எஸ் பி ஐ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்
மருத்துவமனை சிகிச்சைக்காக பாலிசிதாரருக்கு ஏற்படும் செலவகளுக்கான ஒட்டுமொத்த காப்பீடு கவரேஜை எஸ் பி ஐ ஹெல்த்
Read More
எஸ் பி ஐ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி ஒரு பார்வை
எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இன்ஷ்யூரன்ஸ் ஆஸ்திரேலியா க்ரூப் (ஐ ஏ ஜி) இவற்றுக்கிடையிலான ஒரு கூட்டுத் தொழில் முனைவு. மொத்த மூலதனத்தில் 74% எஸ் பி ஐ க்கு சொந்தமானது, மீதமுள்ள 26% ஐ ஏஜி க்கு சொந்தமானது. 2013-14 ஆண்டின்போது எஸ் பி ஐ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து எஸ் பி ஐ இன் 1.5 கோடிக்கு மேற்பட்ட சேமிப்பு வங்கி கண்க்கு வைத்திருப்போரை தனிநபர் விபத்துக் காப்பீடு மூலம் கவர் செய்திருப்பதை உறுதி செய்வதில் எஸ் பி ஐ பெருமகிழ்ச்சி அடைகிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சுமார் 14,000 கிளைகளில் எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் தங்கள் இருப்பை நிலைநாட்டி இருக்கிறது. எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் 68 மில்லியன் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது,அதிக கிளைம் செலுத்தும் வல்லமைக்காக ICRA ஆல் iAAA சான்றைப் பெற்றிருக்கிறது. எ எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு கிளைம் செட்டில்மென்ட் விகிதமான 96% இந்த நிறுவனத்தின் கிளைம் செட்டில்மென்ட்டுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
*காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்பபடும் எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படியே வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்டெ விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களின் நன்மைகள்
எஸ் பி ஐ ஜெனரல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி அதன் மருத்துவக் காப்பீடு திட்டங்களை அதன் வாடிக்கையாளர்கள் பெறக் கூடிய சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் மற்றும் நன்மைகளுடன் வடிவமைத்துள்ளது. பல்வேறு நோய்களுக்கான மருத்துவச் செலவுகள் மற்றும் சிகிச்சைச் செலவுகள் நிலையாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. எனவே,மருத்துவக் காப்பீடு திட்டங்ளை வாங்குவது இந்த நவீன கால மருத்துவ சிகிச்சைச் சூழலில் மிகவும் முக்கியமானதாக ஆகி விட்டது. எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும் மருத்துவ சேவைகளை உங்களுக்கு வழங்குவதுடன் பொருளாதாரப் பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும். எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களை வாங்குவதன் முக்கிய நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- சாதாரண நோய்கள் முதல், ஓ பி டி செலவுகள், தீவிர நோய்கள் வரை எல்லாவற்றையும் கவர் செய்யும் பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்களை இந்தக் காப்பீடு நிறுவனம் அளிக்கிறது.
- காப்பீடு பெற்றவருக்கு பல்வேறு நோய்கள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றுக்கான கவரேஜை அது அளிக்கிறது.
- எஸ் பி ஐ மெடிகிளைம் பாலிசி ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை பரவலான கவரேஜ் விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது.
- 45 வயது வரை விண்ணப்பதாரர்களுக்கு முனகூட்டிய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
- மெட்ரோ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் திட்டம், செமி-மெட்ரோ திட்டம், ரெஸ்ட் ஆஃப் இந்தியா போன்ற நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த திட்ட விருப்பத் தேர்வுகளை அது அளிக்கிறது.
- உங்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள், பெற்றோர், வாழ்க்கைத் துணைவர், நீங்கள் உள்ளிட்ட உங்கள் மொத்தக் குடும்பத்தையும் குடும்ப ஃப்ளோட்டர் பாலிசி மூலம் ஒரே திட்டத்தில் கவர் செய்யும் விருப்பத் தேர்வுகளை எஸ் பி ஐ திட்டங்கள் வழங்குகின்றன.
- மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் ஈடு செய்யப்படுகின்றன.
- கிளைம் இல்லாத ஒவ்வொரு 4 ஆண்டு காலத்துக்கும் இலவச மருத்துவப் பரிசோதனை பெறுங்கள்
- ஆயுட்காலம் முழுவதும் புதுப்பிக்கப்படக் கூடிய வசதியை இந்தக் காப்பீடு நிறுவனம் அளிக்கிறது.
- இந்தியாவில் உள்ள 6000 க்கு மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சையும் கிடைக்கும்
- அறை வாடகை மற்றும் கன்சல்டேஷன் கட்டணம் இவற்றுக்கான உள் வரம்புகளை நீக்குதல் போன்றவை மூலம் கூடுதல் கவர் எடுத்துக் கொண்டு கவரை அதிகரிப்பதற்கான ஒரு முறை இருக்கிறது.
- எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பிரீமியம்களுக்கு வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80DD இன் கீழ் வரிச் சலுகை நன்மைகளைப் பெற முடியும்.
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பாலிசிகளின் வகைகள்
எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் அதன் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு மருத்துவக் காப்பீடு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வெவ்வேறு வகை மருத்துவக் காப்பீடு பாலிசிகளை வழங்குகிறது. பாலிசி கவரேஜ் மற்றும் நிபந்தனைகளை உறுதி செய்து கொண்ட பின், உங்கள் ஆரோக்கியத் தேவயைை அதிகம் பூர்த்தி செய்யும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
- எஸ் பி ஐ ஆரோக்யா பிரீமியர் பாலிசி
- எஸ் பி ஐ ஆரோக்யா பிளஸ் பாலிசி
- எஸ் பி ஐ ஆரோக்யா டாப் அப் பாலிசி
- எஸ் பி ஐ மருத்துவமனை தினசரி ரொக்கக் காப்பீடு பாலிசி
- எஸ் பி ஐ தீவிர நோய்கள் காப்பீடு பாலிசி
- எஸ் பி ஐ க்ரூப் மருத்துவக் காப்பீடு பாலிசி
- எஸ் பி ஐ கடன் காப்பீடு பாலிசி
- எஸ் பி ஐ ரீடெயில் மருத்துவக் காப்பீடு பாலிசி
-
எஸ் பி ஐ ஆரோக்யா பிரீமியர் காப்பீடு பாலிசி தனிநபர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை மருத்துவச் செலவுகளுக்காக கவர் செய்ய வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹெல்த் ஸ்கீமின் முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- ரூ. 10,00,000 இல் தொடங்கி ரூ.30,00,000 வரை உள்ள பாலிசிகளில் பரவலான கவரேஜ்
- தனிநபர் / குடும்ப ஃப்ளோட்டர் விருப்பத் தேர்வுகளில் வருகிறது. குடும்பத் திட்டத்துக்கு, குடும்பம் என்பதில் காப்பீடு பெற்ற நபர், அவருடைய வாழ்க்கைத் துணைவர், குழந்தைகள், பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோர் ஆகியோர் அடங்குவர். குடும்ப ஃப்ளோட்டரில் குறிப்பிட்ட நபர், வாழ்க்கைத் துணைவர் மற்றும் 23 வயது வரையான சார்ந்திருக்கும் குழந்தைகள் ஆகியோர் சேர்க்கப்படுவர்.
- குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயத 3 மாதங்கள் மற்றும் 65 ஆண்டுகள்
- மருத்துவ வரலாறு இல்லாத 55 ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைந்த வயதுள்ள நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை.
- 1, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.
- மருத்துவமனைச் சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் முறையே 60 மற்றும் 90 நாட்களுக்கு கவர் செய்யப்படும்.
- நீங்கள் பாலிசி எடுத்துக் கொண்ட பிறகு ஆரம்ப காலமான 9 மாதங்களுக்குப் பிறகு மகப்பேறு செலவுகள் கவர் செய்யப்படும்.
- இந்த ஸ்கீம் ரூ. 1 லட்சம் வரை ஆம்பலன்ஸ் கவரும் வழங்குகிறது.
- 142 டே கேர் செலவுகள் மற்றும் உடல் உறுப்பு தானம் அளிப்போர் செலவுகளுக்கும் கூடக் காப்பீடு அளிக்கிறது.
- எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு கிளைம் ஆம்பலன்ஸ் கட்டணங்களை (விமான ஆம்பலன்ஸ் உட்பட) கவர் செய்கிறது ரூ. 1,00,000 வரை
- கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் காப்பீட்டுத் தொகையில் 10% கூட்டப்பட்ட போனஸ், அதிகபட்சம் 50% என்பதற்கு உட்பட்டு
- ஸ்டாண்டர்ட் மேற்கத்திய மருந்துகளைத் தவிர, பாரம்பரிய AYUSH (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) வகைகளிலான மருத்துவ சிகிச்சைகளுக்கும் அது கவரேஜ் வழங்குகிறது. இந்த மாற்றுமுறை சிகிச்சைகள் அரசு மருத்துவனையின் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
- மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்படுதல் நன்மைகள் ரூ. 5,000 வரை, 4 ஆண்டுகளுக்கு கிளைம் எதுவும் செய்யப்படாவிட்டால்
- கூடுதல் பிரிமியம் இல்லாமல் முழு காப்பீட்டுத் தொகையையும் தானே திரும்பச் சேர்க்கிறது, கிளைம் காரணமாகத் தொகை குறைக்கப்பட்டிருந்தால்
- வருமான வரிச் சட்டம் பிரிவு 80DD இன் கீழ் வரிக் கழிவு வழங்குகிறது.
- கவரைப் புதுப்பிக்க பாலிசி காலத்தின் முடிவிலிருந்து 30 நாட்கள் கிரேஸ் காலம் உள்ளது.
திட்டம் வகை |
தனிநபர்/ குடும்ப ஃப்ளோட்டர் |
காப்பீட்டுத் தொகை |
ரூ. 10 லட்சம் - ரூ. 30 லட்சம் |
பாலிசி காலம் |
1, 2 மற்றும் 3 ஆண்டுகள் |
வயதுத் தகுதிகள் |
3 மாதங்கள் முதல் 65 ஆண்டுகள் வரை |
-
எஸ் பி ஐ ஆரோக்யா பிளஸ் பாலிசி எஸ் பி ஐ ஜெனரல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸிலிருந்து வரும் ஒரு மெடிகிளைம் பாலிசி இது அதிகரித்து வரும் ஓ பி டி மற்றும் மருத்துவமனை சிகிச்சைச் செலவுகளை கவர் செய்து, பாலிசிதாரர் தன் கையிலிருந்து கொடுக்க வேண்டிய செலவுகளைக் குறைக்கிறது. இந்த பாலிசியின் முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- எஸ் பி ஐ ஆரோக்யா பிளஸ் பாலிசி இரண்டு கவரேஜ் விருப்பத் தேர்வுகளை அளிக்கிறது. தனிநபர் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் அடிப்படையில்
- இந்த பாலிசியை வாங்குவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயதுகள் முறையே 3 மாதங்கள் மற்றும் 65 ஆண்டுகள்.
- எஸ் பிஐ ஆரோக்யா பிளஸ் பாலிசிக்கு வெளியேறும் வயது எதுவும் இல்லை.
- ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை விருப்பத் தேர்வுகளை எஸ் பி ஐ ஆரோக்யா பிளஸ் வழங்குகிறது.
- காப்பீட்டுத் தொகை ரூ. 1, 2 அல்லது 3 லட்சத்துக்கு ஆண்டு பிரிமீயம் முறையே ரூ. 8,900, ரூ. 13,350 அல்லது ரூ. 17,800
- வயது, பிரீமியம் மற்றும் குடும்ப வகை போன்ற காரணிகளைப் பொருத்து ஓ பிடி திரும்ப வழங்குதலை இந்த பாலிசி வழங்குகிறது.
- இந்த பாலிசி மூன்று கால விருப்பத் தேர்வுகளை அளிக்கிறது - 1 ஆண்டு, 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள்
- மகப்பேறு செலவுகளுக்கான உள் வரம்புகள் எதுவும் இல்லை, அவை பாலிசியின் முழுத்தொகைக்கு கவர் செய்யப்படுகின்றன. மகப்பேறு செலவுகள் பாலிசி எடுத்ததற்கு 9 மாதங்களுக்குப் பின் ஏற்பட்டால், மகப்பேறு செலவுகளை ஓ பி டி நன்மைகளின் கீழ் அது கவர் செய்கிறது. மருத்துவ வரலாறு இல்லாவிட்டால் 55 ஆண்டுகள் அல்லது அதற்குக் கீழ் வயது உள்ள நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் எதையும் இந்த பாலிசி விதிக்கவில்லை.
- மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை முறையே 60 நாட்களுக்கும், 90 நாட்களுக்கும் இந்த பாலிசி கவர் செய்கிறது.
- 142 ஓ பி டி (டே கேர்) வழிமுறைகளுக்கு எதிராக இந்த பாலிசி பாதுகாப்பளிக்கிறது.
- வீட்டிலிருந்தே பெறும் சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் செலவுகள் கவருக்கும் இது வகை செய்கிறது.
- ஆயினும், முன்பே இருக்கும் நோய்களை திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளுக்கும் குறிப்பிட்ட சில நோய்களை கவரின் முதல் ஆண்டிலும் இது கவர் செய்யாது.
- காப்பீடு பெற்ற நபர் வருமான வரிச் சட்டம் பிரிவு 80DD இன் கீழ் வருமான வரிச் சலுகை கோரலாம்.
திட்டம் வகை |
தனிநபர்/ குடும்ப ஃப்ளோட்டர் |
காப்பீட்டுத் தொகை |
ரூ. 1, 2 மற்றும் 3 லட்சம் |
வயதுத் தகுதிகள் |
3 மாதங்கள் முதல் 65 ஆண்டுகள் வரை |
பாலிசி காலம் |
1, 2 மற்றும் 3 ஆண்டுகள் |
-
விபத்துக்கள் அல்லது நோய்கள் போன்ற எதிர்பாராத முக்கிய நிகழ்வுகளுக்கான செலவுகளை அடிப்படை காப்பீடு திட்டத்துக்கு மேல் எதிர்கொள்ள எஸ் பி ஐ வழங்கும் ஒரு சிறந்த மெடிகிளைம் பாலிசி எஸ் பி ஐ ஆரோக்யா டாப் அப் ஒரு பெரிய டாப் அப் கவர் கொண்ட இந்த மெடிகிளைம் பாலிசி தனிநபரும், குடும்பமும் (ஃப்ளோட்டர் பாலிசியின் கீழ்) தற்காலத்தில் மருத்துவமனை சிகிச்சைகளுக்கும் குணமடைவதற்கும் ஏற்படும் பெரிய செலவுகளை எதிர்கொள்ள உதவுகிறது.
இந்த பாலிசியின் முக்கிய நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- 55 ஆண்டுகள் வரை வயதுள்ள நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை.
- ரூ. 1,00,000 இலிருந்து ரூ. 50,00,000 வரை, ரூ. 1,00,000 முதல் ரூ. 10,00,000 கழித்துக் கொள்ளும் விருப்பத் தேர்வுகளுடன் பெரிய கவரேஜை இது அளிக்கிறது. கழித்துக் கொள்ளக் கூடிய விருப்பத் தேர்வுகள் 1 லட்சத்தின் பெருக்கல் தொகைகளில் வருகின்றன.
- பாலிசி காலம் 1, 2 மற்றும் 3 ஆண்டுகளும், 2-் ஆண்டு பாலிசிக்கான பிரீமியத்தின் மீது 5% தள்ளுபடியும், 3-ஆண்டு திட்டத்துக்கு 7.5% தள்ளுபடியும் கொண்டது.
- ரீஇம்பர்ஸ்மென்ட் அளிக்கப்படுகிறது ரூ. 5,000 வரை, ஆம்புலன்ஸ் கட்டணத்துக்கு.
- ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) ஆகிய மாற்றுமுறை சிகிச்சைகளை கவர் செய்கிறது.
- வருமான வரிச் சட்டம் பிரிவு 80DD இன் கீழ் வரிக் கழிவு அளிக்கிறது.
- எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு புதுப்பித்தலுக்கு பாலிசி காலத்தின் கடைசி நாளிலிருந்து 30 நாட்கள் கிரேஸ் காலம் அளிக்கிறது.
குறிப்பு:
இந்தத் திட்டம் தனிநபர் / குடும்பம் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் விருப்பத் தேர்வுகளுடன் வருகிறது, காப்பீடு பெற்ற நபர், அவருடைய வாழ்க்கைத் துணைவர் மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகள் தவிர, பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோர்களை ஆகியோரையும் உள்ளடக்குக்கிறது. குடும்ப ஃப்ளோட்டர் திட்டம் பெற்றோர்களையோ, வாழ்க்கைத் துணைவரின் பெற்றோர்களையோ உள்ளடக்கவில்லை.
-
இந்த எஸ் பி ஐ மெடிகிளைம் பாலிசி மருத்துவமனைச் சிகிச்சைக்கான தினசரி நன்மைகளை வழங்குகிறது, அடிப்படைத் திட்டங்களில் கவர் செய்யப்படாத பயணச் செலவு, உணவு ஆகியவற்றுக்கான கூடுதல் கவரையும் அளிக்கிறது. எஸ் பி ஐ மருத்துவமனை தினசரி ரொக்க காப்பீடு பாலிசி ஒவ்வொரு நாளுக்கான மருத்துவமனை சிகிச்சைச் செலவுகளுக்கும் ஒரு நிலையான நன்மையை அளிக்கிறது. இவ்வாறு, இந்தத் திட்டம் வழக்கமான பாலிசிகளில் பொதுவாக கவர் செய்யப்படாத பல்வேறு செலவுகளை கவர் செய்கிறது.
இந்த பாலிசியின் முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- வயது வந்தோருக்கு நுழைவு வயது 8 முதல் 65 ஆண்டுகள், குழந்தைகள் 3 மாதத்திலிருந்தே கவர் செய்யப்படலாம்.
- இந்த பாலிசி ரூ. 2,000 இலிருந்து ரூ. 4,000 வரை தினசரி ரொக்க நன்மை அளிக்கிறது.
- ஐ சி யூ மருத்துவமனைச் செலவுகள் கவர் தினசரி கவரைப் போல் இரண்டு மடங்கு வரை இருக்கும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தினசரி ரொக்க நன்மை விருப்பத் தேர்வுகள் - ரூ. 500. ரூ. 1,000, ரூ. 1,500 மற்றும் ரூ. 2,000.
- விபத்தினால் மருத்துவமனை சிகிச்சைகான தினசரி ரொக்க நன்மை அளிக்கப்படுகிறது.
- சிகிச்சைக்குப் பின் ஓய்வு நன்மை நிலையான மொத்தத் தொகையாக அளிக்கப்படுகிறது.
- 15 நாட்கள் ஃப்ரீ லுக் காலத்துக்குப் பிறகு உங்களால் எளிதாக ரீஃபண்ட் பெற முடியும்.
- இந்த பாலிசி 30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் நெகிழ்வுத்தன்மை கொண்ட கவரேஜ் காலத்தை அளிக்கிறது.
- வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80DD கீழ் வரிச் சேமிப்பு நன்மைகள்
திட்டம் வகை |
தனிநபர் |
காப்பீட்டுத் தொகை |
தினசரி அடிப்படையில் |
பாலிசி காலம் |
30 நாட்கள் மற்றும் 60 நாட்கள் |
-
எஸ் பி ஐ தீவிர நோய்கள் காப்பீடு பாலிசி உயிருக்கு மிக அதிக ஆபத்தை விளைவிக்கும் பதிமூன்று நோய்களுக்கு எதிராக கவரேஜ் அளிக்கிறது. சிகிச்சைகளுக்கான மிக அதிகமான கட்டணம் எவருடைய சேமிப்புகளையும் காலி செய்து விடலாம். ஆனால் இந்த மெடிகிளைம் பாலிசி மூலம் சிகிச்சைச் செலவுகள் பார்த்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த பாலிசியின் நன்மைகள் பின்வருமாறு:
- இந்த பாலிசி 13 தீவிர நோய்கள் வரை ரீஇம்பர்ஸ்மென்ட் அளிக்கிறது.
- இந்தத் திட்டத்தை வாங்குவதற்கான அதிகபட்ச வயது 65 ஆண்டுகள், குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்
- 1 ஆண்டு மற்றும் 3-ஆண்டுத் திட்டங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- காப்பீட்டுத் தொகை வரம்பு ரூ. 50 லட்சம் வரை
- 45 ஆண்டுகள் வரை முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
- இந்த பாலிசி பின்வரும் தீவிர நோய்களை கவர் செய்கிறது. புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, பாராலிஸிஸ், கோமா, முழுமையாகப் பார்வையை இழத்தல், ஸ்ட்ரோக், பிரைமரி புல்மோனரி ஆர்ட்டீரியல் ஹைப்பர்டென்ஷன்,, கரோனரி ஆர்ட்டீரி பை-பாஸ் கிராஃப்ட்கள், மல்டிபிள் ஸ்க்லராஸிஸ், மையோகார்டியல் இன்ஃப்ராக்ஷன் (முதல் ஹார்ட் அட்டாக்), இதய வால்வ் அறுவை சிகிச்சை, அவோர்ட்டா கிராஃப்ட் அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு மாற்றம். இது பிழைத்திருக்கும் காலம் மற்றும் குறைந்தபட்ச மதிப்பீடு கால விதியைப் பொருத்து
- இந்தத் திட்டத்துக்கு 15 நாட்கள் ஃப்ரீ லுக் காலமும் இருக்கிறது.
திட்டம் வகை |
தனிநபர் |
காப்பீட்டுத் தொகை |
ரூ. 2 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை |
நுழைவு வயது |
65 ஆண்டுகள் வரை |
கவர் செய்யப்பட்டிருக்கும் தீவிர நோய்களின் எண்ணிக்கை |
13 |
பாலிசி காலம் |
1 மற்றும் 3 ஆண்டுகள் |
-
எஸ் பி ஐ ஜெனரலின் க்ரூப் மருத்துவக் காப்பீடு பாலிசி உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாத்து, அதன் மூலம் தரமான மருத்துவ சிகிச்சையையும், அழுத்தம் இல்லாத செயல்முறையையும் உறுதி செய்கிறது. இந்த பாலிசியின் முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அம்சங்களும், நன்மைகளும்
- குழந்தைக்கான அதிகபட்ச நுழைவு வயது 3 மாதங்கள், அதிகபட்ச நுழைவு வயது 30 ஆண்டுகள்
- மருத்துவக் காப்பீட்டுக்கு வயது வந்தோருக்கான நுழைவு வயது 18 முதல் 65 ஆண்டுகள்.
- காப்பீட்டுத் தொகை வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை உள்ளது.
- மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கான கட்டணங்கள் இந்தத் திட்டத்தில் கவர் செய்யப்படும்.
- அறை, உணவு மற்றும் நர்ஸிங் கட்டணங்கள் ஐ சி யூ கட்டணங்களும் கவர் செய்யப்படும்.
- மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய 60 நாட்கள் மற்றும் பிந்தைய 30 நாட்களுக்கான செலவுகளை இந்த பாலிசி கவர் செய்கிறது.
- பல்வேறு கவரேஜ் விருப்பத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன - காப்பீட்டுத் தொகைக்கான தனிநபர் மற்றும் குடும்ப ஃப்ளோட்டர் விருப்பத் தேர்வுகள்
- ஆம்புலன்ஸ் கட்டணங்களும் அளிக்கப்படுகின்றன.
- அனுமதிக்கப்பட்ட கிளைம் வரம்பக்கு 10% கோ-பேமென்ட்
- டே கேர் அறுவை சிகிச்சை, கண் சிகிச்சை, டயாலிஸிஸ், டான்ஸிலெக்டமி, கெமோதெரபி, ரேடியோதெரபி போன்றவற்றுக்கான செலவுகள் திரும்ப அளிக்கப்படுகின்றன.
- வீட்டிலிருந்தே பெறும் சிகிச்சைக்கான செலவுகளும் கவர் செய்யப்படுகின்றன.
- டயாலிஸிஸ், ஆக்ஸிஜன், மருந்துகள், ரேடியோதெரபி, ஆபரேஷன் தியேட்டர், அறுவை சிகிச்சைக் கருவிகள், கெரோதெரபி, பேஸ்மேக்கர் கட்டணம் போன்றவற்றுக்காக செய்யப்பட்ட ஒருங்கிணைந்த செலவுகள்
- குறிப்பிட்ட நோய்களுக்கு ஒரு ஆண்டு காத்திருப்பு காலம் பொருந்தும்.
- முன்பே இருக்கும் நோய்களுக்கான கவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்படுகிறது.
- எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பிரீமியம் மீது பிரிவு 80DD இன் கீழ் வரிச்சலுகை நன்மைகள் அளிக்கப்படுகின்றன.
திட்டம் வகை |
தனிநபர்/ குடும்ப ஃப்ளோட்டர் |
வயதுத் தகுதிகள் |
18 முதல் 65 ஆண்டுகள் |
முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை |
65 ஆண்டுகள் வரை தேவையில்லை |
காப்பீட்டுத் தொகை |
ரூ. 1 லட்சம் - ரூ. 5 லட்சம் |
-
எஸ் பி ஐ கடன் காப்பீடு தீவிர நோய்கள், தனிநபர் விபத்து மற்றும் வேலை இழப்பு இவற்றின் காரணமாக எழக் கூடிய எந்த ஒரு துரதிர்ஷ்டவசமான நிலையின் கீழும் உங்கள் வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய அழுத்தத்தைப் போக்குவதற்காக வடிவமைக்கப்பட ஒரு தனித்தன்மை வாய்ந்த மெடிகிளைம் பாலிசி
இந்த பாலிசியின் நன்மைகளும், அம்சங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- எஸ் பி ஐ கடன் காப்பீடு திட்டம் 3 ஆண்டுகள் வரை பெறப்படலாம்.
- ரூ. 1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகை வரை, முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. 55 வயது வரை மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
- குறைந்தபட்ச நுழைவு வயது 18 ஆண்டுகள், அதிகபட்ச நுழைவு வயது 60 ஆண்டுகள் வரை.
- இந்தத் திட்டத்தில் நிரந்தர செயலிழப்பு கவரும் வழங்கப்படுகிறது.
- இந்த பாலிசி வேலை இழப்பு கவர் அளிக்கிறது - அதிகபட்சம் 3 EMI கள் ஈடு செய்யப்படும்.
- இந்தத் திட்டம் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, பாராலிஸிஸ், கோமா, முழுமையாகப் பார்வையை இழத்தல், ஸ்ட்ரோக், பிரைமரி புல்மோனரி ஆர்ட்டீரியல் ஹைப்பர்டென்ஷன், அவொர்ட்டா கிராஃப்ட் அறுவை சிகிச்சை, கரோனரி ஆர்ட்டீரி பை-பாஸ் கிராஃப்ட்கள், மல்டிபிள் ஸ்க்லராஸிஸ், மையோகார்டியல் இன்ஃப்ராக்ஷன் (முதல் ஹார்ட் அட்டாக்), இதய வால்வ் அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு மாற்றம் ஆகியவற்றுக்கு தீவிர நோய்கள் கவர் அளிக்கிறது.
- கண்கள் இழப்பு, இரண்டு கைகள், கால்கள் தனியாகப் பிரிதல் அல்லது நிரந்தரமாகச் செயலிழத்தல் ஆகியவற்றுக்கு 100% இழப்பீடு வழங்கப்படுகிறது.
- ஃப்ரீ லுக் காலம் இருக்கிறது.
- எஸ் பி ஐ கடன் காப்பீடு திட்டத்தில் சேர முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
- விபத்தினால் ஏற்படும் மரணத்துக்கு கவரேஜ் அளிக்கப்படுகிறது.
நுழைவு வயது விதிகள் |
18 முதல் 60 ஆண்டுகள் |
காப்பீட்டுத் தொகை |
ரூ. 1 கோடி |
காத்திருப்பு காலம் |
90 நாட்கள் |
முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை |
45 வயது வரை தேவையில்லை. |
-
எஸ் பி ஐ ரீடெயில் காப்பீடு நீங்களும் உங்கள் குடும்பமும் கிடைக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெற உதவும் ஒரு மருத்துவக் காப்பீடு திட்டம். எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒரே பாலிசியில் கவர் செய்யப்படலாம். இதன் அம்சங்களும், பாலிசிதாரருக்குக் கிடைக்கும் நன்மைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அம்சங்களும், நன்மைகளும்
- மருத்துவ வரலாறு இல்லாவிட்டால், 45 வயதுக்கு மேற்படாத விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
- நெகிழ்ச்சியுள்ள திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடிய விருப்பத்தேர்வ இதன் சிறப்பு அம்சங்களுள் ஒன்று. மெட்ரோ திட்டம், செமி-மெட்ரோ திட்டம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா
- இந்த பாலிசி மருத்துவமனை அறை வாடகைக் கட்டணங்கள், மருந்துகளுக்கான விலைகள், ஐ சி யூ கட்டணங்கள், நர்ஸிங் கட்டணங்கள், ஓ டி கட்டணங்கள் மற்றும் மருத்துவர் கட்டணம் ஆகியவற்றை கவர் செய்கிறது.
- மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளையும் முறையே 30 நாட்களுக்கும், 60 நாட்களுக்கும் இது கவர் செய்கிறது.
திட்டம் வகை |
குடும்ப ஃப்ளோட்டர் |
காப்பீட்டுத் தொகை |
ரூ. 50,000 - ரூ. 5 லட்சம் |
சேர்க்கப்படக் கூடிய கவர்கள் |
கிடைக்கின்றன. |
முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை |
ரூ. 2,500 வரை |
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர்
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர் பாலிசிகளை ஒப்பிடுவதைச் சுலபமாக்குகிறது. உங்கள் வயது, பாலிசி விவரங்கள், காப்பீட்டுத் தொகை, பாலிசி காலம், வசிக்கும் நகரம் இவற்றை உள்ளிடுவதன் மூலம், சில கிளிக்குகளில் வெவ்வேறு பிரீமியம் ரேட்களை நீங்கள் பெற முடியும்.
வெவ்வேறு எஸ் பி ஐ ஹெல்த் திட்டங்களுக்கான பிரீமியத்தை அறிந்து கொள்ள நீங்கள் ஆன்லைன் கால்குலேட்டரையோ, பாலிஸிபஜாரின் இணையதளத்தில் உள்ள பிரீமியம் கால்குலேட்டரையோ பயன்படுத்தலாம்.
எஸ் பி ஐ மெடிகிளைம் பாலிசியில் கவர் செய்யப்பட்டிருப்பவை எவை?
எஸ் பி ஐ மெடிகிளைம் பாலிசி பின்வரும் செலவுகளை கவர் செய்கிறது
- அறை வாடகை, சேவைக் கட்டணங்கள், உணவு மற்றும் நர்ஸிங் கட்டணங்கள் போன்றவை உள்ளிட்ட மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள்
- கன்ஸல்டன்ட்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் கட்டணம்
- மயக்க மருந்து, அறுவை சிகிச்சைக் கருவிகள், ரத்தம், ஆக்ஸிஜன், ஆபரேஷன் தியேட்டர் போன்றவற்றுக்கான கட்டணம்
- மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், ஆம்பலன்ஸ் கட்டணங்கள், இலவச மருத்துவப் பரிசோதனை (ஒவ்வொரு 4 ஆண்டு கிளைம் இல்லாத காலத்துக்கும்)
- 24 மணி நேரத்துக்கும் குறைவான மருத்துவனைத் தங்குதல் தேவைப்படும் குறிப்பிட்ட ஒரு நாள் அறுவை சிகிச்சைகள்
எஸ் பி ஐ மெடிகிளைம் பாலிசியின் கீழ் எவை கவர் செய்யப்படவில்லை?
எஸ் பி ஐ இன் மெடிகிளைம் பாலிசியின் கீழ் கவர் செய்யப்படாத சூழ்நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்கள் கிளைமை நிறைவேற்ற காப்பீடு நிறுவனத்துக்குப் பொறுப்பு இல்லை.
- பாலிசியின் துவக்கத்திலிருந்து 2 ஆண்டுகள் நிறைவடையும் முன்பு, எந்த விதமான காயம், நோய்கள், முன்பே இருந்த நோய்களுக்கான சிகிச்சை ஆகியவை, குறித்து எழும் கிளைம்கள்
- காப்பீடு பாலிசி தொடங்கிய ஆரம்ப 30 நாட்களுக்குள் ஏற்பட்ட எந்த மருத்துவமனை சிகிச்சை செலவுகள்
- பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து 1 ஆண்டு நிறைவடைவதற்குள் குறிப்பிட்ட நோய்கள் அல்லது ஹெர்னியாவுக்கான சிகிச்சை இவற்றுக்கான கிளைம்
- பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம் முடிவதற்குள் ஹிஸ்டரக்டமி, காடராக்ட் போன்றவற்றுக்கான சிகிச்சை
- பாலிசி தொடங்கியதிலிருந்து காத்திருப்பு காலம் முடிவதற்குள் மூட்டு மாற்றுதல் அறுவை சிகிச்சைகளுக்காகச் செய்யப்படும் கிளைம் (அது விபத்து நிகழ்வாக இருந்தாலொழிய)
- அரோமாதெரபி, அக்யுபிரஷர், அக்யுபங்க்சர், ஆஸ்டியோபதி, ரிஃப்ளக்ஸாலஜி, நேச்சரோபதி போன்ற மாற்றுமுறை சிகிச்சைகளுக்கான செலவுகள்
- கருப்பைக்குள் அல்லது கருப்பைக்கு வெளியே கருவுற்றலுக்கான சிகிச்சை, சிஸேரியன் டெலிவரி உள்ளிட்ட குழந்தை பிறப்பு மற்றும் பிரசவத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய எந்த விதமான சிகிச்சைகளும்
- பிறந்ததிலிருந்தே இருக்கும் எந்த விதமான நோய்கள் அல்லது உடல் கோளாறுகள் எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கவர் செய்யப்படவில்லை.
- AIDS மற்றும் HIV தொற்றுக்குத் தேவைப்படும் சிகிச்சை
- போதை மருந்து தவறாகப் பயன்படுத்தல் மற்றும் போதை அல்லது மது அருந்த்துதல் தொடர்பான அறிகுறிகள்
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களை ஆன்லைனில் வாங்குவது எப்படி?
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களை பல சானல்கள் மூலம், அதாவது, ஆன்லைன், ஆஃப்லைன், தொலைபேசி அழைப்பு இவற்றின் மூலம் சுலபமாக வாங்க முடியும். நீங்கள் எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பாலிசியை வாங்க விரும்பினால், அவ்வாறு செய்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ளவும்.
தொலைபேசி அழைப்பின் மூலம் -
- எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பாலிசியை வாங்க விரும்பும் தனிநர்கள் பாலிசிபஜாரின் விற்பனை உதவி எண்ணை அழைத்தால் போதும்.
- உங்கள் காப்பீடு தேவைகள் பற்றி வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியிடம் நீங்கள் பேசலாம்.
- விவரங்களை நீங்கள் பகிர்ந்து கொண்டதும், அவர்கள் மின்னஞ்சல் மூலம் கோட்களைப் பகிர்ந்து கொள்வார்கள்
- நீங்கள் ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுத்து, அதை உறுதி செய்ததும் பணத்தைச் செலுத்தலாம்.
ஆன்லைன்-
- பாலிசிபஜார் இணையதளத்துக்குச் சென்று, எஸ் பி ஐ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை நிறுவனத்தின் இணையதளத்தில் அளிக்கவும்.
- ஆன்லைன் எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களை பாலிசிபஜார் இணையதளத்தில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு எதிரே உள்ள ‘இப்போது வாங்கவும்’ பட்டனை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் எளிதாக வாங்க முடியும்.
- உங்கள் விவரங்களை உள்ளிட்டதும், அவர்கள் தளத்தில் வெவ்வேறு திட்டங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு முன்பே எந்த நோயும் இல்லாமலோ அல்லது நீங்கள் 60 வயதுக்குக் கீழானவராகவோ இருந்தால் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.
- இன்னும் தெளிவு பெற உங்களைத் திரும்ப அழைக்கும்படியும் நீங்கள் கோரலாம்.
- ஆன்லைனில் திட்டங்களைப் புதுப்பிக்கவும் அவர்கள் எளிதான அணுகுமுறையை அளிக்கிறார்கள்.
ஆஃப்லைன்-
இறுதியாக, நீங்கள் எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் கிளைகளுக்குச் சென்றோ அல்லது ஒரு ஏஜன்ட்டைத் தொடர்பு கொண்டோ உங்களுக்குத் தேவைப்படும் மெடிகிளைம் பாலிசியை வாங்கவும்.
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பாலிசி புதுப்பித்தல் செயல்முறை
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களை ஆன்லைனில் புதுப்பித்தல் மிகவும் எளிதான ஒன்றாகும். உங்களுக்கு, உங்கள் குடும்பத்தினருக்கு, பெற்றோருக்கு மற்றும் மூத்த குடிமக்களுக்கு எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டங்களை ஆன்லைனில் புதுப்பிக்க இந்த எளிய படிகளை மற்றும் பின்பற்றுங்கள். ஆன்லைனில் புதுப்பித்தல் நேத்தையும், சிரமத்தையும் மிச்சப்படுத்துகிறது. உங்கள் எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பாலிசியை ஆன்லைனில் புதுப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள.
- பாலிசிபஜார் இணையதளத்துக்குச் சென்று, பாலிசி புதுப்பித்தல் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு திட்டத்தின் விவரங்களை அளிக்கவும்.
- காப்பீடு விவரங்களை நீங்கள் உள்ளிட்டதும், காப்பீடு பிரீமியம் தொகை உங்களுக்குக் கிடைக்கும்.
- உங்கள் கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் ஆன்லைனில் செலுத்துங்கள், NEFT மூலமும் நீங்கள் செய்யலாம்.
- பிறகு புதுப்பிக்கப்பட்ட பாலிசியை நீங்கள் டவுன்லோட் செய்து, உங்களிடம் ஒரு பிரின்ட் அவுட் வைத்துக் கொள்ளலாம்.
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு கிளைம் செயல்முறை
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு கிளைம் செயல்முறையைத் துவக்கும் வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்
- முறையாக நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட கிளைம் படிவத்தை அசல் மருத்துவ ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
- ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும் காப்பீடு நிறுவனம் 30 நாட்களுக்குள் கிளைமை செட்டில் செய்யும்.
- பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, உங்கள் மருத்துவக் காப்பீடு விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் அல்லது, நிராகரிக்கப்படும்.
- ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சைக்கு, முன்-ஒப்புதல் விண்ணப்பம் காப்பீடு நிறுவனத்தாலோ அல்லது மருத்துமனையில் உள்ள TPA டெஸ்க்காலோ அங்கீகரிக்கப்பட வேண்டும்
- திட்டமிட்ட மருத்துவமனைச் சேர்க்கை என்றால், காப்பீடு நிறுவனத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
- அவசர கால மருத்துவமனை சிகிச்சைக்கு, நீங்கள் காப்பீடு நிறுவனத்துக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கலாம்.
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு கிளைமுக்குத் தேவைப்படும் ஆவணங்கள்
எஸ் பி ஐ ஜெனரல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கிளைமை புராசஸ் செய்வதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவை.
- முறையாக நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட கிளைம் படிவம்
- கே ஒய் சி படிவம்
- எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு பாலிசியின் நகல்
- ஒரிஜினல் மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி
- பிரிஸ்க்ரிப்ஷன் மற்றும் மருத்துவர் கலந்தாலோசனைக் கடிதம்
- பில்கள்/ ரசீதுகள்/ மருத்துவ அறிக்கைகள்
- இறப்புச் சான்றிதழ்/ போஸ்ட்-மார்ட்டம் அறிக்கை (விபத்தினால் மரணம் என்றால் அட்டெஸ்ட் செய்யப்பட்டது)
- PAN கார்ட்/ முகவரிச் சான்று/ பிற ஆவணங்கள் (தேவைப்படும் வகையில்)
- I.R. நகல் (விபத்து கேஸ்களில்)
கணக்கு வைத்திருப்பவர்களுக்கான எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்தச் சிறப்பு வசதியை எஸ் பி ஐ ஜெனரல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் அளிக்கிறது.
- 2013-14 நிதியாண்டில், எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் எஸ் பி ஐ வங்கியுடன் இணைந்த 1.5 கோடி சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீடு கவர் வழங்கியது. எஸ் பி ஐ இல் கணக்கு வைத்திருப்போர் தனிநபர் மற்றும் க்ரூப் மருத்துவக் காப்பீடு திட்டங்களையும் வாங்கலாம்
- பாலிசி வாங்குவதற்கான வயது விதி வயது வந்தோருக்கு 18 - 65 ஆண்டுகள், குழந்தைகளுக்கு 3 மாதங்கள் - 18 ஆண்டுகள்
- குறிப்பிட்ட நோய்களுக்கு 1 ஆண்டு கட்டாய காத்திருப்பு காலம் உள்ளது.
- எஸ் பி ஐ க்ரூப் மருத்துவக் காப்பீடுக்கு மருத்துவ வரலாறு இல்லாத நபர்களுக்கு (65 வயது வரை) முன்கூட்டிய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
- மேலும், முன்பே இருக்கும் நோய்களும் 4 ஆண்டுகள் காத்திருப்பு காலத்துக்குப் பிறகு கவர் செய்யப்படலாம்.
எஸ் பி ஐ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கட்டணம் இல்லா தொலைபேசி எண்
எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் அதன் விண்ணப்பதாரர்களும், வாடிக்கையாளர்களும் நிறுவனத்தை கட்டணம் இல்லாத 1800 22 1111 / 1800 1021111 எண்ணில் திங்கள் முதல் சனி வரை அழைக்கும் வசதியை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் 1800 22 7244 / 1800 102 7244 இல் அவர்களுக்கு ஃபேக்ஸூம் அனுப்பலாம். அவர்களுக்கு customer[.]care[at]sbigeneral.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சலும் அனுப்பலாம் அல்லது எந்த ஒரு எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் அலுவலகத்துக்கு நேரிலும் செல்லலாம்.
எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
விடை:எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் பிரீமியம் செலுத்துவதற்கு சில முறைகளை அளிக்கிறது. அவை:
- கிளையில் ரொக்கம் செலுத்துதல்
- ஆன்லைன் செலுத்தல்
ஆன்லைன் செலுத்தல் முறைக்கு பாலிசிதாரர் இந்த வழிகளில் செலுத்தலாம்
- கிரடிட் கார்ட்
- டெபிட் கார்ட்
- நெட் பாங்கிங்
-
விடை: பதிவு செய்யப்பட்ட எஸ் பி ஐ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் ஆன்லைன் பயனர்கள், உங்கள் பாலிசி விவரங்களுடன் இணையதளத்தில் லாகின் செய்து நிலையைச் சரிபார்க்கலாம். எஸ் பி ஐ மருத்துவக் காப்பீடு ஆன்லைன் இணையதளம் உங்கள் பாலிசியின் நிலையைக் காட்டும்.
-
விடை: நிறுவனத்துக்கு கட்டணமில்லா எண்ணில் நீங்கள் தெரிவிக்கலாம், அல்லது நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் கிளைம் கோரிக்கையை அனுப்பலாம். ஆவணப்படுத்தல் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதும், 30 நாட்களுக்குள் கிளைம் செட்டில் செய்யப்படும்.
-
விடை: ஒவ்வொரு மருத்துவக் காப்பீடு நிறுவனமும் பாலிசிதாரர்களுக்கு ஒரு ஃப்ரீ லுக் காலத்தை அளிக்கிறது, இது வழக்கமாக 15 நாட்கள் இந்தக் காலத்தில் பாலிசி கட்டணம் இல்லாமல் ரத்து செய்யப்படலாம். பாலிசி காலத்தின்போது பாலிசியை ரத்து செய்ய. தயவு செய்து காப்பீடு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளவும்.
-
விடை: ஒவ்வொரு மருத்துவக் காப்பீடு பாலிசிக்கான பிரீமியமும் பாலிசி வகை, காப்பீடு பெற்றவரின் வயது, காப்பீட்டுத் தொகை முதலியவற்றின் அடிப்படையில் வேறுபடும். உதாரணமாக, 36 -40 வயதுக் குழுவில் இருக்கும் எவருக்கும் ரூ. 10 லட்சத்துக்கான பாலிசிக்கு பிரீமியம் சுமார் ரூ. 9,826 ஆக இருக்கும்.
-
விடை:மருத்துவக் காப்பீட்டில் நிரந்தர விலக்கல் என்ற சொற்றொடர் காப்பீடு நிறுவனத்தால் எந்தச் சூழ்நிலையிலும் கிளைம் தொகையை அளிக்க முடியாத நிலைமைகளைக் குறிக்கிறது. நிரந்தர விலக்கல்களுக்கு காத்திருப்பு காலம் எதுவும் இல்லை, அவை கவரேஜ் நன்மைகளில் சேர்க்கப்படாமல் இருப்பதால். அவை தற்கொலை முயற்சிகள், அதிகமாக மது அருந்துதல் போன்றவையாக இருக்கக் கூடும்.
-
விடை: முன்பே இருக்கும் நோய்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்பே பாலிசிதாரருக்கு இருக்கக் கூடிய ஆரோக்கிய நிலைகளைக் குறிக்கின்றன. இவை ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டயாபிடீஸ் போன்றவையாக இருக்கலாம். முன்பே இருக்கும் இந்த நோய்கள் பாலிசி வாங்கப்பட்ட பிறகு 2 முதல் 4 ஆண்டுகள் காத்திருப்பு காலத்துக்குப் பிறகு கவர் செய்யப்படுகின்றன.
எஸ் பி ஐ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் - செய்திகள்
-
இப்போது எஸ் பி ஐ ஜெனரல் இன்ஷ்யூரன்ஸின் எல்லா மருத்துவக் காப்பீடு பாலிசிதாரர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம், ஏனெனில் இந்தக் காப்பீடு நிறுவனம் தற்போது இருந்து வரும் கோவிட்-19 பெருந்தொற்றை கவர் செய்து ஒரு தனி மருத்துவக் காப்பீடு பாலிசியைக் கொண்டு வந்திருக்கிறது. சஞ்சீவினி மருத்துவக் காப்பீடு என்று அறியப்படும் இந்த பாலிசியின் கவரேஜ் ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை உள்ளது, இது கோவிட்-19 சிகிச்சைக்கான செலவுகளை கவர் செய்கிறது. இது போன்ற ஒரு முன்னெடுப்பு இது போன்ற காலங்களில் தொல்லை இல்லாத, கட்டுபடி ஆகக் கூடிய மருத்துவ சிகிச்சையை செலவுகள் பற்றிக் கவலைப்படாமல் பெற உதவும்.
எஸ் பி ஐ இன் எம் டி சி ஈ ஓ ஆன பூஷன் மஹாபாத்ரா, இந்த பாலிசி அறிமுகம் பற்றிப் பேசும்போது, இதை IRDA வழிகாட்டல்களின்படி கட்டுப்படியாகக் கூடிய பிரீமியமும் ஸ்டாண்டர்ட் கவரேஜும் கொண்ட வரவேற்கத் தக்க ஒரு முன்னேற்றம் என்று குறிப்பிட்டார். இது போன்ற முன்னெடுப்புகள் மருத்துவக் காப்பீடு பரவலை அதிகரிக்கும் என்று திரு மஹாபாத்ரா நம்பிக்கையுடன் தெரிவித்தார். எஸ் பி ஐ போன்ற ஒரு நம்பிக்கை பெற்ற பிராண்ட் மற்றும் வலுவான விநியோக சானல்கள் இவற்றுடன், இந்த புராடக்டை அவர்கள குறிப்பாக நிலை 2, நிலை 3 மற்றும் கிராமப் பகுதிகளில் பரப்பி அதிகபட்ச விழிப்புணர்வை உருவாக்குவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தன் பேச்சில் தெரிவித்தார்.