மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷுரன்ஸ்

(67 Reviews)
Insurer Highlights

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Get insured from the comfort of your home
Get insured from the comfort of your home
  • 1
  • 2
  • 3
  • 4

Who would you like to insure?

  • Previous step
    Continue
    By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
    Previous step
    Continue

      Popular Cities

      Previous step
      Continue
      Previous step
      Continue

      Do you have an existing illness or medical history?

      This helps us find plans that cover your condition and avoid claim rejection

      Get updates on WhatsApp

      Previous step

      When did you recover from Covid-19?

      Some plans are available only after a certain time

      Previous step
      Advantages of
      entering a valid number
      You save time, money and effort,
      Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷுரன்ஸ்

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இந்தியாவின் மணிபால் குரூப்பும்,யு.எஸ்ஸின் சிக்னா கார்பொரேஷனும் சேர்ந்து உண்டான (மெர்ஜெர்) கம்பெனி. மணிபால் குரூப் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு 11 நகரங்களில் தமது அலுவலகங்களை நடத்தி வருகிறது குறுகிய காலத்தில் மணிபால் சிக்னா இன்சூரன்ஸ் பிரிவில் முன்னணியில் இருக்கும் கம்பனிகளில் ஒன்றாக திகழ்கிறது. அனைவருக்கும் உபயோகப்படக்கூடிய முழுமையான கவரேஜ் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை வழங்கி வருகிறது.

      Read More

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷுரன்ஸ் - ஒரு கண்ணோட்டம்

      மணிபால் குரூப், ஹெல்த் கேர் மற்றும் உயர் கல்வி துறைகளில் பிரசித்தி பெற்ற ஒரு பங்களிப்பாளர். கடந்த சில வருடங்களில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை நெட்ஒர்க் மற்றும் ஹெல்த் கேர் ஸ்கில் பூல் இவற்றை ஏற்படுத்தி ஹெல்த் கேர் துறையில் உச்ச பட்ச ஹெல்த் கேர் ஸ்டாண்டர்ட்சை இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள அதன் நோயாளிகளுக்கு அளித்து வருகிறது.

      இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஹெல்த் கேர் செயின் ஆகும். இது இந்தியாவில் மிக மரியாதைக்குரிய மற்றும் நோயாளிகள் சிபாரிசு செய்யும் மருத்துவமனை என்று ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.

      சிக்னா கார்பொரேஷன் 225 வருடங்களுக்கு மேலாக ஹெல்த் மற்றும் பிரெவேன்டிவ் துறையில் பணி புரிந்து வருகிறது. இது 30 க்கும் மேலான நாடுகளில் தனது பணிகளை செய்து வருகிறது.

      "வேலை செய்வதற்கு உகந்த இடம்" என்று மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு 2022-23 வருடத்துக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது.

      உங்கள் விருப்பப்படி மணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷுரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

      சிக்னா கார்பொரேஷன் முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:

      முக்கிய அம்சங்கள் சிறப்புகள்
      மருத்துவ மனைகள் (நெட்ஒர்க் லிஸ்டட்) 4500+
      க்ளைம் விகிதாச்சாரம் 62%
      புதுப்பித்தல் வாழ்க்கை முழுதும்
      காத்திருப்பு காலம் 4 வருடங்கள்

      ఆరోగ్య బీమా సంస్థ
      Expand

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸின் நன்மைகள்

      • வயது உச்சவரம்பு கிடையாது. எந்த வயதிலும் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
      • குறைந்த பட்ச வயது குழந்தைகளுக்கு 19 நாட்கள் பெரியவர்களுக்கு 18 வருடங்கள்.
      • பேமிலி பிளோட்டர் பாலிசியில் குழந்தைகளுக்கு பாலிசி எடுக்க உச்ச வரம்பு 23 வயது.
      • வருமான வரி சலுகை உண்டு.
      • இன்-பேஷண்ட் செலவுகளுக்கு கவர் உண்டு.
      • ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் செலவுகள் முறையே 60 மற்றும் 90 நாட்கள்.
      • டே கேர் கவர்.
      • வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சைகளுக்கான கவர்.
      • ஆம்புலன்ஸ் மற்றும் டோனர் செலவுகள் கவர்.
      • ஆயுஷ் கவர்.
      • க்ரிட்டிக்கல் இல்னஸ் கவர்.

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள்

      • மணிபால் சிக்னா ப்ரோ ஹெல்த் இன்சூரன்ஸ்

        மெடிக்கல் எமெர்ஜன்சியின் போது இந்த பிளான் முழுமையான இன்சூரன்ஸ் பாதுகாப்பை தருகிறது. இது 5 வித்தியாசமான பிளான்களில் கிடைக்கிறது. அவை: ப்ரொடெக்ட், பிளஸ், பிரிபர்ட் (preferred), ப்ரீமியர் மற்றும் அக்யுமிலேட் ஆகும். இதில் 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.

        டைப் தனி நபர் /குடும்பம்
        குறைந்த பட்ச வயது குழந்தைகள் : 19 நாட்கள்

        பெரியவர்கள்: 18 வருடங்கள்

        அதிக பட்ச வயது உச்ச வரம்பு இல்லை
        இன்சூரன்ஸ் தொகை 2 .5 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி வரை
        கோ-பேமெண்ட் 65 வயதுக்கு மேல் இன்சூர் செய்பவருக்கு 20%
        பாலிசி காலம் 1, 2, 3 வருடங்கள்
        ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் 2/ 3/ 4 வருடங்கள்- பிளான் படி

        அம்சங்கள்

        • இது 5 பிளான் பிரிவுகளில் 2 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி வரை முழுமையான இன்சூரன்ஸ் தொகைக்கு வாய்ப்பு அளிக்கிறது.
        • குடும்பத்துக்கான தள்ளுபடி ப்ரொடெக்ட் பிளானில் 25% உண்டு. பிரிபர்ட் (preferred), ப்ரீமியர் மற்றும் அக்யுமிலேட் பிளான்களில் இது 10% ஆகும். இன்கம் டாக்ஸ் ஆக்ட் பிரிவு 80 டியின் கீழ் செலுத்தப்படும் ப்ரீமியங்களுக்கு வரி சலுகை உண்டு.
        • 15 நாட்கள் பிரீ லுக் (Free look) காலம் உண்டு. தேவை இல்லாவிட்டால் பாலிசி கான்செல் செய்யலாம்.
        • உலகளாவிய எமெர்ஜென்சி கவர் உண்டு.
        • ஒவ்வொரு கிளைம்-பிரீ வருடத்துக்கும் தொடர் போனஸ் உண்டு.
        • ஆயுஷ் கவர் உண்டு.
        • ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் கடைபிடிப்பவர்க்கு வெகுமதி உண்டு.
        • மருத்துவமனை கேஷ் பெனிபிட், கோ பேமென்ட் செலுத்தாமல் இருத்தல், தொடர் போனஸ் பூஸ்டர், தாய்மை பேற்று காத்திருப்பு காலம் குறைத்தல் போன்ற ஆப்ஷனல் கவர்களும் கிடைக்கும்.
        • இன்சூரன்ஸ் தொகை ரெஸ்டோரேஷன் வசதி உண்டு.
        • 45 வயது வரை மெடிக்கல் டெஸ்ட் தேவை இல்லை.
        • அறை வாடகை, நர்சிங் செலவுகள், ஐ.சி.யு. மருந்துகள். ஆக்ஸிஜன். ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் சர்ஜன் செலவுகள். மருத்துவர் மற்றும் அனஸ்தடிஸ்ட் கட்டணம் போன்ற இன்-பேஷண்ட் மருத்துவமனை செலவுகள் கவர் செய்யப்படும்.
        • குறிப்பிட்ட காலத்துக்கு ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் செலவுகளுக்கு கவரேஜ் உண்டு.
        • டே கேர் சிகிச்சை, வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சை, ஆம்புலன்ஸ் செலவுகள், டோனர் செலவுகள், ஆயுஷ், தாய்மை பேறு செலவுகள், புதிதாக பிறந்த குழந்தைக்கான செலவுகள், முதல் வருட வாக்ஸினேஷன் கவர், உலக பயணிகளுக்கு உலகளாவிய எமெர்ஜென்சி செலவுகள் (முழு இன்சூரன்ஸ் தொகைக்கு ரீ இம்பர்ஸ்மென்ட் அடிப்படையில்) அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.

        தகுதி இல்லாதவை

        • பாலிசி எடுத்த முதல் 30 நாட்களில் எந்த கிளைமும் ஏற்கப்படமாட்டாது.
        • ஏற்கனவே உள்ள நோய்களுக்கான கவர் 2/ 3/ 4 வருடங்கள் கழித்து (பிளான் படி) ஆரம்பிக்கப்படும்.
        • குறிப்பிட்ட நோய்களுக்கு 2 வருட காத்திருப்பு காலம் உண்டு.
        • 48 மாதங்கள் வரை தாய்மை பேற்று கவர் கிடையாது.
        • பல் சிகிச்சை, காஸ்மெட்டிக் சர்ஜரி, அலோபதி அல்லாத சிகிச்சை இவற்றுக்கு நிரந்தரமாக கவர் கிடையாது.
      • மணிபால் சிக்னா சூப்பர் டாப் அப் பிளான்

        இந்த பிளானில் அடிப்படை கவர் தொகையை அதிக பிரீமியம் செலவு இல்லாமல் அவ்வப்போது டாப்-அப் செய்து கொள்ளலாம். இதன் உத்தரவாதமான தொடர் போனஸ் பண வீக்கத்தை சமாளிக்க பெரிதும் உதவும்.

        மருத்துவமனையில் எந்த அறையையும் தேர்வு செய்யும் உரிமை, மருத்துவம் அல்லாத செலவுகள் கவர், குடும்ப தள்ளுபடி, மற்றும் ஆயுஷ் கவர் ஆகும்.

        டைப் தனி நபர் /குடும்பம்
        குறைந்த பட்ச வயது குழந்தைகள் : 19 நாட்கள்

        பெரியவர்கள்: 18 வருடங்கள்

        அதிக பட்ச வயது உச்ச வரம்பு இல்லை

        குழந்தை: 23 வருடங்கள் பேமிலி பிளோட்டரில்

        இன்சூரன்ஸ் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் வரை
        பாலிசி காலம் 1, 2, 3 வருடங்கள்
        ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் 4 வருடங்கள்

        அம்சங்கள்

        • இது ஒரு டாப் அப் பிளான். அதிக பட்சம் 30 லட்சம் ரூபாய் வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
        • தனி நபர் மற்றும் பேமிலி பிளோட்டர் அடிப்படையில் இந்த பிளான் கிடைக்கும்.
        • ஏற்கனவே உள்ள நோய்களுக்கான கவர் 4 வருடங்கள் கழித்து கிடைக்கும்
        • இன்கம் டாக்ஸ் ஆக்ட் பிரிவு 80 டியின் கீழ் செலுத்தப்படும் ப்ரீமியங்களுக்கு வரி சலுகை உண்டு.
        • 15 நாட்கள் பிரீ லுக் (Free look) காலம் உண்டு. தேவை இல்லாவிட்டால் பாலிசி கான்செல் செய்யலாம்.
        • பாலிசி ரெனீவலுக்கு 30 நாட்கள் கிரேஸ் காலமும் 15 நாட்கள் ரிவைவல் காலமும் உண்டு.
        • வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
        • ஒவ்வொரு வருடமும் ஆன்லைன் ரெனீவலுக்கு 3% தள்ளுபடி உண்டு.

        நன்மைகள்

        • அறை வாடகை, நர்சிங் செலவுகள், ஐ.சி.யு. மருந்துகள். ஆக்ஸிஜன். ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் சர்ஜன் செலவுகள். மருத்துவர் மற்றும் அனஸ்தடிஸ்ட் கட்டணம் போன்ற இன்-பேஷண்ட் மருத்துவமனை செலவுகள் கவர் செய்யப்படும்.
        • ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் செலவுகளுக்கு முறையே 60 மற்றும் 90 நாட்கள் கவரேஜ் உண்டு.
        • டே கேர் சிகிச்சை, வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சை, ஆம்புலன்ஸ் செலவுகள், டோனர் செலவுகள், ஆயுஷ் இவற்றுக்கு கவரேஜ் உண்டு
        • உத்தரவாதமான டிடக்டபிள் தொடர்ச்சி, ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் குறைத்தல் போன்ற ஆப்ஷன்ஸ் உண்டு,
        • கூடுதல் பெனிபிட் ஆக கிரிட்டிக்கல் இல்னெஸ் கவர் உண்டு.

        தகுதி இல்லாதவை

        • கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் வரும் நோய் மற்றும் காயம்
        • தற்கொலை மற்றும் போதை மருந்துகள்
        • நியூக்ளியர் எரிபொருள் மற்றும் கதிர்வீச்சு பாதிப்பு
        • வெளி நாட்டு படை எடுப்பு அல்லது உள்நாட்டு சண்டை
      • மணிபால் சிக்னா ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி

        இந்த பிளான் மருத்துவ எமெர்ஜன்சி சிகிச்சைக்கு ருபாய் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை ஹெல்த் கவரேஜ் கொடுக்கிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது கொரோனா வைரஸ் சிகிச்சைக்கும் கவர் தருகிறது. இதன் கவரேஜ் லிஸ்டில் மாடர்ன் மற்றும் அட்வான்ஸ்ட் டிரீட்மென்ட், பல வகையான எஸ் ஐ ஆப்ஷன்ஸ், அல்லோபதி மற்றும் ஆயுஷ் டிரீட்மென்ட் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

        டைப் தனி நபர் /குடும்பம்
        குறைந்த பட்ச வயது குழந்தைகள் : 19 நாட்கள்

        பெரியவர்கள்: 18 வருடங்கள்

        அதிக பட்ச வயது குழந்தைகள்: 25 வருடங்கள்

        பெரியவர்கள்: 65 வருடங்கள்

        இன்சூரன்ஸ் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் வரை
        பாலிசி காலம் 1, 2, 3 வருடங்கள்

        அம்சங்கள்

        • இது ஒரு டாப் அப் பிளான். அதிக பட்சம் 30 லட்சம் ரூபாய் வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
        • தனி நபர் மற்றும் பேமிலி பிளோட்டர் அடிப்படையில் இந்த பிளான் கிடைக்கும்.
        • ஏற்கனவே உள்ள நோய்களுக்கான கவர் 4 வருடங்கள் கழித்து கிடைக்கும்
        • இன்கம் டாக்ஸ் ஆக்ட் பிரிவு 80 டியின் கீழ் செலுத்தப்படும் ப்ரீமியங்களுக்கு வரி சலுகை உண்டு.
        • 15 நாட்கள் பிரீ லுக் (Free look) காலம் உண்டு. தேவை இல்லாவிட்டால் பாலிசி கான்செல் செய்யலாம்.
        • பாலிசி ரெனீவலுக்கு 30 நாட்கள் கிரேஸ் காலமும் 15 நாட்கள் ரிவைவல் காலமும் உண்டு.
        • வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
        • ஒவ்வொரு வருடமும் ஆன்லைன் ரெனீவலுக்கு 3% தள்ளுபடி உண்டு.

        நன்மைகள்

        • அறை வாடகை, நர்சிங் செலவுகள், ஐ.சி.யு. மருந்துகள். ஆக்ஸிஜன். ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் சர்ஜன் செலவுகள். மருத்துவர் மற்றும் அனஸ்தடிஸ்ட் கட்டணம் போன்ற இன்-பேஷண்ட் மருத்துவமனை செலவுகள் கவர் செய்யப்படும்.
        • ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிடலைசேஷன் செலவுகளுக்கு முறையே 60 மற்றும் 90 நாட்கள் கவரேஜ் உண்டு.
        • டே கேர் சிகிச்சை, வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சை, ஆம்புலன்ஸ் செலவுகள், டோனர் செலவுகள், ஆயுஷ் இவற்றுக்கு கவரேஜ் உண்டு
        • உத்தரவாதமான டிடக்டபிள் தொடர்ச்சி, ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் குறைத்தல் போன்ற ஆப்ஷன்ஸ் உண்டு,
        • கூடுதல் பெனிபிட் ஆக கிரிட்டிக்கல் இல்னெஸ் கவர் உண்டு.

        தகுதி இல்லாதவை

        • கிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் வரும் நோய் மற்றும் காயம்
        • தற்கொலை மற்றும் போதை மருந்துகள்
        • நியூக்ளியர் எரிபொருள் மற்றும் கதிர்வீச்சு பாதிப்பு
        • வெளி நாட்டு படை எடுப்பு அல்லது உள்நாட்டு சண்டை
      • மணிபால் சிக்னா லைப் ஸ்டைல் ப்ரொடெக்ஷன் -ஆக்ஸிடென்ட் கேர்

        இது ஒரு தனி நபர் விபத்து காப்பீடு திட்டம் ஆகும். இந்த பாலிசி, பகுதி உடல் ஊனம், ஆம்புலன்ஸ் செலவுகள், அனாதைகள் நலன், ஈமக்கிரியை செலவுகள் மற்றும் பலவற்றுக்கு கவரேஜ் தருகிறது.

        டைப் தனி நபர் /குடும்பம்
        குறைந்த பட்ச வயது 5 வருடங்களில் இருந்து 18 வருடங்கள் வரை
        அதிக பட்ச வயது 25 முதல் 80 வருடங்கள் வரை
        இன்சூரன்ஸ் தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 கோடி வரை
        ஏற்கனவே இருக்கும் நோய்கள் கவரேஜ் இல்லை
        காத்திருப்பு காலம் பொருந்தாது

        அம்சங்கள்

        • விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கும், உறுப்பு செயலிழத்தலுக்கும் முழு கவர் கொடுக்கப்படும்.
        • பல மருத்துவமனைகள் சேர்ந்த உலகளாவிய கவரேஜ்.
        • வேலை இழப்பு ஏற்பட்டால் பைனான்சியல் உதவி.
        • அநாதை குழந்தையின் கல்வி மற்றும் பிற நன்மைகளுக்கு பைனான்சியல் சப்போர்ட்.
        • ரூபாய் 50000 முதல் அதிக பட்சம் 10 கோடி வரை இன்சூர் செய்யலாம்.
        • பாலிசியில் சேர குழந்தைகளுக்கு குறைந்த பட்ச / அதிக பட்ச வயது முறையே 5 மற்றும் 25 வருடங்கள். பெரியவர்களுக்கு முறையே 18 மற்றும் 80 வருடங்கள்.
        • 2 மற்றும் 3 வருட பாலிசி காலம் உள்ள பிளான்களுக்கு ஒரே ஒரு பிரீமியம் ஆகவோ வருடாந்தர பிரீமியம் ஆகவோ செலுத்தலாம்.
        • தனி நபர் மற்றும் குடும்ப அடிப்படையில் பிளான் எடுக்கலாம். பாலிசிதாரர், வாழ்க்கை துணை, சார்ந்துள்ள பெற்றோர், மாமனார், மாமியார், மற்றும் குழந்தைகள், சார்ந்துள்ள உடன் பிறந்தோர் (25 வயது வரை) அனைவருக்கும் கவர் உண்டு.
        • ஒரு பாலிசியில் 2 குடும்ப அங்கத்தினர்க்கு மேல் சேர்ந்தால் ப்ரீமியத்தில் 10% கூடுதல் தள்ளுபடி உண்டு.
        • இது தவிர, சிங்கள் பிரீமியம் பாலிசியில் 2 வருட பாலிசிக்கு 7.5% தள்ளுபடியும், 3 வருட பாலிசிக்கு 10% தள்ளுபடியும் உண்டு.

        நன்மைகள்

        • 3 ஆப்ஷன்களில் பிளான் நன்மைகள் கிடைக்கும். அவை: பேசிக், என்ஹான்ஸ்ட் மற்றும் காம்ப்ரஹென்சிவ் கவர்.
        • பாலிசிதாரர் விபத்தில் மரணமடைந்தால் நாமினிக்கு ஒரு லம்ப் சம் பே அவுட் கொடுக்கப்படும்.
        • விபத்தின் காரணமாக பாலிசிதாரருக்கு நிரந்தர முழு உடல் செயலிழப்பு அல்லது நிரந்தர பகுதி செயலிழப்பு ஏற்பட்டால் வருமானத்துக்கு ஒரு வழியாக ரெகுலராக ஒரு லம்ப் சம் தொகை கொடுக்கப்படும்.
        • எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் கவர்.
        • பாலிசிதாரரை சார்ந்துள்ள குழந்தைகள் இருந்தால் ஆர்பன் பெனிபிட் உண்டு.
        • உடல் செயலிழப்பு ஏற்பட்டு அதனால் வருமானம் இல்லாத பட்சத்தில் மன்த்லி பே அவுட் வழங்கப்படும்.

        தகுதி இல்லாதவை

        • ஏற்கனவே இருக்கும் நோய்கள், அதனால் ஏற்படும் செயலிழப்பு ஆகியவற்றுக்கு கவர் இல்லை.
        • தற்கொலை, தானே ஏற்படுத்திக் கொண்ட காயம் மற்றும் சுய அழிவு நடவடிக்கைகள்.
        • எஸ் டீ டீயின் (STD) காரணமாக ஏற்படும் மரணம் அல்லது செயலிழப்பு.
        • குடும்ப அங்கத்தினர் ஆக இருக்கும் ஒரு மருத்துவரிடம் இருந்து மெடிக்கல் செர்டிபிகேட் பெறுதல்.
        • வெளி நாட்டு படை எடுப்பு, யுத்தம் போன்ற நிலை, கடல், தரை மற்றும் விமானப்படைகளில் பணி புரிதல்.
        • பாக்டீரியல் இன்பெக்ஷன் மூலம் ஏற்படும் செயலிழப்பு அல்லது மரணம் சம்பந்தமான கிளைம்கள்.
        • பிறப்பில் இருந்தே இருக்கும் நோய்கள், கோளாறுகள், முரண்பாடுகள் அல்லது அவற்றின் மூலம் ஏற்படும் நிலைமைகள்.
        • அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் மரணம் அல்லது செயலிழப்பு.
        • ஹெர்னியா மூலம் ஏற்படும் மரணம் அல்லது செயலிழப்பு.
        • குறிப்பு: தகுதி இல்லாதவற்றின் முழு பட்டியலுக்கு பாலிசி டாகுமெண்ட்டை பார்க்கவும்.
      • மணிபால் சிக்னா ப்ரோ ஹெல்த் கேஷ் பிளான்

        இது ஒரு மருத்துவமனை கேஷ் பெனிபிட் பிளான். மருத்துவமனையில் இருக்கும்போது தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு தொகை லம்ப் சம் ஆக தரப்படுகிறது. மற்ற வழக்கமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் இதை கவர் செய்யாமல் இருப்பதனால் இந்த பிளான் மிகவும் உதவியாக அமையும்.

        டைப் தினசரி கேஷ் பிளான்
        குறைந்த பட்ச வயது 91 நாட்கள்

        விபத்தினால் மரணம் ஆப்ஷன் மற்றும் நிரந்தர முழு உடல் செயலிழப்புக்கு 5 வருடங்கள்

        அதிக பட்ச வயது 65 வருடங்கள்

        இன்சூரன்ஸ் தொகை

        ரூபாய் 500 இல் இருந்து 5000 வரை
        பாலிசி காலம் 1,2,3 வருடங்கள்
        அதிக பட்ச கவரேஜ் லிமிட் 60 / 90 / 180 நாட்கள்

        அம்சங்கள்

        • தினசரி கேஷ் பெனிபிட் ரூபாய் 500 (1 யூனிட்) முதல் 5000 ( 10 யூனிட்ஸ்) வரை.
        • விபத்தினால் மரணம் மற்றும் நிரந்தர முழு உடல் செயலிழப்புக்கு ரூபாய் 50,000 முதல் 25 லட்சம் வரை கவர்.
        • 60/ 90/ 180 வரை ஒரு பாலிசி வருடத்தில் அதிக பட்ச நாட்கள் கவரேஜ் எடுக்கும் ஆப்ஷன்.
        • தனி நபர் கவரில் தனக்கும் ஒரு குடும்ப அங்கத்தினருக்கும் பாதுகாப்பு.
        • பாலிசி காலம் 1, 2, 3 வருடங்களில் எதுவாகவும் இருக்கலாம்.
        • விபத்தின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் இரட்டிப்பு டெய்லி கேஷ் பெனிபிட் உண்டு.
        • ஐ.சி.யு மற்றும் உலகளாவிய கவருக்கு மும்மடங்கு டெய்லி கேஷ் பெனிபிட் உண்டு.
        • 10 மற்றும் அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்தால் 5 மடங்கு டெய்லி கேஷ் பெனிபிட் உண்டு.
        • பாலிசிதாரரைக் கவனித்துக் கொள்வதற்காக அவர் கூடவே இருக்கும் நபருக்கு 50% டெய்லி கேஷ் பெனிபிட் உண்டு.
        • 45 வயது வரை மருத்துவ பரிசோதனை தேவை இல்லை.

        நன்மைகள்

        • 3 பிளான் ஆப்ஷன் மூலம் நன்மைகளை அனுபவிக்கலாம்.

        பேசிக் பிளான்

        • நோயுற்று மருத்துவமனையில் இருக்கும்போது கேஷ் அலவன்ஸ்
        • விபத்து காரணமாக மருத்துவமனையில் இருக்கும்போது கேஷ் அலவன்ஸ்
        • C. U. கேஷ் பெனிபிட்
        • உலகளாவிய கவர்

        என்ஹான்ஸ்ட் பிளான்

        • 90 நாட்களுக்கு பல விதமான செலவுகளை இந்த பிளான் கவர் செய்யும்.
        • அங்கீகரிக்கப்பட்ட அலவன்ஸ் விபரங்கள் கீழே:
        • நோயுற்று மருத்துவமனையில் இருக்கும்போது கேஷ் அலவன்ஸ்
        • விபத்து காரணமாக மருத்துவமனையில் இருக்கும்போது கேஷ் அலவன்ஸ்
        • ஐ சி யு கேஷ் பெனிபிட்
        • உலகளாவிய கவர்
        • உடல் தேற்று பெனிபிட்
        • உடன் வருவோர் பெனிபிட்
        • கருணை பெனிபிட்

        ஆப்ஷனல் கவர்ஸ் பிளான்

        • மேலே சொன்ன இரண்டு பிளான்களின் பெனிபிட்டோடு இன்னும் சில கூடுதல் கவரேஜ் கஸ்டமருக்குக் கிடைக்கும் (180 நாட்களுக்கு)
        • டே கேர் சிகிச்சை பெனிபிட்
        • விபத்தில் மரணம் மற்றும் நிரந்தர முழு உடல் செயலிழப்பு கவர்
        • கூடுதலாக கிரிட்டிக்கல் இல்னஸ் கவர்

        தகுதி இல்லாதவை

        • ஏற்கனவே இருந்த நோய்களுக்கு பாலிசி ஆரம்பம் ஆகி 4 வருடங்கள் முடியும் வரை கவரேஜ் கிடையாது.
        • பாலிசி ஆரம்பித்து 30 நாட்கள் வரை எந்த கிளைமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
        • சில குறிப்பிட்ட நோய்களுக்கான கவரேஜுக்கு 2 வருட காத்திருப்பு காலம் உண்டு

        நிரந்தரமாக தகுதி இல்லாதவை

        • பல் சிகிச்சை
        • எய்ட்ஸ் ஹெச் ஐ வி மற்றும் இது போன்ற நோய்களுக்கான செலவுகள்
        • இந்தியாவுக்கு வெளியே எடுத்த சிகிச்சை
        • எல்லா காஸ்மெட்டிக் சர்ஜரி ஈஸ்தடிக் சிகிச்சை அலோபதி அல்லாத வேறு எந்த டிரீட்மெண்டும்
        • குறிப்பு: தகுதி இல்லாதவற்றின் முழு பட்டியலுக்கு பாலிசி டாகுமெண்ட்டை பார்க்கவும்.
      • மணிபால் சிக்னா லைப் ஸ்டைல் ப்ரொடெக்ஷன் குரூப் பாலிசி

        மணிபால் சிக்னா ப்ரோ ஹெல்த் குரூப் காப்பீட்டு கொள்கையானது ஒரு குரூப் வினரை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குரூப் என்பது ஒரு நிறுவனத்தின் ஊழியர்களோ அல்லது ஒரு சமூகம், தொழில் முறை ஆகியவற்றின் சங்கத்தின் உறுப்பினர்களோ அல்லது அதன் தொடர்பு குரூப் வாகவோ இருக்கலாம்.அவர்களுக்கு மருத்துவ அவசர காலங்களில் குரூப் காப்பீட்டு கொள்கை ஆனது பாதுகாப்பை வழங்குகிறது. மணிபால் சிக்னா குரூப் க் காப்பீடானது இரண்டு திட்ட வகைகளுடன் விரிவான உரிமைக் கோரல் உள்ளீடுகளை வழங்குகிறது.

        குரூப் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இக்காப்பீட்டின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 1 முதல் 25 வருடங்கள் ஆகும். இக்காப்பீட்டில் குறைந்த பட்சம் ஏழு உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். இது ஒரு வருட காலத்திற்கான காப்பீடு ஆகும். காப்பீட்டுத் தொகை என்பது ஐந்து லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வழங்கப்படுகிறது.

        வகை தனிநபர்/குடும்பம்
        நுழைவு வயது குழந்தைகள் - நாள் 1 முதல் 25 வயது வரை
        காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை
        கொள்கை காலம் 1 வருடம்
        குறைந்தபட்ச உறுப்பினர் 7

        நன்மைகள்:-

        • அடிப்படை அட்டையுடன் ஏழு உள்ளமைக்கப்பட்ட நன்மைகள்
        • தேவை அடிப்படையில் மொத்தம் 42 தொகுப்புகள் அடங்கிய விருப்ப அட்டைகள்
        • கடுமையான நோய் மற்றும் தனிப்பட்ட விபத்துக்கான தீர்வு
        • ஆயஷ் சிகிச்சைகள் உள்ளடக்கப்படுகிறது.
        • மகப்பேறு மற்றும் பல் சிகிச்சை ஆகியவற்றிற்கான தீர்வு
        • உரிமைக் கோரல்களுக்கு சிறந்த முறையில் தீர்வு
        • பொருந்தக்கூடிய அல்லது நிலையான இழப்பீட்டு தொகை
        • எளிதான திட்ட மேலாண்மை
        • பேசப்படும் ஆரோக்கிய சேவைகள், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சி செயல்பாடுகளுடன் கூடிய சிறந்த முறையிலான மேலாண்மை
        • குடும்பம் தொடர்பான நன்மைகள்
        • குரூப் மற்றும் தனிநபருக்கான உரிமைக் கோரல் விருப்பங்கள்
        • இக்காப்பீட்டின் கீழ் உள்நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்தல் அவசர சிகிச்சை அறை ஆகிய செலவுகளுக்கு தீர்வாக கொடுப்புணவு அளிக்கப்படும்.
      • மணிபால் சிக்னா குரூப் ஓவர்சீஸ் ட்ராவல் இன்சூரன்ஸ் பாலிசி:-

        மணிபால் சிக்னா குரூப் வெளிநாட்டு பயணம் காப்பீட்டு கொள்கையானது வணிகம் காரணமாக வெளிநாட்டிற்கு மேற்கொள்ளப்படும் வணிக பயணங்கள், விடுமுறை நாட்களுக்கான பயணங்கள், பயணம் தடைபடுதல் மற்றும் பயணம் ரத்து செய்யப்படுதல் மேலும் வெளிநாட்டு பயணத்தில் காப்பீடு செய்தவரின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் அவசர செலவுகள் மற்றும் ஏதேனும் பொருள்களை இழத்தல் ஆகியவற்றை ஈடு செய்வதற்காக இக்காப்பீடு வழங்கப்படுகிறது. இக்காப்பீடு பெறுவதற்கு குறைந்தபட்ச வயது என்பது இல்லை அதிகபட்ச வயது 95 ஆண்டுகள் ஆகும்.

        வகை குழு திட்டம்
        நுழைவு வயது 0 நாட்கள்
        அதிகபட்ச நுழைவு வயது 95 ஆண்டுகள்
        காப்பீட்டு தொகை குறிப்பிட்டபடி
        கொள்கை காலம் பயண காலத்தை பொறுத்து
        ஏற்கனவே இருக்கும் நோய் கவரேஜ் இல்லை

        நன்மைகள்:-

        • முற்றிலும் தனிப்பயனாக்க கூடிய பயணத்திற்கான பாதுகாப்பு தீர்வு
        • அடிப்படை மற்றும் விருப்ப அட்டைகளின் தீர்வு
        • மருத்துவச் செலவுகள் மற்றும் பயணத்தால் ஏற்படும் சிரமத்திற்கு ஒரே திட்டத்தின் கீழ் பாதுகாப்பு
        • மொத்தம் 51 தொகுப்புகள் அடங்கிய விருப்ப அட்டைகளுக்கான தேர்வு
        • பயணங்களின் போது ஏற்படும் பொருள்களின் இழப்புக்கு தீர்வு
        • வெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் விபத்து மற்றும் அது தொடர்புடைய நிகழ்வுகளுக்கான தீர்வு
        • மருத்துவ அவசர நிலை காப்பீடு செய்தவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எளிதாக கிடைக்கிறது.
        • பொருந்தக்கூடிய அல்லது நிலையான இழப்பீட்டுத் தொகை
        • சுமுகமான முறையில் உரிமை கோரல்களுக்கான தீர்வு
        • காப்பீடு செய்தவர் வெளிநாட்டில் இருக்கும் போதும் 24 மணி நேரமும் கட்டணமில்லா மணிபால் சிக்னா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண் காப்பீடு செய்தவருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவும்.
        • பயணக் கடன் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
        • மேலும் வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்படும் சாகச விளையாட்டுகள் போன்றவைகளுக்கு காப்பீட்டின் கீழ் பயன்பெற முடியும்.
      • மணிபால் சிக்னா புரோஹெல்த் செலக்ட்

        மணிபால் சிக்னா புரோஹெல்த் செலக்ட் திட்டம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒரு நிகழ்விலிருந்து பாதுகாக்க முக்கியமான உடல்நலப் பாதுகாப்பை வழங்குகிறது.பாலிசி தனிநபரை 25 லட்சம் வரையிலான பரந்த அளவிலான காப்பீட்டுத் தொகையிலிருந்து தேர்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது. மறு-உத்தரவாத நன்மையானது சிக்கலான நோய் அல்லது PTD நோயைக் கண்டறிந்தவுடன் பாலிசியை 2 ஆண்டுகள் வரை தானாக நீட்டிக்க உங்களை அனுமதிக்கிறது.

        இந்த காப்பிடு திட்டத்தை தனிநபர் மற்றும் குடும்பம் என தேர்வு செய்து கொள்ளலாம். ஆரம்ப வயதாக 91 நாட்கள் - 18 ஆண்டுகள் வயது உள்ளவர்கள் மற்றும் அதிகபட்சமாக உச்ச வயது வரம்பு இல்லை. காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை. கொள்கையின் காலம் 1 வருடம் அகும். அடிப்படை, மதிப்பு சேர்க்கப்பட்டது, விருப்பத்தேர்வு என திட்டத்தின் விருப்பம் ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். சுய, மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர் மற்றும் சட்டத்தில் சார்ந்திருக்கும் பெற்றோர், சார்ந்திருக்கும் குழந்தைகள், சார்ந்திருக்கும் உடன்பிறப்புகள் என சேர்த்து இத்திட்டத்தின் கிள் வருவார்கள்.

        வகை தனிநபர்/குடும்பம்
        நுழைவு வயது 91 நாட்கள் - 18 ஆண்டுகள்
        அதிகபட்ச நுழைவு வயது உச்ச வயது வரம்பு இல்லை
        காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை
        கொள்கை கால 1 வருடம்
        திட்ட விருப்பம் அடிப்படை, மதிப்பு கூட்டப்பட்ட, விருப்ப மற்றும் ரைடர்
        யாரெல்லாம் உள்ளடங்குவர் சுய, மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர் மற்றும் சட்டத்தில் சார்ந்திருக்கும் பெற்றோர், சார்ந்திருக்கும் குழந்தைகள், சார்ந்திருக்கும் உடன்பிறப்புகள்

        சிறப்பு அம்சங்கள்

          • நான்கு திட்ட விருப்பங்களுடன் தேர்வு செய்ய ரூ. 2 லட்சம் வரையிலான விரிவான காப்பீட்டு விருப்பம்
          • இந்தக் கொள்கையானது ஒவ்வொரு க்ளெய்ம் இல்லாத ஆண்டிற்கும் 5% ஒட்டுமொத்த போனஸை வழங்குகிறது
          • அடிப்படைத் திட்டப் பலன்களை அதிகரிக்க மறு உறுதி, தன்னார்வக் கழித்தல், ஒட்டுமொத்த போனஸ் ஊக்குவிப்பு போன்ற விருப்பக் சேர்த்துவரும்
        • பெற்றோரில் யாரேனும் உறுப்பினராக இருப்பின் 91 நாட்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு காப்புறுதி வழங்க முடியும்
        • இந்தத் திட்டத்தை தனிநபர் மற்றும் குடும்ப மிதவை அடிப்படையாகப் பெறலாம்.

        பலன்கள்

        • நோயாளி மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்
        • 60 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான செலவுக் காப்பீடு
        • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் 90 நாட்களுக்கு காப்பீடு
        • தினப்பராமரிப்பு சிகிச்சை
        • வீட்டிலேயே சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான வீட்டு சிகிச்சைக் காப்பீடு, இல்லையெனில் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருக்கும்
        • 2000 வரை ஆம்புலன்ஸ் காப்பீடு
        • நன்கொடையாளர் செலவுக் காப்பீடு
        • காப்பீடு செய்யப்பட்ட பாலிசி தொகையை மீட்டமைத்தல்
        • ஆயுஷ் கவர்
      • மணிபால் சிக்னா லைஃ ஸ்டைல் ப்ரொடெக்க்ஷன் க்ரிட்டிக்கல் கேர்:

        மணிபால் சிக்னம் வாழ்க்கை முறை பாதுகாப்பு திட்டமானது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் பண தேவை இல்லை பூர்த்தி செய்கிறது அது மட்டும் இன்றி நீங்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழவும் வழி வகுக்கிறது. ஏதேனும் அவசர மருத்துவ செலவுகள் இருந்திருந்தால் உங்கள் திட்டத்தின் அடிப்படையில் ஏற்படும் சேதங்களுக்கான எதிர்பாராத செலவுகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. மற்ற விரிவான பாதுகாப்பு கவர் மற்றும் ஸ்டான்லோன் அவர் போலவே இந்த திட்டத்தின் கீழ் இழப்பு காரியங்கள் ஏதேனும் அவசர கால உதவி மற்றும் வேறு ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டாலும் அவையும் இதன் கீழ் உள்ளடங்குகிறது.

        அம்சங்கள்:

        • ஏதேனும் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது ஊனமுற்றல் ஆகியவையும் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
        • உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனையின் தொடர்பும் இதன் கீழ் உள்ளடங்கும்.
        • ஏதேனும் வேலை இழப்பு ஏற்பட்டால் அதற்கான நிதி உதவியும் வழங்கப்படும்.
        • அனாதை குழந்தைகளுக்கான படிப்பு உதவி மற்றும் அவர்கள் வாழ்வதற்கு தேவையான நிதி உதவியும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
        • குறைந்தபட்ச காப்பீட்டு செலவாக ரூபாய் 50 ஆயிரம் முதல் அதிகபட்ச காப்பீட்டு செலவாக ரூபாய் 10 கோடி வரை வழங்கப்படுகிறது.
        • திட்டத்தில் இணைந்து பயன்பெற குறைந்தபட்ச வயதாக ஐந்து வயது முதல் 18 வயது வரையிலும் அதிகபட்ச வயதாக 25 வயது வரையிலும் இருக்க வேண்டும்.
        • ஒற்றை பிரிமியம் முறை இல்லையோ அல்லது இரண்டு மூன்று வருட பாலிசி களத்தில் ஆண்டுதோறும் தொகையை செலுத்துவது உங்கள் விருப்பமாகும்
        • இந்த திட்டம் தனிப்பட்ட நபர் அல்லது குடும்பத்தினர் என அனைவருக்கும் பொருந்தும். 25 வயது சாய்ந்திருக்கும் உடன்பிறந்தவர்களை தவிர மற்ற உறவினர்களுக்கு அல்லது பெற்றோர் அல்லது பிற உறவுகளுக்கு இந்த திட்டம் செல்லுபடி ஆகும்.
        • ஒரு பாலிசியின் கீழ் இரண்டு நபர்களுக்கு மேல் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு பிரீமியம் தொகையில் கூடுதலாக 10% தள்ளுபடி உள்ளது.
        • இதற்கு மேலாக ஒரு பாலிசியின் கீழ் இரண்டு வருடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன் கீழ் 7.5% தள்ளுபடியும் மற்றும் மூன்று வருடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

        பலன்கள்:

        இந்த கொலை செய்யும் கீழ் வரும் பலன்கள் 3 திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்றால் பேசிக் அவர் , என்ஜான்ஸ்டு கவர் மற்றும் காம்ப்ரேகன்சிவ் கவர்.

        • தற்செயலாக பாலிசிதாரர் இறந்து விட்டால் நாமினிக்கு ஒரு மொத்த தொகையை செலுத்தப்படுகிறது.
        • ஒருவேளை விபத்தினால் ஏதேனும் ஊனம் ஏற்பட்டாலோ அல்லது நிரந்தரமாக ஏதேனும் உறுப்பு செயல்படாமல் போனாலும் அதற்கான தொகையை சாப்பிட்டால் வழக்கமாக வழங்குவார்.
        • அவசரகால உதவி கவரும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும்.
        • சாப்பிடு செய்யப்பட்டவருக்கு தெரிந்த ஏதேனும் அனாதை குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தொகையும் வழங்கப்படும்.
        • மாத வருமானத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதனை சரி செய்யவும் இந்த திட்டம் உதவுகிறது.

        திட்டத்தின் கீழ் உள்ளடங்காதவை:

        • அப்படி செய்வதற்கு முன்பில் இருந்தே இருக்கும் நோய்களுக்கும் அதனால் ஏற்படும் விளைவு அல்லது ஊனத்திற்கு காப்பீடு செய்து தரப்படாது.
        • தற்கொலை சுய காயங்கள் அல்லது சுய அறிவு செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதுவும் காப்பீட்டின் கீழ் வராது.
        • பாலியலால் ஏற்பட்ட இழப்புகள் அல்லது ஏதேனும் நோய்கள் தொற்றினால் அவையும் இதன் கீழ் வராது.
        • உறுப்பினர்களுள் யாரேனும் மருத்துவராக இருந்திருந்தால் அவர்களிடமிருந்து மருத்துவ சான்றிதழ் பெறப்படும்.
        • போர்க்கால நடவடிகள் வெளிநாட்டு படையெடுப்பு கடற்படை அல்லது ராணுவம் அல்லது விமானப்படை ஆகியவற்றால் ஏற்படும் எந்த ஒரு இறப்பும் ஊணமும் இந்த காப்பிட்டேன் வராது
        • தொற்று நோய்களால் ஏற்படும் எந்த ஒரு இழப்பும் இறப்பும் இந்த திட்டத்தின் கீழ் வராது.
        • பிறவி நோய்களாலோ அல்லது குறைபாடினாலோ அல்லது முரண்பாடுகளாலோ ஏற்படும் எந்த ஒரு விளைவும் இந்த திட்டத்தின் கீழ் வராது.
        • அறுவை சிகிச்சையினால் ஏற்படும் எந்த ஒரு இழப்பும் இறப்பும் இந்த திட்டத்தின் கீழ் வராது.
        • குடல் இருக்கத்தால் ஏற்படும் எந்த ஒரு இழப்பும் இறப்பும் இந்த திட்டத்தின் கீழ் வராது.

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் கீழ் உள்ளடங்குபவை:

      • மருத்துவ செலவுகள்: பிற இன்சூரன்ஸ் நிர்வனங்களை போலவே மருத்துவ செலவுகளும் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
      • மருத்துவமனை முன் பின் செலவுகள்: மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன் ஆகும் செலவுகளும் மருத்துவமனையில் இருகுகின்ற பொது 60 நாட்களுக்கு ஆகும் செலவுகளும் அது மட்டுமின்றி சிகிக்சைக்கு பின் 180 நாட்களுக்கு ஆகும் செலவுகளும் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
      • வரி சேமிப்பு: இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் கீழ் வரும் பலன்களுள் முக்கியமான பலன் நிதி பலன்கள் ஆகும் இந்த திட்டத்தின் கீழ் உங்கள் வருடாந்திர வரி தொகை குறையும்.
      • ஆம்புலன்ஸ் செலவுகள்: மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன் மற்றும் பின் ஏற்படும் ஆம்புலன்ஸ் செலவுகளும் உள்ளடங்கும்.

      உரிமைக் கோரலை மேற்கொள்வது எப்படி?

      மணிபால் சிக்னா மருத்துவக் காப்பீடு உரிமை கோரல் நடைமுறையானது பணமில்லா உரிமைக் கோரல்கள் மற்றும் திருப்பி செலுத்தும் உரிமைக் கோரல்கள் ஆகிய நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

      பணமில்லா உரிமைக் கோரல்களுக்கான வழிமுறைகள்:-

      • மருத்துவக் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்வதற்கு மட்டுமே பணமில்லா உரிமைக் கோரல் என்பது ஏற்றதாகும். கோரப்பட்ட சிகிச்சை காப்பீட்டு கொள்கையின் கீழ் இருந்தால் மட்டுமே சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

      காப்பீட்டாளருருக்கு தெரியப்படுத்துதல்:-

      • திட்டமிட்டு நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே காப்பீடாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவசர நிலையில் அனுமதிக்கப்பட்டால் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர் பராமரிப்பு பிரதிநிதி உங்களுக்கு உரிமைக் கோரலை மேற்கொள்வதற்கு உதவுவார்கள்.

      மணிபால் சிக்னா அடையாள அட்டை:-

      • மணிபால் சிக்னா நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்ட நோயாளியை அனுமதிப்பதற்கு மணிபால் சிக்னா அடையாள அட்டையை காட்ட வேண்டும். மருத்துவமனையானது பணமில்லா முறையில் நோயாளியை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு மணிபால் சிக்னா நிறுவனத்தை அணுகும்.

      முன் அங்கீகார செயல்முறை:-

      • மணிபால் சிக்னா நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வரலாறு மற்றும் சிகிச்சைக்கான விவரங்கள் சிகிச்சைக்கு தேவையான செலவினங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு முன் அங்கீகார கோரிக்கை படிவத்தை காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பும்.

      ஒப்புதல்:-

      • ஒப்புதலின் பேரில் மணிபால் சிக்னா நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டு உள்ள மருத்துவமனைகளில் காப்பீட்டு நிறுவனம் முறையாக கையொப்பமிடப்பட்ட அங்கீகார கடிதத்தை வழங்கும் அல்லது தேவையான ஆவணங்களை மருத்துவமனையின் பார்வைக்கு கொண்டு வரும் தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.

      சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவதற்கான செயல்முறைகள்:-

      • மருத்துவமனையில் இருந்து நோயாளியை சிகிச்சை முடிந்து அனுப்பி வைப்பதற்கு முன்பு அங்கீகார கடிதத்தை மருத்துவமனை பெறும். மீதமுள்ள சிகிச்சைக்கான செலவுகள் அடங்கிய ரசீதுகள் மருத்துவ சுருக்கம் ஆகியவற்றை மருத்துவமனை காப்பீட்டாளருக்கு அனுப்பி வைக்கும். காப்பீட்டாளர் நிறுவனமானது அங்கீகார கடிதத்தை வழங்கும் காப்பீட்டின் கீழ் அடங்காத விலக்குகள் ஏதேனும் இருந்தால் உரிமை கோருபவர் செலுத்த வேண்டும்.

      மருத்துவமனை ஆணையத்துடனான தீர்வு::

      • மருத்துவமனையானது அசல் உரிமைக் கோரல் ஆவணத்தை காப்பீட்டாளருக்கு அனுப்பிய பிறகு உரிமை கோரல் மதிப்பிடப்பட்டு காப்பீட்டாளரால் மருத்துவமனைக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும்.

      திருப்பிச் செலுத்தும் உரிமைக் கோரல்களுக்கான வழிமுறைகள்:-

      மருத்துவமனையில் சிகிச்சை:-

      • காப்பீடு செய்தவர் எந்தவொரு மருத்துவமனையிலும் சேர்க்கப்படும் போது ஏற்படும் செலவுகளை இந்த வகையான உரிமைக் கோரலின் மூலம் தீர்க்க முடியும். மருத்துவமனை செலவுகள் அடங்கிய ரசீதுகள் மற்றும் மொத்த தொகைக்கான ரசீதுகள், நோயாளியை சிகிச்சை முடிந்து அனுப்புவதற்கான நோயாளியின் மருத்துவ சிகிச்சைகள் அடங்கிய ரசீதுகள், விசாரணை அறிக்கைகள், மருந்தக ரசீதுகள் மற்றும் பிற ஆவணங்களை சேகரிப்பது முக்கியம். ஏனெனில் இது உரிமைக் கோரல் நடைமுறையை எளிதாக்கும்.

      உரிமை கோரல் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் :-

      • மணிபால் சிக்னாவின் இணையதளத்தில் இருந்து உரிமை கோரல் படிவத்தை பதிவிறக்கவும். நீங்கள் உங்களது மணிபால் சிக்னா மருத்துவ காப்பீட்டு ஆலோசகரை தொடர்பு கொண்டு காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் நேரடியாக உரிமைக் கோரலுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நோயாளி சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

      உரிமைக் கோரல் மதிப்பீடு:-

      • உரிமை கோரல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காப்பீட்டு நிறுவனம் பெற்றவுடன் உரிமைக் கோரல் ஏற்றுக்கொள்ளப்பட்டு செலவுக்கான தொகையை மதிப்பிடும் அதன் பிறகு தான் உரிமைக் கோரல் செயலாக்கப்படும். கூடுதல் தகவலோ அல்லது ஆவணங்களோ தேவைப்பட்டால் காப்பீடு நிறுவனம் உங்களை அணுகும் கடைசியாக தேவையான ஒவ்வொரு ஆவணங்களும் கிடைத்தவுடன் மட்டுமே உங்களது கோரிக்கை செயல்படுத்தப்படும்.

      உரிமைக் கோரல் ஆலோசகர்:-

      • நீங்கள் உரிமைக் கோரல் ஆலோசகரின் ஆலோசனையை பெற நினைத்தால் ஆவணங்கள் மற்றும் உரிமைக்கோரல் படிவங்கள் மூலம் உரிமை கோரல் ஆலோசகர் உங்களுக்கு உதவுவார்.

      உரிமைக் கோரல் காப்பீட்டு நிறுவனத்தால் திருப்பி செலுத்தப்படுதல்:-

      • கோரல் ஒப்புதல் கிடைத்தவுடன் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீடு செய்தவருக்கு இ எப் டி மூலம் மட்டுமே உரிமை கோரல் தீர்த்து வைக்கப்படும்.

      உரிமைக் கோரலை மேற்கொள்வதற்கு தேவையான ஆவணங்கள்:-

      பணமில்லா உரிமைக் கோரல்:-

      • குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயர் மற்றும் முழு முகவரி
      • வேறு ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் காப்பீட்டு வழங்குநரிடம் கேட்க வேண்டும்.

      திருப்பிச் செலுத்தும் உரிமை கோரல்:-

      • முறையாக கையொப்பமிடப்பட்ட உரிமைக் கோரல் படிவம்
      • நோயாளியை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பியதற்கான ரசீதுகள்
      • நோயாளிக்கு மணிபால் சிக்னா நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகல்
      • மருத்துவமனையில் மேற்கொண்ட அனைத்து சிகிச்சைகளுக்கான செலவுகள் அடங்கிய ரசீதுகள்
      • அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தால் அதற்கான குறிப்புகள்
      • விசாரணை அறிக்கைகள்
      • விசாரணைக்கான மருத்துவர்களின் குறிப்பு சீட்டு
      • மருந்தக ரசீதுகள்
      • பிணக்கூறு ஆய்வு அறிக்கை
      • முதல் குற்ற பத்திரிக்கை அறிக்கை
      • கதிரியக்க கருவிகளை பயன்படுத்தி இருந்தால் அதற்கான குறிப்புகள் அடங்கிய அறிக்கைகள்.

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸை புதுப்பிப்பது எப்படி?

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸை புதுப்பிப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும் மற்றும் அதனை புதுப்பிப்பதற்கு சில மணிதுளிகளே ஆகும் அதனை பின்வரும் படிகள் விவரிக்கின்றது

      • மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸை இனையத்தில் புதிப்பிப்பதற்கு கேட்கப்பட்ட உள்ள விவரங்களான காப்பீடு எண், காலாவதியாகும் தேதி போன்றவற்றை அளிக்கவும்.அதன் பிறகு ‘புரோசிடு’என்ற பட்டனை கொடுத்து விவரங்களை நிரப்பவும்.
      • இவையை செய்த பின் உங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்து தொகையை செலுத்தலாம்.
      • உங்கள் தொகை அங்கீகரிக்கப்பட்ட பிறகு நீங்கள் இணையத்தில் கை ஒப்பமிடவேண்டிய நகல் பரிந்துரைக்கப்படும்.
      • அதன் பிறகு உங்கள் காப்பீட்டு ஆவணங்கள் கையிலும் கொடுக்கப்படும்.

      மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸை எப்படி வாங்குவது?

      மணிபால் ஹெல்த் இன்சூரன்ஸ் நீங்கள் பெறுவதற்கு ஐந்து வழிகாட்டி படிகள் உள்ளது. முதலில் நீங்கள் மருத்துவ உரிமை கோரல் காப்பீட்டை இணையத்தில் வாங்க வேண்டும். நீங்கள் இணையத்தில் வாங்கும் பொழுது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் நீங்கள் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் குறுஞ்செய்தி அனுப்பியோ அல்லது பாலிசி வழங்குபவரை தொலைபேசியில் அழைத்தோம் தெரிந்து கொள்ளலாம் அது மட்டும் இன்றி நீங்கள் எளிதாக இந்த இன்சூரன்ஸ் வாங்குவதற்கு கீழ்க்கண்ட படிகள் உதவுகிறது.

      • இங்கிருந்து வாங்குவதற்கு முன் நீங்கள் மணிபால் அதிகரிக்கப்பட்ட இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கவும் அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
      • அதன் பிறகு நீங்கள் எந்த திட்டத்தை வாங்க போகிறீர்கள் என்பதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று விருப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
      • பிறகு நீங்கள் எந்த கவரை தேர்ந்தெடுக்க உள்ளீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டு அதனை கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விருப்பங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு படிவம் மாற்றி அமைக்கப்படும்.
      • இவை அனைத்தும் முடித்த பிறகு உங்கள் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றின விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் பூர்த்தி செய்கின்ற அனைத்து விவரங்களும் பாதுகாக்கப்படும் கவலை வேண்டாம்.
      • இவை அனைத்தும் முடிந்த பிறகு நீங்கள் உடனடி மேற்கோளினை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு படிவம் தயாரிக்கப்படும்.

      தொடர்பு விவரங்கள்

      கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800-102-4462

      வெளிநாட்டுகாரர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் -+9122 4985 4100

      மின்னஞ்சலின் முகவரி - customercare@manipalcigna.com

      காப்பீட்டு மாற்றத்திற்கு மின்னஞ்சல் - mychangerequestmanipalcigna.com

      Policybazaar exclusive benefits
      • 30 minutes claim support*(In 120+ cities)
      • Relationship manager For every customer
      • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
      • Instant policy issuance No medical tests*
      book-home-visit
      Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
      top
      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL