நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ்
நீங்கள் ஹெல்த் கவரேஜ் தேர்ந்தெடுக்க முற்பட்டுகொண்டிருப்பீரெனில் நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் சரியான தேர்வாகும்.
Read More
நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் – ஒரு கண்ணோட்டம்
இன்றைய காலகட்டத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை பலரும் தேர்ந்தெடுத்து வருகின்ற.
இத்திட்டங்களை வழங்கும் இன்ஷூரர்கள், தங்களிடம் பாலிசி பெற்றவர்கள் நாடு முழுவதும் பரந்த நெட்வொர்க் மருத்துவமனை வசதிகளோடு பணம் இல்லா நன்மைகளை பெற உதவுகின்றன.
1906ல் உருவாக்கப்பட்டு, 1972ல் தேசியமயமாக்கப்பட்டு, தனது தலைமை அலுவலகத்தை கொல்கத்தாவில் கொண்ட நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மத்திய அரசால் ஆதரவு பெற்ற நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் பழமையானவற்றுள் ஒன்றான இந்த நிறுவனம் தனது இன்ஷூரன்ஸ் பிசினஸில் ரூபாய் 9000 கோடிகளை ப்ரீமியம் வருமானமாக பெறுவதாக தெரிவித்துள்ளது.
சுமார் 1340 அலுவகங்களுடன் நேபால் போன்ற இடங்களிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் இல்லா மருத்துவ சேவைகளை தரம்குறையாது பெற்றுக்கொள்ள உதவுகிறது.
உங்கள் விருப்பப்படி நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்
நேஷனல் ஹெல்த்இன்சூரன்ஸ் – ஒரு பார்வை
நெட்வொர்க் மருத்துவமனைகள் |
6000+ |
பெறப்பட்ட கிளைம் ரேஷியோ |
115.55 |
புதுப்பித்தல் |
வாழ்நாள் முழுவதும் |
ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் |
4 வருடம் |
நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் நன்மைகள்
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் மருத்துவக் காப்பீட்டினை பெறுவதால் கிடைக்கப்பெறும் நன்மைகள்:-
- மருத்துவ காப்பீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத முக்கியமான அடிப்படைத் தேவையாகும் .அவ்வாறு, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதால் கிடைக்கப்பெறும் நன்மைகளை பின்வரும் பகுதியில் காண்போம்.
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது மருத்துவ அவசர தேவைகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட பல எண்ணற்ற நன்மைகளை தருகிறது .
- மேலும், இந்நிறுவனமானது பல உள்ளீட்டு அம்சங்களுடன் விரிவான மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளையும் வழங்குகிறது.
- மேலும், இந்நிறுவனமானது தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் குடும்ப மிதவை திட்டங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் குழுத்திட்டங்கள் போன்ற திட்டங்களை வழங்கி மக்களை பாதுகாத்து வருகிறது.
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பல சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது.
- வாடிக்கையாளர்களுக்கு தனிநபருக்கான அல்லது முழு குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்கி வருகிறது.
- மேலும் இந்நிறுவனமானது எந்த ஒரு காப்பீட்டுக் கொள்கையையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் வாங்குவதற்கான வசதியையும் செய்துள்ளது .
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளை புரிந்து கொண்டு இந்நிறுவனமானது பல சிறப்பம்சங்களைக் கொண்ட கொள்கைகளையும் வழங்கி வருகிறது.
- மேலும் மருத்துவ உரிமைக் கோரலும் அது சம்பந்தமாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில் இந்நிறுவனமானது ஒரு பிரத்தியேக குழுவையும் அமைத்துள்ளது .
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு வாடிக்கையாளர்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் பயனளிக்கக்கூடிய பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய கவரேஜ் மற்றும் குறைவான காப்பீட்டுக் கட்டணம் உடைய திட்டங்கள் மற்றும் வரிச்சலுகைகள் மற்றும் காப்பீட்டுக் கொள்கையை வீட்டிலிருந்தே புதுப்பிப்பதற்கான வசதிகள் மற்றும் அதிக அளவிலான காப்பீட்டுத் தொகைகள் மற்றும் பல பலன்களையும் வழங்கி வருகிறது .
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பணம் செலுத்துவதன் முக்கிய நன்மைகள் சிலவற்றை காண்போம்.
இலவச மருத்துவ பரிசோதனையின் கூடுதல் நன்மைகள்:-
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது அதன் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலங்களில் வரம்புகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட மருத்துவ உரிமைக் கோரலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவச மருத்துவப் பரிசோதனையை வழங்குகிறது.
நிறுவனங்களில் வழங்கப்படும் காப்பீட்டுக் கொள்கையை விட அதிக நன்மைகள் :-
- இப்பொழுதெல்லாம் பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறார்கள் .
- ஆனால் அக்காாப்பீடு மட்டுமே அவர்களுக்கு நிச்சயமாக போதுமானதாக அமைவதில்லை .
- ஏனென்றால் அறை வாடகை மற்றும் இணை பணம் செலுத்துவதற்கான விதிமுறைகள் போன்றவற்றில் முழுக்காப்பீட்டை வழங்காது.
- எனவே இத்திட்டமானது இரண்டாவது நிலை மருத்துவக் காப்பீடாக மட்டுமே திகழ்கிறது .எனவே தங்களது நிறுவனத்துடன் தொடர்பில்லாத நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கூடுதல் காப்பீட்டுத் திட்டங்களை பெறலாம்.
இலவச சிகிச்சைகள் :-
- மருத்துவ அவசர காலங்களில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளின் மூலம் கட்டணமில்லா சிகிச்சைக்கான வசதியை வழங்கி வருகிறது.
- மேலும் ரொக்கமாக பணம் கிடைக்காத நிலையில் வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்தும் கோரிக்கையை கூட மேற்கொள்ளலாம்.
மருத்துவ உரிமைக் கோரலுக்கான தீர்வு விகிதம் :-
- சி.எஸ்.ஆர் என்பது ஒரு நிதியாண்டில் வாடிக்கையாளர்களால் கோரப்பட்ட மருத்துவ உரிமைக் கோவில்களின் எண்ணிக்கைக்கு எதிராக காப்பீட்டு நிறுவனத்தால் தீர்க்கப்பட்ட உரிமைக் கோரல்களின் விகிதமாக கருதப்படுகிறது.
- ஐ ஆர் டி ஏ ஐ அல்லது காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் படி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது 2019- 2020 ஆம் நிதியாண்டில் 83.78 சதவீதம் சி எஸ் ஆர் கொண்டுள்ளது.
- சி எஸ் ஆர் விகிதம் வருடத்திற்கு வருடம் மாறுபடும்.
மருத்துவச் செலவுகளுக்கு எதிரான பாதுகாப்பு:-
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனமானது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தனிநபரையோ அல்லது குடும்பத்தையோ உள்ளடக்கிய மருத்துக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்கி வருகிறது.
- இத்திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்கள் உள்நோயாளி சிகிச்சை மற்றும் பகல் நேர சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும் முன் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பின் சிகிச்சைகள் மற்றும் அவசர ஊர்தி போன்ற பல சிகிச்சை செலவுகளின் பயன்களை பெறலாம்.
பெறப்பட்ட உரிமைக் கோரல் விகிதம்:-
- பெறப்பட்ட உரிமைக் கோரல் விகிதம் அல்லது ஐ சி ஆர் என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம் செலுத்திய ஒவ்வொரு உரிமைக் கோரலின் ஒட்டுமொத்த மதிப்பையும் மொத்த காப்பீட்டுத் தொகைக்கு எதிராக அளவிடுவது ஆகும்.
- காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் படி 2018 மற்றும் 2019 ஆம் நிதி ஆண்டில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவத்தின் உரிமை கோரல் விகிதம் 107.64% ஆகும்.
- ஐ சி ஆர் வருடத்திற்கு வருடம் மாறுபடும்.
வரிப் பலன்கள்:-
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் மருத்துவக் காப்பீட்டு கொள்கையை வாங்கினால் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80 டி -ன் கீழ் வரிச்சலுகைகளை அனுபவிக்க முடியும்.
இத்தகைய நன்மைகள் மற்றும் பாதுகாப்புகள் நிறைந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மருத்துவ காப்பீடுகளை பெற்று அவ்வப்போது ஏற்படும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்து புன்னகை மாறாமல் புத்துணர்வோடு வாழ்வோம்.
நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் பட்டியல்
நேஷனல் இன்சூரன்ஸ் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் கீழ்வருமாறு:
- நேஷனல் மெடிகிளைம் பிளஸ் பாலிசி
- நேஷனல் மெடிகிளைம் இண்டிவிஜுவல் பாலிசி
- நேஷனல் சீனியர் சிட்டிசன் மெடிகிளைம் பாலிசி
- நேஷனல் சூப்பர் டாப் அப் மெடிகிளைம் பாலிசி
- மாணவர்களுக்கான வித்யார்த்தி மெடிகிளைம் பாலிசி
- குடும்பத்திற்கான பரிவார் மெடிகிளைம் பாலிசி
- நேஷனல் பரிவார் மெடிகிளைம் பாலிசி
- நேஷனல் பரிவார் மெடிகிளைம் ப்ளஸ் பாலிசி
- நேஷனல் கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி
- மூத்தகுடி மக்களுக்கான வருஷா மெடிகிளைம் பாலிசி
- நேஷனல் ஓவர்சீஸ் மெடிகிளைம் பாலிசி
- நேஷனல் ஓவர்சீஸ் மெடிகிளைம் வேலை வாய்ப்பு மற்றும் படிப்பு
நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் இத்திட்டங்களை விரிவாக பார்க்கலாம்.
-
உள்நோயாளிகளுக்கு ஆகும் சிகிச்சைச் செலவுகளுக்கான ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டமே நேஷனல் மெடிக்ளைம் தனிநபர் கொள்கைத் திட்டமாகும். இதில் ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை இன்சூரன்ஸ் செய்ய முடிகிறது. இந்த திட்டம் காப்பீடு செய்தவரின் பெற்றோர், துணை, குழந்தைகள், மாமனார், மாமியார், சார்ந்திருக்கும் சகோதரர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்கிறது.
தகுதி:
- குறைந்தபட்ச வயது - 18 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது - 65 ஆண்டுகள்
- திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுகிறவர்கள் - காப்பீடு செய்யப்பட்டவர், அவரது துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் 25 வயது வரையில் சார்ந்திருக்கும் சகோதரர்கள்
சிறப்பம்சங்கள்:
- இந்த திட்டத்தின் கீழ் அதிகப்ட்ச தொகையாக ரூ. 5 லட்சம் வரையில் வழங்கப்படும்
- நான்கு க்ளெய்ம் இல்லாத வருடங்களுக்கு பிறகு, வருடத்திற்கு ஒருமுறை காப்பீடு செய்தவருக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளும் வசதியிருக்கிறது
- காப்பீடு செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு பாலிசி வாக்கினால் அதில் 10% தள்ளுபடி வழங்கப்படும்
- வருமான வரிச் சட்டத்தில் 80D பிரிவின் கீழ் வரி தள்ளுபடி செய்யப்படுகிறது
- 50 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் திட்டம் துவங்கும் முன் சுகாதாரப் பரிசோதனை செய்வது அவசியம்
- ஒவ்வொரு க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டிற்கும் அதிகபட்சமாக 50% வரையில் பாலிசித் தொகையில் வருடாந்திர அதிகரிப்பு இருக்கும்
- வாழ்நாள் முழுவதும் பாலிசி புதுப்பிக்கும் வசதியிருக்கிறது
- 50% வரையில் ஒவ்வொரு க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டுகளுக்கும் காப்பீட்டுத் தொகையில் 5% அதிகரிக்கிறது
- திட்டத்தின் கீழ் கீழ் தவணை வசதியுள்ளது.
- எந்த இடைத்தரகர்களும் ஈடுபடாத போது ஆன்லைனில் பாலிசி வாங்கினால் அதில் 10% வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது
நன்மைகள்:
- அலோபதி சிகிச்சைக்காகும் செலவுகளுக்கு 100% வரையிலும் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி செலவுகளுக்கு மொத்த காப்பீட்டுத் தொகையிலிருந்து 20% வரையிலும் வழங்கப்படும்.
- உள்நோயாளிக்கு ஆகும் செலவுகளான அறை வாடகை அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டணங்கள், மருத்துவர்களுக்காகும் கட்டணங்கள், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர், ஆலோசகர்கள், சிறப்பு மருத்துவருக்கு ஆகும் ஆலோசனைக் கட்டணம் என இவையாவும் குறிப்பிட்ட வரம்பு வரையில் காப்பீட்டுத் தொகையிலிருந்து வழங்கப்படும்.
- திட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் கட்டணங்களும் அடங்கும்
- உறுப்பு தானம் செய்பவரின் செலவுகள் காப்பீட்டுத் தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகை வரையில் ஈடுசெய்யப்படும்
- மருத்துவமனைக்கு முன் ஆகும் செலவுகள் 30 நாட்கள் வரையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பின் ஆகும் செலவுகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதிலிருந்து 60 நாட்கள் வரையிலும் இத்திட்டத்தின் கீழ் வரும்
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய மருத்துவமனைகளில் டி.பி.ஏ மூலம் மட்டுமே பணமில்லா மருத்துவ காப்பீடு வசதி செய்து தரப்படும்
- இந்நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு - அறுவை சிகிச்சைகள் உட்பட - முன்பே பேசியிருந்த பேக்கேஜ் கட்டணங்கள் இருக்கிறது
- காப்பீடு செய்தவருக்கு வாழ்நாள் புதுப்பித்தல்
- இங்கு இன்சூரர் ஒரு திட்டத்திலிருந்து அதே மாதிரியான வேறொரு திட்டத்திற்கு மாற அனுமதிக்கிறார்
விலக்குகள்:
- திட்டம் துவங்கியிருந்தது 30 நாட்களுக்கு விபத்துக்களால் எழும் க்ளெய்ம்கள் மட்டுமே ஈடுசெய்யப்படும்.
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்கள் திட்டம் துவங்கி நாற்பத்தெட்டு மாதங்களுக்குப் பிறகுதான் இதில் சேரும்
- நோய்களுக்கான காத்திருப்பு காலம் அதன் தீவிரத்தன்மையை பொருத்து 90 நாட்களிலிருந்து ஒன்று, இரண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் வரையில் இருக்கும்
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள்
- வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள், ஆல்கஹால் மற்றும் இதர போதைப்பொருளின் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்தக் கொண்ட காயங்கள்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் மற்றும் வீட்டிற்கு வருகைக்கான கட்டணம்
- பல் சிகிச்சை (விபத்தினால் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லாதபோது), வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை
-
60 வயதை கடந்த சீனியர் சிட்டிசன்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் இது. இத்திட்டத்தின் கவரேஜை காப்பீடு செய்தவர் மட்டுமோ அல்லது அவரும் அவரது துணையும் சேர்ந்து பெறலாம்.
தகுதி:
- வயது: 60 வயதிலிருந்து 80 வயது வரை
- காப்பீட்டுத் தொகை: 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலும்
- கவரேஜ் வகை: தனிநபர்/ மிதவை (ஃப்ளோட்டர்)
திட்டத்தின் அம்சங்கள்:
- காப்பீடு பெற்றவர் அதே திட்டத்தில் 50 வயது முதல் 80 வயதுக்குட்பட்டவராக இருக்கும் பட்சத்தில் தன் துணையையும் சேர்க்கலாம்
- இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்லைனில் பெறும்போது அதில் தள்ளுபடிகள் உண்டு
- முன் மருத்துவ பரிசோதனை அவசியம்
- க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டுகளுக்கு 5% முதல் 50% வரையில் என்.சி.பி. வழங்கப்படும்
- காப்பீடு செய்யப்படுவதற்கு முன்பிருந்த நோய்களுக்கு 2 வருட காத்திருப்பு காலம்.
- வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் இருக்கிறது
பலன்கள்:
- எச்.ஐ.வி சிகிச்சைகள் மற்றும் மனநோய்க்கான சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அதற்காகும் செலவுகள் இதில் சேரும்
- காப்பீடு செய்தவர் தீவிர நோய்கள், ஓ.பி.டி., விபத்து, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர மருத்துவ நிலைகளுக்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய கூடுதலாக கவர்கள் பெறலாம்.
- இத்திட்டத்தின் கீழ் அலோபதி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத செலவுகளும் ஈடுசெய்யப்படும்
- 50% வரையில் ஒவ்வொரு க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டுகளுக்கும் காப்பீட்டுத் தொகையில் 5% அதிகரிக்கிறது.
- சாலை விபத்துக்களுக்கு பின் காப்பீட்டுத் தொகை மீட்டெடுத்தல்
- ப்ரிவென்டிவ் ஹெல்த் செக்கப் வசதி:
- திட்டம் A: ஒவ்வொரு 2 க்ளெய்ம் செய்யப்படாத வருடங்களுக்கு பின்னும், பரிந்துரைக்கப்பட்ட நோயறிதல் சோதனைகளுக்காகும் செலவுகளுக்கு காப்பீட்டுத் தொகையிலிருந்து 2 % வரை அல்லது அதிகபட்சமாக ரூ 4,000 வரையிலும் காப்பீடு செய்யப்பட்ட தனிநபருக்கு (தனிப்பட்ட அடிப்படையில்) அல்லது குடும்பத்திற்கு (மிதவை அடிப்படையில்) வழங்கப்படும்
- திட்டம் B: ஒவ்வொரு 6 க்ளெய்ம் செய்யப்படாத மாதங்களுக்கு பின்னும், வழக்கமான மருத்துவ ஆலோசனைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட நோயறிதல் சோதனைகளுக்கும் ஆகும் செலவுகளுக்கு ரூ. 1000 வரையில் வழங்கப்படுகிறது.
- எந்த இடைத்தரகர்களும் ஈடுபடாத போது ஆன்லைனில் பாலிசி வாங்கினால் அதில் 10% வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது
- வருமான வரிச் சட்டத்தில் 80D பிரிவின் கீழ் வரி தள்ளுபடி செய்யப்படுகிறது
விலக்குகள்:
- திட்டம் துவங்கியிருந்தது 30 நாட்களுக்கு விபத்துக்களால் எழும் க்ளெய்ம்கள் மட்டுமே ஈடுசெய்யப்படும்.
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்கள் திட்டம் துவங்கி இருபத்தி நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் இதில் சேரும்
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள்
- வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள், ஆல்கஹால் மற்றும் இதர போதைப்பொருளின் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்தக் கொண்ட காயங்கள்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் மற்றும் வீட்டிற்கு வருகைக்கான கட்டணம்
- பல் சிகிச்சை (விபத்தினால் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லாதபோது), வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை.
-
தகுதி:
- 18 வயதிலிருந்து 65 வயது வரை
- காப்பீட்டு தொகை - 3 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் வரை
- கவரேஜ் - தனிநபர் அல்லது மிதவை (ஃப்ளோட்டர்) அடிப்படையில்
திட்டத்தின் அம்சங்கள்:
- அடிப்படைக் கொள்கையுடனோ அது இல்லாமலோ கூட இந்த திட்டத்தை வாங்கலாம்
- மருத்துவமனையில் பணமில்லா மருத்துவ சேவை வழங்கப்படும்
- வாழ்நாள் முழுவதும் பாலிசியை புதுப்பிக்க வசதி இருக்கிறது
- மருத்துவ செலவுகளை (அறை வாடகைக் கட்டணங்கள் உட்பட) ஈடுசெய்வதில் எந்த வரம்புகளும் கிடையாது
- 50 வயதை கடந்த விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம்
பலன்கள்:
- பொதுவாக காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து விலக்கப்படும் உடல் பருமன்-பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை, எச்.ஐ.வி/எய்ட்ஸ், மகப்பேறு போன்ற நோய்களுக்கான காப்பீட்டையும் இந்தக் கொள்கை வழங்குகிறது.
- உறுப்பு தானம் செய்பவர்களுக்கு ஆகும் செலவுகள் இங்கு திருப்பி கொடுக்கப்படும்
- உள்நோயாளிகளுக்கான மருத்துவச் செலவுகள், ஐ.சி.யூ, அறுவை சிகிச்சைக் கட்டணம் முதலியவை இன்சூரரால் செலுத்தப்படும்.
- தனி நபருக்கு, அவரது துணை, பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் குழந்தைக்கு இதில் கவரேஜ் வழங்கப்படுகிறது
- காப்பீடு செய்வதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்களுக்கு 1 வருட காத்திருப்பு காலத்திற்கு பின்பே காப்பீடு செய்ய முடியும்
- நோய்களுக்கான காத்திருப்பு காலம் அதன் தீவிரத்தன்மையை பொருத்து 90 நாட்களிலிருந்து ஒன்று, இரண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் வரையில் இருக்கும்
- 50% வரையில் ஒவ்வொரு க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டுகளுக்கும் காப்பீட்டுத் தொகையில் 5% அதிகரிக்கிறது
- வருமான வரிச் சட்டத்தில் 80D பிரிவின் கீழ் வரி தள்ளுபடி செய்யப்படுகிறது
விலக்குகள்:
- திட்டம் துவங்கியிருந்தது 30 நாட்களுக்கு விபத்துக்களால் எழும் க்ளெய்ம்கள் மட்டுமே ஈடுசெய்யப்படும்.
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்கள் திட்டம் துவங்கி பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு கீழே குறிப்பிட்டுள்ளதுபோல் இதில் சேரும்
திட்டம் துவங்கியதிலிருந்து எத்தனை மாதங்கள் |
உரிமைகோரலின் வரம்பு |
13 முதல் 24 மாதங்கள் |
50% |
25 முதல் 36 மாதங்கள் |
75% |
36 மாதங்களுக்குப் பிறகு |
100% |
- நோய்களுக்கான காத்திருப்பு காலம் அதன் தீவிரத்தன்மையை பொருத்து 90 நாட்களிலிருந்து ஒன்று, இரண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் வரையில் இருக்கும்
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள்
- வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள், ஆல்கஹால் மற்றும் இதர போதைப்பொருளின் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்தக் கொண்ட காயங்கள்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் மற்றும் வீட்டிற்கு வருகைக்கான கட்டணம்
- பல் சிகிச்சை (விபத்தினால் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லாதபோது), வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை.
-
காப்பீடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விபத்துக்கான காப்பீடும் மருத்துவ காப்பீடும் வழங்குவதே இந்த திட்டம். காப்பீடு செய்யப்பட்ட மாணவருக்கு ஏதேனும் காரணங்களால் நிரந்தர முழு ஊனமோ அல்லது அவரது பாதுகாவலரின் மரணமோ ஏற்பட நேர்ந்தால் அந்த மாணவரின் கல்வியும் காப்பீட்டின் கீழ் கவர் செய்யப்படுகிறது.
தகுதி:
- மாணவர்களுக்கு வயது மூன்றிலிருந்து 35 ஆண்டுகள் வரையும் அவருக்கு ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரும் இருக்க வேண்டும்
- காப்பீட்டு தொகை - 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் வரையில்
அம்சங்கள்:
- திட்டம் துவங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்
- அரசாங்கத்தின் சட்ட ஆணையம் அல்லது மாநில வாரியம் அல்லது ஏ.ஐ.சி.டி.இ என இவற்றில் எதிலேனும் இணைக்கப்பட்ட இந்தியாவில் உள்ள பதிவுசெய்யப்பட்ட கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பாலிசியை வாங்கலாம்
- கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் ஒரு குரூப் பாலிசியாக கூட வாங்கலாம்
பலன்கள்:
- காப்பீட்டுத் தொகை வரையிலும் மாணவர்களுக்கான மருத்துவமனை செலவுகள் இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படுகிறது
- காப்பீடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்பீடும் இதில் வழங்கப்படுகிறது
- மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருக்கான கட்டணம், ஐ.சி.யூ கட்டணம், அறை வாடகை மற்றும் இதுபோன்ற செலவுகள் இன்சூரரால் ஈடுசெய்கிறது
- ஐந்து சதவீததிற்கான ஒட்டுமொத்த போனஸ் இதில் வழங்கப்படுகிறது
- தற்செயலான மரணமும் உடல் காயங்களும் இதில் கவர் செய்யப்படும்
மேலும் கவர் செய்யப்படுபவை:
பிரிவு I
- ரோபோடிக் அறுவை சிகிச்சை, இம்யூனோதெரபி, வாய்வழி கீமோதெரபி மற்றும் இதுபோன்ற 12 நவீன சிகிச்சைகள் இப்போது திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- நோயுற்ற உடல் பருமனுக்கு குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்கு பிறகு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்கு பிறகு -7.5 Dக்கு மேலுள்ள ஒளிவிலகல் பிழைகள் போன்ற கண்பார்வை திருத்தங்கள் இப்போது இத்திட்டத்தின் கீழ் வருகிறது.
- அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளில் அனுபவமில்லாமல் பங்கேற்று அதனால் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறிப்பிட்ட வரம்பு வரையில் செய்து தரப்படும்
- எச்.ஐ.வி/எய்ட்ஸ், மனநோய், மரபியல் கோளாறுகள் ஆகியவை இதில் அடங்கும்.
பிரிவு II மற்றும் பிரிவு III
- வெளிப்புற வன்முறை போன்ற வழிகளால் ஏற்படும் விபத்தின் விளைவாக நேரடியாக உடல் காயமோ இறப்போ நிகழ நேர்ந்தால் அது இதில் சேரும்.
விலக்குகள்:
பிரிவு I
- திட்டம் துவங்கியிருந்தது 30 நாட்களுக்கு விபத்துக்களால் எழும் க்ளெய்ம்கள் மட்டுமே ஈடுசெய்யப்படும்.
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்கள் திட்டம் துவங்கி முப்பத்தாறு மாதங்களுக்குப் பிறகுதான் இதில் சேரும்
- குறிப்பிட்ட நோய்களுக்கு இரண்டு ஆண்டுகள் காத்திருப்பு காலமாக இருக்கிறது
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள்
- வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள், ஆல்கஹால் மற்றும் இதர போதைப்பொருளின் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்தக் கொண்ட காயங்கள்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் மற்றும் வீட்டிற்கு வருகைக்கான கட்டணம்
- பல் சிகிச்சை (விபத்தினால் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லாதபோது), வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை.
பிரிவு II மற்றும் III
- முன்பிருந்த பிரச்சினைகளால் வரும் சிக்கல்களுக்கான கோரிக்கையும்
- காப்பீடு செய்யப்பட்டவரின் மரணம் தொடர்பாக ஏதேனும் செலவுகள் அல்லது கட்டணங்கள்
- வேண்டுமென்றே செய்துக் கொண்ட சுய காயம், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியில் இருந்து வந்த சிக்கல்கள்
- போதையூட்டும் பானங்கள் அல்லது இதர போதைப்பொருள்களினால் விளையும் சிக்கல்கள்
- ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவது
- பாலியல் சிகிச்சைகள் மற்றும் மனநோய்க்கான சிகிச்சைகள்
- கர்ப்பம்
- சட்ட மீறல்களகனால் எழும் பிரச்சினைகள்
- அணுசக்தி அபாயங்கள், போர் முதலியவற்றால் எழும் க்ளெய்ம்கள் இதில் பொருந்தாது.
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே மருத்துவத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது இத்திட்டத்தின் சிறப்பு. இந்த திட்டம் மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் உள்நோயாளிகளுக்கு ஆகும் செலவுகளுக்கு கவரேஜ் வழங்குகிறது.
தகுதி:
- 18 வயதிலிருந்து 65 வயது வரையில் உள்ளவர்கள்
- காப்பீட்டு தொகை - 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் வரை
- கவரேஜ் வகை - குடும்ப மிதவை (ஃபேமிலி ஃப்ளோட்டர்)
அம்சங்கள்:
- காப்பீடு செய்துக் கொண்ட தனிநபர், அவரது துணை மற்றும் இரண்டு குழந்தைகள் வரையில் ஒரே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படலாம்
- திட்டத்திற்கு முன் மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் இல்லை
- வாழ்நாள் முழுவதும் பாலிசி புதுப்பிக்கும் வசதியிருக்கிறது
- தொடர்பில் உள்ள மருத்துவமனைகளில் காப்பீடு செய்தவருக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வசதி இருக்கிறது
பலன்கள்:
- மருத்துவமனைக்கு முன் ஆகும் செலவுகள் 15 நாட்கள் வரையிலும் அதற்கு பின் ஆகும் செலவுகள் 30 நாட்கள் வரையிலும் இந்த திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்
- 140 பகல்நேர பராமரிப்புகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன
- ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான கூடுதல் கவர் கூடுதலாக பிரீமியம் செலுத்துவதினால் பெறலாம்
- காப்பீடு செய்துக் கொண்ட உள்நோயாளிகளுக்கு ஆகும் மருத்துவச் செலவுகள், ஐ.சி.யூ, அறுவை சிகிச்சைக் கட்டணம் முதலியவை இத்திட்டத்தில் ஈடுசெய்யப்படுகிறது.
-
ஒரே திட்டத்தின் கீழ் தனிநபர், அவரது துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்க முடிந்த ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமே இந்த திட்டம். இதில் குடும்பத்தில் ஒருவரால் பெறப்பட்ட கவர் கொண்டு முழு குடும்பத்தாலும் பயன்பெற முடிகிறது.
தகுதி:
- 18 வயதிலிருந்து 60 வயது வரையுள்ளவர்கள்
- காப்பீட்டு தொகை - 1 லட்சம் ரூபாயிலிருந்து ரூ. 10 லட்சம் வரையில்
- கவரேஜ் வகை - குடும்ப மிதவை (ஃபேமிலி ஃப்ளோட்டர்)
அம்சங்கள்:
- பிரீமியம் சந்தாதாரர்களுக்கு பிரத்யேகமாக வருடந்தோறும் 5% தள்ளுபடி இதன் கீழ் வழங்கப்படுகிறது
- மருத்துவ ஊக்கப் பரிசோதனை பலன் இன்சூரரால் காப்பீடு செய்தவருக்கு வழங்கப்படுகிறது
பலன்கள்:
- உறுப்பு தானம் செய்ய விரும்பி முன்வருவோரின் செலவுகளை நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் ஈடுசெய்கிறது
- உறுப்புகளை தானம் செய்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால்; அதற்காகும் அனைத்து செலவுகளையும் இந்த இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.
- ரூ. 5000 வரையிலும் குழந்தைகளுக்கான ரேபிஸ் தடுப்பூசிக்கான செலவுகள் இதில் கவர் செய்யப்படும்
- டே கேர் சிகிச்சைகளும் இதில் அடங்கும்
- ரூ. 1000 வரையிலும் ஆம்புலன்ஸ்க்கு ஆகும் செலவுகள் இதன் கீழ் காப்பீடு செய்யப்படும்
- குறிப்பிட்ட வரம்பு வரையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட இதர மகப்பேறு செலவுகளும் இங்கு திருப்பிச் செலுத்தப்படும்
- தனிநபர் ஒருவருக்கு ஏதேனும் நோய்க்கு சிகிச்சை தேவைப்படுகையில் வரம்புகள் இல்லாமல் ஃப்ளோட்டர் பாலிசியில் உதவி அளிக்கப்படுகிறது.
- அடிப்படை அல்லது பேஸ் பிரீமியத்திற்கு 5% நோ கிளெய்ம் போனஸ் இருக்கிறது
- ஆன்லைனில் திட்டத்தை வாங்குவதற்கும் அதை புதுப்பிப்பதற்கும் நிறைய தள்ளுபடிகள் உள்ளன.
- நீண்ட கால காப்பீட்டுத் திட்டங்களுக்கு தள்ளுபடிகள் உண்டு
- அடிப்படை அல்லது பேஸிக் பிரீமியத்தில் மண்டல வாரியாக தள்ளுபடிகள் உண்டு
- 45 வயதை கடந்த காப்பீடு செய்யப்பட்டவருக்கு மகப்பேறு அல்லது குழந்தையின்மைக்கான சிகிச்சைகளுக்கு தள்ளுபடிகள் உண்டு
- திட்டத்தின்படி வரம்புகளுக்கு உட்பட்டு நான்கு க்ளெய்ம் செய்யப்படாத வருடங்களுக்கு அதன் முடிவில் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் இதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
- வருமான வரிச் சட்டத்தில் 80D பிரிவின் கீழ் செலுத்திய பிரீமியத்திற்கு வரி தள்ளுபடி செய்யப்படுகிறது
விலக்குகள்:
- திட்டம் துவங்கியிருந்தது 30 நாட்களுக்கு விபத்துக்களால் எழும் க்ளெய்ம்கள் மட்டுமே ஈடுசெய்யப்படும்.
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்கள் திட்டம் துவங்கி நாற்பத்தெட்டு மாதங்களுக்குப் பிறகுதான் இதில் சேரும்
- நோய்களுக்கான காத்திருப்பு காலம் அதன் தீவிரத்தன்மையை பொருத்து 90 நாட்களிலிருந்து ஒன்று, இரண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் வரையில் இருக்கும்
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள்
- வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள், ஆல்கஹால் மற்றும் இதர போதைப்பொருளின் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்தக் கொண்ட காயங்கள்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் மற்றும் வீட்டிற்கு வருகைக்கான கட்டணம்
- பல் சிகிச்சை (விபத்தினால் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லாதபோது), வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை.
-
உயர் தொகை காப்பீடு வசதி கொண்ட இந்த ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பு, இது தனிநபர் ஒருவருக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும் என்று மட்டும் இல்லாமல், அவரது மாமனார் மாமியார் என அவர்களையும் உள்ளடக்குகிறது.
தகுதி:
- 18 வயதிலிருந்து 65 வயது வரையில்
- காப்பீட்டு தொகை - 2 லட்சம் ரூபாயிலிருந்து ரூ. 50 லட்சம் வரையில்
- கவரேஜ் வகை - தனிநபர்/குடும்ப மிதவை
அம்சங்கள்:
- இது அலோபதி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதம் போன்றவற்றிற்கும் கவர் வழங்குகிறது
- இந்த திட்டத்தின் கவரேஜ் குறைந்தபட்சமாக ஒரு வருடமும் அதிகபட்சமாக 3 வருடங்களும் இருக்கிறது
- வாழ்நாள் முழுவதும் பாலிசி புதுப்பிக்க வசதியிருக்கிறது.
- இதே திட்டத்தில் குழந்தைகளையும் கூட காப்பீடு செய்துக் கொள்ள முடிகிறது
- ஏர் ஆம்புலன்ஸ் பெரும் வசதியும் இருக்கிறது
பலன்கள்:
- இந்த திட்டத்தின் படி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் காப்பீடு செய்துக் கொண்ட நோயாளிகளிடம் இத்திட்டம் பெறாதவர்களைக் காட்டிலும் 2% குறைவாக வசூலிக்கப்படுகிறது.
- பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கட்டணங்களையும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இலவச தடுப்பூசிகள் போடும் வசதிகளும் இருக்கிறது.
- இந்த திட்டத்தின் கீழ் 12 வயதை கடந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதும் இதன் கீழ் வருகிறது.
- வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்லவேண்டிய A பிளானின் கீழ் வரும் நோயாளிகளுக்கு ஆகும் செலவுகள் இந்த தேசிய காப்பீட்டு மெடிக்ளைம் பிளஸ் பாலிசியின் கீழ் வராது. ஆனால், பிளான் B மற்றும் C -யில் உள்ளவர்களுக்கு காப்பீடு நன்மைகள் உண்டு. அவர்கள் 5% வரையில் குறைந்த விலையில் இந்த சேவைகளை பெறுகிறார்கள்.
- மேலும், பிளான் A, பிளான் B மற்றும் பிளான் C ஆகிய பிரிவுகளில் வினையூக்கி (கேட்டலிஸ்டு) அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு 15% வரையில் தள்ளுபடிகள் வழங்கப்படும். அவர்கள் தங்கள் மருத்துவ செலவுகளை பற்றிய கவலையில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் மருத்துவ செலவில் பாதியைச் செலுத்தினால் போதும்.
- மேலும், A பிளானில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மருத்துவ மறுசேர்ப்புக்கான செலவுகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படாது
- க்ரிட்டிகல் இல்னெஸ் கவர், மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான காப்பீட்டு கவர்களும் இதன் கீழ் வழங்கப்படுகிறது
- காப்பீடு செய்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் குடும்பம் முழுவதற்கும் ரூ. 50 லட்சம் வரையிலுமான காப்பீட்டுத் தொகை கொண்ட பாலிசிகள் கிடைக்கிறது
- அடிப்படை அல்லது பேஸ் பிரீமியத்தில் 5% வரையிலும் நோ கிளெய்ம் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது
- ஆன்லைனில் திட்டத்தை வாங்குவதற்கும் அதை புதுப்பிப்பதற்கும் நிறைய கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் இருக்கின்றன.
- நீண்ட கால காப்பீட்டுத் திட்டங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது
- அடிப்படை அல்லது பேஸிக் பிரீமியத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு மண்டல வாரியாக தள்ளுபடிகள் உண்டு
- 45 வயதை கடந்த காப்பீடு செய்யப்பட்டவருக்கு மகப்பேறு அல்லது குழந்தையின்மைக்கான சிகிச்சைகளுக்கு தள்ளுபடிகள் உண்டு.
- மகப்பேறு, ஏர் ஆம்புலன்ஸ், இதர மருத்துவ அவசர சிகிச்சைகள், மருத்துவமனை கேஷ் பெனெஃபிட், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் என இவற்றை இதில் பெறலாம்
- விருப்ப கவர்கள்:
- ஒரு பாலிசி ஆண்டின் போது காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு தீவிர நோய்க்கான பலனாக ரூ. 2,00,000/ 3,00,000/ 5,00,000/ 10,00,000/ 15,00,000/ 20,00,000/ 25,00,000 வரையிலும் காப்பீட்டுத் தொகையுடன் கூடுதலாக வழங்கப்படுகிறது
- ஒரு பாலிசி வருடத்தில் மிதவை திட்டத்தின் அடிப்படையில் வெளிநோயாளர்களுக்கான சிகிச்சைக்கு குடும்பத்திற்கான காப்பீட்டு வரம்பாக ரூ. 2,000/ 3,000/ 4,000/ 5,000/ 10,000/ 15,000/ 20,000/ 25,000 வரையிலும் காப்பீட்டுத் தொகையுடன் கூடுதலாக வழங்கப்படுகிறது
- ஹெல்த் செக்-அப் வசதி: திட்டத்தின் அடிப்படையில் வரம்புகளுக்கு உட்பட்டு இரண்டு பாலிசி வருடங்களின் முடிவில் க்ளெய்ம் செய்யப்பட்டாலோ செய்யப்படாவிட்டாலோ கூட ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் இதன் கீழ் ஏற்கப்படுகிறது.
விலக்குகள்:
- திட்டம் துவங்கியிருந்தது 30 நாட்களுக்கு விபத்துக்களால் எழும் க்ளெய்ம்கள் மட்டுமே ஈடுசெய்யப்படும்.
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்து இருக்கும் நோய்கள் திட்டம் துவங்கி முப்பத்தாறு மாதங்களுக்குப் பிறகுதான் இதில் சேரும்
- நோய்களுக்கான காத்திருப்பு காலம் அதன் தீவிரத்தன்மையை பொருத்து 90 நாட்களிலிருந்து ஒன்று, இரண்டு மற்றும் நான்கு ஆண்டுகள் வரையில் இருக்கும்
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள்
- வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள், ஆல்கஹால் மற்றும் இதர போதைப்பொருளின் துஷ்பிரயோகம், சுயமாக ஏற்படுத்தக் கொண்ட காயங்கள்
- மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் மற்றும் வீட்டிற்கு வருகைக்கான கட்டணம்
- பல் சிகிச்சை (விபத்தினால் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லாதபோது), வெளிநோயாளர்களுக்கான சிகிச்சை
-
உயிருக்கு ஆபத்தான நிலைமையில் செய்யப்படும் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை உள்ளடக்கிய ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக நேஷனல் க்ரிட்டிகல் இல்னெஸ் பாலிசி இருக்கிறது. இத்திட்டம் இரண்டு வெவ்வேறு வகைகளில் வருகிறது
தகுதி:
- 20 வயதிலிருந்து 65 வயது வரையில்
- காப்பீட்டு தொகை - 1 லட்சம் ரூபாயிலிருந்லீ 75 லட்சம் ரூபாய் வரையில்
- கவரேஜ் வகை - தனிநபர்/குடும்ப மிதவை
அம்சங்கள்:
- 65 வயது வரையிலும் இந்த திட்டம் புதுப்பிக்கத்தக்கதாக இருக்கிறது
- 45 வயதை கடந்த விண்ணப்பதாரர்களுக்கு முன் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம்
பலன்கள்:
- தனி நபருக்கும், அவரது துணை, பெற்றோர் ஆகியோருக்கும் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தில் கவரேஜ் வழங்கப்படுகிறது
- A திட்டத்தின் கீழ் 11 க்ரிட்டிகல் நோய்கள் கவர் செய்யப்படுகின்றன
- 37 க்ரிட்டிகல் நோய்கள் B திட்டத்தின் கீழ் வருகிறது
- கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் ஏற்கனவே இருந்த நோய்களுக்கும் காப்பீடு செய்ய முடிகிறது
- பட்டியலிடப்பட்டிருக்கும் முக்கியமான நோய்களை காப்பீடு செய்தவர் கண்டறிய நேர்ந்தால் அவருக்கு லம்ப்சம் அமௌன்ட் செலுத்தப்படுகிறது
விலக்குகள்:
- இத்திட்டத்தின் கீழ் காத்திருப்பு காலமாக மூன்று மாதங்கள் இருக்கின்றன
- திட்டம் துவங்குவதற்கு முன்பிருந்தே இருக்கும் க்ரிட்டிகல் நோய்கள்
- பின்வருவம் காரணங்களின் விளைவாக ஏற்படும் க்ரிட்டிகல் நோய்களுக்கு காப்பீடு செலுத்தப்பட மாட்டாது:
- பிறவியிலேயே உண்டான பிரச்சினைகள், மரபணு கோளாறுகள், கருவுறாமை, உதவியுடன் கருத்தரித்தல் போன்றவற்றிற்கு காப்பீடு இல்லை
- கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள்
- மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளோ போதைப்பொருட்களோ பயன்படுத்துவதனால் ஏற்படும் சிக்கல்கள்
- சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள்
- எச்.ஐ.வி, எய்ட்ஸ்
- ஒப்பனை சார் சிகிச்சைகள் அல்லது பிளாஸ்டிக் சர்ஜெரி, பாலின மாற்ற சிகிச்சைகள், ஹார்மோன் மாற்று சிகிச்சை
-
நேஷனல் வரிஷ்தா மெடிகிளைம் திட்டம் 80 வயது வரையுள்ள மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக இருக்கிறது. இதன் கீழ் முதல் முறையாக காப்பீடு செய்கையில் விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது அவசியமாகிறது.
தகுதி:
- 60 வயதிலிருந்து 80 வயது வரையுள்ள மூத்த குடிமக்கள் இதில் சேரலாம்
- காப்பீட்டுத் தொகை - வீட்டிலேயே சிகிச்சை பெறும் நோய்களுக்கு ரூ. 1 லட்சமும் க்ரிட்டிகல் இல்னெஸ் ஆப்ஷனல் கவராக ரூ. 2 லட்சமும் வழங்கப்படும்
அம்சங்கள்:
- வயதானவர்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது
- இது தீவிர நோய்க்களுக்காக கூடுதலாக க்ரிட்டிகல் இல்னெஸ் கவரும் வழங்குகிறது
- பாலிசியை வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியிருக்கிறது
- 5% முதல் 50% வரையிலும் க்ளெய்ம் செய்யப்படாத ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகையில் நோ-கிளெய்ம் போனஸ் வழங்கப்படுகிறது
- வருமான வரி திட்டம் பிரிவு 80D -ன் கீழ் காப்பீடு செய்பவருக்கு வரி தள்ளுபடி வழங்கப்படும்
பலன்கள்:
- மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகளும் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கான செலவுகளும் ரூ. 1 லட்சம் வரையில் இத்திட்டத்தின் கீழ் ஈடுசெய்யப்படும்.
- குறிப்பிட்ட வரம்பு வரையில் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவரால் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஐ.சி.யூ கட்டணங்கள், அறை வாடகைகள், அறுவை சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் இதர சிறப்புக் கட்டணங்களும் செலுத்தப்படுகிறது
- புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளாசியா தீங்கற்றதாக இருக்கையில் ரூ.20,000 வரையிலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவுகள் ரூ.10,000 வரையிலும் காப்பீடு செய்யப்படும்
- வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும்போது காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக 20% வரையிலும் ஈடுசெய்யப்படுகிறது
- இந்த திட்டம் குறிப்பிட்ட 8 தீவிர நோய்களை உள்ளடக்கியதாகவும் 2 லட்சம் வரையிலும் காப்பீட்டுத் தொகை கொண்ட ஒரு திட்டமாகவும் இருக்கிறது
- திட்டம் துவங்கி 3-ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு காப்பீட்டுத் தொகையில் 2% வரையில் மருத்துவ பரிசோதனைக்கு வழங்கும் வசதி
-
வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கான காப்பீட்டுத் திட்டமான நேஷனல் ஓவர்சீஸ் மெடிக்ளைம் பிஸ்னஸ் அண்ட் ஹாலிடே திட்டம் பயணத்தின் போது காப்பீடு செய்தவருக்கு ஏற்பட கூடும் மருத்துவ அவசரநிலைகளை உள்ளடக்கியது. இந்த திட்டத்தை மூன்று வகைகளில் பெறலாம்: வணிகம் & விடுமுறை (பிஸ்னஸ் அண்ட் ஹாலிடே), பணியாளர் & படிப்பு, கார்ப்பரேட் சம்பந்தமாக அடிக்கடி பறப்பவர்.
தகுதி:
- இந்தியர்களுக்கு
- விடுமுறைக்காகவோ வணிக நோக்கத்திற்காகவோ இந்தியா, நேபாளம் அல்லது பூட்டானை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்வாராம் இதை பெறலாம்
- வெளிநாட்டு குடிமக்களுக்கு
- வெளிநாட்டைச் சேர்ந்த குடிமக்கள் இந்தியாவில் இந்திய முதலாளிகளுக்கு பணிபுரிந்து இந்திய ரூபாயிலேயே சம்பளம் பெறும் பட்சத்தில் அவர்கள் இத்திட்டத்தை பெறலாம்
திட்டத்தின் அம்சங்கள்
- மருத்துவ அவசரங்கள் உட்பட வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது காப்பீடு பெறுபவருக்கு ஏற்பட கூடும் பல்வேறு அபாயங்கள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும்.
- வெளிநாடுகளிலும் க்ளெய்ம் செய்து பயன்பெற சர்வதேச சர்வீஸ் ப்ரொவைடர் இருக்கிறது
- வேலைவாய்ப்பு தொடர்பானதல்லாமல், மற்ற பிரீமியங்களை இந்திய ரூபாயிலேயே பணம் செலுத்தும் வசதி இருக்கிறது
- வெளிநாடுகளில் தேவைப்படும் போது அங்குள்ள மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அந்நாட்டின் நாணயத்திலேயே பணம் செலுத்தும் சேவை வழங்கப்படுகிறது.
- பணமில்லா சேவை வழங்கப்படாத பட்சத்தில் காப்பீடு செய்தவர் காப்பீட்டு நிறுவனத்திடம் பணத்தை திருப்பிக் கோரலாம்
- வெளிநாடு செல்லும் I-சர்வதேச விமானத்திற்கு என்று ப்ரத்யேகமாக செக்ட்-இன் பேக்கேஜில் 12 மணிநேரத்திற்கு மேல் தாமதம் நேருகையில் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்
- 70 வயதை கடந்த பயணிகள் 60 நாட்களுக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தால் இ.சி.ஜி, ப்ளட் சர்க்கரை மற்றும் சிறுநீர் ஸ்ட்ரைப் பரிசோதனை முதலிய மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியம். பயணிகளால் இவற்றை சமர்ப்பிக்க முடியாமல் போனால் 10,000 அமெரிக்க டாலர்கள் வரையில் காப்பீடு வரம்பிடப்படும்.
- க்ளெய்ம்களில் முதல் 100 அமெரிக்க டாலர்கள் வரையில் காப்பீடு செய்துக்கொண்ட பயணியாளியே ஏற்க வேண்டும்
பலன்கள்
5 திட்டப் பிரிவுகளின் கீழ் கிடைக்கும் இந்த பிளானின் நன்மைகள் கீழ்வருமாறு:
- A பிரிவின் கீழ் மருத்துவ செலவுகளும் திருப்பி அனுப்புதலும்
- B பிரிவின் கீழ் தனிப்பட்ட விபத்துகளுக்கான கவர்
- C பிரிவின் கீழ் செக்ட்-இன் பேக்கேஜ் தாமதம்
- D பிரிவின் கீழ் செக்ட்-இன் பேக்கேஜ் இழப்பு
- E பிரிவின் கீழ் பாஸ்போர்ட் இழப்பு
- F பிரிவின் கீழ் தனிப்பட்ட உடமைகளுக்கோ தன் பொறுப்பில் இருக்கும் பொருட்களுக்கோ தேவைப்படும் பாதுகாப்பு
விலக்குகள்:
- ஏற்கனவே இருக்கும் நோய்கள் திட்டத்தின் கீழ் பொருந்தாது
- மருத்துவ ஆலோசனைக்கு மாறாக பயணம் செய்தாலோ ரெகுலர் செக்கப் உட்பட இதர மருத்துவ சிகிச்சைக்களுக்காக பயணம் செய்தாலோ அவற்றிற்கு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படாது
- கடற்படை, இராணுவம் அல்லது விமானப்படை நடவடிக்கைகளினால் அல்லது அதில் பங்கேற்பதன் மூலமாக நிகழும் க்ளெய்ம்கள் இதில் கவர் செய்யப்படாது
- தற்கொலையினால் அல்லது வேண்டுமென்றே சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் அல்லது மனநலக் கோளாறுகளால் அல்லது மது மற்றும் ஏனைய போதைப் பழக்கங்களால் அல்லது எய்ட்ஸ் உள்ளிட்ட எச்ஐவி தொடர்பான நோய்களால் எழும் க்ளெய்ம்கள் கவர் செய்யப்படாது
- மலையேறுதல் அல்லது குளிர்கால விளையாட்டுகளில் பங்கேற்றல் அல்லது சாகச விளையாட்டுகளில் பங்கேற்பதால் போன்றவற்றால் எழும் க்ளெய்ம்களுக்கு காப்பீடு கிடையாது
-
வெளிநாட்டில் இருக்கையில் தேவைப்படும் பயணம் தொடர்பான அவசரங்களை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த திட்டம் மூன்று வகைகளில் காப்பீடு செய்தவருக்கு கிடைக்கிறது - வணிகம் & விடுமுறை, பணியாளர் & படிப்பு, கார்ப்பரேட் சம்பந்தமாக அடிக்கடி பறப்பவர். இந்த திட்டத்தின் கீழ் நோய்களுக்கு எதிராக வழங்கப்படும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 5,00,000 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
தகுதி:
- இந்தியர்களுக்கு
- விடுமுறைக்காகவோ வணிக நோக்கத்திற்காகவோ இந்தியா, நேபாளம் அல்லது பூட்டானை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்வாராம் இதை பெறலாம்
- வெளிநாட்டு குடிமக்களுக்கு
- வெளிநாட்டைச் சேர்ந்த குடிமக்கள் இந்தியாவில் இந்திய முதலாளிகளுக்கு பணிபுரிந்து இந்திய ரூபாயிலேயே சம்பளம் பெறும் பட்சத்தில் அவர்கள் இத்திட்டத்தை பெறலாம்
அம்சங்கள்:
- மருத்துவ அவசரங்கள் உட்பட வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது காப்பீடு பெறுபவருக்கு ஏற்பட கூடும் பல்வேறு அபாயங்கள் இந்த திட்டத்தின் கீழ் அடங்குகிறது
- வெளிநாடுகளிலும் க்ளெய்ம் செய்து பயன்பெற சர்வதேச சர்வீஸ் ப்ரொவைடர் இருக்கிறது
- வேலைவாய்ப்பு தொடர்பானதல்லாமல், மற்ற பிரீமியங்களை இந்திய ரூபாயிலேயே பணம் செலுத்தும் வசதி இருக்கிறது
- வெளிநாடுகளில் தேவைப்படும் போது அங்குள்ள மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அந்நாட்டின் நாணயத்திலேயே பணம் செலுத்தும் சேவை வழங்கப்படுகிறது.
- பணமில்லா சேவை வழங்கப்படாத பட்சத்தில் காப்பீடு செய்தவர் காப்பீட்டு நிறுவனத்திடம் பணத்தை திருப்பிக் கோரலாம்
- 70 வயதை கடந்த பயணிகள் 60 நாட்களுக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தால் இ.சி.ஜி, ப்ளட் சர்க்கரை மற்றும் சிறுநீர் ஸ்ட்ரைப் பரிசோதனை முதலிய மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிப்பது அவசியம். பயணிகளால் இவற்றை சமர்ப்பிக்க முடியாமல் போனால் 10,000 அமெரிக்க டாலர்கள் வரையில் காப்பீடு வரம்பிடப்படும்.
- க்ளெய்ம்களில் முதல் 100 அமெரிக்க டாலர்கள் வரையில் காப்பீடு செய்யப்பட்ட பயணியாலேயே ஏற்கப்பட வேண்டும்
- க்ளெய்ம்களில் முதல் 100 அமெரிக்க டாலர்கள் வரையில் காப்பீடு செய்துக்கொண்ட பயணியாளியே ஏற்க வேண்டும்
பலன்கள்:
- C மற்றும் D பிளான்களின் கீழ் - வேலைவாய்ப்பு & படிப்புகள்:
- பிரிவு 1A: நோய்களுக்கான காப்பீட்டுத் தொகையாக 1,50,000 அமெரிக்க டாலர்கள் முதல் C-பிளானிலும்; 500000 அமெரிக்க டாலர்கள் முதல் D1 பிளானிலும்; 1,50,000 அமெரிக்க டாலர்கள் முதல் D பிளானிலும் வழங்கப்படுகிறது
- பிரிவு 1B: 10000 அமெரிக்க டாலர்கள் மருத்துவ வெளியேற்ற செலவுகளுக்காக C, D மற்றும் D1 பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது
- பிரிவு 1C: 10000 அமெரிக்க டாலர்கள் காப்பீட்டின் படி C, D மற்றும் D1 பிரிவுகளுக்கு சொந்த தாட்டிற்கு திரும்ப வழங்கப்படுகிறது
- பிரிவு 1D: 5000 அமெரிக்க டாலர்கள் மருத்துவ அவசர காப்பீடாக C, D மற்றும் D1 பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது
- பிரிவு II: மூன்று வகை திட்டங்களின் கீழ் முடிவடையும் ஒவ்வொரு மாத படிப்பிற்கும் தற்செயல் காப்பீடாக 750 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது
- திட்டம் D1: 1000 அமெரிக்க டாலர்களுக்கான செக்ட்-இன் பேக்கேஜ் இழப்பு
விலக்குகள்:
- ஏற்கனவே இருக்கும் நோய்கள் திட்டத்தின் கீழ் பொருந்தாது
- மருத்துவ ஆலோசனைக்கு மாறாக பயணம் செய்தாலோ ரெகுலர் செக்கப் உட்பட இதர மருத்துவ சிகிச்சைக்களுக்காக பயணம் செய்தாலோ அவற்றிற்கு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படாது
- கடற்படை, இராணுவம் அல்லது விமானப்படை நடவடிக்கைகளினால் அல்லது அதில் பங்கேற்பதன் மூலமாக நிகழும் க்ளெய்ம்கள் இதில் கவர் செய்யப்படாது
- தற்கொலையினால் அல்லது வேண்டுமென்றே சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் அல்லது மனநலக் கோளாறுகளால் அல்லது மது மற்றும் ஏனைய போதைப் பழக்கங்களால் அல்லது எய்ட்ஸ் உள்ளிட்ட எச்ஐவி தொடர்பான நோய்களால் எழும் க்ளெய்ம்கள் கவர் செய்யப்படாது
- மலையேறுதல் அல்லது குளிர்கால விளையாட்டுகளில் பங்கேற்றல் அல்லது சாகச விளையாட்டுகளில் பங்கேற்பதால் போன்றவற்றால் எழும் க்ளெய்ம்களுக்கு காப்பீடு கிடையாது
நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை கிளைம் செய்வது எவ்வாறு?
இத்திட்டம் மூலம் கட்டணமில்லா மற்றும் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது.
கட்டணமில்லா கிளைம்:
இதற்கு காப்பிட்டளர்கள் மருத்துவமனையில் அனுமதித்த 72 மணி நேரத்தில் கடிதம் மூலம் காப்பீடு செய்தவர் சிகிச்சை பெறலாம்.
(அல்லது)
அவசர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் தெரிவித்து காப்பிட்டளர் உடனடியாக இலவச சிகிச்சை பெறலாம்.
தவணைமுறை:
இதில் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது ரசீது, சான்றிதழ் போன்ற ஆவணங்களை சிகிச்சை முடிந்த 15 நாட்களுக்குள் பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ உரிமைக் கோரலை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உரிமைக் கோரலை பெறுவதற்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டாளரால் வழங்கப்பட்ட மருத்துவ உரிமைக் கோரல் விவரங்களை உள்ளடக்கிய விண்ணப்பம் ஏ மற்றும் விண்ணப்பம் பி ஆகிய இரண்டு படிவங்களும் முழுமையாகவும் முறையாகவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் .
- மருத்துவமனையால் அளிக்கப்படும் மருத்துவச் செலவுகளுக்கான ரசீதுகள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக் கொள்கையை பெற்றவர் மருத்துவமனைக்கு செலுத்திய தொகைக்கான ரசீதுகள் மற்றும் நோயாளியின் மருத்துவ விவரங்கள் அனைத்தும் அடங்கிய அசல் சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறியதற்கான சான்றிதழ்கள் மற்றும் மருத்துவரால் வழங்கப்பட்ட நோயாளியின் சுருக்க விளக்கம் போன்ற சான்றிதழ்கள் அவசியம் தேவை.
- மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை பேன் அட்டை போன்றவைகளும் தேவை .
- மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களில் வேதியல் ஆய்வாளரால் மருத்துவரின் பரிந்துரையால் முறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பண விவரங்கள் உள்ளடக்கிய ரசீதுகளும் தேவைப்படும் ஆவணங்களாகும்.
- மருத்துவமனையில் பணம் செலுத்தியதற்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் உள்ளடங்கிய சான்றிதழ்கள் மற்றும் மருத்துவரால் முறையாக அளிக்கப்பட்ட மருந்து சீட்டுகள் போன்றவை மருத்துவ உரிமைக் கோருவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆகும் .
- மேலும் மருத்துவரால் நோயாளிக்கு நோய்களை கண்டறிவதற்கான விவரங்களை உள்ளடக்கிய ரசீதுகள் போன்றவையும் மருத்துவ உரிமை கோரலுக்கான சான்றிதழில் அடங்கும் .
- மேலும் நோயாளிக்கு நோய்களை அறிந்து அதற்கு தீர்வாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணரால் வழங்கப்படும் அசல் சான்றிதழ்கள் மற்றும் கட்டண ரசீதுகள் போன்றவையும் தேவைப்படும் ஆவணங்கள் ஆகும்.
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தேவைப்படும் பிற ஆவணங்கள் அல்லது நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு முகவர்களுக்கு தேவைப்படும் பிற ஆவணங்களும் இதில் அடங்கும்.
நேஷனல் இன்சூரன்ஸ் இணையத்தளம் மூலம் மருத்துவக் காப்பீட்டினை புதுப்பிப்பது எப்படி?
மருத்துவக்காப்பீட்டினைநேஷனல்இன்சூரன்ஸ் மூலம் புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்:-
- நேஷனல்இன்சூரன்ஸின்அதிகாரப்பூர்வஇணையத்தளத்தினைதிறக்கவும்.
- முகப்புபக்கத்திற்குசென்றதும்மேல்புறபக்கத்தில்உள்ளபட்டியலினைதேர்வுசெய்துஅதில்உ
ள்ளவிருப்பங்கள்பலவற்றில்புதுப்பித்தல்என்தினைதேர்வுசெய்யவேண்டும்.இதுஉங்களைநேரடியாகபுதுப்பி
த்தல்பக்கத்திற்குஅழைத்துச்செல்லும்.
- அந்தபுதுப்பித்தல்பக்கத்தில்காப்பீட்டுக்கொள்கையின்விவரம்மற்றும்மற்றும்காப்பீ
டுசெய்தவரின்விவரங்களும்காட்டப்பட்டிருக்கும்அதில்ஏதேனும்மாறுபாடுகள்இருந்தால்அதனைதி
ருத்தம்செய்துவிட்டுசேமிஎன்பதனைகொடுத்துசேமிக்கவும்.
- கீழ்ப்பக்கத்தில்பணம்செலுத்துவதற்கானபகுதிகொடுக்கப்பட்டிருக்கும்அதில்ஆன்லைன்க
ட்டணம்என்பதினைதேர்வுசெய்துஇப்போதுவாங்குஎன்பதினைசொடுக்கவும்.
அதில்,கடன்அட்டைபற்றுஅட்டைபோன்றபணப்பரிவர்த்தனைவிருப்பங்கள்கொடுக்கப்பட்டிருக்கும்,
அதில்ஏதேனும்ஒருமுறையைப்பயன்படுத்திஉரியகட்டணத்தினைசெலுத்தவேண்டும்.
- மருத்துவக்காப்பீட்டினைபுதுப்பித்ததைஉறுதிசெய்யும்வகையில்காப்பீடுசெய்தவரின்மின்னஞ்
சல்முகவரிக்குகாப்பீடுபுதுப்பித்தல்செய்ததுகுறித்தசெய்திஅனுப்பப்படும். மேலும்ரசீதினையும்பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.
மேலும், ஆஃலைன் மூலம் மருத்துவக் காப்பீட்டினை புதுப்பிப்பதற்கு தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளையை தொடர்புகொள்ளவும்.
நேஷனல்இன்சூரன்ஸ்மூலம்மருத்துவக்காப்பீட்டினைபுதுப்பிப்பதால்கிடைக்கப்பெறும் நன்மைகள்:-
- உங்களதுமருத்துவக்காப்பீட்டுஉரிமைக்கோரலின்நிலையைகண்டறிவதற்கானவசதிசெய்யப்பட்டுள்ளது.
- 24×7 மணிநேரமும் நேரடிகுறுஞ்செய்திகள் முலமாக வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில்அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- ஆறாயிரத்திற்கும்மேற்பட்டமருத்துவமனைகளில்பணமில்லாசிகிச்சைமேற்கொள்ளப்படுகிறது.
- பிரச்சனைகளற்ற மருத்துவக்காப்பீட்டுஉரிமைக்கோறலைஉறுதிசெய்கிறது.
இத்தனைஅம்சங்கள்மற்றும்பாதுகாப்புகள்நிறைந்தநேஷனல்இன்சூரன்ஸ்இணையத்தளத்தி
னைபயன்படுத்திஉயிர்காக்கஉதவும்மருத்துவக்காப்பீட்டினைஉரியநேரத்தில்புதுப்பித்துசிறந்தஉடல்நலத்தோடு
வாழ்ந்துவருங்காலத்தைவரவேற்போம்.
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுக் கொள்கையை பெறுவது எப்படி?
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு பெற நினைக்கும் நபர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டும்.
- நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுக் கொள்கை மற்றும் அதன் சிறப்பம்சங்களையும் தெரிந்து கொண்டு எந்த வகையான மருத்துவ காப்பீட்டுக் கொள்கையினை எடுக்க நினைக்கிறோமோ அது தொடர்பான அச்சிடப்பட்ட மருத்துவ காப்பீட்டுக் கொள்கை முன்மொழிவு படிவத்தினை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மூலமாகவோ சேகரிக்க வேண்டும் .
- பின்பு, படிவத்தை படித்துப் பார்த்து கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை தவறில்லாமல் உண்மைத் தன்மையோடு நிரப்ப வேண்டும் .
- நிரப்பிய பின்னர் மருத்துவ காப்பீட்டுக் கொள்கை முன்மொழிவு படிவத்தை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
- உங்களது பகுதிக்கு அருகில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட நேரடி தொலைபேசி எண்ணின் வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
- முன்னேற்பு கணக்கெடுப்பின் போது சில பிரச்சனைகள் இருக்கலாம் இந்நிலையை கண்காணிப்பதற்கும் பிரச்சனைகள் மற்றும் பிற விஷயங்களை மதிப்பிடுவதற்கும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஒரு அளவையாளர் நியமிக்கப்படுவார் .
- மருத்துவக் காப்பீட்டிற்கான தொகை கணக்கீடுகள் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கணினி மயமாக்கப்பட்ட அலுவலகங்களின் மூலமாக காப்பீடு பெறுபவர்களுக்கு வழங்கப்படும்.
- . நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கையின் பெயரில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவும் மருத்துக் காப்பீடு வழங்கப்படும்.
தொடர்பு விபரங்கள்
இலவச எண்: 1800 345 0330, 033 6811 0000, 033 2537 0070, 040 2770 0011.
மின்னஞ்சல் முகவரி: faf@nic.co.in
தொலைநகல் :- 22831740
முகவரி:-
3,மிடில்டன் தெரு,
பிரஃபுல்லா சந்திர சென்சரனி
கொல்கத்தா,
மேற்கு வங்காளம் 700071.