சோழமண்டலம் ஹெல்த் இன்சூரன்ஸ்
முருகப்பா குரூப் இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள மிட்சுயி சுமிட்டோமோ இன்சூரன்ஸ் கம்பெனி இரண்டும் சேர்ந்து ஜாயிண்ட் வென்ச்சர் ஆக சோழமண்டலம் எம்.எஸ்.
Read More
சோழமண்டலம் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி - ஒரு கண்ணோட்டம்
சோழமண்டலம் இன்சூரன்ஸ் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. 2001 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனி தற்போது நாடு முழுதும் 100 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. சரியான நேரத்தில் கிளைம்ஸ் செட்டில்மெண்ட்செய்த சிறந்த கம்பெனி என்ற 2011-12 ஆம் வருடத்துக்கானஅவார்டை இது பெற்றுள்ளது. சாதாரண மனிதனுக்கும் சிறந்த ஹெல்த் சேவையை வழங்க வேண்டும் என்ற கொள்கையுடன் இந்த கம்பெனி இயங்கி வருகிறது. அவரவர் தேவைக்கு ஏற்ப பல விதமான பிளான்களை இது வழங்கி வருகிறது.
சோழமண்டலம் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமானது கடந்த சில வருடங்களாக பல விருதுகள் மற்றும் சாதனைகளை படைத்துள்ளது. அவற்றுள் சில கீழ்வருமாறு:
- 2020 ஆம் ஆண்டு தி எக்கனாமிக் டைம்ஸ் இந்நிறுவனத்திற்கு தி பெஸ்ட் பிராண்ட் விருது வழங்கியது.
- இன்ஸ்டிடியூட் ஆப் டைரெக்டர்ஸ் 2017 ஆம் ஆண்டு கோல்டன் பீகாக் விருது வழங்கியது.
- பொது காப்பீட்டு வகையில் பிரைட் ஆப் தமிழ் நாடு விருது வழங்கியது.
- 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் அஸ்ஸென்ட் இந்நிறுவனத்தை 'ட்ரீம் கம்பனி டு ஒர்க் பார்' என்று பெயர் சூட்டியது.
சோழா எம்.எஸ்.ஹெல்த் லைன் பிளான்கள்
இது ஒரு முழுமையான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான். குடும்ப மருத்துவ செலவுகளை இது கவர் செய்கிறது. பிளோட்டிங் இன்சூரன்ஸ் தொகை அடிப்படையில் பாலிசிதாரர், அவரது வாழ்க்கை துணை மற்றும் சார்ந்திருக்கும் 2 குழந்தைகளை கவர் செய்கிறது.
தனி நபர் இன்சூரன்ஸ் அடிப்படையில் இது பாலிசிதாரர், அவரது வாழ்க்கை துணை மற்றும் சார்ந்திருக்கும் 2 குழந்தைகள், சார்ந்திருக்கும் பெற்றோர், மாமனார், மாமியார் மற்றும் உடன்பிறப்புகளை கவர் செய்கிறது. இதில் நான்கு விதமான பிளான்கள் அடக்கம். அவை: வால்யூ ஹெல்த் லைன், பிரீடம் ஹெல்த் லைன், என்ரிச் ஹெல்த் லைன் மற்றும் ப்ரிவிலேஜ் ஹெல்த் லைன்.
வால்யூ ஹெல்த் லைன் பிளான்
- இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 2 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை இன்சூர் செய்யலாம்.
- மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்னும் டிஸ்சாரஜ் ஆன பின்பும் முறையே 30 மற்றும் 60 நாட்கள் செலவுகள் கவர் செய்யப்படும்.
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- வீட்டில் இருந்து எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஒரு பாலிசி வருடத்துக்கு அதிக பட்சம் 7 நாட்களுக்கு கவரேஜ் உண்டு.
- ஒவ்வொரு மருத்துவமனை அட்மிஷனுக்கும் அவசர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூபாய் 1000 வரை கவர் செய்யப்படும்.
- உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது ஏற்படும் டோனர் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும்.
- மருத்துவமனையில் இருந்து எடுக்கப்படும் ஆயுர்வேத, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு ஆயுஷ் பெனிபிட் கவர் உண்டு.
- பாலிசி தரப்படும் நேரத்தில் ப்ரீ இன்சூரன்ஸ் ஹெல்த் செக் அப் செலவுகள் 50% திருப்பி தரப்படும்.
- 55 வயதுக்கு மேல் உள்ளவர்களின் கோ பேமெண்ட்டுக்கு எல்லா கிளைம்களிலும் 10% ஆகும்.
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள், சார்ந்துள்ள பெற்றோர் அல்லது மாமனார் மாமியார் அனைவருக்கும் கவர் உண்டு.
- 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கும் முன் ஹெல்த் செக் அப் தேவை.
-
- இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 3 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை இன்சூர் செய்யலாம்.
- மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்னும் டிஸ்சாரஜ் ஆன பின்பும் முறையே 60 மற்றும் 90 நாட்கள் செலவுகள் கவர் செய்யப்படும்.
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத 141 டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- வீட்டில் இருந்து எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஒரு பாலிசி வருடத்துக்கு அதிக பட்சம் 7 நாட்களுக்கு கவரேஜ் உண்டு.
- ஒவ்வொரு மருத்துவமனை அட்மிஷனுக்கும் அவசர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூபாய் 2000 வரை கவர் செய்யப்படும்.
- உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது ஏற்படும் டோனர் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும்.
- மருத்துவமனையில் இருந்து எடுக்கப்படும் ஆயுர்வேத, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு ஆயுஷ் பெனிபிட் கவர் உண்டு.
- பாலிசி தரப்படும் நேரத்தில் ப்ரீ இன்சூரன்ஸ் ஹெல்த் செக் அப் செலவுகள் 50% திருப்பி தரப்படும்.
- அறை வாடகை கட்டணம், கன்சல்டஷன் பீஸ், பரிசோதனை கட்டணம் ஆகியவற்றுக்கு வரம்பு கிடையாது,
- ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும் 5% தொடர் போனஸ் உண்டு (இன்சூரன்ஸ் தொகையில் அதிக பட்சம் 50% வரை).
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள், சார்ந்துள்ள பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் அனைவருக்கும் கவர் உண்டு.
- 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கும் முன் ஹெல்த் செக் அப் தேவை.
-
- இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 3 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை இன்சூர் செய்யலாம்.
- நாடு முழுதும் உள்ள இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் பலன்களை அனுபவித்துக் கொள்ளலாம்.
- மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்னும் டிஸ்சாரஜ் ஆன பின்பும் முறையே 60 மற்றும் 90 நாட்கள் செலவுகள் கவர் செய்யப்படும்.
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத 141 டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- வீட்டில் இருந்து எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஒரு பாலிசி வருடத்துக்கு அதிக பட்சம் 7 நாட்களுக்கு கவரேஜ் உண்டு.
- ஒவ்வொரு மருத்துவமனை அட்மிஷனுக்கும் அவசர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூபாய் 2000 வரை கவர் செய்யப்படும்.
- உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது ஏற்படும் டோனர் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும்.
- மருத்துவமனையில் இருந்து எடுக்கப்படும் ஆயுர்வேத, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு ஆயுஷ் பெனிபிட் கவர் உண்டு.
- பாலிசி தரப்படும் நேரத்தில் ப்ரீ இன்சூரன்ஸ் ஹெல்த் செக் அப் செலவுகள் 100% திருப்பி தரப்படும்.
- ஒவ்வொரு முறையும் குழந்தைகள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும்போது ஒரு நாளுக்கு ரூபாய் 500 வீதம் 7 நாட்களுக்கு அலவன்ஸ் தரப்படும்.
- மருத்துவமனையில் இருக்கும் காலம் குறைந்த பட்சம் 10 நாட்களாக இருந்தால் மொத்தமான மருத்துவமனை அலவன்ஸ் ஆக ரூபாய் 10,000 தரப்படும்.
- விபத்து மற்றும் 14 குறிப்பிடப்பட்ட நோய்கள் இருந்தால் இன்சூரன்ஸ் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்.
- ஒவ்வொரு இரண்டு கிளைம் பிரீ வருடங்களுக்கும் இலவச ஹெல்த் செக் அப் உண்டு. அறை வாடகை, டயக்னோடிக்ஸ் கட்டணம் மற்றும் கன்சல்டஷன் பீஸ் கவர் செய்யப்படும்.
- ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும் 50% தொடர் போனஸ் உண்டு (இன்சூரன்ஸ் தொகையில் அதிக பட்சம் 100% வரை).
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் 4 குழந்தைகளுக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள், சார்ந்துள்ள பெற்றோர் அல்லது மாமனார், மாமியார், உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் கவர் உண்டு.
- 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கும் முன் ஹெல்த் செக் அப் தேவை.
-
- இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 5 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை இன்சூர் செய்யலாம்.
- ஆபத்தான நோய்களுக்கும் விபத்துகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை இரட்டிப்பு ஆக்கப்படும்.
- தாய்மை பேற்று கவர் ரூபாய் 1 லட்சம் வரை உண்டு. புதிதாக பிறந்த குழந்தையின் மருத்துவ செலவுகளும் கவர் செய்யப்படும்.
- அவுட் பேஷண்ட் பல் சிகிச்சை செலவுகள் மற்றும் கண்ணாடி, ஹியரிங் எயிட், காண்டாக்ட் லென்ஸ் செலவுகள் இவற்றுக்கு ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் 10,000 ரூபாய் வரை கவர் உண்டு.
- ஆபத்தான நோய்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் ஒபினியனுக்கு ரூபாய் 25,000 வரை கவர் உண்டு.
-
- பிளோட்டிங் தொகை அடிப்படையில் குடும்பங்களின் மருத்துவமனை செலவுகளும், தனி நபர் இன்சூரன்ஸ் தொகை அடிப்படையில் குடும்ப அங்கத்தினர்களுக்கு தனி நபர் விபத்து காப்பீடும் இந்த பிளானில் கவர் செய்யப்படும், விபரங்கள் கீழே:
- இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 3 லட்சம், 4 லட்சம் மற்றும் 5 லட்சம் ஆகும். இதில் இரண்டு விதமான பிளான்கள் உண்டு. அவை: பேர்ல் மற்றும் ராயேல்.
- நாடு முழுதும் உள்ள இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் பலன்களை அனுபவித்துக் கொள்ளலாம்.
- மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்னும் டிஸ்சாரஜ் ஆன பின்பும் முறையே 30 மற்றும் 60 நாட்கள் செலவுகள் கவர் செய்யப்படும்.
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத 141 டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- வீட்டில் இருந்து எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஒரு பாலிசி வருடத்துக்கு அதிக பட்சம் 7 நாட்களுக்கு கவரேஜ் உண்டு.
- ஒவ்வொரு மருத்துவமனை அட்மிஷனுக்கும் அவசர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூபாய் 2000 வரை கவர் செய்யப்படும்.
- உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது ஏற்படும் டோனர் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும்.
- ராயேல் பிளானின் கீழ் இரட்டிப்பு பாதுகாப்பு உண்டு. பிளோட்டர் அடிப்படையில் மருத்துவமனை செலவுகளும், தனி நபர் அடிப்படையில் பர்சனல் விபத்தும் கவர் செய்யப்படும்.
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் 2 குழந்தைகளுக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் கவர் உண்டு.
- 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கும் முன் ஹெல்த் செக் அப் தேவை.
-
- இந்த ஹெல்த் பிளான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆகும் மருத்துவ
- செலவுகளையும், சேர்க்கப்படாமல் ஆகும் மருத்துவ செலவுகளையும் (அவுட் பேஷண்ட் செலவுகள்) கவர் செய்கிறது. இதை பற்றிய விபரங்களை கீழே காணலாம்.
- இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 3 லட்சத்தில் இருந்து 25 லட்சம் வரை இன்சூர் செய்யலாம்.
- நாடு முழுதும் உள்ள இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் பலன்களை அனுபவித்துக் கொள்ளலாம்.
- மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்னும் டிஸ்சாரஜ் ஆன பின்பும் முறையே 60 மற்றும் 90 நாட்கள் செலவுகள் கவர் செய்யப்படும்.
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத 141 டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
- அறை வாடகை மற்றும் ஐ.சி.யு அறை வாடகை கட்டணங்கள் குறிப்பிட்ட சதவீதம் கவர் செய்யப்படும்.
- நோய் மற்றும் காயங்களுக்கு மருத்துவமனையில் சேராமல் அளிக்கும் சிகிச்சைக்கு கவர் உண்டு.
- தாய்மை பேற்று காலத்துக்கு முன்பும் பின்பும் ஆகும் செலவுகள் கவர் செய்யப்படும்.
- பல் சிகிச்சை செலவுகள் அனைத்தும் கவர் செய்யப்படும்.
- அலோபதி, ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகள் அனைத்துக்கும் கவர் உண்டு.
- மருத்துவரின் பிரெஸ்கிரிப்ஷன் மற்றும் அறிவுரைப்படி செய்யும் கண்ணாடி, காண்டாக்ட்லென்ஸ், ஹியரிங் எயிட், ப்ரோஸ்த்தெடிக் கருவிகள் போன்ற எல்லா செலவுகளும் கவர் செய்யப்படும்.
- ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும் 5% தொடர் போனஸ் உண்டு (இன்சூரன்ஸ் தொகையில் அதிக பட்சம் 50% வரை).
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் 2 குழந்தைகளுக்கு 3 மாதம் முதல் 35 வயது வரை கவர் உண்டு. (பெண் குழந்தைக்கு 35 வயது வரையிலும் மற்றும் ஆண் குழந்தைக்கு 25 வயது வரையிலும்)
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் கவர் உண்டு.
- 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கும் முன் ஹெல்த் செக் அப் தேவை.
-
- இன்சூரன்ஸ் செய்யும் தொகைக்கு ஏற்றாற்போல் இதில் 3 விதமான பிளான்கள் உண்டு.
- அவையாவன: ஸ்டாண்டர்ட், சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட். இந்த பிளான்களின் விபரங்களை கீழே காணலாம்.
- பிளோட்டர் இன்சூரன்ஸ் தொகை இதில் ரூபாய் 15 லட்சம் வரை.
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத 141 டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- மைனர் நோயாளியுடன் உடனிருப்பவர்க்கு தினசரி கேஷ் அலவன்ஸ் உண்டு.
- பிளான் டைப் பொறுத்து ரூபாய் 1000-த்தில் இருந்து 3000 வரை அவசர ஆம்புலன்ஸ் கட்டணம் கவர் செய்யப்படும்.
- தாய்மை பேற்று காலத்துக்கு முன்பும் பின்பும் ஆகும் செலவுகள் கவர் செய்யப்படும்.
- அட்வான்ஸ்ட் பிளான்களில் பல் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை செலவுகளுக்கு கவர் உண்டு.
- அட்வான்ஸ்ட் பிளான்களில் மருத்துவரின் பிரெஸ்கிரிப்ஷன் மற்றும் அறிவுரைப்படி செய்யும் கண்ணாடி, காண்டாக்ட்லென்ஸ், ஹியரிங் எயிட், ப்ரோஸ்த்தெடிக் கருவிகள் போன்ற எல்லா செலவுகளும் கவர் செய்யப்படும்.
- சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட் பிளான்களில் வீட்டில் இருந்து செய்யும் சிகிச்சை செலவுகளுக்கு கவர் உண்டு.
- பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை உபயோகித்தால் தினசரி கேஷ் அலவன்ஸ் உண்டு.
- சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட் பிளான்களில் தாய்மை பேற்று செலவுகள் கவர் செய்யப்படும்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் 2 குழந்தைகளுக்கு 3 மாதம் முதல் 25 வயது வரை கவர் உண்டு.
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் கவர் உண்டு.
- 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாலிசி எடுக்கும் முன் ஹெல்த் செக் அப் தேவை.
-
- இது பட்டியல் இடப்பட்ட ஆபத்தான நோய்களுக்கான நிலையான நன்மைகள் கொண்ட ஒரு பாலிசி. இதில் இன்சூரன்ஸ் தொகையை வசதிப்படி நிர்ணயம் செய்து கொள்ளும் வசதிகள் உண்டு. பிளான் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- பல ஆபத்தான நோய்களுக்கு மொத்தமாக தொகை (லம்ப் சம்) கிடைக்கும்.
- ரூபாய் 3 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை இன்சூர் செய்து கொள்ளலாம்.
- ஸ்டாண்டர்ட் பிளான், அட்வான்ஸ்ட் பிளான் என்று 2 விதமான பிளான்கள் இதில் உண்டு. ஸ்டாண்டர்ட் பிளான் 10 ஆபத்தான நோய்களையும், அட்வான்ஸ்ட் பிளான் 12 ஆபத்தான நோய்களையும்கவர் செய்கின்றன. இத்துடன் ஆம்புலன்ஸ் கட்டணம் ரூபாய் 1000 உண்டு.
- கீழ்க்கண்ட ஆபத்தான நோய்கள் ஸ்டாண்டர்டு பிளானில் கவர் செய்யப்படுகின்றன:
- குறிப்பிட்ட அளவு தீவிரமான கான்செர், நிரந்தர அறிகுறிகள் ஏற்படுத்தும் ஸ்ட்ரோக், குறிப்பிட்ட அளவு தீவிரமான முதல் ஹார்ட் அட்டாக், ஓப்பன் செஸ்ட் சி ஏ பி ஜி, தொடர்ந்த டயாலிசிஸ் தேவைப்படும் கிட்னி பெய்லியர், விடாப்பிடியான அறிகுறிகளுடன் கூடிய மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ், பெரிய உறுப்பு/போன் மாரோ மாற்று அறுவை சிகிச்சை, உடல் உறுப்புகளில் நிரந்தர முடக்கு வாதம், அயோர்ட்டா சர்ஜரி, பிரைமரி பல்மனரி ஆர்டீரியல் ஹைப்பர்டென்ஷன்
- அட்வான்ஸ்ட் பிளான் மேற்கண்ட நோய்களோடு பார்கின்சன்ஸ் நோய், மோட்டார் நியூரான் நோய் (நிரந்தர அறிகுறிகளுடன்) இவற்றையும் கவர் செயகிறது.
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
தகுதிகள்
- 5 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
சோழா ஹாஸ்பிடல் டெய்லி கேஷ் அலவன்ஸ்
- பாலிசிதாரர் மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்கும் காலத்தில் அவருடைய குடும்பத்தின் நிதி தேவைகளுக்காக இந்த பிளான் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கிறது. இது 6 வகையான பிளான்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரங்களை கீழே காணலாம்.
- பாலிசிதாரர் நோய்வாய்ப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் ஒவ்வொரு தொடர்ச்சியான மற்றும் நிறைவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்கும் தினசரி கேஷ் தொகை தரப்படும்.
- பாலிசிதாரர் ஐ.சி.யு வில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் ஒவ்வொரு தொடர்ச்சியான மற்றும் நிறைவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்கும் தினசரி கேஷ் தொகை 2 மடங்காக தரப்படும்.
- பாலிசிதாரர் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் சிகிச்சையில் இருந்தால் உடல் தேறும் பெனிபிட்டாக ஒரு மொத்தமான தொகை (lump sum) தரப்படும்.
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
- பாலிசி தரப்படும் நேரத்தில் ப்ரீ இன்சூரன்ஸ் ஹெல்த் செக் அப் செலவுகள் 50% திருப்பி தரப்படும்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் ஒரு குழந்தைக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
- இதில் பாலிசிதாரர், வாழ்க்கைத்துணை, சார்ந்துள்ள குழந்தைகள், சார்ந்துள்ள பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் அனைவருக்கும் கவர் உண்டு.
-
- இந்த பிளான் பாலிசிதாரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி இன்சூரன்ஸ் தொகையுடன் கவரேஜ் தருகிறது விபரங்கள் கீழே
- இதில் ஸ்டாண்டர்ட், சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட் என்று 3 பிளான்கள் உள்ளன.
- ரூபாய் 3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை இன்சூர் செய்து கொள்ளலாம்
- 24 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க தேவையில்லாத 141 டே கேர் செயல்முறைகள் கவர் செய்யப்படும்.
- ஷேரிங் அறை எடுத்துக்கொண்டால் தினசரி கேஷ் அலவன்ஸ் கிடைக்கும்.
- ஒவ்வொரு கிளைம் பிரீ வருடத்துக்கும் 5% தொடர் போனஸ் உண்டு (இன்சூரன்ஸ் தொகையில் அதிக பட்சம் 50% வரை).
- மைனர் நோயாளியுடன் உடனிருப்பவர்க்கு சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட் பிளானில் தினசரி மைனர் அக்கம்பெனிமென்ட் அலவன்ஸ் உண்டு.
- ஒவ்வொரு இரண்டு கிளைம் பிரீ வருடங்களுக்கும் இலவச ஹெல்த் செக் அப் மற்றும் கண் பரிசோதனை உண்டு.
- அவசர கால ஆம்புலன்ஸ் கட்டணங்களுக்கு கவர் உண்டு.
- வீட்டில் இருந்து எடுக்கும் சிகிச்சைகளுக்கு சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட் பிளான்களில் கவர் உண்டு.
- சுப்பீரியர் மற்றும் அட்வான்ஸ்ட் பிளான்களில் தாய்மை பேற்று கவர் உண்டு.
- ஆயுர்வேதிக் சிகிச்சை மற்றும் பல் சிகிச்சை செலவுகளுக்கு அட்வான்ஸ்ட் பிளானில் கவர் உண்டு
- மூக்கு கண்ணாடி, ஹியரிங் எயிட் மற்றும் இது போன்ற கருவிகளுக்கு அட்வான்ஸ்ட் பிளானில் கவர் உண்டு,
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக் கொள்ளலாம்,
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் ஒரு குழந்தைக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
-
- இந்தப் பிளான் பிளோட்டிங் தொகை அடிப்படையிலோ அல்லது தனி நபர் இன்சூரன்ஸ் தொகை அடிப்படையிலோ அதிக மருத்துவ செலவுகளுக்கு கூடுதலான கவர் தருகிறது. விபரங்கள் கீழே:
- இதில் 7 விதமான பிளான்கள் உள்ளன. பல வகையான இன்சூரன்ஸ் தொகை மற்றும் டிடக்டபிள் காம்பினேசன் உடன் ஒவ்வொரு நபரின் தேவைக்கு தகுந்தாற்போல் இதில் பிளான்கள் உள்ளன.
- மருத்துவ மனையில் சேர்வதற்கு முன்பும், டிஸ்சாரஜ் ஆன பின்பும் முறையே 60 மற்றும் 90 நாட்கள் செலவுகள் கவர் செய்யப்படும்.
- மருத்துவமனை செலவுகள் கவர் செய்யப்படும்.
- ஒவ்வொரு மருத்துவமனை அட்மிஷனுக்கும் அவசர ஆம்புலன்ஸ் கட்டணம் ரூபாய் 3000 வரை கவர் செய்யப்படும்.
- வாழ்நாள் முழுதும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
தகுதிகள்
- 18 வயதில் இருந்து 65 வயது வரை கவரேஜ் உண்டு.
- பெற்றோர்களில் ஒருவர் பிளானில் பங்கேற்கும் பட்சத்தில் ஒரு குழந்தைக்கு 3 மாதம் முதல் 26 வயது வரை கவர் உண்டு.
- 55 வயது வரையிலும் அதற்கு மேலும் மெடிக்கல் செக்கப் தேவை இல்லை.
சோழா எம் எஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் கிளைம் செய்வது எப்படி?
கேஷ் லெஸ் கிளைம்:
இதில் இன்சூரன்ஸ் கம்பெனி நேரடியாக மருத்துவமனைக்கு பணம் செட்டில் செய்யும். அதன் வழிமுறைகள் கீழே:
திட்டமிடப்பட்ட மருத்துவமனையில் சேருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு (எமெர்ஜென்சியாக இருந்தால் 48 மணி நேரத்துக்கு முன்பு) சோழா ஹெல்ப் லைன் எண்ணை அழைத்து பாலிசி எண், பெயர், நோயின் விபரங்கள், மருத்துவமனையில் சேரும் நேரம் மற்றும் தேதி, தொடர்பு விபரங்கள் ஆகியவற்றை கொடுக்கவேண்டும். டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் மருத்துவமனை தேவைப்பட்ட எல்லா டாக்குமெண்ட்களையும் சோழாவின் ஒப்புதலுக்கு அனுப்பும். சோழா அவற்றை சரிபார்த்துவிட்டு மருத்துவமனைக்கு கிளைம் செட்டில் செய்யும்.
ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம்:
இதில் பாலிசிதாரர் மருத்துவமனைக்கு நேரடியாக பணம் செட்டில் செய்துவிட்டு பின்னர் இன்சூரன்ஸ் கம்பெனியில் கிளைம் செய்து கொள்ளலாம்.
மருத்துவமனையில் சேருவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு சோழாஹெல்ப் லைன் எண்ணை அழைத்து விபரங்கள் கொடுக்கவேண்டும். பின்பு பாலிசிதாரரை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு எல்லா செலவுகளுக்கும் நேரடியாக மருத்துவமனைக்கு பணம் செலுத்தவேண்டும். டிஸ்சார்ஜ் ஆகும்போது எல்லா டாக்குமெண்ட்ஸ், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ், இன்வாய்ஸ், டிஸ்சார்ஜ் செர்டிபிகேட் இவற்றின் ஒரிஜினலை பெற்றுக்கொள்ளவேண்டும். 30 நாட்களுக்குள் அவற்றை இன்சூரன்ஸ் கம்பெனியிடம் சேர்ப்பிக்க வேண்டும். பின்னர் கிளைம் பார்மை பூர்த்தி செய்து அத்துடன் மருத்துவமனையின் லெட்டர் ஹெட் இல் டிஸ்சார்ஜ் சம்மரி மற்றும் டிரீட்மென்ட் விபரங்களுடன் மருத்துவரது கையொப்பம் மற்றும் சீல் உடன் பெறவேண்டும்.
மருத்துவமனையின் ஒரிஜினல் மெயின் பில் (செலவு விபரங்களுடன்) ஒரிஜினல் பேமென்ட் ரசீது, இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்ஸ், பார்மசி பில்ஸ் (ப்ரிஸ்கிரிப்சின் உடன் ), ஸ்டிக்கர்ஸ் மற்றும் இன்வாய்ஸ், சாலை விபத்தாக இருக்கும் பட்சத்தில் எப்.ஐ.ஆர். நகல் அல்லது மெடிகோ லீகல் செர்டிபிகேட் மற்றும் பாலிசிதாரரின் ஐ.டி மற்றும் ரெசிடென்ஸ் ப்ரூப் இவற்றை தயார் செய்ய வேண்டும். கிளைம் அப்ரூவ் ஆன பிறகு பாலிசிதாரருக்கு பணம் செட்டில் செய்யப்படும்.
அவசரங்களில்:
அவசர நிலையாக இருக்கும் பட்சத்தில் அந்த நிலை பாலிசியில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் சேர்ந்த 24 மணி நேரத்துக்குள் ப்ரீ ஆத்தரெய்ஸ்டு பார்ம் பூர்த்தி செய்து இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுக்க வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் எப்படி வாங்குவது மற்றும் புதுப்பிப்பது?
இன்சூரன்ஸ் கம்பனியின் சேல்ஸ் ஹெல்ப் லைன் எண்ணை அழைத்து அதன் மூலம் பாலிசி வாங்கலாம். எஸ்.எம்.எஸ் மூலமும் வாங்கலாம். கம்பனி வெப்சைட் சென்று ஆன்லைன் மூலம் வாங்கலாம். கம்பெனியின் ஏதாவது ஒரு கிளைக்கு சென்று அதன் மூலமும் மற்றும் ஏஜென்ட் மூலமும் வாங்கலாம்.
ரெனீவல்:
பாலிசியை ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம்.
லாக்-இன் மற்றும் பாஸ்வர்ட் உடன் ஈ-போர்ட்டலில் லாக் இன் செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் பாலிசி புதுப்பிக்கப்படும்.
தொடர்பு விபரங்கள்:
- சோழா எம் எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் சென்னை ஹெச்.ஓ (H.O.)
புது எண் 2, பழைய எண் 234, டேர் ஹவுஸ், 2ஆவது தளம், N.S.C. போஸ் சாலை, பாரிமுனை, சென்னை- 600 001.
- ஹரிநிவாஸ் டவர்ஸ், எண் 163, முதல் மற்றும் 2 ஆம் தளம், தம்பு செட்டி தெரு, ஜார்ஜ் டவுன், சென்னை - 600 001.
- புது எண்: 319, பழைய எண்: 154, 2ஆவது தளம், ஷா வாலஸ் கட்டிடம், தம்பு செட்டி தெரு, பாரிமுனை, சென்னை- 600 001.