவர்

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 16 மாதங்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 1 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 உறுப்பினர்கள் (தான், மனைவி/கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை

      • ஸ்டார் மூத்த குடிமக்கள் சிவப்புக் கம்பள மருத்துவக் காப்பீடு திட்டம்

        ஸ்டார் மூத்த குடிமக்கள் சிவப்புக் கம்பள மருத்துவக் காப்பீடு பாலிசி் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ளோட்டர் அடிப்படையில் தனிநபர்கள், குடும்பம் ஆகிய இரு தரப்பினருக்கும் கவரேஜ் அளிக்கப்படுகிறது. இந்த பாலிசியில் பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைக்கு நீங்கள் வர வேண்டியதில்லை

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • நர்ஸிங் கட்டணம், அறை வாடகை, மயக்க மருந்து அளிக்கப்படுதல், மருந்துகள் மற்றும் இவை போன்ற தொடர்புடைய செலவுகள் உள்ளிட்ட உட்புற-நோயாளிக்கான மருத்துவமனைச் செலவுகளுக்கும் இந்த பாலிசி கவரேஜ் அளிக்கிறது.
        • நவீன சிகிச்சைச் செலவுகளும் இந்த பாலிசியில் கவர் செய்யப்படுகின்றன.
        • மேலும் முன்பே இருக்கும் நோய்களையும் 12 மாதங்கள் காத்திருப்புக் காலத்துக்குப் பிறகு இந்த பாலிசி கவர் செய்கிறது.
        • ஒருநாள் சிகிச்சை வழிமுறைகள், உடல் உறுப்பு தானம் வழங்குவோர் செலவுகளும் கூட கவர் செய்யப்படுகின்றன.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        60 ஆண்டுகள்

        அதிகபட்ச நுழைவு வயது

        75 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        தனிநபர் பாலிசி ரு. 1 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை
        ஃப்ளோட்டர் பாலிசி ரூ. 10/ 15 / 20/ 25 லட்சம்

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 2 உறுப்பினர்கள் (தான் மற்றும் மனைவி/ கணவர்)

      • ஸ்டார் ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீடு

        ஸ்டார் ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீடு பாலிசி 3 மாதங்கள் முதல் 65 ஆண்டுகள் வரையிலான வயதில் உள்ள நபர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குகிறது இந்த பாலிசி புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டோமாடிக்காக மருத்துவக் காப்பீடு வழங்குவதுடன், மகப்பேறு நன்மைகளையும் வழங்குகிறது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • தனிநபர் விபத்து நிகழ்ந்து நிரந்தர ஊனமோ அல்லது திடீர் மரணமோ ஏற்பட்டால் கூடுதல் கட்டணம் பெறாமல் அதை கவர் செய்கிறது.
        • इஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளும் கவர் செய்யப்படுகின்றன.
        • வெளி-நோயாளியாக கண் சிகிச்சை பெறுதல், ,வீட்டிலேயே அளிக்கப்படும் மருத்துவமனை போன்ற சிகிச்சை, நவீன சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு ஆன செலவுகளும் கிளைம் செய்யப்படலாம்.
        • 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 10% கோ-பே பொருந்தும்.
        • மருத்துவப் பரிசோதனைகள், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள், விமான ஆம்புலன்ஸுக்கான உதவி போன்ற கூடுதல் நன்மைகளையும் கூடுதல் கட்டணம் இல்லாமல் இந்த பாலிசி அளிக்கிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 3 மாதங்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 உறுப்பினர்கள் (தான், மனைவி/கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை

      • ஸ்டார் மெடிக்ளாஸிக் மருத்துவக் காப்பீடு

        ஸ்டார் மெடிக்ளாஸிக் மருத்துவக் காப்பீடு திட்டம் எந்த ஒரு உடல்நலக் கோளாறு/ நோய் அல்லது காயத்துக்காகச் செலவிடப்பட்ட மருத்துவமனைச் செலவுகளை கவர் செய்கிறது. பிரிமியம் மாத, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தவணைகளில் செலுத்தப்படலாம்.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • தொகை தீர்ந்து விட்டால், காப்பீட்டுத் தொகையில் 200% வரை தானே திரும்பச் சேர்த்தலுக்கு இந்த பாலிசி வகை செய்கிறது (தனிநபர் திட்டங்களில்)
        • மனநலம் சார்ந்த மற்றும் மனத்தின் செயல்பாட்டினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுளுக்காக ஏற்பட்ட செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.
        • மேலும் அல்லோபதிக் அல்லாத சிகிச்சைகளும் கிளைம் செய்யப்படலாம்.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        5 மாதங்கள்
        தங்கத் திட்டம் - 16 நாட்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சம் வரை
        தங்கத் திட்டம் - ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் - 1 வயது வந்த உறுப்பினர்
        குடும்ப பேக்கேஜ் திட்டம் - 4 உறுப்பினர்கள் (தான், மனைவி/ கணவர் மற்றும் 2 குழந்தைகள் வரை)

      • ஸ்டார் ஹெல்த் கெயின் காப்பீட்டுத் திட்டம்

        ஸ்டார் ஹெல்த் கெயின் காப்பீட்டுத் திட்டம் ஒரு தனிநபருக்கு அவருடைய குடும்பத்துடன் சேர்த்து மெடிகிளைம் கவர் வழங்குகிறது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • இந்த பாலிசி 91 நாட்கள் முதல் 65 ஆண்டுகள் வரை வயதுள்ள நபர்களை இந்த பாலிசி கவர் செய்கிறது.
        • ஒவ்வொரு கிளைம் தொகைக்கும் 20% கோ-பே பொருந்தும்.
        • உள்-நோயாளி மற்றும் வெளி-நோயாளி சிகிச்சைகளுக்கு ஏற்பட்ட செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.
        • வெளி-நோயாளி சிகிச்சையில் சேமிக்கப்பட்ட தொகை அடுத்த பாலிசி ஆண்டுக்கு எடுத்துச் செல்லப்படும்.
        • நவீன சிகிச்சைக்கான செலவுகளும் கவர் செய்யப்படுகின்றன.
        • விபத்து கேஸ்களுக்கு 30 நாட்களும், உடல்நலக் கோளாறு/ நோய்களுக்கு 24 மாதங்களும், முன்பே இருக்கும் நோய்களுக்கு 48 மாதங்களும் காத்திருப்புக் காலமாக இருக்கும்.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 91 நாட்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 உறுப்பினர்கள் (தான், மனைவி/கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை

      • ஸ்டார் சூப்பர் சர்ப்ளஸ் காப்பீடு திட்டம்

        ஸ்டார் சூப்பர் சர்ப்ளஸ் காப்பீடு திட்டம் முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவைப்படாத ஒரு டாப்-அப் ஆரோக்கியத் திட்டம். தற்போது இருக்கும் ஆரோக்கியத் திட்டத்தைத் தாண்டியும், அதற்கு மேலும் கவரேஜ் நன்மைகளை நீட்டிக்க இது பொருத்தமானது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • 18 முதல் 65 வயது வரையில் உள்ள தனிநபர்பர்களுக்கு இந்த பாலிசி கவரேஜ் வழங்குகிறது.
        • விமான ஆம்புலன்ஸ் கட்டணங்களும் கவர் செய்யப்படுகின்றன.
        • உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகளும் கவர் செய்யப்படுகின்றன.
        • குறிப்பிட்ட வரம்புகள் வரை மகப்பேறு கவரேஜும் வழங்கப்படுகிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 91 நாட்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        வெள்ளித் திட்டம் - ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை.
        தங்கத் திட்டம் - ரூ. 5 லட்சம் வரை ரூ. 25 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 உறுப்பினர்கள் (தான், மனைவி/கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை)

      • ஸ்டார் டயாபிடீஸ் பாதுகாப்பு காப்பீடு

        ஸ்டார் டயாபிடீஸ் பாதுகாப்பு காப்பீடு டயாபிடீஸ் நோயாளிகளுக்கான ஒரு மருத்துவக் காப்பீடு பாலிசி. டைப் 1 மற்றும் டைப் 2 டயாபிடீஸ் நோயாளிகள் மற்றும் தொடர்புள்ள பிரச்னைகளையும் இது கவர் செய்கிறது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • 2 டயாபிடீஸ் மற்றும் தொடர்புள்ள பிரச்னைகளையும் இந்த பாலிசி கவர் செய்கிறது.
        • வெளி-நோயாளிகளுக்கான மருத்துவச் செலவுகளும் கிளைம் செய்யப்பட வேண்டும்.
        • காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு தனிப்பட்ட விபத்து இழப்பீடு தேர்ந்தெடுத்த காப்பீட்டுத் தொகையில் 100% சதவீதம் அளிக்கப்படுகிறது.
        • அறை வாடகை, உணவுச் செலவு, மயக்க மருந்துச் செலவு,சர்ஜன் கட்டணம், மருந்துகள் மற்றும் மருந்துக் கட்டணங்கள் பாலிசிதாரரால் கிளைம் செய்யப்படலாம்.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        18 ஆண்டுகள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 2 உறுப்பினர்கள் (தான் மற்றும் மனைவி/ கணவர்)

      • ஸ்டார் இதயப் பாதுகாப்பு மருத்துவக் காப்பீடு

        ஸ்டார் இதயப் பாதுகாப்பு மருத்துவக் காப்பீடு 10 ஆண்டுகள் முதல் 65 ஆண்டுகள் வரையிலான வயதுப் பிரிவில் உள்ள நபர்களுக்குத் தற்போது இருக்கும் இதய நோய்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட விண்ணப்பதாரர்கள் முந்தைய மருத்துவப் பரிசோதனை எதற்கும் உட்படவேண்டியதில்லை.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • இந்த பாலிசி ரூ. 3 லட்சம், ரூ, 4 லட்சம் என்று இரண்டு காப்பீட்டுத் தொகைத் தேர்வுகளில் கிடைக்கிறது.
        • இது இரண்டு வகைகள் உள்ளன, வெள்ளித் திட்டம், தங்கத் திட்டம்.
        • 90 நாட்கள் காத்திருப்புக் காலத்துக்குப் பிறகு, இதய நோய்களுக்கான கவரேஜை இது அளிக்கிறது.
        • இந்த பாலிசி நன்மைகளில் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுதலுக்கான கவர், வெளி நோயாளிச் செலவுகளுக்கான கவர், தனிப்பட்ட விபத்து கவர் மற்றும் காடராக்ட் சிகிச்சைகள் போன்றவை அடங்கும்.
        • எல்லா ஒரு நாள் சிகிச்சைகளும் இந்த பாலிசியின் கீழ் கிளைம் செய்யப்பட முடியும்.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        10 ஆண்டுகள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம்

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர்கள் மட்டும்

      • ஸ்டார் கிரைடீரியா பிளஸ் மருத்துவக் காப்பீடு

        ஸ்டார் கிரைடீரியா பிளஸ் மருத்துவக் காப்பீடு எந்த நோய்/ காயம்/ விபத்து மற்றும் எல்லா முக்கிய நோய்கள் இவற்றுக்காகச் செய்யப்படும் செலவுகள் பாலிசி வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மொத்தத் தொகையாக வழங்குகிறது. 18 முதல் 65 ஆண்டுகள் வயதுப் பிரிவில் உள்ள எந்த ஒரு நபரும் இந்த ஸ்டார் ஆரோக்கிய தீவிர நோய்கள் பாலிசியின் கீழ் கவர் செய்யப்படலாம்.

        முக்கிய அம்சங்களும் நன்மைகளும்

        • நர்ஸிங் கட்டணம், அறை வாடகை, மயக்க மருந்து செலுத்தப்படுதல், மருந்துகள் மற்றும் இது போன்ற தொடர்புள்ள செலவுகள் உள்ளிட்ட உள்-நோயாளியாக குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனை சிகிச்சை பெறுவதற்கான செலவுகளுக்கு இந்தத் தீவிர நோய்கள் பாலிசி கவரேஜ் அளிக்கிறது.
        • இந்த பாலிசி 9 தீவிர நோய்களை கவர் செய்கிறது, மேலும் எந்த ஒரு தீவிர நோயும் கண்டறியப்பட்டதும் ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது.
        • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய (மருத்துவமனையில் சேர்வதற்கு 30 நாட்களுக்கு முந்தைய) மற்றும் மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகளையும், ஆம்பலன்ஸ் கட்டணங்கள் ஏதும் இருந்தால் அவற்றுடன் சேர்த்து இது கவர் செய்கிறது.
        • இந்த ஸ்டார் மருத்துவக் காப்பீடு பாலிசி புற்றுநோய், மூளைக்கட்டி, முற்றிய சிறுநீரக்க் கோளாறுகள், உடல் உறுப்பு மாற்று, முடக்குவாதம் ஆகியவற்றுக்கு கவரேஜ் அளிக்கிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        18 ஆண்டுகள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர்கள் மட்டும்

      • ஸ்டார் புற்றுநோய் சிகிச்சை தங்கம் (பைலட் புராடக்ட்)

        புற்றுநோய் சிகிச்சை தங்கம் (பைலட் புராடக்ட் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கவரேஜ் தனிநபர் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக,பைலட் அடிப்படையிலான முதல் இந்தியக் காப்பீட்டுத் திட்டம் இது.
        • புற்றுநோய் பரவும் அபாயம் (மெடாஸ்டாஸிஸ்), புற்றுநோய் திரும்ப வருதல் அல்லது இரண்டாவது புற்றுநோய் இவற்றுக்கான கவரை இது வழங்குகிறது.
        • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் புற்றுநோய் சிகிச்சைத் திட்டம் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கும் தனிநபர்களுக்கானது.
        • முன் ஏற்றுக் கொள்ளலுக்கான மருத்துவப் பரிசோதனை எதுவும் இல்லை.

        கவரேஜ்

        A) பிரிவு 1: இரண்டாவது புற்றுநோய்/ நோய்/ மெடாஸ்டாஸிஸ் இவை திரும்ப நிகழும்போது மொத்தத் தொகை வழங்கும் நன்மைகளை அளிக்கிறது.

        B) பிரிவு 2 (இன்டெம்னிடி கவரேஜ்) இன்டர்வென்ஷனல் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கவரை இது அளிக்கிறது.

        C) பிரிவு 3 (இன்டெம்னிடி கவரேஜ்) இன்டர்வென்ஷனல் அல்லாத மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத முறைகளுக்கான கவரை இது அளிக்கிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        5 மாதங்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம்

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர்கள் மட்டும்

      • ஸ்டார் ஸ்பெஷல் கேர் காப்பீடு பாலிசி

        ஸ்டார் ஸ்பெஷல் கேர் காப்பீடு திட்டம் ஆடிஸம் ஸ்பெக்ட்ரம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்காக ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியால் குறிப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

        அம்சங்கள் மற்றும் கவரேஜ்

        • சிறப்பான தேவைகள் உள்ள தங்கள் குழந்தைக்காகப் பெற்றோர்கள் இந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம், குழந்தைக்குக் கிடைக்கக் கூடியு மிகச் சிறந்த சிகிச்சை கிடைப்பது பற்றி உறுதியாக இருக்கலாம்.
        • ஆடிஸம் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 3 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை வயதுள்ள எந்தச் சிறாரும்.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        3 ஆண்டுகள்

        அதிகபட்ச நுழைவு வயது

        25 ஆண்டுகள்

        बीகாப்பீட்டுத் தொகை

        ரூ. 3 லட்சம்

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர்கள் மட்டும்

      • ஸ்டார் ஹெல்த் நாவல் கொரானாவைரஸ் காப்பீடு திட்டம்

        கோவிட்-19 கொரோனா வைரஸ் பாசிடிவ் நபர்களுக்காக ஸ்டார் நாவல் கொரோனா வைரஸ் காப்பீடு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி வடிவமைத்துள்ளது. காப்பீடு செய்து கொண்ட நபர் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கான செலவுகளுக்காக ஒரு மொத்தத் தொகையைச் செலுத்துகிறார். விண்ணப்பதாரர்கள் பாலிசி எடுப்பதற்கு முன் மருத்துவப் பரோசோதனைக்கு உட்பட வேண்டியதில்லை.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • தனிப்பட்ட நபர்கள் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை ஸ்டார் நாவல் கொரோனா வைரஸ் கோவிட்-19 பாலிசி அளிக்கிறது.
        • மூன்றாம்-நபர் நிர்வாகி எவரும் இல்லை, கிளைம் செட்டில்மென்ட் நிறுவனத்துக்குள்ளேயே அளிக்கப்படுகிறது.
        • நோய் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 3 மாதங்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 21,000 மற்றும் ரூ. 42,000

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர்கள் மட்டும்

      • ஸ்டார் வெளி-நோயாளி சிகிச்சை மருத்துவக் காப்பீடு பாலிசி

        ஸ்டார் வெளி-நோயாளி மருத்துவக் காப்பீடு பாலிசி தனிநபர்கள் மற்றும் மொத்தக் குடும்பமும் வெளி-நோயாளிகளாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பதற்குச் செய்யப்படும் செலவுகளை கவர் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது மூன்று வகைத் திட்டங்களில் வருகிறது, வெள்ளி, தங்க, பிளாட்டின திட்டம்.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, சித்த மற்றும் இயற்கை சிகிச்சை முறை மையங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட வெளி-நோயாளி சிகிச்சைக்கான செலவுகளை இது கவர் செய்கிறது.
        • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் எந்த நெட்வொர்க் மையத்திலும் நோய் கண்டறிதல், ஃபிஸியோதெரபி, மருந்துகள் இவற்றுக்காக ஆகும் செலவுகளை இது கவர் செய்கிறது.
        • வெளி-நோயாளியாகப் பெறப்பட்ட எந்த பல்மருத்துவ, கண்மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் இது கவர் செய்கிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        न्यूகுறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 31 நாட்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 50 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 25,000 முதல் ரூ.1 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி - 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 6 குடும்ப உறுப்பினர்கள்

      • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்: ஆரோக்யா சஞ்சீவினி பாலிசி

        ஸ்டார் ஹெல்த் ஆரோக்யா சஞ்சீவினி பாலிசி ஒட்டுமொத்த வகை கவரேஜ் நன்மைகளைக் கொண்ட ஒரு எளிய மருத்துவக் காப்பீடு திட்டம். இந்த பாலிசிக்கான பிரீமியம் மாதந்தர/ காலாண்டு/ அரையாண்டு அல்லது ஆண்டுத் தவணைகளில் செலுத்தப்படலாம்.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • 50 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பாலிசி எடுத்துக் கொள்ளுமுன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று இந்த பாலிசி விதிக்கிறது.
        • அறை வாடகை மற்றும் ஐ சி யூ கட்டணங்கள் உள்ளிட்ட உள்-நோயாளி மருத்துவமனைச் செலவுகளை இது கவர் செய்கிறது.
        • உண்மையில், ஒரு நாள் சிகிச்சைக்கான எல்லா செயல்முறைகளுக்கும் காப்பீடு செய்து கொண்டவர் கிளைம் அளிக்கலாம்.
        • ஓரல் கெமோதெரபி, ஸ்டெம் செல் தெரபி, ரோபோடிக் அறுவை சிகிச்சைகள், பலூன் சினுப்ளாஸ்டி, பிராங்கியல் தர்மோபிளாஸ்டிக் மற்றும் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் உள்ளிட்ட 12 நவீன சிகிச்சைகள் கவர் செய்யப்படுகின்றன.
        • ஆயுர்வேதம், இயற்கைமுறை சிகிச்சை, சித்தா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி இவற்றுக்கு ஒரு மருத்துவமனையில் எடுத்துக் கொள்ளப்படும் உள்-நோயாளி சிகிச்சைக்கான செலவை இது கவர் செய்கிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        3 மாதங்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி - 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 குடும்ப உறுப்பினர்கள் அல்லது அதற்கு மேல் (தான், மனைவி/ கணவர், குழந்தைகள், பெற்றார்கள், மனைவி/ கணவரின் பெற்றோர்கள்

      • ஸ்டார் மருத்துவமனை ரொக்கக் காப்பீடு பாலிசி

        தினசரி மருத்துவமனைச் செலவுகளுக்காக பாலிசிதாரர்கள் தினமும் ரொக்க அலவன்ஸ் பெற ஸ்டார் மருத்துவமனை ரொக்கக் காப்பீடு பாலிசி வகை செய்கிறது. இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் இருக்கிறது - அடிப்படை மற்றும் உயர்த்தப்பட்ட திட்டம்

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • ஸ்டார் மருத்துவமனை ரொக்கக் காப்பீடு பாலிசி பாலிசிதாரருக்கு அவர் மருத்துவமனையில் இருந்த காலத்துக்கு ஒரு மொத்தத் தொகை வழங்குகிறது.
        • यநோய் மருத்துவமனை ரொக்க நன்மை, குழந்தை பிறப்பு மருத்துவமனை ரொக்கம், ஐ சி யூ மருத்துவமனை ரொக்கம், உலகெங்கும் மருத்துவமனை ரொக்கம், விபத்து மருத்துவமனை ரொக்கம் மற்றும் குணமடைதல் மருத்துவமனை ரொக்கம் உள்ளிட்ட ஆறு வகை மருத்துவமனை ரொக்க நன்மைகளை இது வழங்குகிறது.
        • குணமடைதல் மருத்துவமனை ரொக்கம், உலகெங்கும் மருத்துவமனை ரொக்கம் மற்றும் குழந்தை பிறப்பு மருத்துவமனை ரொக்கம் ஆகியவை உயர்த்தப்பட்ட திட்டத்தின் கீழ்தான் கிடைக்கின்றன.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 91 நாட்கள்

        अஅதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        நாளொன்றுக்கு ரூ.1000 முதல் ரூ. 5000 வரை.

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 உறுப்பினர்கள் (தான், மனைவி/கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை)

      • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்: கொரோனா ரக்ஷக் பாலிசி

        ஸ்டார் ஹெல்த் கொரோனா ரக்ஷக் பாலிசி கோவிட்-19 இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கான ஒரு தனித்தன்மை வாயந்த பாலிசி பாலிசி செயலில் இருக்கும்போது காப்பீடு செய்து கொண்டவருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் காப்பீட்டுத் தொகையில் 100% வரை மொத்தத் தொகை நன்மையை இந்த பாலிசி வழங்குகிறது.

        அம்சங்கள் மற்றும் கவரேஜ்

        • காப்பீடு செய்து கொண்டவருக்கு கோவிட்-19 இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு மொத்தத் தொகை நன்மை வழங்க இந்த ஸ்டார் ஹெல்த் மெடிகிளைம் பாலிசி வகை செய்கிறது, இதற்கு குறைந்தது 72 மணி நேரம் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுவது அவசியம்
        • விண்ணப்பதாரர் பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை எதற்கும் உட்பட வேண்டியதில்லை.
        • காப்பீடு செய்து கொண்டவர் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு மையத்தில் கோவிட் பாசிடிவ் என்று சோதனை செய்யப்பட்டால்தான் இந்த நன்மை பொருந்தும்.
        • இந்த பாலிசி ஒருமுறை நன்மை அளிக்கும் திட்டம் ஆகும்.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        18 ஆண்டுகள்

        அதிகபட்ச நுழைவு வயது

        65 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர்கள் மட்டும்

      • யங் ஸ்டார் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி

        40 வயது வரை உள்ள நபர்களின் ஆரோக்கியத் தேவைகளை கவர் செய்வதற்காகவே யங் ஸ்டார் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலிசி இரண்டு வகைத் திட்டங்களில் கிடைக்கிறது, வெள்ளி மற்றும் தங்கத் திட்டம் பிரீமியத்தை மாதாந்தர/ காலாண்டு/ அரை ஆண்டு/ ஆண்டுத் தவணைகளில் செலுத்தும் விருப்பத் தேர்வுடன் இந்த பாலிசி வருகிறது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • விண்ணப்பதாரர் பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை எதற்கும் உட்பட வேண்டிய தேவை யங் ஸ்டார் இன்ஷ்யூரன்ஸ் பாலிசியில் இல்லை
        • அறை வாடகை, மருந்துகள், ஐ சி யூ கட்டணங்கள், சோதனைக் கட்டணங்கள், மருத்துவர் கட்டணம் போன்ற மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் செலவுகளை இது கவர் செய்கிறது.
        • டெலிவரி செலவுகள் மற்றும் மருத்துவமனை ரொக்க நன்மை தங்கத் திட்டத்தின் கீழ் மட்டும்தான் கிடைக்கும்.
        • சாலைப் போக்குவரத்து விபத்தின்போது காப்பீடு செய்து கொண்டவர் ஹெல்மெட் அணிந்திருந்தால், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் வரை கூடுதலாக 25% காப்பீட்டுத் தொகையை இது வழங்குகிறது.
        • புதுப்பித்தல் தள்ளுபடிகளாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய புள்ளிகளை ஈட்டக் கூடிய ஸ்டார் வெல்னெஸ் திட்டத்துடன் இது வருகிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
        குழந்தைகள் - 91 நாட்கள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 40 ஆண்டுகள்
        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 3 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        தனிநபர் பாலிசி 1 வயது வந்த உறுப்பினர்
        ஃப்ளோட்டர் பாலிசி - 5 உறுப்பினர்கள் (தான், மனைவி/கணவர் மற்றும் 3 குழந்தைகள் வரை)

      • ஸ்டார் ஹெல்த் கொரோனா கவச் பாலிசி

        ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் வழங்கும் கொரோனா கவச் பாலிசி கோவிட்-19 சிகிச்சைக்காக ஏற்பட்ட மருத்துவமனைச் சிகிச்சைகளுக்கான செலவுகளை கவர் செய்வதற்கான ஒரு இன்டெம்னிடி பாலிசி. கோ-மார்பிட் நோய்கள் மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சையினால் ஏற்பட்ட கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான செலவுகளையும் இது கவர் செய்கிறது.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • இந்த கொரோனா கவச் பாலிசி கோ-மார்பிட் நோய்கள் உள்ளிட்ட கோவிட்-19க்கான மருத்துவமனைச் சிகிச்சைக்கான செலவுகளை கவர் செய்கிறது.
        • கோவிட்-19க்காக வீட்டிலிருந்தேயான சிகிச்சைக்கான செலவுகளை 14 நாட்கள் வரை இது கவர் செய்கிறது.
        • மருத்துவமனைச் செலவுகள் 24 மணி நேரம் தொடர்ந்து தங்கி இருந்தால் கவர் செய்யப்படும்.
        • ஆயுஷ் மருத்துவமனையில் எடுத்துக் கொள்ளப்பட்ட கோவிட்-19 சிகிச்சையை இந்தத் திட்டம் கவர் செய்கிறது.
        • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய செலவுகளை 15 நாட்கள் வரையிலும், மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய 30 நாட்கள் வரையிலும் இது அளிக்கிறது.
        • காப்பீடு செய்து கொண்டவர் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு மையத்தில் கோவிட்-19 பாசிடிவ் என்று சோதனை செய்யப்பட்டால் மட்டுமே சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும்.
        • ஸ்டார் மெடிகிளைம் திட்டம் மருத்துவமனை தினசரி ரொக்க கவர் விருப்பத் தேர்வுடன் வருகிறது.

        தகுதி பெறுவதற்கான விதிகள்

        விதிகள்

        ஸ்பெஸிஃபிகேஷன்கள்

        குறைந்தபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 18 ஆண்டுகள்

        குழந்தைகள் - 1 நாள்

        அதிகபட்ச நுழைவு வயது

        வயது வந்தோர் - 65 ஆண்டுகள்

        குழந்தைகள் - 25 ஆண்டுகள்

        காப்பீட்டுத் தொகை

        ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை

        சேர்க்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை

        ஃப்ளோட்டர் பாலிசி - 4 குடும்ப உறுப்பினர்கள் அல்லது

        அதற்கும் மேல் (தான், மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர், மனைவி/ கணவரின் பெற்றோர்)

      • ஸ்டார் விபத்து சிகிச்சை மருத்துவக் காப்பீடு பாலிசி

        ஸ்டார் விபத்து சிகிச்சை மருத்துவக் காப்பீடு பாலிசி விபத்தினால் ஏற்படும் காயங்கள், மரணம் மற்றும் ஊனம் இவற்றுக்கான கவரை நபர்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகள் முதல் 70 ஆண்டுகள் வரையிலான வயதப் பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம்.

        முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

        • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் எல்லா தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டங்களும் காப்பீடு செய்து கொண்டவர் விபத்தினால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்தால் இழப்பீடு வழங்குகின்றன.
        • காப்பீடு செய்து கொண்டவருக்கு விபத்தினால் ஏற்படும் தற்காலிக அல்லது நிரந்தர முழு ஊனத்தையும் இது கவர் செய்கிறது.
        • பெற்றோரில் ஒருவர் இறந்ததும் அவரைச் சார்ந்திருந்த குழந்தைகளுக்கு ஒரு கல்வித் தொகையையும் அது வழங்குகிறது.
        • வாரத்துக்கு ரூ.15,000 வரையிலான உயர்த்தப்பட்ட வாராந்தர இழப்பீடும் உள்ளது.


      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் நன்மைகள்

      ஸ்டார் ஹெல்த் அல்லைட் இன்ஷ்யூரன்ஸின் சில கூடுதல் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      • கோ-பேமென்ட்
      • நீங்கள் கோ-பேமென்ட் எதுவும் செலுத்த வேண்டியதில்லை, ஆயினும் உங்களுக்கு 61 முதல் 65 வயது வரை ஆகி விட்டால், வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு கிளைமில் 20 சதவீதத்தை நீங்கள் செட்டில் செய்ய வேண்டும்.
      • ஆயுள் முழுவதும் புதுப்பிக்கலாம்
      • ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் ஆயுள் முழுவதும் புதுப்பிக்கப்படக் கூடிய தன்மையுடன் வருகின்றன, ஆயுட்காலம் முழுவதற்குமான கவரை வழங்குகின்றன.
      • முன்பே இருக்கும் நோய்கள்
      • முன்பே இருக்கும் எந்த நோயும் 4 ஆண்டுகள் காத்திருப்புக் காலத்துக்குப் பிறகு கவர் செய்யப்படும்.
      • அறை வாடகை
      • ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீத அறை வாடகைச் செலவுடன் வருகின்றன, அதிகபட்சமாக நாளொன்றுக்கு ரூ. 4000.
      • மூன்றாம்- நபர் நிர்வாகி இல்லை.
      • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு மூன்றாம்-நபர் நிர்வாகி எவரும் இல்லை. இது நிறுவனத்துக்குள்ளான நேரடி செட்டில்மென்ட்டுக்கு வகை செய்கிறது.

      பாலிசிபஜாரில் ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஆன்லைனில் வாங்குவது எப்படி?

      ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்களை பாலிசிபஜாரிலிருந்து சில எளிமையான படிகளில் வாங்குவது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

      • படி 1 : உங்கள் முழுப்பெயருடன் பாலினத்தை ஆண்/ பெண் என்று தேர்வு செய்யுங்கள்
      • படி 2 : இப்போது சரியான தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, உங்கள் வயதைத் தேர்ந்தெடுத்து, ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்களைப் பார்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      • படி 3 : தொடரவும் என்பதை கிளிக் செய்து, நகரத்தைத் தேர்ந்தெடுத்து பின்கோடை உள்ளிடவும்
      • படி 4 : கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தேர்வுகளிலிருந்து ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
      • படி 5 : பாலிசிபஜாரில் உள்ள பல்வேறு ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டங்களைத் தேர்ந்தெடுத்து ஒப்பிடவும். பிரீமியத்தை நீங்கள் ஆன்லைனிலும் கணக்கிடலாம்.
      • படி 6 : சரியான திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்ததும் பிரீமியத்தை நீங்கள் ஆன்லைனில் செலுத்தலாம் அல்லது விரிவான தகவல்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியிடம் பேசலாம்.
      • படி 7 : மேலே உள்ள படிகள் நிறைவு செய்யப்பட்டு, பிரீமியம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு பாலிசி மின்னஞ்சல் செய்யப்படும்.

      ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

      ஆயுள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய வசதியை ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி வழங்குகிறது தொடர்ச்சியான காப்பீடு நன்மைகளைப் பெற, உங்கள் காப்பீடு திட்டத்தை ஆண்டுக்கு ஒரு முறை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

      உங்கள் ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஆன்லைனில் புதுப்பிக்க படிப்படியான வழிகாட்டல்கள் இதோ:

      • செயலில் இருக்கும் உங்கள் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பாலிஸியை புதுப்பிக்க பாலிஸிபஜார் மருத்துவக் காப்பீடுக்குச் செல்லவும்.
      • இப்போது, உங்கள் பாலிஸி விவரங்களை நிரப்புங்கள் - பாலிஸி எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இவற்றை புதுப்பித்தல் படிவத்தில் நிரப்பவும்.
      • காப்பீடு விவரங்களை நீங்கள் நிரப்பியதும், காப்பீடு பிரீமியம் தொகை உங்களுக்குக் கிடைக்கும்.
      • தொடரவும் பட்டனை கிளிக் செய்யவும்.
      • உங்கள் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பிரீமியத்தை நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் நீங்கள் செலுத்தலாம்.
      • பாலிசியை வாங்கவும் விருப்பத் தேர்வை கிளிக் செய்யவும்.

      சில நொடிகளில் உங்கள் ஸ்டார் மருத்துவக் காப்பீடு புதுப்பித்தல் நகல் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் கிடைக்கும்

      “எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸில் கிளைம் தாக்கல் செய்வது எப்படி?

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸுக்கான கிளைம் வழிமுறை இதோ.

      ரொக்கமில்லா கிளைமுக்கான வழிமுறை

      ஸ்டார் மருத்துவக் காப்பீடு திட்டம் ஒன்றில் நீங்கள் ஒரு ரொக்கமில்லா கிளைமைப் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

      படி 1:

      நீங்கள் சிகிச்சை பெறும் நெட்வொர்க் பட்டியலில் உள்ள மருத்துவமனையின் வரவேற்பு மேஜைக்குச் செல்லவும்.

      படி 2:

      அடையாள நோக்கத்துக்காக பாலிசி ஐடியைக் காட்டவும்.

      படி 3:

      அவர்கள் குழுவில் உள்ள ஒரு மருத்துவர் ஆவணங்களைச் சரிபார்ப்பார். சரிபார்த்தலுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின்படி அவர் கிளைமை விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இசைந்த வகையில் புராசஸ் செய்வார்.

      படி 4:

      ஸ்டார் ஹெல்த் நெட்வொர்க் மருத்துவமனை உங்கள் ஐடியை மறுசரிபார்த்துமுன்-ஒப்புதல் ஸ்டார் மருத்துவக் காப்பீடு கிளைம் படிவத்தைச் சமர்ப்பிக்கும்

      படி 5:

      ஒரு டெஸிக்னேட் செய்யப்பட்ட ஃபீல்ட் மருத்துவர் மருத்துவமனையில் சேரும் செயல்முறையை உங்களுக்கு எளிதாக்குவார்.

      படி 6:

      பின்பற்றப்பட வேண்டிய முறைகள் செய்து முடிக்கப்பட்டதும், விதிகள் மற்றும் நிபந்தனைகளின்படி கிளைம் செட்டில் செய்யப்படும்.

      ஸ்டார் ஹெல்த் ரொக்கமில்லா கிளைமுக்குத் தேவைப்படும் ஆவணங்கள்

      • ஸ்டார் ஹெல்த் கார்ட்
      • முறையாக நிரப்பபட்டு, கையொப்பமிடப்பட்ட கிளைம் படிவம்.
      • விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டுமானால், FIR அறிக்கை அல்லது மெடிகோ லீகல் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
      • ரத்த அறிக்கைகள், x-ரே அல்லது ஸ்கேன் அறிக்கைகள் போன்ற ஆய்வு அறிக்கைகள்.
      • மருத்துவரின் கலந்தாலோசனை தாள்கள்
      • மருந்து விற்பனையாளரின் இன்வாயிஸ் (அசல்)
      • மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் சம்மரி
      • மற்ற ஆவணங்கள் (தேவைப்படுவதற்கு ஏற்ப)

      ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் செயல்முறை:

      ஸ்டார் ஹெல்த் மெடிகிளைம் காக நீங்கள் ரீஇம்பர்ஸ்மென்ட் பெற விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

      படி 1: ஃபீல்டில் உள்ள ஒரு மருத்துவர் மருத்துவமனையில் சேர்வதை உங்களுக்கு எளிதானதாக ஆக்குவார்.

      படி 2: டிஸ்சார்ஜுக்குப் பிறகு மருத்துவமனை பில்களை நீங்கள் செலுத்த வேண்டும். எல்லா சிகிச்சை(கள்) க்குமான அசல் ஆவணங்கள், ஏற்பட்ட செலவுகளுக்கான ரசீதுகள் ஆகயவற்றைச் சேகரிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

      படி 3: ஸ்டார் ஹெல்த் கிளைம் படிவத்தை நிரப்புங்கள், தேவைப்படும் எல்லா அசல் ஆவணங்கள் மற்றும் ரசீதுகளையும் இணைத்து அருகாமையிலுள்ள ஸ்டார் ஹெல்த்தின கிளை அலுவலகத்தில் சமர்ப்பியுங்கள்.

      படி 4: உங்கள் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி உங்கள் கிளைம் செட்டில் செய்யப்படும்.

      ஸ்டார் ஹெல்த் ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைமுக்குத் தேவைப்படும் ஆவணங்கள்

      • அசல் மருந்து பில்கள், பிரிஸ்கிரிப்ஷனுடன்
      • विधिवत भरा और हस्ताक्षरित किया गया स्टार मेडिकल इंश्योरेंस क्लेम फॉर्म முறையாக நிரப்பப்பட்டுக் கையொப்பமிடப்பட்ட ஸ்டார் மருத்துவக் காப்பீடு கிளைம் படிவம்
      • மருந்து பில்கள், டிஸ்சார்ஜ் சான்றிதழ் மற்றும் ரசீதுகள்
      • மருத்துவச் சோதனை அறிக்கைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள்
      • சர்ஜனின் பில்கள் மற்றும் ரசீதுகள்
      • சர்ஜரி/ ஆபரேஷனின் தன்மை
      • மருத்துவமனையின் பதிவுச் சான்றதழ் (15 படுக்கைகளுக்குக் குறைவாக இருந்தால்)
      • விபத்து காரணமான மருத்துவமனைச் சிகிச்சை என்றால் FIR/ சுயச் சான்றிதழ்

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பிரீமியத்தை எப்படிக் கணக்கிடுவது?

      ஸ்டார் ஹெல்த் & அல்லைட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி அதன் பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு உங்கள் ஆண்டு பிரீமியத்தை எளிதாகவும் வசதியாகவும் கணக்கிட உங்களுக்கு உதவுகிறது. உங்கள் ஆண்டு பிரிமியத்தைக் கணக்கிட ஸ்டார் மருத்துவக் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில முக்கியமான தகவல்களை அளிப்பதுதான், ஸ்டார் ஹெல்த் பிரீமியம் கால்குலேட்டர் நீங்கள் வாங்கத் திட்டமிட்டுள்ள ஸ்டார் மருத்துவக் காப்பீடுக்கான ஆண்டு பிரீமியம் தொகையைக் கணக்கிட உங்களுக்கு உதவும். ஸ்டார் ஹெல்த் கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பிரீமியம் தொகையைக் கணக்கிட உங்களுக்குத் தேவைப்படும் விவரங்களின் பட்டியல் பின்வருமாறு;

      • பாலிசி காலம்
      • காப்பீட்டுத் தொகை
      • ஸ்கீம் (திட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை)
      • மூத்த உறுப்பினர் பிறந்த தேதி

      இந்த விவரங்களின் அடிப்படையில் அடிப்படை பிரீமியம் மற்றும் மொத்த பிரீமியம் தொகையை ஸ்டார் ஹெல்த் பிரீமியம் கால்குலேட்டர் உங்களுக்கு அளிக்கும்.

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நெட்வொர்க் மருத்துவமனைகள்

      ஸ்டார் ஹெல்த் அல்லைட் இன்ஷ்யூரன்ஸ் இந்தியா முழுவதிலும் 11,000+ நெட்வொர்க் மருத்துவமனகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறது, ஸ்டார் மருத்துவக் காப்பீடு மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் வசதியுடன் கூட ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சையையும் இவற்றில் நீங்கள் பெறலாம். இது நாட்டிலேயே மிகப் பெரிய அடிப்படைகள் கொண்ட ஸ்டார் ஹெல்த் நெட்வொர்க்கின் மருத்துவமனைப் பட்டியல் இன்ஷ்யூரன்ஸ் வழங்குபவர் மூன்றாம்-நபர் தலையீடு இல்லாத எளிதான, சிக்கல்கள் இல்லாத ஹெல்த் கிளைம் செட்டில்மென்ட்டை வழங்குகிறார்.

      உங்கள் வீட்டிலிருந்து அணுகக் கூடிய நெட்வொர்க் மருத்துவமனையைக் கண்டறிய, ஆன்லைன் நெட்வொர்க் மருத்துவமனை லொகேடரில் உள்ள டிராப் டவுன் மெனுவிலிருந்து உங்கள் நகரத்தையும், மாநிலத்தையும் தேர்ந்தெடுக்கவும். தொடர்பு விவரங்களுடன் கூடிய ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலுக்கு நீங்கள் இட்டுச் செல்லப்படுவீர்கள். ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் அக்ரீட் நெட்வொர்க் மருத்துவமனைகளுடனும் தொடர்பு வைத்திருக்கிறது, இவற்றில் நீங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளையும், கண்டறியப்பட்ட வழிமுறைகளுக்கான பேக்கேஜுக்கான கட்டணங்களையும் பெறலாம்.

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியைத் தொடர்பு கொள்வது எப்படி

      ஸ்டார் ஹெல்த் & அல்லைட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் இன் பதிவு பெற்ற அலுவலகம் புதிய குளத்தெரு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, சென்னை 600034 தொலைபேசி: 28288800, மண்டல அலுவலகம்/ கிளைகள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ளன, அவற்றில் சிலவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      • ஹூடா மார்க்கெட், செக்டர் 14, முதல் மாடி, பழைய டெல்லி சாலை, புது டெல்லி - 122001. தொலைபேசி - 4255201
      • ஹிமாலயா ஹவுஸ், கே ஜி மார்க் CP புது டெல்லி - 110001. தொலைபேசி-08512883222


      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

      • கேள்வி. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் புதுப்பித்தலுக்கான கிரேஸ் பீரியட் எவ்வளவு?

        விடை: ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் புதுப்பித்தலுக்கு 30 நாட்கள் கிரேஸ் பீரியட் அளிக்கிறது. இது உரிய தேதி கடந்த பிறகும் பாலிசிதாரர் புதுப்பித்தல் பிரீமியத்தைச் செலுத்த அனுமதிக்கிறது. இந்த 30 நாட்கள் கிரேஸ் பீரியடால் பாலிசிதாரர்களால் கிரேஸ் பீரியடின்போது மருத்துவக் காப்பீடு திட்டங்களின் முழுமையான கவரேஜ் நன்மைகளைப் பெற முடியும்.

      • கேள்வி. ஸ்டார் ஹெல்த் ஒட்டுமொத்த திட்டத்தின் கீழ் முதல் குழந்தைப் பிறப்புக்கான காத்திருப்புக் காலம் எவ்வளவு?

        விடை: ஸ்டார் ஒட்டுமொத்த ஹெல்த் திட்டத்தின் கீழ் முதல் குழந்தைப் பிறப்புக்கான காத்திருப்புக் காலம் 24 மாதங்கள். 24 மாதங்கள் அல்லது 2 வருடங்கள் தொடர்ச்சியான பாலிசி கவருக்குப் பிறகு, உங்கள் முதல் குழந்தைப் பிறப்புக்கான மகப்பேறு கவரை நீங்கள் பெற முடியும்.

      • கேள்வி. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி நிலையை எப்படிச் சரிபார்ப்பது?

        விடை: ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்குத் தெரிவிக்கப்பட்டதும்,ஒப்புதலுக்குப் பிறகு உடனேயே வழிமுறை தொடங்குகிறது. ரொக்கமில்லா கிளைம்கள் விஷயத்தில், இன்ஷ்யூரன்ஸ் வழங்குபவர் அதை இரண்டு மணி நேரத்துக்குள் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆயினும், ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பாலிசியின் நிலையை பாலிசிதாரர் சரிபார்க்க விரும்பினால், அவர் ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று ‘கிளைம்ஸ்’ டேப் இன் கீழ், கிளைம் நிலை பட்டனைத் தட்டவும் அதற்குப் பிறகு, ஐடி எண், கிளைம் அறிவிப்பு எண் போன்ற தேவைப்படும் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பாலிசி விவரங்களை உள்ளிடவும். இதற்குப் பிறகு, நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியல் பாலிசிதாரருக்குத் திரையில் காட்டப்படும், மருத்துவச் செயல்முறை செயல்படுத்தப்பட்ட சரியான நெட்வொர்க் மருத்துவமனை அல்லது நர்ஸிங் ஹோம் ஐ கிளிக் செய்து சமர்ப்பிக்கவும் பட்டனை கிளிக் செய்யவும். கிளைம் நிலையை பயனர் திரையில் பார்ப்பார்.

      • கேள்வி. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கிளைம் படிவத்தை நிரப்புவதற்கான செயல்முறை என்ன?

        விடை: ஸ்டார் ஹெல்த் கிளைம் படிவம் இன்ஷ்யூரன்ஸ் வழங்குபவரின் இணையதளத்தில் இருக்கிறது, அங்கிருந்து அதை டவுன்லோட் செய்யவும். எல்லா வழிகாட்டல்களும் ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கிளைம் படிவத்திலேயே உள்ளன. ஸ்டார் ஹெல்த் கிளைம் படிவத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன - பகுதி A, பகுதி B .பகுதி A காப்பீடு செய்து கொண்டவரால் நிரப்பப்பட வேண்டும், பகுதி B மருத்துவமனையால் நிரப்பப்பட வேண்டும்

        ஸ்டார் ஹெல்த் கிளைம் படிவத்தின் பகுதி A நபர் பற்றிய விவரங்கள், மருத்துவமனை சிகிச்சை விவரங்கள், இன்ஷ்யூரன்ஸ் வரலாறு, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பாலிசிதாரரின் கிளைம் விவரங்கள் ஆகியவை பற்றிக் கேட்கும்.

      • கேள்வி. ஸ்டார் மருத்துவக் காப்பீடுக்கு டாப் அப் திட்டம் ஏதும் இருக்கிறதா?

        விடை: ‘ஸ்டார் ஹெல்த் சர்ப்ளஸ் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி’ ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுக்கான டாப் அப் ஆகும். இந்தத் திட்டம் மிகவும் கட்டுப்படி ஆகக் கூடிய பிரீமியத்தில் அதிக்க் காப்பீட்டுத் தொகையை அளிக்கிறது. டாப் அப் பாலிசி வைத்திருப்பதன் நன்மை மருத்துவப் பரிசோதனைக்கான தேவை இல்லை என்பது, ஆனால் முன்பே இருக்கும் நோய்கள் 3 ஆண்டுகள் காத்திருப்புக் காலத்துக்குப் பிறகுதான் கவர் செய்யப்படும். ஒரு ஸ்டார் ஹெல்த் பாலிசிதாரர் இதைத் தன் அடிப்படை காப்பீடு திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதை ஒரு தனித் திட்டமாக எடுத்துக் கொள்ளலாம். ஆயினும், இந்தத் திட்டதின் கிளைம் கழிக்கப்பட வேண்டிய தொகையை பாலிசிதாரரர் கொடுத்த பிறகுதான் அங்கீகரிக்கப்படும், இது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்துக்கு ஏற்றபடி மாறும். இது ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம்.

      • கேள்வி. காப்பீடு செய்து கொண்ட ஒரு நபர் ஒரு ஆண்டில் செய்யக் கூடிய ஸ்டார் ஹெல்த் கிளைம்களுக்கு வரம்பு ஏதும் இருக்கிறதா?

        விடை: காப்பீடு செய்து கொண்ட ஒரு நபர் ஒரு ஆண்டில் செய்யக் கூடிய ஸ்டார் ஹெல்த் கிளைம்களுக்கு வரம்பு எதுவும் இல்லை, ஆனால் காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு இருக்கிறது, இது பாலிசியின்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும்.

      • கேள்வி. ஸ்டார் மருத்துவக் காப்பீட்டில் கவர் செய்யப்படும் நோய்களின் பட்டியல் என்ன?

        விடை: ஸ்டார் மருத்துவக் காப்பீட்டில் கவர் செய்யப்பட்ட நோய்களின் பட்டியல் கீழே;

        • மரபுசார் நோய்கள்
        • HIV/AIDS
        • மலட்டுத்தன்மை
        • குழந்தை பிறப்பு அல்லது கருவுற்றல் தொடர்பான சிக்கல்கள்
        • பிறப்பிலிருந்து உள்ள நோய்
        • குடல் இறக்கம்
        • மூல நோய்
        • காடராக்ட்
        • சைனஸிடிஸ்
        • ஃபிஸ்டுலா
        • மது அல்லது போதை மருந்து உட்கொள்ளலால் ஏற்பட்ட நோய்கள்
      • கேள்வி. ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

        விடை: ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இணையதளத்துக்குச் சென்று மருத்துவக் காப்பீடு பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். மருத்துவக் காப்பீடு பெறப்பட வேண்டிய எல்லா நபர்களின் விவரங்களையும் நிரப்பவும். ஸ்டார் ஹெல்த் பிரீமியம் கால்குலேட்டரின் உதவியுடன், குறிப்பிடப்பட்டுள்ள கட்டண விவரங்களை உடனே பார்க்க முடியும்.

        திட்டத்தின் எல்லா விவரங்களையும் பார்த்து, உள்ளடக்கப்பட்டுள்ளவை, உள்ளடக்கப்படாதவை என்று குறிப்பிடப்பட்டுள்ளவை இவற்றைச் சரிபார்த்து, ஒரு திட்டத்தை முடிவு செய்த பின், பிரீமியத்தை இணையதளத்தில் நேரடியாகச் செலுத்தலாம் ஸ்டார் ஹெல்த் ஆன்லைன் செலுத்தல் டெபிட் கார்ட், நெட் பாங்கிங் மற்றும் கிரடிட் கார்ட் மூலம் செலுத்தப்படலாம்.

      • கேள்வி. ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸில் ஒரு மருத்துவக் காப்பீடு திட்டத்தை வாங்கும்போது, வரிச் சலுகை எதுவும் பெற முடியுமா?

        விடை: ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளுக்காச் செலுத்தப்படும் பிரீமியம்கள் வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 80D இன் கீழ் வரிவிலக்குத் தகுதி பெறுகின்றன.

      • கேள்வி. இந்தியர் அல்லாத ஒருவர் ஸ்டார் ஹெல்த் பாலிசியை எடுத்துக் கொள்ள முடியுமா?

        விடை: முடியும். இந்தியர் அல்லாத எவரும் ஸ்டாரின் மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் கவரேஜ் இந்தியாவுக்குள் மட்டும்தான் கிடைக்கும்.

      • கேள்வி. ஹெல்த் கார்ட் என்பது என்ன?

        விடை: ஹெல்த் கார்ட் ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் மருத்துவக் காப்பீடு பாலிசியுடன் வருகிறது, இது ஒரு ஐ டி கார்டைப் போன்றது. காப்பீடு செய்து கொண்ட நபர் ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் எந்த ஒரு நெட்வொர்க் மருத்துவமனையிலும் ரொக்கமில்லா சிகிச்சை பெற அது வகை செய்கிறது.

      ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் - சமீபத்திய செய்திகள்

      • ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் IPOஇன் அளவை 849 கோடி குறைக்கிறது.

        ஒரு வாரம் குறைவான பதில்செயல்பாட்டுக்குப் பிறகு, ஸ்டார் ஹெல்த் & அல்லைட் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி தன் இனிஷியல் பப்ளக் ஆஃபரிங்கை 849 கோடி குறைத்திருக்கிறது. சமீபத்திய பிராஸ்பெக்டஸின்படி, இந்த நிறுவனத்தின் IPO ரூ. 7,249 கோடியிலிருந்து ரூ. 6,400 கோடியாக ($848.02 மில்லியன்) குறைக்கப்பட்டிருக்கிறது.

        ஸ்டார் ஹெல்த் IPOமுழு அளவு சப்ஸ்க்ரிப்ஷன் பெறத் தவறி விட்டது.

        இந்தியாவின் மிகப் பெரிய தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் அதன் IPO முழுமையாக சப்ஸ்க்ரைப் செய்யப்படுவதில் சென்ற வாரம் தோல்வி அடைந்து விட்டது. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பின்பலம் இருந்தும், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய லிஸ்டிங்குக்கு முதலீட்டாளர்களிடம் பலவீனமான டிமாண்ட் இருந்ததை இது காட்டுகிறது. சப்ஸ்க்ரிப்ஷன் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், IPO இன் விற்பனைப் பங்குக்கான தன் ஆஃபரைக் குறைக்க இந்த நிறுவனம் முடிவு செய்தது.

        துவக்கத்தில், ஸ்டார் ஹெல்த் IPO ஒரு பங்குக்கு ரூ. 870 முதல் ரூ. 900 வரை என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது ஆயினும், தற்போது விற்பனைக்கான IPO ஆஃபர் 48.89 மில்லியன் பங்குகள், 22.2 மில்லியன் பங்குகள் புதிய வெளியீட்டுடன், டிசம்பர் 7 ஆம் தேதி பிராஸ்பெக்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி

      Policybazaar exclusive benefits
      • 30 minutes claim support*(In 120+ cities)
      • Relationship manager For every customer
      • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
      • Instant policy issuance No medical tests*
      book-home-visit
      Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
      top
      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL