மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ்

Insurer Highlights

மக்கள் பாலிசிபஜாரை நம்புகின்றனர்^
9.7 கோடி
பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள்
51
இன்சூரன்ஸ் பங்குதாரர்கள்
4.9 கோடி
விற்கப்பட்ட பாலிசிகள்
பாலிசிபஜார் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் இன்சூரன்ஸ் பிளாட்ஃபார்ம்களில் ஒன்றாகும்
0%
மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் மலிவுத் திட்டங்களைக் கண்டறியவும்

நீங்கள் இன்சூர் செய்ய விரும்பும் குடும்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்யவும்

  • அதிக உறுப்பினர்கள்
  • முந்தைய படி
    தொடரவும்
    “தொடர்க” என்பதை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் எங்களுடைய தனியுரிமை கொள்கை மற்றும் பயன்பாட்டு விதிகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
    அதிகபட்ச குழந்தைகளின் தொகை 4 ஆக இருக்கலாம்
    இது உங்கள் குடும்பத்திற்கான பிரீமியம் & தள்ளுபடியைக் கணக்கிட உதவும்
    முந்தைய படி
    தொடரவும்
    இது உங்கள் ஊரில் எங்கள் நெட்வொர்கின் கீழ் உள்ள கேஷ்லெஸ் மருத்துவமனைகளைக் கண்டறிய உதவும்.

      பிரபலமான ஊர்கள்

      முந்தைய படி
      தொடரவும்
      அடுத்தமுறை எங்களைப் பார்வையிடும்போது, நேரடியாக பிளான்களைப் பார்க்கவும்.
      இயக்கத்தில் உள்ள உங்கள் சர்வதேச எண்ணை வழங்கவும்
      முந்தைய படி
      தொடரவும்
      உங்கள் நிலைக்குக் காப்பீடு அளிக்கும் பிளான்களை கண்டறிவோம்.

      எந்தவொரு உறுப்பினரும்(களும்) ஏற்கனவே உள்ள ஏதேனும் நோய்களுக்கு வழக்கமாக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனரா?

      வாட்ஸ்அப்பில் அறிவிப்புகளை பெறுங்கள்

      முந்தைய படி

      When did you recover from Covid-19?

      Some plans are available only after a certain time

      முந்தைய படி

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ்

      மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இன் திட்டங்களில் ஒன்று மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் திடீர் மருத்துவ செலவுகள் மற்றும் உடல்நல குறைவுகள் ஆகிய சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருக்கின்றது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ உதவிகளை பெறுவதற்கு தேவைப்படும் நிதி உதவிகளையும் பெற முடியும். இத்திட்டத்தின் முக்கிய அம்சமே, இது தனிநபர் மற்றும் அவரது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்குகிறது.

      Read More

      மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி சுருக்கம்

      மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி , இந்தியாவின் மாக்மா பின்கார்ப் லிமிடெட் ( பூனாவாலா பின்கார்ப் லிமிடெட்) மற்றும் ஜெர்மனியின் ஹெச் டி ஐ க்ளோபல் எஸ் ஈ உடைய கூட்டு முயற்சியாகும். இந்த கம்பெனி இந்தியாவிலேயே மிக முக்கியமான இன்சூரர் ஆவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது.

      மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனியானது ஹெல்த் இன்சூரன்ஸ், மோட்டார் இன்சூரன்ஸ்,ஹௌஸ்ஹோல்டர் இன்சூரன்ஸ், பர்க்லரி இன்சூரன்ஸ், மரைன் இன்சூரன்ஸ், பயர் இன்சூரன்ஸ் போன்ற பல திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த கம்பெனி நாடு முழுவதும் 130 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் திட்டங்களின் மூலம் எல்லா தரப்பட்ட மக்களும் மருத்துவ உதவியை மிக எளிதாக பெறுகிறார்கள்.

      இந்த கம்பெனி மக்களுக்கு பெரும் அளவில் உதவி புரிந்து வருகிறது. அதன் இந்த சேவைக்கு பரிசாக பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது. அவையாவன: இந்தியா இன்சூரன்ஸ் அவார்ட் மூலம் ரைசிங் ஸ்டார் கம்பெனி ஆப் தி இயர் 2020 ,பி எப் எஸ் ஐ எக்சலன்ஸ் அவார்ட் 2020 மற்றும் சிறந்த பி எப் எஸ் ஐ பிராண்ட் 2019.

      உங்கள் விருப்பப்படி மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு பார்வை

      அம்சங்கள் குறிப்புகள்
      இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் 4300+
      முன்பேயுள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலம் 3/4 வருடங்கள்
      இன்க்கர்ட் க்ளைம் விகிதம் ( எப் ஒய் 2019-20 ) 72.87%
      புதுப்பித்தல் காலம் வாழ்க்கை முழுவதும்
      க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் (எப் ஒய் 2020-21) 94.41%

      ఆరోగ్య బీమా సంస్థ
      Expand

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் நன்மைகள்

      ஒரு மனிதனுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் உடல்நல குறைவுகள் வரலாம். ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைவதன் மூலம் நாம் அத்தகு சூழல்களுக்கு எப்பொழுதும் தயாராகவே இருக்கலாம். மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் குறைந்த பிரிமியம் தொகையில், அதிக பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல மருத்துவ நன்மைகளையும் வழங்குகிறது. இத்திட்டங்கள் மக்களின் தேவைகளை பொறுத்து தனித்துவமாக மட்டுமன்றி மிகவும் அதிகமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்சின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

      • மருத்துவ பாதுகாப்பு - இத்திட்டம் எதிர்பாரா நோய் மற்றும் விபத்து காயங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பெற வழிவகுக்கிறது.
      • அனைவருக்கும் பாதுகாப்பு - இத்திட்டம் தனி நபர் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
      • நிறைய பண பாதுகாப்பு தேர்வுகள் - மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அதிகப்பட்டியான பணப்பாதுகாப்பு தேர்வுகளை கொண்டுள்ளது. இதன் மூலம் பாலிசிதாரர்கள் தங்களது நிதி நிலைக்கு ஏற்ப திட்டங்களை தேர்வு செய்ய முடிகிறது.
      • ரொக்கமிலா மருத்துவ உதவி பெறும் வசதி- மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனியின் இணைப்பினுள் உள்ள 4300 மருத்துவமனைகளில் காப்பீட்டாளர் மருத்துவ உதவிகளை ரொக்கமில்லாமலேயே பெறலாம்.
      • 24 x 7 க்ளைம் உதவி பெறும் வசதி - பாலிசிதாரர் க்ளைம் உதவிகளை 24 மணி நேரமும் பெறும் வகையில் இன்சூரர் வழிவகை செய்துள்ளார் .
      • லாங் டேர்ம் பாலிசி சலுகைகள் - பாலிசிதாரர்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கினால் 10% முதல் 12.5% வரை சலுகைகளை பெறலாம்.
      • அதிகபட்ச க்ளைம் செட்டில்மென்ட் விகிதம் - மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி 94.41% க்ளைம் விகிதத்தினை கொண்டுள்ளது. இதனால் பாலிசிதாரர்கள் தங்களது மருத்துவ உதவிகளை பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.
      • வரி விலக்குகள்- வருமான வரி திட்டம் 1961இன் படி, பாலிசிதாரகள் தனது பிரிமியம் தொகைக்கான வரி விலக்குகளை பெற முடிகிறது.
      • மாக்மாஹெச்டிஐஒன்ஹெல்த்இன்சூரன்ஸ்திட்டம்

        மாக்மா ஹெச் டி ஐ ஒன்ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்., தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவைப்படும் மருத்துவ வசதிகளை பெற வழிவகுக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தேவையான மருத்துவ உதவிகளையும் நன்மைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் பெறமுடியும். மேலும் எதிர்பாரா நேரங்களில் ஏற்படும் மருத்துவ தேவைகளுக்கு உண்டாகும் செலவுகளையும் கவனித்துக்கொள்வதுடன் தேவையான நிதி பாதுகாப்பு உதவிகளையும் செய்கிறது. இத்திட்டம் தனித்தனியான வேறுபாடுகளுடன் ஐந்து பெருங்ககூறுகளை கொண்டு விளங்குகிறது. அவை- சப்போர்ட், செக்யூர் , சப்போர்ட் பிளஸ், ஷீல்டு, ப்ரீமியம்.

        அம்சங்கள்மற்றும்நன்மைகள்:

        • மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உண்டாக்கும் மருத்துவ செலவுகளை ஏற்கிறது. மருத்துவமனையில் சேர்ந்த பின்பு எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளையும் ஏற்கிறது.
        • சைக்கியாட்ரிக், ஐ வி எப் கவர், ஹெச் ஐ வி/எய்ட்ஸ், வருமானமின்றி இருத்தல் போன்ற தனித்துவமான பிரச்சனைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது,
        • மருத்துவ உதவி க்ளைம் பெற்றிருந்தாலும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளில் பங்குபெறும் வசதி கொண்டிருக்கிறது.
        • ஒரு வருடத்திற்குள் 5 முறைக்கு காப்புத் தொகையை மீண்டும் மீண்டும் தேவைக்கு ஏற்ப புதுப்பித்துக்கொள்ளும் வசதி உடையது.
        • கொடிய நோய்க்கான பாதுகாப்பு, விபத்து பாதுகாப்பு, தானே மருத்துவ செலவுகளில் பாதி செலுத்துதல் (இணைந்து செலுத்தும் கூறு ) போன்ற விருப்பத்தேர்வுகளும் உள்ளது.
        • 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளும் பொழுது ஆரம்ப கால சலுகைகள் உண்டு.
        • இத்திட்டத்தை டாப் அப் திட்டமாக மாற்றிக்கொள்ளும் வசதியும் கொண்டுள்ளது.

        தகுதிக்கானஅளவுகள்:

        பிரிவு தகுதி வரம்பு
        குறைந்தபட்ச வயது பெரியவர் -18 வயது
        குழந்தை - 5 வயது (தனிநபர் திட்டம்), 91 நாட்கள் (பிளோட்டர் திட்டம் )
        அதிகபட்ச வயது பெரியவர் - 65 வருடங்கள்
        குழந்தைகள் - 26 வருடங்கள்
        காப்பு தொகை Rs 2 லட்சம் முதல் 1 கோடி வரை
        நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் பாலிசிதாரர்,அவரது இணை (கணவன்/மனைவி),அவரது குழந்தைகள்,பெற்றோர்,

        இணையின் பெற்றோர்கள், அவரது உடன்பிறப்புகள், அவரது பேரக்குழந்தைகள், அவரது மருமகன் அல்லது மருமகள்

      • மாக்மாஹெச்டிஐஇண்டிவிஜுவல்பர்சனல்ஆக்சிடென்ட்இன்சூரன்ஸ்திட்டம்

        சாலை விபத்துகளினால் ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிப்புகளுக்கு இந்த திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இத்திட்டம் மருத்துவ உதவி பெற்று தருவது மட்டுமன்றி விபத்தினால் ஏற்படும் நிரந்தர/ நிரந்தரமற்ற காயங்கள் மற்றும் உடலுறுப்பு இயலாமை அல்லது அகால மரணம் ஆகிய சூழல்களில் இழப்பீடும் வழங்குகிறது. இத்திட்டம் மூன்று வகைகளை கொண்டது. அவை - பேசிக் , வைடர் , காம்ப்ரெஹென்சிவ் .

        அம்சங்கள்மற்றும்நன்மைகள்:

        • விபத்தில் ஏற்படும் இறப்பு மற்றும் நிரந்தர முழு உடலுறுப்பு இயலாமை / நிரந்தர பாதி உடலுறுப்பு இயலாமை போன்ற சூழல்களுக்கு இழப்பீடு உள்ளது.
        • இதர நன்மைகளாக கல்வி உதவிகள் , நிதி பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் செலவுகள் போன்ற பல வசதிகளும் உண்டு .
        • இத்திட்டம் உலகில் எங்குவேண்டுமானாலு விபத்து ஏற்படின் அதற்கும் உரிய மருத்துவ பாதுகாப்பு வழங்குகிறது.
        • மருத்துவ உதவிகள் நீட்டிப்பு, மருத்துவமனையில் தங்கும் செலவுகள் ஆகியவை காம்ப்ரெஹென்சிவ் கூற்றில் கூடுதல் நன்மைகளாக கிடைக்கிறது.

        தகுதிக்கானஅளவுகள்:

        பிரிவு தகுதி வரம்பு
        குறைந்தபட்ச வயது பெரியவர்கள்- 18 வயது
        குழந்தைகள் - 5 வயது
        அதிகபட்ச வயது பெரியவர்கள்- 65 வருடங்கள்
        குழந்தைகள் - 23 வருடங்கள்
        காப்பு தொகை Rs 1 லட்சம் முதல் Rs 5 கோடி வரை
        நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் பாலிசிதாரர்,அவரது இணை ( கணவன் / மனைவி), அவரது குழந்தைகள், அவரது பெற்றோர்,அவரது இணையின் பெற்றோர்கள்
      • மாக்மா ஹெச் டி ஐ ஆரோக்யா சஞ்சீவினி திட்டம்

        மாக்மா ஹெச் டி ஐ ஆரோக்யா சஞ்சீவினி திட்டமானது முன்பேயுள்ள நோய்கள் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றிற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரும் சூழல்களில் தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் அதனை நிறைவேற்ற அத்தியாவசியமாகிய நிதி நன்மைகளையும் பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக விளங்குகிறது.இத்திட்டத்தின் மூலம் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ உதவிகளை நிதி நெருக்கடி இன்றி செய்து தர முடியும்.

        அம்சங்கள்மற்றும்நன்மைகள்:

        • மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உண்டாக்கும் மருத்துவ செலவுகளை ஏற்கிறது. மருத்துவமனையில் சேர்ந்த பின்பு எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளையும் ஏற்கிறது.
        • க்ளைம் இல்லாத ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதலாக 5% ஒட்டுமொத்த போனஸ் ஆக வழங்கப்படுகிறது.
        • ஆயுஷ் சிகிச்சை, வீட்டில் இருந்தே எடுத்துக்கொள்ளப்படும் மருத்துவமனை பராமரிப்புகள் மற்றும் கேட்டராக்ட் சிகிச்சைகளுக்காக பாதுகாப்பும் வழங்குகிறது .
        • அனைத்து க்ளைம்களிலும் 5% வரையான மருத்துவ செலவுகளை திட்டத்துடன் இணைந்து செலுத்தும் வசதியும் உள்ளது.

        தகுதிக்கானஅளவுகள்:

        பிரிவு தகுதி வரம்பு
        குறைந்தபட்ச வயது பெரியவர்கள்- 18 வயது
        குழந்தைகள் - 90 நாட்கள்
        அதிகபட்ச வயது பெரியவர்கள்- 65 வருடங்கள்

        குழந்தைகள் - 25 வருடங்கள்

        காப்பு தொகை Rs 50,000 முதல் Rs 10 லட்சம் வரை
        நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் பாலிசிதாரர்,அவரது இணை ( கணவன்/மனைவி), அவரது குழந்தைகள், அவரது பெற்றோர்,அவரது இணையின் பெற்றோர்கள்
      • மாக்மா ஹெச் டி ஐ கொரோனா கவஷ் திட்டம்

        மாக்மா ஹெச் டி ஐ கொரோனா கவஷ் திட்டமானது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உடல்நல குறைவுகளினால் உருவாக்கப்படும் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இது கோவிட்-19 தொற்றின் போது தேவைப்படும் மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரண தேவைகள் மற்றும் மாஸ்க், ஆக்சிஜன், பரிசோதனை வசதிகள், தனிமைப்படுத்தி கொள்ளுதல் போன்ற சூழல்களில் உருவாகும் நிதி சுமைகளை உதவிகரமாக இருக்கின்றது.இது தனி நபர் ஹெல்த் இன்சூரன்சாக மட்டுமன்றி பிளோட்டர் ஹெல்த் இன்சூரன்ஸராகவும் பணிபுரிகிறது.

        அம்சங்கள்மற்றும்நன்மைகள் :

        • மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உண்டாக்கும் மருத்துவ செலவுகளை ஏற்கிறது. மருத்துவமனையில் சேர்ந்த பின்பு எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகளையும் ஏற்கிறது.
        • ஆயுஷ் சிகிச்சை, ஆம்புலன்ஸ் செலவுகள் மற்றும் வீட்டில் வைத்தே பராமரித்தல் போன்ற நிலைகளுக்கும் மருத்துவ பாதுகாப்பு வழங்குதல்,
        • கூடுதல் நன்மையாக மருத்துவமனையில் தினமும் தேவைப்படும் பணத்தேவைகளுக்கும் பாதுகாப்பு வழங்குதல்,
        • இத்திட்டம் 3.5, 6.5, மற்றும் 9.5 மாதங்களுக்கு செயலில் இருக்கும்.
        தகுதிக்கானஅளவுகள் :
        பிரிவு

        தகுதி வரம்பு
        குறைந்தபட்ச வயது பெரியவர்கள்- 18 வயது
        குழந்தைகள் - 1 நாள்
        அதிகபட்ச வயது பெரியவர்கள்- 65 வருடங்கள்
        குழந்தைகள் - 25 வருடங்கள்
        காப்பு தொகை Rs 50,000 முதல் Rs 10 லட்சம் வரை
        நன்மை பெறும் குடும்ப உறுப்பினர்கள் பாலிசிதாரர்,அவரது இணை ( கணவன் / மனைவி), அவரது குழந்தைகள், அவரது பெற்றோர்,அவரது இணையின் பெற்றோர்கள்

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ்- இத்திட்டத்தின் உள்ளடக்கியவை யாவை?

      பாலிசிதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை இந்த திட்டத்தின் மூலம் அடையலாம்.அவை:

      • வீட்டிலிருந்தே மருத்துவ உதவி பெறுதல்

      இந்த திட்டத்தின் மூலம், ஒரு வேளை நோயாளி வீட்டை விட்டு வெளிவரும் நிலையில் இல்லை எனில், அவர் வீட்டிலிருந்தே மருத்துவ உதவிகளை சிறந்த முறையில் பெறமுடியும். தேவைப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகள் ஆகியவற்றினை சரியான நேரத்தில் பெறமுடியும். இதனால் உண்டாகும் நிதி நெருக்கடிகளையும் இந்த திட்டத்தின் மூலம் சமாளிக்கமுடியும்.

      • இதர சிகிச்சை முறைகள்

      அல்லோபதி மட்டுமன்றி ஆயுஷ்,ஹோமியோபதி, சித்தா, யுனானி போன்ற இதர மருத்துவ முறைகளில் பெறப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது.

      • மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல்

      உடல்நல குறைவு மற்றும் எதிர்பாரா விபத்துகளினால் ஏற்படும் உடல்நல பாதிப்பு ஆகிய சூழல்களில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் தங்குவதால் உண்டாகும் செலவுகளையும் (மருந்து , மருத்துவ பரிசோதனை க்கான செலவுகள் , மருத்துவர் கட்டணம், பராமரிப்பு செலவுகள் போன்றவை ) இத்திட்டம் ஏற்கிறது. தவிரவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தி, மருத்துவமனையில் இஅணிவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செல்வுகளையும் ஏற்கிறது.

      • பராமரிப்பு நன்மைகள்

      டே கேர் சிகிச்சையினால் ஏற்படும் மருத்துவ செலவுகளையும் இத்திட்டத்தின் நன்மைகளின் மூலம் சமாளிக்க முடியும்.இது பெரும்பாலும், நவீன மருத்துவ வசதிகளால், 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவ உதவிகளுக்கு பொருந்தும்.

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் - இத்திட்டத்தின் உள்ளடங்காதவை எவை?

      பாலிசிதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது .அவை:

      • தன்னை தானே காயப்படுத்தி கொள்ளுதல்:

      தற்கொலை, தற்கொலை முயற்சி. தன்னை தானே காயப்படுத்தி கொள்வதால் உண்டாகும் உடல்நலபாதிப்புகளை சரி செய்ய தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கு உண்டாகும் செலவுகளுக்கு இந்த அத்திட்டம் உத்திரவாதம் அளிக்காது.

      • போர் காலம் :

      புரட்சி, போர், வெளிநாட்டு ஊடுருவல் போன்ற எந்தவொரு போர் கால சூழல்களில் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்த திட்டம் ஏற்காது.

      • மது, போதை பொருள்:

      மது மற்றும் போதை பொருள் உபயோகத்தினால் உண்டாகும் உடல்நல குறைவுகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை இத்திட்டத்தின் கீழ் வராது.

      • உளவியல் பிரச்சனைகள்:

      எந்தவொரு உளவியல் மற்றும் மனநல சிகிச்சை முறைகளுக்கும் இந்த திட்டம் உதவி செய்யாது.

      • தடுப்பூசி:

      வேறு நோய்களுக்கு எடுக்கப்படும் சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ அல்லது விலங்குகளின் கடியில் இருந்து காத்துக்கொள்ள போடப்படும் தடுப்பூசிகளை தவிர வேறு எந்த விதமான தடுப்பூசிக்கும் இந்த திட்டடம் செயல்படாது.

      மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை திட்டத்திற்கு திட்டம் வேறுபடும். ஆகவே தங்களது பாலிசிக்கு உரிய திட்ட விவரங்களை நாங்கள படித்து தெரிந்து கொள்ளவும்.

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் க்ளைம் செய்வது எப்படி?

      மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்படும் பணம் மற்றும் நிதி செலவுகளுக்கான நன்மைகளை பெற வேண்டி விண்ணப்பிப்பதே க்ளைம் ஆகும்.அவற்றை இரண்டு வழிகளில் நாம் அடையலாம். ஒன்று, கேஷ்லெஸ் க்ளைம் மற்றும் இரண்டாவது ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் ஆகும். அவற்றை இன்னும் விரிவாக கீழே காண்போம்:

      கேஷ் லெஸ் க்ளைம் :

      இந்த திட்டத்தின் மூலம் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் உண்டாகும் மருத்துவ நிதியுதவிகளை நீங்கள் கேஷ் லெஸ் க்ளைம் முறை மூலம் எல்லா நன்மைகளையும் பெறமுடியும். அதற்கான வழிமுறைகள் :

      • இன்சூரரிடம் தெரிவித்தல்:

      ஏற்கனவே ஆலோசித்து மருத்துவமனையில் இணையும் சூழலில், இணைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பும், திடீரென்று மருத்துவமனையில் தங்குகின்ற சூழல்களில், மருத்துவமனையில் சேர்ந்த 24 மணி நேரத்திற்குள் 1800-266-3202 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

      • ஒப்புதல் பெறுதல்

      நோய் மற்றும் அதற்கான சிகிச்சை பற்றிய முழு ஆவணங்களையும் மருத்துவ விவரங்களையும் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

      • ஆவணங்கள் சரிபார்த்தல்

      மருத்துவமனையில் இருந்து இன்சூரருக்கு அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்படும். பின்னர் அனைத்து சான்றுகளும் இன்சூரரின் க்ளைம் செட்டிலேமென்ட் டீம் மூலம் சரிபார்க்கப்படும்.

      • க்ளைம் ஒப்புதல் பெறுதல்

      அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்படும் பொழுது, கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் அதனையும் சமர்ப்பிக்க வேண்டிவரும். அவ்வாறு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு , அவை அனைத்தும் உண்மையெனில் க்ளைமிற்கு ஒப்புதல் தரப்படும்.

      • க்ளைம் தருதல்

      வாடிக்கையாளரின் க்ளைம் ஒப்புதல் பெற்றுவிட்டது எனில், இன்சூரர் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கேஷ் லெஸ் மருத்துவ ஊக்குவிப்பார்.க்ளைம் தொகையினையும் தருவார்.

      ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம்

      ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் என்பது, இந்த திட்டத்தில் தொடர்பில் இல்லாத வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்பொழுது அதற்காக நீங்கள் செலவிடும் மருத்துவ உதவிக்கான நிதிகளை இத்திட்ட நன்மைகளின் மூலம் திரும்ப பெறுவது ஆகும். அதற்கான வழிமுறைகள் :

      • மருத்துவ சிகிச்சை பெறுதல்

      உங்கள் திட்டத்தின் மூலம் இணைப்பில் இல்லாத மருத்துவமனையில் தேவைப்படும் மருத்துவ உதவிகள் மற்றும் சிகிச்சைகளை மொத்தமாக முழு செலவுகளையும் நீங்களே செய்து பெறவேண்டும். அப்படி செய்த செலவுகளுக்காக ஆதாரங்களை ( மருத்துவமனை ரசீது, மருந்து ரசீது, பரிசோதனை ரசீது, மருத்துவர் கட்டண ரசீது போன்றவை ) சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

      • தேவையான ஆவணங்களை ஒப்படைத்தல்

      மருத்துவமனையில் இருந்து வெளிவந்த பின்னர் பாலிசி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா ஆவணங்களை இன்சூரரிடன் சமர்ப்பிக்க வேண்டும்.

      • ஆவணங்கள் சரிபார்ப்பு

      நீங்கள் சமர்ப்பித்த எல்லா ஆவணங்களையும் இன்சூரர் சரிபார்ப்பார். ஆவணங்கள் போதாதவில்லை எனில், இன்னும் சான்றுகள் கூடுதலாக கேட்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பார்.

      • க்ளைம் தருதல்

      நீங்கள் சமர்ப்பித்த அனைத்து சான்றுகள் மற்றும் ஆவணங்கள் உண்மையெனில், உங்களுடைய க்ளைம்மிற்கு ஒப்புதல் தரப்படும்.ஒப்புதல் பெறப்பட்டவுடன், பிடித்தங்கள் நீங்க மீத மொத்த தொகையும் ரீஇம்பர்ஸ்மென்ட் தொகையாக பாலிசிதாரருக்கு வழங்கப்படும்.

      தேவையான ஆவணங்கள்:

      • பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம்
      • மருத்துவமனையின் ரசீதுகள், படிவங்கள் மற்றும் டிஸ்சார்ஜ் ஆவணங்கள்
      • மருத்துவர் அல்லது கெமிஸ்ட் தந்த முழுமையான மருத்துவ ரசீதுகள்
      • பரிசோதனை முடிவுகள், ரசீதுகள் மற்றும் பரிசோதனைக்கு ஊக்குவித்த மருத்துவ படிவம்
      • அறுவை சிகிச்சையின் காரணம், தற்போதய நிலை மற்றும் அதற்கான ரசீதுகள் மற்றும் பில்கள்
      • நோயின் தன்மையை கண்டறிந்த மருத்துவரின் நோயின் தன்மையை பற்றிய எழுத்து பூர்வ பதிவு
      • காப்பீடு செய்யப்பட்டவரின் மருத்துவ வரலாறு
      • ஆம்புலன்ஸ் செலவுகள் ரசீதுகள்

      மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் உண்மையான படிவங்களையே சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் நகலை அல்ல. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆர்வங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதாக இருக்க வேண்டும்.

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸை பாலிஸிபஜாரில் எப்படி வாங்க வேண்டும்?

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

      • முதலில், பாலிஸிபஜார்.காம் எனும் பாலிஸிபஜாரின் உண்மையான இணையதளத்திற்கு செல்லவும்.
      • இணையதளத்தில் உள்ள ஹோம் பேஜ் இல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பதை க்ளிக் செய்யவும்.
      • பாலினம் மற்றும் தொலைபேசி எண் முதலிய தனி நபர் விவரங்களை உள்ளிடவும் .
      • இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவிருக்கும் மொத்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
      • உங்கள் குடும்பத்தின் மூத்த மற்றும் இளைய உறுப்பினரின் வயதினை உள்ளிடவும்.
      • நீங்கள் வாழும் பகுதியின் பின்கோடு அல்லது வாழும் நகரின் பெயரையும் உள்ளிடவும்.
      • விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே நோய்கள் அல்லது உடல்நலத்தில் குறைபாடுகள் இருப்பின், அது தொடர்பான அனைத்து மருத்துவ விவரங்களையும் தான் தாக்க ஆவணங்களையும் உள்ளிடவும்.
      • உங்களுக்கு உகந்த ஏதேனும் ஒரு மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்யவும்.
      • உங்களுக்கு உதவிகரமாக அமையக்கூடிய கூடுதல் பாதுகாப்புகளை தேர்வு செய்து இறுதி பிரிமியம் தொகையை ஆன்லைனில் கட்டி சேரவும்.
      • இன்சூரன்ஸ் கம்பெனி நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்கு உரிய பிரிமியம் தொகையை செலுத்தி முடித்த அடுத்த இரண்டே நிமிடங்களுக்குள் உங்களது பாலிசியினை அங்கீகரித்துவிடும்.

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பித்தல்

      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை புதுப்பிப்பதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

      • முதலில், பாலிஸிபஜார்.காம் எனும் பாலிஸிபஜாரின் உண்மையான இணையதளத்திற்கு செல்லவும்.
      • இணையதளத்தில் உள்ள ரீநியூ யுவர் பாலிசி எனும் பட்டியலினை தேர்வு செய்யவும்.
      • பின்பு, அதில் ஹெல்த் ரீநியூவல் என்பதை தேர்வு செய்யவும்
      • அது ஒரு பயனர் உள்நுழைவு பக்கத்தற்கு உங்களை அழைத்து செல்லும்.
      • அதில் உள்நுழைய, தங்களது பாலிசி எண் அல்லது பாலிசிதாரரின் தொலைபேசி எண்ணினை உள்ளீடு செய்யவும்.
      • மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட விவரங்கள் மற்றும் பாலிசிதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விவரங்களை புதுப்பிக்கவும்
      • கூடுதல் பாதுகாப்புகளை சேர்க்கலாம்.
      • ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும், கூடுதல் பாதுகாப்புகளை நீக்கலாம்.
      • ஆன்லைனில் புதுப்பித்தலுக்கான பிரிமியம் தொகையை செலுத்தவும்.
      • இன்சூரன்ஸ் நிறுவனம் தங்களது பாலிசியை உடனே புதுப்பித்துவிடும் .

      தொடர்பு விவரங்கள் :

      பாலிசி பஜார்

      • ஈ மெயில் : care@policybazaar.com
      • தொலைபேசி எண் : 1800-258-5970 & 1800-208-8787

      மாக்மா ஹெச் டி ஐ ஜெனெரல் இன்சூரன்ஸ் நிறுவனம்

      • ஈ மெயில்: customercare@magma-hdi.co.in
      • தொலைபேசி எண் :1800-266-3202
      Policybazaar exclusive benefits
      • 30 minutes claim support*(In 120+ cities)
      • Relationship manager For every customer
      • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
      • Instant policy issuance No medical tests*
      book-home-visit
      Disclaimer: The list mentioned is according to the alphabetical order of the insurance companies. Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by any insurer. For complete list of insurers in India refer to the Insurance Regulatory and Development Authority of India website www.irdai.gov.in
      மாக்மா ஹெச் டி ஐ ஹெல்த் இன்சூரன்ஸ் Plans
      Magma Arogya Sanjeevani Policy
      Magma OneHealth Insurance Plan

      *We will respond in the first instance within 30 minutes of the customers contacting us. 30-minute claim support service is for the purpose of giving reasonable assistance to the policyholder in pursuance of the claim. Settlement of claim (including cashless claim) is the responsibility of the insurer as per policy terms and conditions. The 30- minute claim support is subject to our operations not being impacted by a system failure or force majeure event or for reasons beyond our control. For further details, 24x7 Claims Support Helpline can be reached out at 1800-258-5881.

      *Product information is authentic and solely based on the information received from the Insurer. Policybazaar is acting only as a facilitator and claims settlement shall be at the sole discretion of the Insurer. Policybazaar does not provide any medical or surgical advice or diagnosis and is not responsible for your interactions / treatment by a medical practitioner/hospital. Please consult a registered medical practitioner for any medical or surgical advice. The Information that you obtain or receive from Policybazaar, and its employees, or otherwise on the Website is for informational purposes only. As per the Insurance guidelines, you are allowed to cancel the policy with-in 30 days from the date of Issuance of policy.This option is available incase of policies with a term of one year or more.

      *All the health insurance plans cover hospitalization expenses including COVID-19 treatment cover up to the specified limits. You can also buy specific COVID-19 health insurance policies such as Corona Kavach Policy and Corona Rakshak policy.

      **All savings and online discounts are provided by insurers as per IRDAI approved insurance plans. #Tax Benefits are subject to changes in tax laws. GST Exemptions depend on fulfilment of qualification criteria and submission of relevant documents.

      *₹1748/month is the starting price for a 1 crore health insurance for an 18-year-old male, with no pre-existing diseases. Discount on renewal premium is subject to the number of wellness points earned in the health insurance policy. For more details about the plans, please read the sale brochure carefully to get upto 100% discount on renewal premium.

      *₹400/month is the starting price for ₹ 5 lakh Health insurance for a 30 year old male & 29 years old female, living in Delhi with no pre-existing diseases

      *₹541/month is the starting price for ₹ 10 lakh Health insurance for a 30 year old male & 29 years old female, living in Delhi with no pre-existing diseases

      *₹762/month is the starting price for ₹ 1 Crore Health insurance for a 30 year old male & 29 years old female, living in Delhi with no pre-existing diseases

      *₹243/month(₹ 8/day) is the starting price for a 5 lakh health insurance for a 20-year-old male, non-smoker, living in Bengaluru with no pre-existing diseases

      *₹2020/month is the starting price for ₹ 1 Cr Health insurance for a 50 year old male & 50 years old female, living in Bangalore with no pre-existing diseases rounded off to nearest 10.

      *₹390/month (₹13 per day) is starting price for 1 cr. Health insurance for 25 years old male, with pre-existing diseases, residing from tier 1 city rounded off to the nearest 10.

      *No medical tests are required unless requested by the insurer’s underwriter. In-case of pre-existing diseases relevant medical proof would be required as per the terms and condition of the policy opted.

      *The values taken for effective cost calculation are indicative values and may change as per the selected plan.

      *Coverage upto double the amount of Sum Insured is available on certain covers for a minimum plan of Rs. 5 Lakh on the first claim only to an individual of upto 45 years of age with no pre-existing diseases. The benefit is available with or without extra cost depending on the plan chosen.

      *Coverage of pre-existing diseases is provided by insurer as per their underwriting policy.

      *The scope of coverage may vary from plan to plan.

      ~Source: Google Review Rating available on:- http://bit.ly/3J20bXZ

      ##On ground claim assistance is available in 114 cities

      Tax Benefits are subject to changes in tax laws. GST Exemption depends on fulfilment of qualification criteria and submission of relevant documents as required by the insurers. For more details on risk factors, terms and conditions, please read the sales brochure and applicable rules and regulation carefully before concluding a sale.

      STANDARD TERMS AND CONDITIONS APPLY. For more details on risk factors, terms and conditions, please read the sales brochure carefully before concluding a sale.

      Policybazaar is a registered Composite Broker |Registration No. 742, Valid till 09/06/2024, License category- Composite Broker| Visitors are hereby informed that their information submitted on the website may be shared with insurers.

      Policybazaar Insurance Brokers Private Limited | CIN: U74999HR2014PTC053454 | Registered Office - Plot No.119, Sector - 44, Gurgaon, Haryana - 122001 Contact Us | Legal and Admin Policies

      © Copyright 2008-2024 policybazaar.com. All Rights Reserved.

      top
      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL