லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்

(22 Reviews)
Insurer Highlights

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Get insured from the comfort of your home
Get insured from the comfort of your home
  • 1
  • 2
  • 3
  • 4

Who would you like to insure?

  • Previous step
    Continue
    By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
    Previous step
    Continue

      Popular Cities

      Previous step
      Continue
      Previous step
      Continue

      Do you have an existing illness or medical history?

      This helps us find plans that cover your condition and avoid claim rejection

      Get updates on WhatsApp

      Previous step

      When did you recover from Covid-19?

      Some plans are available only after a certain time

      Previous step
      Advantages of
      entering a valid number
      You save time, money and effort,
      Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்

      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது லிபெர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் கம்பெனியின் திட்டமாகும். இந்த திட்டம் அதிக பாதுகாப்புகளை கொண்டு விளங்குகிறது. இந்த திட்டத்துடன் தொடர்பில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா மக்களுக்கும் மருத்துவ வசதிகள் சிறப்பான முறையில் எளிதில் கிடைக்கும்படி செய்கிறது. இந்த திட்டம், வெவ்வேறு பிரிமியம் தொகையை உடைய திட்டங்களை கொண்டுள்ளாதால், வாடிக்கையாளர்கள் அவரது தெவை மற்றும் நிதி நிலைக்கு ஏற்ப திட்டங்களை தேர்வு செய்து இணைந்து பயன் பெறும் வகையில் இது வகுக்கப்படுள்ளது.

      Read More

      லிபெர்ட்டிஜெனெரல்இன்சூரன்ஸ்கம்பெனி - சுருக்கம்

      லிபெர்ட்டி ஜெனெரல் இன்சூரன்ஸ் கம்பெனி 2013 ஆம் ஆண்டில் , அமெரிக்காவில் உள்ள லிபெர்ட்டி ம்யூச்சுவல் இன்சூரன்ஸ் குழுமம், டி பி ஜிண்டால் குழுமம் மற்றும் ஏனாம் செக்கியூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து துவக்கப்பட்ட ஒன்றாகும்.இது மக்களுக்கு தங்களது எல்லா இன்சூரன்ஸ் திட்டங்களின் வழியாக தேவையான மருத்துவ பாதுகாப்புகளை விரிவான முறையில் வழங்குவதையே தனது பெரும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி ஹெல்த் இன்சூரன்ஸ் , கார் இன்சூரன்ஸ், இருசக்கர வாகன இன்சூரன்ஸ் போன்ற பல வகையான இன்சுரன்ஸ் திட்டங்களை மக்களுக்கு உதவும் வகையில் வழங்குகிறது. இந்த நிறுவனம் ஏறக்குறைய 1200 வேலையாட்களுடன் 95 நகரங்களில் 110 அலுவலகங்களை கொண்டு மக்களுக்கு உதவி வருகிறது. 2019-2020 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்த கம்பெனியின் க்ளைம் விகிதம் 94% இருந்து வருகிறது என்பது மிகவும் பெருமைக்கு உரியது ஆகும். லிபெர்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டங்கள் தற்பொழுது கொரொனா வைரஸ் தொற்றிற்கும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கி உதவி மக்களின் நலனை ஊக்குவிக்கிறது.

      உங்கள் விருப்பப்படி லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

      ₹1லட்சம்
      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்
      ₹2லட்சம்
      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்
      ₹3லட்சம்
      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்
      ₹5லட்சம்
      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்

      லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ்ஒருபார்வை :

      சிறப்பம்சங்கள் முக்கிய காரணிகள்
      தொடர்பில் உள்ள மருத்துவமனைகள் 5000+
      இன்கார்ட் க்ளைம் விகிதம் 87.78%
      புதுப்பித்தல் காலம் ஆயுள் முழுவதும்
      காத்திருக்கும் காலம் 2/3/4 வருடங்கள்

      லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ்நன்மைகள்

      இணைப்பில் உள்ள மருத்துவமனைகள்: லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய நாட்டில் 3000 க்கும் அதிகமான மருத்துவமனைகளுடன் தங்களது இணைப்பை கொண்டு செயல்பட்டு வருகின்றன என்பது மிகவும் முக்கியமாக நமது கருத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த மருத்துவமனைகளில் பாலிசிதாரர் அவரது சிகிச்சைக்காக பணமின்றி எல்லா மருத்துவ உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த மருத்துவமனைகள் எவை எவை என்று தெரிந்து கொள்ள நிறுவனத்தின் இணையதளத்தை அணுகலாம். அங்கு இந்த மருத்துவமனைகளின் பட்டியல் இருக்கும் அதில், உங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையை தேர்வு செய்து பயன் பெறலாம்.

      லிபெர்ட்டி இன்சூரன்ஸ் திட்டங்கள் : லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் ஆனது ஒரு தனி நபரின் தேவையை அடிப்படையாக அமைத்து அவருக்கு உதவும் வகையில் ஐந்து வகையான திட்டங்களை வகுத்து உள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித் தனி தன்மைகளுடன் வேறுபட்டு விளங்குகின்றன.பாலிசிதாரர் தனது தேவை மற்றும் நிதி நிலையை பொறுத்து திட்டத்தை டெஹ்ரவு செய்து இணைந்து பயன் பெறலாம்.

      ஆன்லைன் வசதிகள் : லிபெர்ட்டி நிறுவனத்தின் சில திட்டங்களில் ஆன்லைன் மூலம் இணைந்து கொள்ழும் வசதி உள்ளது. மேலும் பெரும்பாலான திட்டங்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும் இயலும். இதற்கு பாலிசிதாரர் லிபெர்ட்டி நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தக்க விவரங்களை பதிவு செய்ய வேண்டி இருக்கும். ஆன்லைனில் புதுப்பிப்பதற்கு பாலிசிதாரர் அவரது பாலிசி எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய பாலிசி விவரங்களை உள்ளீடு செய்து தேவையான விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

      கூடுதல் நன்மைகள்: லிபெர்ட்டி நிறுவனம் மிகவும் அதிகபட்ச க்ளைம் விகிதம் கொண்டு விளங்குகிறது. அதிகபட்சமாக 2015-16 இல் 106.02% க்ளைம் விகிதம் பெற்ற பெருமை உடையது இந்த நிறுவனம் ஆகும்.மேலும், இந்த திட்டத்தில் இணைந்துள்ள பாலிசிதாரர்கள் அவர்கள் காட்டும் பிரிமியம் தொகைக்கு வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80D கீழ் வரி விளக்கு வசதி பெற முடியும்.

      ఆరోగ్య బీమా సంస్థ
      Expand

      லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ்திட்டங்களின்பட்டியல்

      மக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறைய திட்டங்களை கொண்டுள்ளது.அவற்றை விரிவாக காண்போம்:

      • லிபெர்ட்டி ஹெல்த் கனக்ட் பாலிசி

        லிபெர்டி ஹெல்த் கனக்ட் திட்டமானது தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கும் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறைந்த விலையில் சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை, கூடுதல் மருத்துவ ஆலோசனை பெறுதல், காப்பு தொகை புணரமைத்தல், பராமரிப்பு மற்றும் ரெக்கவரி சலுகைகள் ஆகும்.

        திட்ட காரணிகள் ஈ கனக்ட், பேசிக், எலைட் , சுப்ரீம்
        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 2 - 15 லட்சம்
        வயது வரம்பு 18 வயது - 91 நாட்கள் (குழந்தை )
        பாலிசிக்கு முன் உடல்நல சோதனை 55 வயது வரை உள்ளவர்களுக்கு இல்லை
        பாலிசி காலம் 1/ 2 வருடம்
        இணைந்து செலவழித்தல் இந்த வசதி இல்லை

        பண்புகளும் நன்மைகளும் :

        • 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான மருத்துவமனைக்கு செல்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொள்கிறது.
        • மருத்துவமனையில் தங்கும் செலவுகளுக்கான சலுகை தினமும் Rs 500/1000 வரை கிடைக்கும்படி அமைகிறது.
        • இதர நன்மைகளான ஆம்புலன்ஸ் வசதி, வீட்டிலிருந்தே மருத்துவ உதவிகளை பெறும் வசதி போன்றவைகளுக்கும் இந்த திட்ட நன்மைகள் பொருந்தும்.
        • இத்திட்டத்தின் சுப்ரீம் பிரிவில் பராமரிப்பு செலவுகள் மற்றும் ரெக்கவரி நன்மைகளுக்கான பாதுகாப்புகளும் உள்ளன.
        • இத்திட்டத்தில், கூடுதல் மருத்துவ ஆலோசனை பெறுதல் மற்றும் காப்பு தொகையை மீண்டும் புதுப்பிக்கும் முறை ஆகிய வசதிகளும் உள்ளன.
        • ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் பொழுதும் இலவச உடல்நல பரிசோதனை செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
      • லிபெர்ட்டி ஹெல்த் கனக்ட் சுப்ரா

        லிபெர்ட்டி ஹெல்த் கனக்ட் சுப்ரா திட்டமானது, காப்பு தொகை தீர்ந்த பின்னரும் மருத்துவ உதவிகளை க்ளைம் செய்து பெறும் வசதி கொண்டு உள்ளது. ஆனால், அந்த வகையில் கோரப்படும் ஒவ்வொரு க்ளைம்மிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இதன் சிறப்பு கூறுகளான காப்பு தொகை மீண்டும் புதுப்பித்தல்,உலகளாவிய பாதுகாப்பு, வருமுன் காக்கும் முறைகள் ஆகியவற்றை நமது தேவைக்கு ஏற்ப திட்டத்தில் சேர்த்து பயன் பெறலாம்.

        திட்ட காரணிகள் டாப் அப் , சூப்பர் டாப் அப்
        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 3 லட்சம் - 1 கோடி
        வயது வரம்பு 18 வயது - 91 நாட்கள் (குழந்தை )
        பாலிசிக்கு முன் உடல்நல சோதனை 65 வயது வரை உள்ளவர்களுக்கு இல்லை
        பாலிசி காலம் 1/ 2 /3 வருடம்
        பிடித்தம் செய்யப்படும் தொகை 40 லட்சம் வரை

        பண்புகளும் நன்மைகளும் :

        • மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் தருணங்களில் தங்கும் அறை வாடகை மற்றும் ஐ சி யு போன்றவற்றிற்கான உதவிகளை பெற்று தருகின்றன.
        • மருத்துவமனையில் சேருவதற்கு முன் மற்றும் பின் தேவைப்படும் உதவிகள் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கிடைக்கும்படி செய்கிறது.
        • 405 பராமரிப்பு முறைகளுக்கு பாதுகாப்புகளை கொண்டுள்ளது.
        • உலகளவில் மருத்துவ பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் சிகிச்சை உதவிகள் வழங்குகிறது.
        • ஒவ்வொரு க்ளைம் செய்யப்படாத வருடத்திற்கும் 10% வரை காப்பு தொகையயை அதிகரித்தல் செய்யப்படுகிறது.
      • லிபெர்ட்டி செக்யூர் ஹெல்த் கனக்ட்

        லிபெர்ட்டி செக்யூர் ஹெல்த் கனக்ட் திட்டம் பாலிசிதாரரின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறது.இத்திட்டத்தின் இதர நன்மைகளான, காப்பு தொகை புதுப்பித்தல், போனஸ் வசதி, க்ளைம் கண்டிப்பாக கிடைக்கும் உறுதி, ஆரோக்கியமாக இருத்தலுக்கான ஊக்குவித்தல் போன்றவை மிகவும் சிறப்பான முறையில் செயல் திறன் உடையவை.மேலும் இத்திட்டத்தில் பிரிமியம் தொகையை தனித்தனி தவணைகளாக பிரித்து கட்டலாம்.

        திட்ட காரணிகள் பேசிக், எலைட்,சுப்ரீம்
        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 2 - 15 லட்சம்
        வயது வரம்பு 18 வயது - 91 நாட்கள் (குழந்தை )
        பாலிசிக்கு முன் உடல்நல சோதனை 55 வயது வரை உள்ளவர்களுக்கு இல்லை
        பாலிசி காலம் 1/ 2 /3 வருடம்
        இணைந்து செலவழித்தல் 60 வயதிற்கும் மேற்பட்ட மற்றும் இணைப்பினுள் இல்லாத மருத்துவமனைகளில் 10% வரை செலுத்தும் வசதி

        பண்புகளும் நன்மைகளும் :

        • மருத்துவமனையில் தங்கி பெரும் சிகிச்சைகள் , ஆம்புலன்ஸ் ஆகியவற்றிக்கான உதவிகள் கொண்டது.
        • மருத்துவமனைக்கு செல்லும் முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ உதவிகள் 30 ன்முதல் 45 நாட்கள் வரை பெறும் வசதி உடையது.
        • 405 பராமரிப்பு முறைகளுக்கு நன்மைகளை கொண்டுள்ளது.
        • இது 10 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கியிருக்கும் செலவுகளுக்கான சலுகைகளை வழங்குகிறது.
        • 25% வரை காப்பு தொகையை அதிகரிக்கும் ஒட்டுமொத்த போனஸ் வசதியை கொண்டது.
        • க்ளைம் செய்யப்படாத ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் இலவச உடல்நல பரிசோதனை செய்யும் வசதியை இருக்கிறது
      • லிபெர்ட்டி இண்டிவிஜூல் பெர்சனல் ஆக்ஸிடெண்ட் திட்டம்

        லிபெர்ட்டி இண்டிவிஜூல் பெர்சனல் ஆக்ஸிடெண்ட் திட்டம், எதிர்பாரத நேரங்களில் விபத்து நேர்தலின் விளைவாக ஏற்படும் மருத்துவ தேவைகளுக்கு நிதி உதவி செய்து உதவுகிறது. மேலும், விபத்துகளினால் ஏற்படும் விளைவுகளான உடலுறுப்பு செயல் இழத்தல் எனப்படும் டிஸ்எபிலிட்டி மற்றும் எதிர்பாராத இறப்பு ஆகியவற்றிற்கு இழப்பீடு தந்து உதவுகிறது. அதோடு மட்டுமன்றி, விபத்துகளின் காரணமாக, திடீரென பணிக்கு செல்லாமல் இருப்பதன் விளைவாக ஏற்படும் வருமான முடக்கத்திற்கும் இழப்பீடு வழங்கி நிதி பாதுகாப்பு அளித்து உதவுகிறது.

        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 1 லட்சம் – 1 கோடி
        வயது வரம்பு 18 வயது - 5 வயது (குழந்தை )
        பாலிசி காலம் 1/ 2 /3 வருடம்

        பண்புகளும் நன்மைகளும் :

        • விபத்துகளினால் ஏற்படும் உடலுறுப்பு செயல் இழத்தல் எனப்படும் டிஸ்எபிலிட்டி மற்றும் எதிர்பாராத இறப்பு ஆகியவற்றிற்கு இழப்பீடு தந்து உதவி புரிகிறது.
        • கூடுதல் நன்மைகளாக விபத்துகளின் காரணமாக இறப்பு ஏற்படின், அவ்வாறு இறந்தவருக்கான இறுதி சடங்குகள் செய்வதற்கான செலவுகள், அவரது குழந்தைகளுக்கான கல்வி செலவுகளை ஏற்று நிதி பாதுகாப்பு மற்றும் கல்வி உதவி தருதல் இருக்கின்றன.
        • விபத்துகளின் விளைவாக ஏற்படும் உடல்நல குறைவுகளுக்கு சிகிச்சை பெறும் பொருட்டு மருத்துவமனையில் தங்கும் சூழல், ஆம்புலன்ஸ் உதவிகள், லைப் சப்போர்ட் போன்றவற்றிற்கான செலவுகளுக்கு நிதி பாதுகாப்பு பெறுதல் ஆகியவற்றினை விருப்ப தேர்வுகளாக தேர்வு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
        • இந்த திட்டம் அனைவரின் தேவையை அடிப்படையாக கொண்டு மொத்தமாக ஆறு வேறுபட்ட பிரிவுடைய திட்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளது.
        • உலகின் எந்த மூலையில் பெர்சனல் ஆக்சிடென்ட் ஏற்படினும் அதற்கான தக்க மருத்துவ உதவி மற்றும் நிதி பாதுகாப்பு வழங்கி பாலிசிதாரரின் உடல்நலத்தினை பேணி காக்கின்றது.
      • லிபெர்ட்டி ஜண்டா பெர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் திட்டம்

        லிபெர்ட்டி ஜண்டா பெர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் திட்டம் எதிர்பாராத விபத்துகளினால் ஏற்படும் திடீர் இறப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு என்றே தனித்துவமான பாதுகாப்பு நன்மைகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விபத்தின் விளைவாக ஏற்படும் பாலிசிதாரரின் இறப்பிற்கு பின், காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி செய்கிறது. இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

        பாதுகாப்பின் வகை தனிநபர்
        வயது வரம்பு 18 வயது - 5 வயது (குழந்தை )
        பாலிசி காலம் 1 வருடம்

        பண்புகளும் நன்மைகளும்:

        • விபத்தின் மூலம் ஏற்படும் திடீர் இறப்புகளுக்கு தேவையான நிதி பாதுகாப்பு அளிக்கின்றது.
        • மேலும், விபத்தினால் ஏற்படும் உடலுறுப்பு இயலாமை எனப்படும் டிஸ்எபிலிட்டி ஆகியவற்றிற்கு மருத்துவ உதவி மற்றும் நிதி பாதுகாப்பு தருகிறது.
        • விபத்துகளினால் ஏற்படும் உடலுறுப்பு இயலாமையின் தீவிர சதவீதத்தினை அடிப்படையாக கொண்டு பாலிசிதாரருக்கு வழங்கப்படும் காப்பு தொகையின் அளவு நிர்னயிக்கப்படுகின்றது.
        • பாலிசி காலத்திற்குள் பாலிசிதாரர் அவரது திட்ட்த்தின் மொத்த காப்பு தொகையையும் பயன் படுத்தி விட்டார் எனினும், அந்த் அகாப்புத் தொகையை மீண்டும் தனது தேவைக்கு ஏற்ப புதுபித்துக்கொள்ளும் வசதி உடையது.
        • பாலிசிதாரருக்கு உலக அளவில் எங்கு விபத்து நேரினும், இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேவையான மருத்துவ உதவி மற்றும் நிதி பாதுகாப்பு வழங்குகிறது.
        • லிபெர்ட்டி ஜண்டா பெர்சனல் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஒவ்வொரு முறையும் கட்டப்படும் பிரிமியம் தொகைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 D இன் கீழ் வரி விலக்கு சலுகைகள் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வழங்கப்படுகின்றது.
      • லிபெர்ட்டி ஹாஸ்பி - கேஷ் கனக்ட் திட்டம்

        லிபெர்ட்டி ஹாஸ்பி - கேஷ் கனக்ட் திட்டம் விபத்து மற்றும் நோய்களினால் மருத்துவமனையில் தங்கும்பொழுது ஏற்படும் நிதி நெருக்கடிகளுக்கு உதவுவதுடன், 30 நாட்களுக்கு தின செலவுகளாக குறிப்பிட்ட தொகையை தருகிறது. இந்த திட்டம் நிறைய நன்மைகளை கொண்டுள்ளதால், நமது தேவைக்கு ஏற்ப நாம் அதை தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகின்றது.

        திட்ட காரணிகள் ஷுயர், ஷுயர் ஆப்டிமா, ஷுயர் அல்டிமா,ஷுயர் சுப்ரீம், ஷுயர் எக்ஸல்
        பாதுகாப்பின் வகை தனிநபர்/ குடும்பம்
        காப்பு தொகை Rs 2 - 10 லட்சம்
        வயது வரம்பு 18 வயது - 91 நாட்கள் (குழந்தை )
        பாலிசிக்கு முன் உடல்நல சோதனை மருத்துவ தேவைகள் உள்ள நபருக்கு மட்டும்
        பாலிசி காலம் 1/ 2 /3 வருடம்

        பண்புகளும் நன்மைகளும் :

        • இது ஒரு பெருந்தொகையை மருத்துவமணையில் தங்கியிருக்கும் பொழுது ஏற்படும் தின செலவுகளுக்காக அளிக்கிறது.
        • இது இரட்டை ஐ சி யு மற்றும் விபத்து காப்பீடு உடையது.
        • சில திட்டங்களில், சிறிய/ பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு ரெக்கவரி நன்மை வழங்குகிறது.
        • ஹாஸ்பி ஷுயர் எக்ஸல் திட்டத்தில் காப்பு தொகை மீண்டும் இருப்பு வைக்கும் நன்மையையும் உள்ளது.
        • 3 வருட கால திட்டங்களில், முதல் புதுப்பித்தலுக்கு பின் ஏற்கனவே உள்ள நோய்களுக்கான பாதுகாப்பினை வழங்குகிறது.
        • பிலெக்சி திட்டத்தில் சில நன்மைகளை இரண்டு முறை பெறமுடியும். அவை , பராமரிப்பு நன்மை மற்றும் தீவிர நோய்களுக்கான நன்மை ஆகியனவாக வரையறுக்கப்படுகின்றது.
      • லிபெர்ட்டி க்ரிட்டிக்கல் கனக்ட் திட்டம்

        லிபெர்ட்டி க்ரிட்டிக்கல் கனக்ட் திட்டம் காப்பீட்டாளரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதி உடன் உள்ளது. இது தீவிர நோய்களுக்கு உரிய பாதுகாப்பு தேவைகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் வரம்புக்குள் வரும் தீவிர நோய்களுடன் மட்டுமன்றி ஹெச் ஐ வி / எய்ட்ஸ் க்கும் தேவையான பாதுகாப்பு நன்மை மற்றும் நிதி உதவி அளிக்கிறது. இது ஹெல்த் 360 எனும் சிறப்பம்சத்தை கொண்டுள்ளது. இந்த அம்சமானது, டிலைட் ஹெல்த்கேர், கன்சீர்ஜ் ஹெல்த்கேர், டெடிகேட்டட் மெடிக்கல் ப்ரொபஷனல் மற்றும் வெல்னஸ் ரிவார்டு போன்ற காரணிகளை கொண்டது.

        திட்ட காரணிகள் பிளான் A, பிளான் B
        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 1 லட்சம் - 1 கோடி
        வயது வரம்பு 18 வயது - 5 வயது(குழந்தை )
        பாலிசி காலம் 1/ 2 /3 வருடம்
        இணைந்து செலவழித்தல் இதில் இல்லை

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டமானது 59 தீவிர நோய்களுக்கு மருத்துவ உதவி அளிக்கிறது.
        • இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மூன்று முறை மட்டுமன்றி பல முறை மருத்துவ உதவிகளுக்கான நிதி நன்மைகளை க்ளைம் செய்யும் வசதி கொண்டது.
        • இந்த திட்டம் கூடுதல் மருத்துவ ஆலோசனை மற்றும் தொலைபேசி மூலம் ஆலோசனை பெரும் வசதிகளை உடையது
        • இந்த திட்டமானது ஒவ்வொரு 2 வருடத்திற்கும் ரொக்கமில்லா மருத்துவ பரிசோதனை பெற வழிவகுக்கிறது.
        • வங்கி கடன் பாதுகாப்பு மற்றும் சர்வைவல் பீரியட் வைவர் போன்ற நன்மைகளும் தருகிறது.
      • லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் : ஆரோக்யா சஞ்சீவனி திட்டம்

        லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் : ஆரோக்யா சஞ்சீவனி திட்டம் மருத்துவ ரீதியான அனைத்து வகையான செலவுகளுக்கும் பெருவாரியான மருத்துவ மற்றும் பொருளாதார நன்மைகளை நிரந்தரமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளின் கீழ் ஓரல் தெரபி, கீமோதெரபி, டீப் பிரைன் ஸ்டிமுலேஷன், ஸ்டெம் செல் தெரபி போன்ற பல நவீன மருத்துவ உதவிகளை பெறுவதும் அடங்கும்.

        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 1 லட்சம் - 5 லட்சம்
        வயது வரம்பு 18 வயது - 91 நாட்கள் (குழந்தை )
        பாலிசிக்கு முன் உடல்நல பரிசோதனை 45 வயது வரை இல்லை
        பாலிசி காலம் 1 வருடம்
        இணைந்து செலவழித்தல் அனைத்து க்ளைம்களிலும் 5%

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டமானது பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான செலவுகளை ஏற்று உதவுகிறத.
        • மேலும், நோயாளிக்கான பராமரிப்பு செலவுகள் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுகளையும் உள்ளடக்கி உதவுகிறது.
        • இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இணைவதற்கு 30 முதல் 60 நாட்களுக்குள் ஏற்படும் மருத்துவ செலவுகளையும் ஏற்கிறது.
        • ஆயுஷ் மற்றும் 12 வகையான நவீன மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளையும் செய்து உதவுகிறது.
        • உங்களது திட்டத்தின் காப்பு தொகையில் ரூ50,000 அல்லது 25% வரை கேட்டராக்ட் சிகிச்சைக்கான பாதுகாப்பு வழங்குகிறது.
        • ஒவ்வொரு க்ளைம் இல்லாத வருடத்திற்கும் போனஸ் நன்மையாக உங்களது திட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டு காப்புத்தொகையினை அதிகரித்து பாலிசிதாரருக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்டு உள்ளது.
      • லிபெர்ட்டி ஹெல்த் ப்ரைம் கனக்ட் திட்டம்

        லிபெர்ட்டி ஹெல்த் ப்ரைம் கனக்ட் திட்டத்தில் இணைவதன் மூலம் பலவித நோய்கள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பாதுகாப்பு செய்யமுடியும். இதில், விலங்குக்கடி தடுப்பூசி, லேசர் கண் அறுவை சிகிச்சை, மகப்பேறு கால மருத்துவ செலவுகள், ஒபிசிட்டி சிகிச்சை, கருத்தரிப்பு சிகிச்சை ஆகியவை அடங்கும்.

        திட்ட காரணிகள் எசன்ஷியல், ஆப்டிமம், ஆப்டிமம் ப்ளஸ்
        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 10 லட்சம் - 1 கோடி
        வயது வரம்பு 18 வயது - 91 நாட்கள் (குழந்தை )
        பாலிசி காலம் 1/ 2 வருடம்
        இணைந்து செலவழித்தல் இதில் இல்லை

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டமானது மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெறுதல், வீட்டிலிருந்து சிகிச்சை பெறுதல், உடலுறுப்பு தானம் செய்பவருக்கான மருத்துவ செலவுகள் ஆகியவற்றினை உள்ளடக்கியது.
        • இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இணைவதற்கு 90 நாட்கள் முதல் 120 நாட்களுக்குள் ஏற்படும் மருத்துவ செலவுகளையும் ஏற்கிறது.
        • லேசர் கண் அறுவைசிகிச்சை, விலங்குக்கடி தடுப்பூசி, கூடுதல் ஆலோசனை பெறுதல் போன்ற நன்மைகளும் கொண்டது.
        • ரூ4000 வரை மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கு சலுகை பெறலாம்
        • வாடிக்கையாளர் தேர்வு செய்து இணைந்த திட்டத்தின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ரொக்கமில்லா ஹெல்த் பரிசோதனை பெற வழிவகுக்கிறது.
        • இதில் ஒபிசிட்டி சிகிச்சை,மகப்பேறு சிகிச்சை,கூடுதல் காப்பு தொகை நன்மை போன்ற வசதிகளை வாடிக்கையாளர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து பெறமுடியும்.
      • லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் : கொரோனா கவஷ் திட்டம்

        லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் : கொரோனா கவஷ் திட்டம் கோவிட் 19 சிகிச்சைக்கான மருத்துவ நன்மைகளை பெறுவதற்காகவே தனித்துவமான தன்மைகளுடன் உருவாக்கப்பட்டது. இதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்குதல், வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறுதல், மற்றும் கொரொனா நோய்க்கான அடிப்படை தேவைகளான பி பி ஈ, கிட், மாஸ்க்,ஆக்சிஜன் ஆகிய காரணிகள் மற்றும் உட்கொள்ளப்படும் மருந்துகளுக்கான செலவுகளையும் உள்ளடக்கி உள்ளது.

        பாதுகாப்பின் வகை தனிநபர்/ ப்ளோடர்
        காப்பு தொகை Rs 50,000 - 5 லட்சம்
        வயது வரம்பு 18 வயது - 1 நாள் (குழந்தை )
        பாலிசி காலம் 3.5 மாதங்கள், 6.5 மாதங்கள், 9.5 மாதங்கள்

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டம் கொரொனா எனப்படும் கோவிட் 19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கும் செலவுகளை ஏற்று உதவுகிறது.
        • மேலும் இந்த திட்டத்தின் மூலம் கொரொனா நோய்க்காக வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறும் செலவுகளையும் ஏற்கிறது.
        • பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இணைவதற்கு 15 முதல் 30 நாட்களுக்குள் ஏற்படும் மருத்துவ செலவுகளையும் ஏற்கிறது.
        • பாதிக்கப்பட்டவர் கொரோனாவின் பொழுது எடுக்கப்படும் அல்லொபதி மட்டுமின்றி இதர சிகிச்சை முறைகளான ஆயுஷ் சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்று உதவுகிறது.
        • இந்த திட்ட்த்தின் மூலம், பாலிசிதாரர் ஹாஸ்பிடல் டெய்லி கேஷ் எனும் மருத்துவமனையில் தங்குவதற்காக தினமும் தேவைப்படும் தொகையையும் மானியமாக வழங்கி உதவும் நன்மையும் உள்ளடக்கி உள்ளது.
      • லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்: கொரோனா ரக்ஷக் திட்டம்

        லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்: கொரோனா ரக்ஷக் திட்டம் எனப்படும் இந்த திட்டம் ஏதேனும் ஒரு அரசாங்க அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்ற பரிசோதனைக்கூடத்தில் கொரோனா கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர் அதற்காக 72 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்படின் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நன்மைகள் மற்றும் உதவிகளும் செயலுக்கு வரும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவ சிகிச்சைக்காக உதவித்தொகயாக பெற்றுக் கொள்ளலாம்.

        பாதுகாப்பின் வகை தனிநபர்
        காப்பு தொகை Rs 50,000 – 2.5 லட்சம்
        வயது வரம்பு 18 வயது
        பாலிசி காலம் 3.5 மாதங்கள், 6.5 மாதங்கள், 9.5 மாதங்கள்

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டம் கொரொனா எனப்படும் கோவிட் 19 கான அனைத்து வகையான மருத்துவ செலவுகளை திட்டத்தின் தன்மையை பொறுத்து ஏற்றுக்கொள்கிறது
        • இந்த திட்டமானது பாலிசிதார்ருக்கு கொரோனா கண்டறியப்பட்டால் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகையை உதவி தொகை அல்லது மானியமாக காப்பீட்டாளருக்கு வழங்குகிறது.
        • இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர் குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு மேல், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தால் மட்டுமே லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்சின் இந்த கொரோனா ரக்ஷக் திட்டம் திட்டம் செயலுக்கு வரும்.
        • இந்த திட்டத்தின் மொத்த பாலிசி காலமானது குறைந்த பட்சமாக 3 இல் இருந்து அதிக பட்சமாக 10 மாதங்களுக்கு உள்ளும் இருக்கின்றது. அதனால், இந்த் அதிட்ட்த்தின் காத்திருப்பு காலமானது 3 முதல் 6 மாதங்களுக்குள் திட்டத்திற்கு திட்டம் வேறுபட்டு விளங்குகிறது.
      • லிபெர்ட்டி செக்யூர் பியூச்சர் கனக்ட் திட்டம்

        லிபெர்ட்டி செக்யூர் பியூச்சர் கனக்ட் திட்டமானது மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழலை உருவாக்காத பல நோய்களுக்கு எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு தேவையான நன்மைகளை வழங்கி பாதுகாப்பு வழங்குகிறது. வாடிக்கையாளரின் திட்டத்தின் பாலிசி காலத்தின் போது வரும் நோய்கள் இந்த திட்டத்தின் பட்டியலில் உள்ள 25 தீவிர நோய்களுக்குள் இருப்பின், தேவையான மருத்துவ மற்றும் பொருளாதார பாதுகாப்பு வழங்கி உதவுகிறது. எதிர்பாராத விபத்துகளுக்கான பாதுகாப்பு, நோய்களுக்கான பாதுகாப்பு மற்றும் விருப்பமற்ற வேலை ஒய்வு போன்ற சூழல்களில் தேவையான நிதி நன்மைகளை அளிப்பதையும் இதர கூடுதல் நன்மைகளாக இந்த திட்டத்திற்குள் உள்ளடக்கி உதவி வருகின்றது.

        பாதுகாப்பின் வகை தனிநபர்
        வயது வரம்பு 18 வயது
        பாலிசி காலம் 1/ 2/ 3 வருடங்கள்

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டமானது 25 மிக தீவிர நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அந்த நோய்களை பற்றிய கூடுதல் விவரங்களை தெளிவான முறையில் உங்கள் திட்டத்தின் விவரங்கள் உள்ளடங்கிய படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்.
        • எதிர்பாராத தருணங்களில் பாலிசிதாரருக்கு ஏற்படும் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடலுறுப்பு இயலாமை போன்றவைகளுக்கு காப்பு தொகையை வழங்கி உதவுகிறது.
        • பாலிசிதாரரின் விருப்பமற்ற வேலை ஒய்வின் போது காப்பு தொகையின் மூன்று தவணைகளுக்கு சமமான ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாகவோ அல்லது உதவித் தொகையாகவோ வழங்கி உதவுகிறது.
      • லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்: சரல் சுரக்ஷா பீமா


        லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ்: சரல் சுரக்ஷா பீமா என பெயர் இடபட்ட இந்த திட்டமானது எதிர்பாராத விபத்துகளினால் விளைவாக ஏற்படும் நீரந்தர உடலுறுப்பு இயலாமை எனப்படும் பெர்மெனன்ட் டிஸ்எபிலிட்டி மற்றும் உயிரிழப்பு ஆகிய திடீரென ஏற்படும் துயர சூழல்களில் தேவையான மருத்துவ வசதிகள், நிதி நன்மைகள் மற்றும் உதவி தொகைகள், மானியம் மற்றும் இழப்பீடு வழங்கி உதவுகிறது. இந்த திட்டத்தின் இதர கூடுதல் நன்மைகளாக, நிரந்தரமற்ற உடலுறுப்பு இயலாமை, கல்வி உதவி மற்றும் திடீர் மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்கான மருத்துவ பாதுகாப்பு மற்றும் பொருளாதார நன்மைகளை தனது திட்டங்களுக்குள் கொண்டு விளங்குகிறது.

        பாதுகாப்பின் வகை தனிநபர்
        காப்பு தொகை Rs 10 லட்சம் - 1 கோடி
        வயது வரம்பு 18 வயது
        பாலிசி காலம் 1 வருடம்
        இணைந்து செலவழித்தல் இதில் இல்லை

        பண்புகளும் நன்மைகளும் :

        • இந்த திட்டம் எதிர்பாரா விபத்தின் பொழுது ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்குகிறது.
        • இந்த திட்டமானது நிரந்தரமாக பாதிக்கப்பட்ட முழு மற்றும் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட பாதி உடலுறுப்பு இயலாமைக்கு தேவையான பாதுகாப்பு அளித்து உதவுகிறது.
        • இதர நன்மைகளாக, திடீரென மருத்துவமனையில் தங்கி பயன்பெறும் சிகிச்சைக்கான செலவுகள், குழந்தைகளுக்கான கல்வியுதவி ஆகியவற்றை விருப்பப்படி நமது திட்டத்தில் தேர்வு செய்து கூடுதல் நன்மைகள் மற்றும் பாதுகாப்புகள் பெற்று கொள்ளலாம்.
        • இந்த திட்ட்த்தின் மூலம் பாலிசிதாரர், க்ளைம் செய்யப்படாத ஒவ்வொரு வருடத்திற்கும் 5% கூடுதல் போனஸ் வாடிக்கையாளரின் திட்டத்தின் காப்பு தொகையினில் சேர்க்கப்பட்டு அதிக காப்புத்தொகையை வழங்கி உதவுகிறது.

      லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ் திட்டங்களில்உள்ளடங்குபவை

      ஒவ்வொரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமும் பெரும்பாலான சூழல்களுக்கு தங்களது உதவியை அளிப்பதற்காக வகுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த திட்டங்கள் தீவிர நோய்களான கேன்சர், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் மருத்துவ வசதிகள் பெற்று தருகின்றன. இவை தவிர கீழே கொடுக்கப்பட்டுள்ள வேறு சில சொஸ்ழல்களுக்கும் இந்த திட்டங்கள் பாதுகாப்பு நன்மைகள் அளிக்கின்றன. அவை:

      மருத்துவமனையில் தங்கி இருத்தல் : ஒரு சில தருணங்களில் நோயினால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் சூழல் உருவாகலாம். அத்தகு நேரங்களில் பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான நிதி நன்மைகள் வழங்குவதில் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் உதவிகரமாக அமைகின்றன.

      மருத்துவமனையில் இணைவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவ செலவுகள்: ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இணைவதற்கு முன்பு எடுத்து கொள்ளப்படும் மருத்துவ உதவிகள் அமரும் அவற்றிற்கான செலவுகள் ஆகியவற்றிற்கும் உதவி அளிக்கின்றன. தவிரவும், நோயின் தீவிரத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல்களில் மருத்துவமனையில் சேர்ந்த பின்பு ஏற்படும் அனைத்து வகையான மருத்துவ உதவிகள், பரிசோதனைகள் ஆகியவற்றிற்கான செலவுகளுக்கு நன்மைகளை திட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டு வழங்கி உதவுகின்றன. நோயின் தன்மையினை அடிப்படையாக கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் பொழுது, அதிகபட்சமாக 50 நாட்கள் வரை தேவையான அனைத்து பாதுகாப்பு நன்மைகளையும் தருகின்றன.

      காத்திருப்பு காலம்: பாலிசிதாரர் திட்டத்தில் இணைவதற்கு முன்பே அவருக்கு உள்ள நோய்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஒரு சில திட்டங்கள் வழங்குகின்றன.ஆனால், அவற்றிற்கு நீங்கள் ஆரம்ப கால காத்திருப்பு காலத்தினை கடந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.பெரும்பாலும், காத்திருப்பு காலம் 1 முதல் 4 வரையிலான வருடங்கள் ஆகும்.

      போக்குவரத்து வசதிகள்: ஒரு சில திட்டங்கள், இணைப்பில் உள்ள மருத்துவமனைகள் பாலிசிதாரருக்கு தொலைவில் இருப்பின், அவருக்கு ஏற்படும் போக்குவரத்து ரீதியான செலவுகளுக்கும் நன்மைகள் வழங்குகின்றன. அவற்றை ரீஇம்பர்ஸ்மென்ட் முறை மூலம் பெற்று கொள்ளும் வசதி உண்டு. மேலும் நோயாளியை ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கான செலவுகளையும் இந்த திட்டங்கள் ஏற்கின்றன.

      மேலே குறிப்பிடப்பட்ட காரணிகள் திட்டத்திற்கு திட்டம் மாறுபடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

      லிபெர்ட்டிஹெல்த்இன்சுரன்ஸில்உள்ளடங்காதவை

      எக்லுஷன்ஸ் என்பது, உங்களது பாலிசி திட்டத்தின் வரம்பிற்குள் இல்லதவை ஆகும். இந்த எக்ஸ்லுஷன்ஸ்களுக்கு பாலிசி திட்ட நன்மைகள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட வேண்டிய எந்தவொரு மருத்துவ உதவிகளும் கிடைக்காது. இந்த வரம்புகள் ஒவ்வொரு பாலிசி திட்டத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். ஆகவே, ஒவ்வொரு பாலிசி திட்டத்திற்கும் இந்த காரணங்கள் பொதுவானதாக இருப்பதில்லை. இவை திட்டத்தின் நோக்கம் மற்றும் தேவை பொறுத்து மாறுபடக்கூடியது.

      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் கீழ்கண்ட காரணங்களுக்கு திட்ட நன்மைகளை வழங்காது. அவை:

      • ஓ பி டி சிகிச்சைக்கான பாதுகாப்பு இந்த திட்டத்திற்குள் வராது.
      • விபத்தினால் ஏற்படாத பல் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சைகள் ஆகியவற்றிற்கான மருத்துவ உதவிகள் மற்றும் நன்மைகளை இந்த திட்டம் வழங்காது.
      • காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை / பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் ஏஸ்தெடிக் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகளை இந்த திட்டம் ஏற்காது.
      • எந்த வகையிலும்/ சூழலிலும் தன்னை தானே காயப்படுத்தி கொள்ளுதல், தற்கொலை மற்றும் தற்கொலையின் பொழுது ஏற்படும் காயங்களுக்கான மருத்துவ செலவுகள் ஏற்கப்பட மாட்டாது.
      • மனநோய், ஸ்ட்ரெஸ் அல்லது உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு உதவி வழங்காது.
      • பாதிக்கப்படவருக்கு செயற்கை முறையில் வாழும் சூழல் ஏற்படும் பொழுது அதற்கான மருத்துவ செலவுகள் இந்த திட்டத்திற்குள் வராது.
      • ஹெச் ஐ வி / எய்ட்ஸ் தொடர்பான மருத்துவ உதவிகள் வழங்கப்படமாட்டாது.
      • விபரீதமான விளையாட்டுகளினால் ஏற்படும் காயங்கள் மற்றும் இதர உடல்நல பாதிப்புகளுக்கான மருத்துவ நன்மைகள் வழங்கப்படமாட்டாது.
      • உடலுறவின் பொது ஏற்படும் தொற்றுகள் மற்றும் அதற்கான மருத்துவ செலவுகள் இந்த திட்டத்திற்குள் வராது.
      • எக்ஸ்டெர்னல் கன்ஜெனிடல் அனாமலி மற்றும் அதற்கான மருத்துவ செலவுகள் இந்த திட்டத்திற்குள் வராது.

      பாலிசி படிவத்தில் இருந்து அந்தந்த திட்டத்தில் கணக்கில் வராத நோய்களை குறித்து அறிந்து கொள்ளவும்.

      பாலிசிபஜாரில்லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ்திட்டத்தைஎப்படிவாங்குவது?

      பாலிசிபஜார் மூலம் ஆன்லைனில் லிபெர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தில் இணைவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்:

      • முதலில், பாலிஸிபஜார்.காம் எனும் பாலிஸிபஜாரின் உண்மையான இணையதளத்திற்கு செல்லவும்.
      • இணையதளத்தில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் எனும் பட்டியலினை தேர்வு செய்யவும்.
      • இன்சூரன்ஸ் திட்ட விவரங்கள் மற்றும் பாலிசிதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விவரங்களை உள்ளிடவும்.
      • வயது, வாழுமிடம், தொலைபேசி எண் போன்ற பல தேவையான விவரங்களை ஹெல்த் இன்சூரன்ஸ் படிவத்தில் நிரப்பவும்.
      • ஏற்கனவே உள்ள நோய்களுக்கான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
      • உங்காளுக்கு தேவையான கூடுதல் பாதுகாப்புகளை தேர்வு செய்யவும்.
      • உங்களது தேவைக்கேற்ப ஒரு லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்யவும்.
      • அனைத்தையும் சரிபார்த்த பின்பு, உங்களது பிரிமியம் தொகையை க்ரெடிட்/ டெபிட் கார்ட் அல்லது நெட் பாங்கிங் மூலம் கட்டலாம்.
      • சில நொடிகளில் நீங்கள் தேர்வு செய்த லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி படிவம் உங்களுக்கு வழங்கப்படும்.
      • உங்களது பதிவு செய்யப்பட்ட ஈ மெயில் முகவரிக்கு பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களுடன் கூடிய ஆவணம் அனுப்பபடும்.

      ஆன்லைனில்லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ்திட்டத்தைஎப்படிபுதுப்பிப்பது?

      லிபெர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தின் நன்மைகளை நீங்கள் தொடர்ந்து பெறவெண்டுமெனில், நீங்கள் திட்டத்தை புதுபித்தல் அவசியமாகும். லிபர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தை புதுப்பிப்பதற்கு நாம் பாலிசிபஜார் இன்சூரன்ஸ் ப்ரோக்கர் பிரைவேட் லிமிட்டட் எனும் அதன் துணை நிறுவனத்தின் உதவியுடன் பாலிசிபஜாரின் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த திட்டத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

      • முதலில், பாலிஸிபஜார்.காம் எனும் பாலிஸிபஜாரின் உண்மையான இணையதளத்திற்கு செல்லவும்.
      • இணையதளத்தில் உள்ள ரீநியூ யுவர் பாலிசி எனும் பட்டியலினை தேர்வு செய்யவும்.
      • பின்பு, அதில் ஹெல்த் ரீநியூவல் என்பதை தேர்வு செய்யவும்
      • அது ஒரு பயனர் உள்நுழைவு பக்கத்தற்கு உங்களை அழைத்து செல்லும்.
      • அதில் உள்நுழைய, தங்களது பாலிசி எண் அல்லது பாலிசிதாரரின் வயதினை உள்ளீடு செய்யவும்.
      • இன்சூரன்ஸ் திட்ட விவரங்கள் மற்றும் பாலிசிதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் விவரங்களை புதுப்பிக்கவும்
      • கூடுதல் பாதுகாப்புகளை சேர்க்கலாம்.
      • ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும், கூடுதல் பாதுகாப்புகளை நீக்கலாம்.
      • அனைத்தையும் சரிபார்த்த பின்பு, உங்களது பிரிமியம் தொகையை க்ரெடிட்/ டெபிட் கார்ட் அல்லது நெட் பாங்கிங் மூலம் கட்டலாம்.
      • உங்களது பாலிசி புதுபிக்கப்பட்டது
      • உங்களது பதிவு செய்யப்பட்ட ஈ மெயில் முகவரிக்கு புதுபிக்கப்பட்ட விவரங்கள் அனுப்பபடும்.

      லிபெர்ட்டிஹெல்த்இன்சூரன்ஸ்திட்டத்தில்க்ளைம்பதிவுசெய்வதுஎவ்வாறு?

      லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரசனே திட்டமானது இரு வகையான க்ளைம்களை உள்ளடக்கியது. அவை, கேஷ்லெஸ் க்ளைம் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம். அவற்றை எவ்வாறு அணுகுவது என்பதை கீழே காணலாம்:

      கேஷ்லெஸ் க்ளைம்:

      • குறிப்பிடப்பட்ட மருத்துவமனையில் சேருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் தெரிவிக்கவும்.
      • திட்டத்துடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் ஒன்றுக்கு செல்லவும்.
      • தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டரிடம் சென்று ப்ரீ- ஆத்தரைசேசன் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
      • டீ பி ஏ விடம் இந்த படிவத்தை சமர்ப்பிக்கவும். அவர்கள் அதை லிபெர்ட்டி ஹெல்த் 360 இடம் ஒப்படைப்பார்கள்.
      • லிபெர்ட்டி ஹெல்த் 360 உங்களது படிவத்தை , உங்களது காப்பீட்டு திட்டத்துடன் சேர்த்து சரிபார்த்து மருத்துவமனைக்கு ஆத்தரைசேஷன் கடிதத்தை வழங்குவர்.
      • மருத்துவமனையில் சிகிச்சையினை பெறவும்.
      • சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது , இத்திட்டத்தின் கீழ் வராத இதர செலவுகளுக்காக உரிய பணத்தை செலுத்தவும்.
      • மருத்துவமனை ரசீதுகளை சுரைப்பார்த்து கையொப்பம் இடவும்.
      • மருத்துவமனை விடுதலை படிவம், மருந்து ரசீதுகள் என அனைத்திற்க்கும் நகல் எடுத்து கொள்ளவும்.
      • லிபெர்ட்டி ஹெல்த் 360 உங்களது க்ளைமிற்கு உரிய நன்மையை மருத்துவமனையில் கொடுத்துவிடும்.

      ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம்:

      • லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தொலைபேசி அல்லது ஈமெயில் மூலம் மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தெரிவிக்கவும்.
      • இத்திட்டத்துடன் இணைப்பில் இல்லாத எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறவும்.
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்பொழுது, தேவையான அனைத்து படிவங்களை பெற்றுக்கொள்ளவும்.
      • இன்சூரரிடம் அனைத்து படிவங்களையும் சமர்ப்பிக்கவும்.
      • பாலிசியின் தன்மையை பொறுத்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
      • 7 நாட்களுக்குள் க்ளைம் தொகையை இன்சூரர் உங்களுக்கு அளித்துவிடுவார்.

      ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் பதிவு செய்ய கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவும்:

      • சரியாக நிரப்பப்பட்ட லிபெர்ட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் படிவம்
      • பாலிசி ஆவணம் மற்றும் ஐ டி கார்டின் நகல்
      • மருத்துவரின் ஆலோசனை ரசீதுகள்
      • மருத்துவ பரிசோதனைக்கு அங்கீகாரம் வழங்கும் மருத்துவரின் ரசீதுகள்
      • மருத்துவ ஆலோசனை, மருத்துவ பரிசோதனை மற்றும் ரிப்போர்ட்கள்
      • அறுவைசிகிச்சையின் தன்மையை பற்றிய அறுவைசிகிச்சை செய்தவரின் ரிப்போர்ட்
      • ஆலோசனை செய்யும் மருத்துவர்/ சிறப்பு மருத்துவர்/ அனஸ்தீடிஸ்ட் / பரிந்துரையாளர்களின் சான்றிதழ்கள்
      • போலீசின் எப் ஐ ஆர் படிவ நகல் (விபத்திற்கான க்ளைம் எனில் )
      • ஹாஸ்பிட்டல் டிஸ்சார்ஜ் மற்றும் பராமரிப்பு அறுவைசிகிச்சை படிவம்
      • பிரித்துக்கொடுக்கபட்ட மொத்த மருத்துவமணை ரசீது
      • பில் கட்டிய ரசீது மற்றும் ரசீதின் பதிவு எண்
      • உடலுறுப்பு மாற்றின் ரசீது மற்றும் கட்டண ரசீதுகள்
      • மருத்துவமனை பதிவு எண் மற்றும் பான் விவரங்கள்
      • மருத்துவரின் தகுதிச்சான்று மற்றும் பதிவு எண்

      தேவையான ஆவணங்கள்:

      • பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம்
      • மருத்துவமனையின் ரசீதுகள், படிவங்கள் மற்றும் டிஸ்சார்ஜ் ஆவணங்கள்
      • மருத்துவர் அல்லது கெமிஸ்ட் தந்த முழுமையான மருத்துவ ரசீதுகள்
      • பரிசோதனை முடிவுகள், ரசீதுகள் மற்றும் பரிசோதனைக்கு ஊக்குவித்த மருத்துவ படிவம்
      • அறுவை சிகிச்சையின் காரணம், தற்போதய நிலை மற்றும் அதற்கான ரசீதுகள் மற்றும் பில்கள்
      • நோயின் தன்மையை கண்டறிந்த மருத்துவரின் நோயின் தன்மையை பற்றிய எழுத்து பூர்வ பதிவு
      • காப்பீடு செய்யப்பட்டவரின் மருத்துவ வரலாறு
      • ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவர் மற்றும் மருத்துவர்களின் சான்று.
      • ஆம்புலன்ஸ் செலவுகள் ரசீதுகள்

      மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் உண்மையான மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களையே சமர்ப்பிக்க வேண்டும். அவற்றின் நகலை அல்ல.

      தொடர்புவிவரங்கள்:

      பாலிசி பஜார்

      • ஈ மெயில் : care@policybazaar.com
      • தொலைபேசி எண் : 1800-258-5970/800-208-8787

      லிபெர்ட்டி ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனம்

      • ஈ மெயில் : care@libertyinsurance.in
      • தொலைபேசி எண் : 1800-266-5844
      Policybazaar exclusive benefits
      • 30 minutes claim support*(In 120+ cities)
      • Relationship manager For every customer
      • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
      • Instant policy issuance No medical tests*
      book-home-visit
      Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
      top
      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL