எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா மருத்துவக் காப்பீடு திட்டம்
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா மருத்துவத் திட்டம் உங்களுக்கும், உங்கள் குழந்தைகள், வாழ்க்கைத் துணைவர் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட உங்கள் குடும்பத்துக்கும் குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக மருத்துவக் காப்பீடு கவரேஜை வழங்குகிறது, மருத்துவத் தேவைகள் ஏற்படும்போது உரிய நேரத்தில் பொருளாதார உதவியும் அளிக்கிறது. எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா திட்டம் பின்வரும் தகுதி அளவுக் குறிகளைப் பூர்த்தி செய்யும் எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் கிடைக்கும்:
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா பாலிசியின் சில முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- இந்த பாலிசி தனிநபர்களுக்கும் குடும்ப ஃப்ளோட்டர் அடிப்படையிலும் கவரேஜ் அளிக்கிறது.
- பிரீமியம் வருடாந்தர அல்லது அரை ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படலாம்.
- பிரீமியம் தள்ளுபடி நன்மையும் வழங்கப்படுகிறது.
- இந்த எல் ஐ சி மருத்துவக் கட்டுப்பாடு பாலிசி டே கேர் வழிமுறைகளையும் கவர் செய்கிறது.
- ஆம்பலன்ஸ் கவரும் வழங்கப்படுகிறது.
- இந்த எல் ஐ சி மருத்துவக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் எல்லாமுக்கியமான அறுவை சிகிச்சைகளும் கவர் செய்யப்படுகின்றன.
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளவை
மருத்துவமனைச் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ அவசர நிலைகளின்போது மதிப்புள்ள பொருளாதார கவரேஜை எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா பாலிசி வழங்குகிறது. இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டுக்கும் அதிகரிக்கும் மருத்துவ கவருடன் வருகிறது, உண்மையான மருத்துவச் செலவுகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு மொத்தத் தொகை நன்மையை வழங்குகிறது. இந்த பாலிசி கீழே கொடுக்கப்பட்டுள்ள பல நன்மைகளுடன் வருகிறது.
1. மருத்துவமனை ரொக்க நன்மை (HCB)
காப்பீடு பெற்ற நபரோ அல்லது இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட்ட அவருடைய குடும்பத்தின் எந்த ஒரு உறுப்பினரோ நோய் அல்லது விபத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனை சிகிச்சை பெற்றால், அவர்கள் இந்த மருத்துவமனை ரொக்க நன்மைக்குத் தகுதி பெறுவார்கள்் இந்த அடிப்படைத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நன்மை ரூ. 1000 இன் பெருக்கல் தொகைகளாகவும், பின்வரும் வகையிலும் இருக்கும்.
- ஐ சி யூ அல்லாத வார்டுக்கான குறைந்தபட்ச ஆரம்ப தினசரி மருத்துவமனை ரொக்க நன்மை ரூ. 1000, காப்பீடு பெற்றவர்/ வாழ்க்கைத் துணைவர்/ குழந்தைகள்/பெற்றோர்/ வாழ்க்கைத் துணைவரின் பெற்றோர் ஆகியோருக்கு (முக்கிய காப்பீட்டு பெற்றவர் ரூ.1000 ஆக இருந்தால்)
- ஐ சி யூ அல்லாத வார்டுக்கான அதிகபட்ச ஆரம்ப தினசரி மருத்துவமனை ரொக்க நன்மை காப்பீடு பெற்றவர்/ வாழ்க்கைத் துணைவர்/ குழந்தைகள்/பெற்றோர்/ வாழ்க்கைத் துணைவரின் பெற்றோர் ஆகியோருக்கு முதன்மை காப்பீடு பெற்றவருக்குச் சமமாக அல்லது குறைவாக (முதன்மை காப்பீட்டு பெற்றவர் ரூ. 4000 ஆக இருந்தால்)
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் நாளுக்கு எந்த நன்மையும் வழங்கப்படாது.
- மருத்துவமனை ரொக்க நன்மை முதல் பாலிசி ஆண்டில் அதிகபட்சம் 30 நாட்களுக்கும், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் 90 நாட்களுக்கும் கிளைம் செய்யப்படலாம். இதில் ஐ சி யூ நாட்களும் அடங்கும்
- அதிகபட்ச ஐ சியூ மருத்துவமனை சிகிச்சை நாட்கள் முதல் ஆண்டில் 15 நாட்களும், அதற்குப் பிறகு 45 நாட்கள் வரையிலும் ஆகும்.
- அதிகபட்ச ஆயுட்கால நன்மைக் காலம் 720 நாட்கள், 360 நாட்களுக்கு மேற்படாமல் ஐ சி யூ இல் இருப்பது உட்பட.
2. முக்கிய அறுவை சிகிச்சை நன்மை (MSB)
- காப்பீடு பெற்ற நபருக்கு பாலிசி காலத்தின்போது அறுவை சிகிச்சை நடைபெற்றால் அவருக்கு இந்த நன்மை வழங்கப்படும்.
- இது எப்போதுமே உங்கள் மருத்துவமனை ரொக்க நன்மை அல்லது பொருந்தக் கூடிய தினசரி நன்மையில் (ADB) 100 மடங்கு
- இது ரூ. 1 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை இருக்கும்.
- காப்பீடு பெற்ற ஒவ்வொரு நபருக்கும் பொருந்தக் கூடிய அதிகபட்ச அறுவை சிகிச்சை நன்மை ஒரு ஆண்டுக்கு முக்கிய அறுவை சிகிச்சை நன்மை உறுதியளிக்கப்பட்ட தொகையில் 100% ஆகும்.
- காப்பீடு பெற்ற ஒவ்வொரு நபருக்கும் ஆயுட்காலத்துக்குப் பொருந்தக் கூடிய அதிகபட்ச நன்மை MSB உறுதியளிக்கப்பட்ட தொகையில் 800% ஆகும்.
3. டே கேர் வழிமுறை நன்மை
- தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருப்பது தேவைப்படாதபோது காப்பீடு பெற்றவர் இந்தியாவில் உட்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு டே கேர் வழிமுறைக்கும் பெறக் கூடிய மொத்தத் தொகை நன்மை இது.
- இது ADB அல்லது பொருந்தக் கூடிய தினசரி நன்மையில் 5 மடங்குகள் வரை இருக்கும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற ஒவ்வொரு நபரும் இந்த நனமையை ஒரு ஆண்டுக்கு மூன்று அறுவை சிகிச்சை வழிமுறைகள் வரை பெறத் தகுதி பெறுகிறார்.
- அதிகபட்ச ஆயுட்கால நன்மை ஒவ்வொரு காப்பீடு பெற்றவருக்கும் பொருந்தக் கூடியது.
- இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காப்பீடு பெற்ற நபரும் பாலிசி காலத்தின்போது 24 அறுவை சிகிச்சை வழிமுறைகள் வரை இந்த நன்மையைப் பெறத் தகுதி பெறுகிறார்கள்.
4. மற்ற அறுவை சிகிச்சை நன்மை
- MSB அல்லது அதிகபட்ச அறுவை சிகிச்சை நன்மையின் கீழ் கவர் செய்யப்படாத ஒரு அறுவை சிகிச்சைக்கு காப்பீடு பெற்ற நபர் உட்பட்டால், அறுவை சிகிச்சைக்கான செலவுகள் OSB அல்லது மற்ற அறுவை சிகிச்சை நன்மையின் கீழ் கவர் செய்யப்படும்.
- தினசரி நன்மைத் தொகை ADB காப்பீடு செய்யப்பட்ட முதலின் 2 மடங்கு வரை ஆகும்.
- ஒவ்வொரு நபரும் இந்த பாலிசியின் கீழ் இந்த நன்மையை முதல் பாலிசி ஆண்டில் அதிகபட்சம் 15 நாட்கள் வரையிலும் அதற்குப் பிறகு ஆண்டுக்கு 45 நாட்கள் வரையிலும் பெற முடியும்.
- ஒவ்வொரு காப்பீடு பெற்ற நபரும் இந்த பாலிசியின் கீழ் இந்த நன்மையை பாலிசியின் ஆயுட்காலத்தில் அதிகபட்சம் 360 நாட்களுக்குப் பெற முடியும்.
5. ஆம்பலன்ஸ் நன்மை
- விபத்து அல்லது நோய் காரணமாக காப்பீடு பெற்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, முக்கிய அறுவை சிகிச்சை நன்மைகளுக்குத் தகுதி பெற்றால், அவரால் ஆம்பலன்ஸ் நன்மையையும் பெற முடியும்.
- அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர கால ஆம்பலன்ஸ் கட்டணங்கள் ஏற்பட்டிருந்தால், இது பொருந்தும்.
- இது அதிகபட்சம் பொருந்தக் கூடிய தொகை ரூ. 1000
6. பிரீமியம் தள்ளுபடி நன்மை (PWB)
- எல் ஐ சிபாலிசிதாரர்கள் ஒரு முக்கிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதற்காக MSB அல்லது முக்கிய அறுவை சிகிச்சை நன்மைகள் பெற்றிருந்தால், அவர்கள் பிரீமியம் தள்ளுபடி நன்மையைப் பெறுவார்கள்.
- இந்த நன்மையின் கீழ், அறுவை சிகிச்சை தேதிக்குப் பின்னால் வரும் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஒரு முழு ஆண்டுக்கான பிரீமியம் தள்ளுபடி பெற முடியும்.
7. கிளைம் செய்யாததற்கான நன்மை (NCB)
- ஒரு பாலிசி ஆண்டிலோ, அல்லது இரண்டு ஆட்டோமாடிக் புதுப்பித்தல் தேதிகளுக்கு இடையிலோ இன்ஷ்யூரன்ஸ் கிளைம் எதையும் ஒரு பாலிசிதாரர் தாக்கல் செய்யாவிட்டால், அவர் கிளைம் செய்யாததற்கான நன்மையைப் பெறுவார்.
- NCB தொகை ஒவ்வொரு காப்பீடு பெற்ற நபருக்குமான ஆரம்ப தினசரி நன்மையில் 5% ஆக இருக்கும்.
8. வரிச் சலுகைகள்
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா பாலிசி பிரீமியம்கள் இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D இன் கீழ் வரிவிலக்குக்கு உட்பட்டது.
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா திட்டத்தின் கீழான விலக்கல்கள்
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா திட்டம் குறிப்பிட்ட சில காரணங்களால் ஏற்படும் காயம், நோய் ஆகியவற்றுக்கான கவரேஜில் பின்வரும் விலக்கல்களை அளிக்கிறது:
- முன்பே இருக்கும் எந்தவித நோய்கள் அல்லது உடல்நலக் கோளாறுகள்
- போர், கடற்படை அல்லது ராணுவ நடவடிக்கைகள், கலவரங்களில் பங்கு கொள்ளுதல் ஆகியவற்றால் ஏற்படும் எந்த விதக் காயம்
- கதிர்வீச்சு பாதிப்பு
- கிரிமினல் அல்லது சட்டவிரோதச் செயல்கள்
- நில அதிர்வுகள், வெள்ளங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள்
- ரேசிங், ஸ்கூபா டைவிங், பஞ்ஜீ தாண்டுதல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபடுதல்
- தானே ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் அல்லது தற்கொலை முயற்சி
- போதை மருந்துகள், மது அல்லது வேறுவகை போதைப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, விபத்தினால் ஏற்பட்ட காயத்துக்குச் சிகிச்சை அளிக்கத் தேவைப்பட்டாலொழிய
- பிறந்ததிலிருந்தே இருக்கும் உடல் கோளாறுகள்
- HIV / AIDS போன்ற பாலியல் தொடர்பான நோய்கள்
- மலட்டுத்தன்மை அல்லது ஸ்டரிலைஸேஷன்
- கருவுற்றிருத்தல் அல்லது குழந்தை பிறப்பு தொடர்பான உடல்நிலைக் கோளாறுகள்
- தொற்று நோய்கள் அல்லது தொற்று நிலைகள்
- பல் சிகிச்சை
எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா திட்டத்தை ஆன்லைனில் வாங்குவது எப்படி?
ஆன்லைனில் பாலிசி வாங்குவதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- பாலிசி எடுப்பதில் ஆர்வமுள்ள நபர்கள் எல் ஐ சி ஜீவன் ஆரோக்யா பாலிசியை வாங்கி எல் ஐ சி இன் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட இன்ஷ்யூரன்ஸ் அக்ரிகேடரை அணுகலாம்.
- ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மனுப் படிவத்தில் தங்கள் தனிப்பட்ட விவரங்களை அவர்கள் அளிக்க வேண்டும். பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், தேவைப்படும் காப்பீடு கவரேஜ், முன்பே இருக்கும் நோய்கள், அவர்கள் மது அல்லது புகையிலை பயன்படுத்துபவர்களா போன்ற ஆரோக்கியம் குறித்த விவரங்களை அவர்கள் உள்ளிட வேண்டும்.
- அவ்வாறே, ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பயனர்கள் அப்லோட் செய்ய வேண்டும், அல்லது எல் ஐ சியிலிருந்து ஒரு இன்ஷ்யூரன்ஸ் பிரதிநிதி அவர்களை அழைத்து பாலிசி வாங்குவதற்கான செயல்முறை குறித்து வழிகாட்டுவார்.
- ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், கட்ட வேண்டிய பிரமியம் தொகை தெரிவிக்கப்படும். பயனர் சம்மதித்தால், அவர் மேலே தொடர்ந்து, யோசனை கூறப்படும் பணம் செலுத்தல் முறைகளின்படி பாலிசியை வாங்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
பாலிசி வாங்குவதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்: பேன் கார்ட், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்ட், யுடிலிடி பில்கள் போன்ற அடையாளம், வயது மற்றும் முகவரி இவற்றுக்கான சான்றுகள்
கிளைம் தாக்கல் செய்வதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்: மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி அல்லது டிஸ்சார்ஜ் சான்றிதழ், மருந்துக்கான பிரிஸ்க்ரிப்ஷன்கள், எல்லா ஆய்வு மற்றும் கண்டறிதல் அறிக்கைகள், பணச் செலுத்தலுக்கான இன்வாய்ஸ்கள் அல்லது ரசீதுகள், மருந்து பில்கள், கிளைம் படிவம், புகைப்பட அடையாளம்