பஜாஜ் அலயன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடட் பஜாஜ் ஃபைன்சர்வ் லிமிடட் மற்றும் அலயன்ஸ் எஸ் ஈ இவற்றுக்கிடையான ஒரு கூட்டுத்தொழில் முனைவு உலகத்தரம் வாய்ந்த புராடக்ட்கள், திறன் மிகுந்த சேவை, விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு இவற்றின் மூலம் இந்த நிறுவனம் காப்பீடு சந்தையில் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு வகைகளின் கீழ் அதுஒரு பரந்த வகையான இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்களைக் கொண்டிருக்கிறது. மருத்துவக் காப்பீட்டிலும், ஒரு தனிநபரின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பலவகை புராடக்ட்களை இந்த நிறுவனம் வழங்குகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு வகையிலான மருத்துவக் காப்பீடு திட்டங்களும் பஜாஜ் அலயன்ஸ் மெடிகல் இன்ஷ்யூரன்ஸால் அளிக்கப்படுகின்றன.
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்களை ஏன் வாங்க வேண்டும்?
பஜாஜ் அலயன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் உங்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சையை வழங்கி, அதன் மூலம் உங்களைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக வைக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த மருத்துவமனையிலும் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை நீங்களும் உங்கள் குடும்பமும் பெறுவதை இந்த மருத்துவக் காப்பீடு பாலிசி உறுதி செய்கிறது. இந்தக் காப்பீடு நிறுவனம் நாடு முழுவதும் 5000 +மருத்துவமனைகள் கொண்ட ஒரு பரந்த நெட்ஒர்க்கைக் கொண்டிருக்கிறது. பஜாஜ் அலயன்ஸின் பரந்த வகையிலான மருத்துவக் காப்பீடு திட்டங்கள் இந்த நவீன யுகத்தில் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.
அதன் கட்டுப்படியாகக் கூடிய ஆரோக்கியத் திட்டங்களாலும், பஜாஜ் அலயான்ஸின் அதிக கிளைம் செட்டில்மென்ட் விகிதமான 98% ஆலும், மிகக் குறைந்த கட்டணத்தில் மிக அதிக கவரேஜை வரும்பும் எவருக்கும் இந்தத் திட்டங்கள் மிகவும் தெளிவான தேர்வாகும். இந்த பாலிசிகள் தனிநபருக்கும், குடும்பத்துக்கும், மூத்த குடிமக்களுக்கும் ஆரோக்கிய கவரேஜை அளிக்கின்றன, அத்துடன் பிரிவு 80DD இன் கீழ் வருமான வரிச் சலுகையையும் அளிக்கின்றன.
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் ஒரு பார்வை
திட்டத்தின் பெயர்
குறைந்தபட்ச நுழைவு வயது
அதிகபட்ச நுழைவு வயது
ஆன்லைனில் கிடைக்கும் தன்மை
பஜாஜ் அலயான்ஸ் ஹெல்த் கார்ட் தனிநபர் பாலிசி
வயது வந்தவர்களுக்கு 18 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 3 மாதங்கள்
வயது வந்தவர்களுக்கு 65 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள்
ஆம்.
பஜாஜ் அலயன்ஸ் எக்ஸ்ட்ரா கேர் ஹெல்த் பிளான்
வயது வந்தவர்களுக்கு 18 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 3 மாதங்கள்
குழந்தைகளுக்கு 6 மாதங்கள்
குழந்தைகளுக்கு 18 ஆண்டுகள் (புரொபோஸர் ஆகவோ அல்லது சார்ந்தவர்களாகவோ)
வயது வந்தவர்களுக்கு 70 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் (பெற்றோர் இருவரும் கவர் செய்யப்படுகின்றனர்)
குழந்தைகளுக்கு: 18 ஆண்டுகள் (பெற்றோரில் ஒருவர் கவர் செய்யப்படுவார்)
குழந்தைகளுக்கு 25 ஆண்டுகள் (புரொபோஸர் ஆகவோ அல்லது சார்ந்தவர்களாகவோ)
ஆம்.
பஜாஜ் அலயன்ஸ் டாக்ஸ் கெயின் திட்டம்
18 ஆண்டுகள்
75 ஆண்டுகள்
இல்லை
பஜாஜ் அலயன்ஸ் பிரீமியம பர்ஸனல் கார்ட் பாலிசி
வயது வந்தவர்களுக்கு 18 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள்
வயது வந்தவர்களுக்கு 65 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 21 ஆண்டுகள்
ஆம்.
பஜாஜ் ஹெல்த் கேர் சுப்ரீம் திட்டம்
வயது வந்தவர்களுக்கு 18 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 3 மாதங்கள்
வயது வந்தவர்களுக்கு அதிகபட்ச வயது இல்லை
குழந்தைகளுக்கு 25 ஆண்டுகள்
இல்லை
பஜாஜ் அலயன்ஸ் தீவிர நோய்கள் மருத்துவக் காப்பீடு திட்டம்
வயது வந்தவர்களுக்கு: 18 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 6 ஆண்டுகள்
வயது வந்தவர்களுக்கு 65 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 21 ஆண்டுகள்
ஆம்.
பஜாஜ் அலயன்ஸ் ஸ்டார் பேக்கேஜ் ஹெல்த் பிளான்
வயது வந்தவர்களுக்கு 18 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 3 மாதங்கள்
வயது வந்தவர்களுக்கு 65 ஆண்டுகள்
குழந்தைகளுக்கு 25 ஆண்டுகள்
இல்லை
பஜாஜ் அலயன்ஸ் சில்வர் மருத்துவக் காப்பீடுதிட்டம்
46 ஆண்டுகள்
70 ஆண்டுகள்
ஆம்.
*காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும் எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடின் சாதகங்களும், நன்மைகளும்
தி பஜாஜ் அலயன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி மருத்துவக் காப்பீடு தொழிலின் லீடர் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திடமிருந்து காப்பீடு திட்டங்களை வாங்கும்போது, அது அவர்களுக்கு சற்று அதிக நன்மைகளை அளிக்கிறது. பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்களை வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் கிளைம்கள் ரொக்கமில்லா கிளைம்களாக இருந்தால், ஒரு மணி நேரத்துக்குள் அங்கீகரிக்கப்படுகின்றன.
பஜாஜ் அலயன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி நாடு முழுவதும் 4000+ மருத்துவமனைகள் மற்றும் 1200+ டயக்னாஸ்டிக் கிளினிக்குகள் இவற்றுடன் தொடர்பு வைத்துள்ளது.
கிளைம் செட்டில்மென்ட்டுக்கு 24*7 தொலைபேசி உதவி வசதி உள்ளது.
மருந்துகள், ஓ பி டி செலவுகள் முதலியனவற்றில் 30% வரை சேமிப்பு பெற வகை செய்யும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை பஜாஜ் அலயன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளின் பட்டியலில் சிலவற்றைக் குறிப்பிட வேண்டுமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட அவுட்லெட்களில் ஓ பி டி தள்ளுபடிகள், பெதாலஜி, ரேடியாலஜி, வெல்னெஸ் சோதனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றில் தள்ளுபடிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவுட்லெட்களில் இவை தொடர்பான ஆஃபர்கள் போன்றவை அடங்கும்.
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு பாலிசிகள் பின்வரும் கவரேஜை அளிக்கின்றன;
தனிநபர்
₹ 1.5 - 50 லட்சம்
ஆயுட்காலம் முழுவதும்
குழந்தைகள் - 3 மாதங்கள் வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
கிடைக்கிறது
பஜாஜ் அலயன்ஸ் ஹெல்த் கார்ட் தனிநபர் பாலிசி பின்வரும் அம்சங்களுடன் தனியபர்களின் மருத்துவமனை சிகிச்சைச் செலவுகளை கவர் செய்கிறது.
குழுவில் சேர்க்கப்பட்டுள்ள 4000 மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சை பெறும் வசதி
மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செவுகள் முறையே 60 நாட்களும், 90 நாட்களும் கவர் செய்யப்படுகின்றன.
அவசர கால ஆம்பலன்ஸ் கட்டணங்கள் மற்றும் 130 டே கேர் சிகிச்சைகளும் கவர் செய்யப்படுகின்றன.
நிறுவனத்துக்கு உள்ளேயே இருக்கும் ஆரோக்கிய நிர்வாகக் குழு.
கிளைம் இல்லாததற்கான 10% கூட்டப்பட்ட போனஸ் அதிகபட்சம் 50% வரை.
ஆரோக்கிய திட்டம் ஆயுட்காலம் முழுவதும் புதுப்ப்பிக்கப்படக் கூடிய வசதி.
தகுதி
18 - 65 ஆண்டுகள் வயதுள்ள புரொபோஸர் அல்லது அவரது வாழ்க்கைத் துணைவர் மற்றும் 3 மாதங்கள் முதல் 25 ஆண்டுகள் வரை வயதுள்ள குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுவார்கள்.
குழந்தைகள் - 3 மாதங்கள் வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
கிடைக்கிறது
பஜாஜ் ஹெல்த் கார்ட் குடும்ப ஃப்ளோட்டர் ஆப்ஷன் திட்டம் நீங்கள், உங்கள் வாழ்க்கைத் துணைவர், குழந்தைகள் மற்றும் பெற்றோர் என்ற உங்கள் மொத்தக் குடும்பத்தையும் கவர் செய்யும் விதத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம்.
இந்தத் திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:
மருத்துவமனை சிகிச்சையின்போதான மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும்.
மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செவுகள் முறையே 60 நாட்களும், 90 நாட்களும் கவர் செய்யப்படுகின்றன.
அவசர கால ஆம்பலன்ஸ் கட்டணங்கள் கவர் செய்யப்படுகின்றன.
நிறுவனத்துக்கு உள்ளேயே இருக்கும் ஆரோக்கிய நிர்வாகக் குழு.
4 கிளைம் இல்லாத ஆண்டுக் காலத்துக்குப் பிறகு புரொபோஸர் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு இலவச மருத்துவப் பரிசோதனை.
கிளைம் இல்லாததற்கான 10% கூட்டப்பட்ட போனஸ் அதிகபட்சம் 50% வரை.
பஜாஜ் அலயன்ஸ் எக்ஸ்ட்ரா கேர் ஹெல்த் பிளான் இப்போது இருக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கவரை குறைந்த கட்டணங்களில் அதிகரித்துக் கொள்வதற்காக வாங்கப்படலாம்.
Tஅம்சங்களும், நன்மைகளும் பின்வருமாறு:
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டம் குறைந்த பிரீமியம்களில் கவரேஜ் தொகையை விரிவுபடுத்திக் கொள்ள வகை செய்கிறது.
மருத்துவமனை சிகிச்சையின்போதான மருத்துவச் செலவுகள் கவர் செய்யப்படும்.
மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செவுகள் முறையே 60 நாட்களும், 90 நாட்களும் கவர் செய்யப்படுகின்றன.
அவசர கால ஆம்பலன்ஸ் கட்டணங்கள் கவர் செய்யப்படுகின்றன.
55 வயது வரை மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை.
கிளைம்கள் இருந்தால், திட்டத்தில் வகுக்கப்பட்ட குறைத்துக் கொள்ளப்பட வேண்டிய தொகைக்குக் கூடுதலான தொகை பஜாஜ் மருத்துக் காப்பீடு பாலிசியால் கொடுக்கப்படும்.
தகுதி
18 - 70 ஆண்டுகள் வயதுள்ள தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளைப் பொருத்தவரை, பெற்றோர் இருவரும் கவர் செய்யப்பட்டால் வயது வரம்பு 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே நிறுவனத்தால் கவர் செய்யப்பட்டிருந்தால் 6 -18 ஆண்டுகள். 18 - 25 ஆண்டுகள் வயதுள்ள குழந்தைகள் புரொபோஸராகவோ, சார்ந்தவராகவோ இருக்கலாம்.
குழந்தைகள் - 5 ஆண்டுகள் வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
N/A
பஜாஜ் அலயன்ஸ் பிரீமியம் பர்ஸனல் கார்ட் பாலிசி புரொபோஸர் அல்லது காப்பீடு பெற்ற அவர் குடும்பத்துக்கு விபத்து காரணமாக ஏற்படும் செலவுகளை கவர் செய்கிறது.
அம்சங்களும், நன்மைகளும் பின் வருமாறு:
பஜாஜ் அலயன்ஸ் பிரீமியம் பர்ஸனல் கார்ட் பாலிசி நிரந்தர மொத்த செயலிழப்பு, நிரந்தர பகுதி செயலிழப்பு தற்காலிக மொத்த செயலிழப்பு, தற்காலிக பகுதி செயலிழப்பு மற்றும் விபத்தினால் ஏற்படும் மரணம் ஆகியவற்றை கவர் செய்கிறது.
இந்த பஜாஜ் ஆரோக்கிய திட்டம் மருத்துவனையில் தங்கி இருந்ததற்கான அலவன்ஸ் மற்றும் விபத்துக்கான மருத்துவனை சிகிச்சை செலவுகள் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடனும், 1200 டயக்னாஸ்டிக் கிளினிக்குகளுடனும் தொடர்பு வைத்துள்ளது, மதிப்புக் கூட்டுச் சேவைகளையும் வழங்குகிறது.
நிறுவனத்துக்கு உள்ளேயே இருக்கும் ஆரோக்கிய நிர்வாகக் குழு.
கிளைம் இல்லாததற்கான 10% கூட்டப்பட்ட போனஸ் அதிகபட்சம் 50% வரை.
தகுதி
18 - 65 ஆண்டுகள் வயதுள்ள புரொபோஸர அல்லது அவரது வாழ்க்கைத் துணைவர,் மற்றும் 5 முதல் 21 ஆண்டுகள் வயதுள்ள சார்ந்திருக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படலாம்.
₹ 1 - 50 லட்சம் (6 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள் வரை வயதுள்ளவர்களுக்கு)
ஆயுட்காலம் முழுவதும்
குழந்தைகள் - 6 ஆண்டுகள் வயது வந்தோர் - 18 ஆண்டுகள்
N/A
பஜாஜ் அலயன்ஸ் தீவிர நோய்கள் மருத்துவக் காப்பீடு திட்டம் முன்பே கண்டறியப்பட்ட தீவிர நோய்களுக்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டது, இந்தத் திட்டத்தின் வீச்சுக்குள் கவர் செய்யப்பட்டுள்ள நோய் புரொபோஸருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்ட உடனேயே ஒரு மொத்தத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:
இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட்டுள்ள ஒரு தீவிர நோய் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டு, நோய் கண்டறிதலுக்குப் பிறகு அவர் குறைந்தது 30 நாட்களாவது உயிர் வாழ்ந்தால் ஒரு மொத்தத் தொகை அவருக்கு வழங்கப்படுகிறது
உடல் உறுப்பு தானம் அளிப்பவர் செலவுகளும் கவர் செய்யப்படுகின்றன.
காப்பீட்டுத் தொகை 1 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை வேறுபடும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்பட்டுள்ள நோய்களில் புற்றுநோய், கரோனரி அர்ட்டரி பைபாஸ் அறுவை சிகிச்சை, சிறுநீரகம் செயலிழப்பு, முக்கிய உறுப்பு மாற்றம், ஸ்ட்ரோக், அவோர்ட்டா கிராஃப்ட் சர்ஜரி, பிரைமரி புல்மோனரி ஆர்ட்டீரியல் ஹைப்பர்டென்ஷன், மல்ட்டிபிள் ஸ்க்லராஸிஸ், உறுப்புகள் நிரந்தரமாகச் செயலிழந்து போதல் ஆகியவை அடங்கும்.
நிறுவனத்துக்கு உள்ளேயே இருக்கும் ஆரோக்கிய நிர்வாகக் குழு.
தகுதி
6 - 65 ஆண்டுகள் வயதுள்ள தனிநபர்கள் இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
பஜாஜ் அலயன்ஸ சில்வர் மருத்துவக் காப்பீடு திட்டம் அடிக்கடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றின் அம்சங்கள் வருமாறு:
மருத்துவமனை சிகிச்சைச் செலவுகள் மற்றும் அனுமதிக்கப்படக் கூடிய மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளில் 3% இந்தத் தட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுகின்றன.
அவசர கால ஆம்பலன்ஸ் கட்டணங்கள் கவர் செய்யப்படுகின்றன.
முன்பே இருக்கும் நோய்கள் பஜாஜ் அலயன்ஸ் திட்டத்தின் 2-ஆவது ஆண்டிலிருந்து 50% கவரேஜுடன் கவர் செய்யப்படுகின்றன.
ரொக்கமில்லா வசதி, விரைவான கிளைம் செட்டில்மென்ட்டுடன்
நிறுவனத்துக்கு உள்ளேயே இருக்கும் ஆரோக்கிய நிர்வாகக் குழு.
போனஸ் மற்றும் குடும்பத் தள்ளுபடி 5% உம் கிடைக்கின்றன.
தகுதி
கவரேஜ் 46 ஆண்டுகளிலிருந்து 75 ஆண்டுகள் வரை அளிக்கப்படுகிறது, நிழைவு வயது 70 ஆண்டுகள் என்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
நுழைவுக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் புரொபோஸரின் செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும், புதிய பாலிசி ஏற்றுக் கொள்ளப்பட்டால் இவை திரும்ப அளிக்கப்படும்.
ஃபேமிலி ஃப்ளோட்டர் விருப்பத் தேர்வுடனான பஜாஜ் ஹெல்த் கேர் சுப்ரீம் திட்டம் விரிவான கவரேஜை அளிக்கிறது.
இந்தத் திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:
காப்பீட்டுத்தொகை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சம் வரை வேறுபடுகிறது.
அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை, ஆயுட்காலம் முழுவதும் புதுப்பிக்கப்படலாம்.
அறை வாடகை அல்லது பிற செலவுகளுக்கான எந்த வரம்பும் இல்லாமல் மருத்துவமனைச் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.
சாலை ஆம்பலன்ஸ் மற்றும் விமான ஆம்பலன்ஸ் செலவுகளும் கவர் செய்யப்படுகின்றன.
டே கேர் வழிமுறைகள் வரம்பு இல்லாமல் கவர் செய்யப்படுகின்றன.
மருத்துவமனை சிகிச்சைக்கான கவரேஜ் தீர்ந்து விட்டால் காப்பீட்டுத் தொகை 100% திரும்ப அளிக்கப்படும் என்ற காப்பீட்டுத் தொகை திரும்ப அளிக்கப்படுதல் அம்சங்கள்
மகப்பேறு நன்மை, வெளி-நோயாளியாக செலவுகள், குணமாதல் நன்மை, ஃபிஸியோதெரபி செலவுகள் மற்றும் உடல் உறுப்பு தானம் அளித்தவர் செலவுகள் ஆகிவை கவர் செய்யப்படுகின்றன.
ஆயுர்வேத அல்லது ஹோமியோபதி மருத்துவமனை சிகிச்சைகளுக்கு உள் வரம்புகள் எதுவும் இல்லை.
புதுப்பித்தலின்போது நோய்த் தடுப்புக்கான இலவச வருடாந்தர உடல்நலப் பரிசோதனைகள்
தீவிர நோய்கள், மருத்துவமனை தினசரி ரொக்க அலவன்ஸ் மற்றும் தனிநபர் விபத்து கவரும் வழங்கப்படுகிறது.
கிளைம் இல்லாததற்கான 10% கூட்டப்பட்ட போனஸ் அதிகபட்சம் 50% வரை.
தகுதி
புரொபோஸர், வாழ்க்கைத் துணைவர் மற்றும் பெற்றோருக்கு நுழைவு வயது18 ஆண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை, குழந்தைகளுக்கு 3 மாதங்கள் முதல் 25 ஆண்டுகள் வரை.
சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு 35 வயது வரை புதுப்பித்தல் உண்டு, அதற்குப் பிறகு, அவர்கள் தனி பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவமனை தினசரி அலவன்ஸ் திட்டம் காப்பீடு பெற்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒவ்வொரு நாளுக்கும் அவருடைய குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக குறிப்பிட்ட ஒரு தொகையை ஒவ்வொரு நாளும் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:
ஒரு நாளுக்கான கவரேஜ் தொகை புரொபோஸரால் தேர்ந்தெடுக்கப்பட்டபடி ரூ. 500 முதல் ரூ. 2,500 வரை இருக்கும்.
30 நாட்களுக்கோ 60 நாட்களுக்கோ கவரேஜ் எடுத்துக் கொள்ளப்படலாம்.
இந்தத் திட்டம் குறிப்பிட்ட நபர், அவருடைய வாழ்க்கைத் துணைவர் மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளை கவர் செய்கிறது.
பஜாஜ் அலயன்ஸ் ஸ்டார் பேக்கேஜ் ஹெல்த் பிளான் எல்லாவித மருத்துவ அவசர நிலைகளையும், பிற அவசர நிலைகளையும் கவர் செய்கிறது.
இந்தத் திட்டத்தின் அம்சங்கள் வருமாறு:
பஜாஜ் அலயன்ஸ் ஸ்டார் ஹெல்த் திட்டம் ஒரு குடும்ப ஃப்ளோட்டர் பாலிசியாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 8 பிரிவுகளில் விரிவான கவரேஜை வழங்குகிறது, இதில் அடங்குபவை
1) ஹெல்த் கார்ட், இது தீவிர விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கு எதிராக குடும்பத்தை கவர் செய்கிறது. 2) மருத்துவமனை ரொக்கம், மருத்துவமனை சிகிச்சையின்போது, இது தினசரி ரொக்கத்தை அளிக்கிறது. 3) தீவிர நோய்கள், தீவிர நோய் கண்டறியப்பட்டால், ஒரு மொத்தத் தொகையை இது வழங்குகிறது. 4) தனிநபர் விபத்து, விபத்து காரணமான இறப்பையும், செயலிழப்பையும் இது கவர் செய்கிறது. 5) கல்வி உதவி, காப்பீடு பெற்ற நபருக்கு விபத்தினால் இறப்பு அல்லது நிரந்தர மொத்த செயலிழப்பு ஏற்பட்டால், குழந்தையின் கல்விக்காக ஒரு மொத்தத் தொகையை இது வழங்குகிறது. 6) ஹவுஸ்ஹோல்ட் கன்டென்ட்ஸ், இது வீட்டுப் பொருட்களுக்கு திருட்டு அல்லது கொள்ளைக்கு எதிரான கவர் அளிக்கிறது. 7) டிராவலிங் பேகேஜ், பயணத்தின்போது லக்கேஜை இது கவர் செய்கிறது. 8) ப்ப்ளிக் லயபிலிடி, மூன்றாம் நபருக்கு ஏற்படக் கூடிய உடற்காயம் அல்லது மரணத்துக்கான சட்டரீதியான பொறுப்புத் தொகையை இது கவர் செய்கிறது.
தகுதி
18 - 45 ஆண்டுகள் வரை வயதுள்ள சுய புரொபோஸர்கள் கவர் செய்யப்படுகிறார்கள், பெற்றோர் இருவுரும் நிறுவனத்தால் கவர் செய்யப்பட்டிருந்தால் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை வயதுள்ள குழந்தைகள் கவர் செய்யப்படலாம், அல்லது பெற்றோரில் ஒருவர் கவர் செய்யப்பட்டிருந்தால், 6 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை வயதுள்ள குழந்தைகள் பஜாஜ் ஸ்டார் பேக்கேஜ் ஹெல்த் பாலிசியில் கவர் செய்யப்படலாம்
இந்த பஜாஜ் அலயன்ஸ் காப்பீடு திட்டம் கருப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், பெண் உறுப்பு புற்றுநோய், சர்விகல் புற்றுநோய், யுடரின்/எண்டோமென்ட்ரியல் புற்றுநோய், தீக்காயங்கள், ஃபலோபியன் டியூப் புற்றுநோய் மற்றும் பாரலிஸிஸ் அல்லது மல்டி-ப்ரௌமா போன்ற பெண்களுக்கு வரக் கூடிய 8 தீவிர நோய்களை கவர் செய்கிறது.
பிறந்ததிலிருந்தே இருக்கும் நோயாக இருந்தால் 50% காப்பீட்டுத் தொகை நன்மையையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
குழந்தைகளின் கல்வி போனஸ் மற்றும் வேலை இழப்பு கவரேஜ் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
திட்டத்தின் விவரங்கள்
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டர்
பஜாஜ் அலயன்ஸ் காப்பீடு பிரீமியம் கால்குலேட்டரை பயன்டுத்தி ஆன்லைனில் பிரீமியம் கணக்கிடுவது எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஆன்லைன் கால்குலேட்டரில் விண்ணப்பதாரரின் வயது, பாலிசி வகை, காலம், காப்பீட்டுத் தொகை போன்றவற்றை உள்ளிட வேண்டியதுதான். காப்பீடு நிறுவனத்தின் இணையதளம், policybazaar.com இரண்டிலுமே பிரீமியத்தைக் கணக்கிட முடியும். இது உங்கள் நேரத்தையும், சிரமத்தையும் மிச்சப்படுத்துவதுடன், உங்கள் பிரீமியம் கணக்கீட்டைத் துல்லியமானதாகவும் ஆக்கும்.
தி பஜாஜ் அலயன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனத்திலிருந்து மருத்துவக் காப்பீடு திட்டங்களை வாங்க விரும்பும்fநபர்களுக்கு மருத்துவக் காப்பீடு பிரீமியம் கணக்கிடல் வசதியை இந்த நிறுவனம் அளிக்கிறது. நிறுவனத்தின் கால்குலேட்டரைப் பயன்படுத்தி பிரீமியம் கணக்கிடப்பட்ட சில உதாரணங்கள் கீழே:
A தனக்காக ரூ. 4 லட்சம் மதிப்புக்கு ஒரு ஹெல்த் கார்ட் தனிநபர் தனிநபர் பாலிசிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புகிறார். அவருக்கு 30 வயது ஆகிறது, குறிப்பிட்ட கவரேஜுக்கு, ஆண்டு பிரீமியம் தொகை ரூ. 5,130 வருகிறது.
B தனக்காகவும், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தன் மனைவிக்காகவும் ஒரு திட்டத்தை வாங்க விரும்புகிறார்., தன்னையும், தன் மனைவியையும் ரூ. 5 லட்சத்துக்கு கவர் செய்யும் யோசனையுடன் அவர் பஜாஜ் அலயன்ஸை அணுகுகிறார். அவருக்கு வயது 32 ஆண்டுகள், அவர் மனைவியின் வயது 30 ஆண்டுகள். அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் ரூ. 9234 வருகிறது.
40 வயதான C க்கு அவர், 38 வயதான அவர் மனைவி மற்றும் முறையே 7 மற்றும் 12 வயதான அவருடைய குழந்தைகள் ஆகியோருக்கு ஓரு ஆரோக்கியத் திடம் தேவைப்படுகிறது. கேட்கப்பட்ட கவர் ரூ. 10 லட்சம், இதற்காக வசூலிக்கப்படும் பிரீமியம் ரூ. 21,826
இந்த அட்டவணை மேலே உள்ள விவரங்களை உடனடிப் பார்வைக்காக டேபுலேட் செய்கிறது.
விண்ணப்பதாரர்
விண்ணப்பதாரர் கவர் செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
காப்பீட்டுத் தொகை
பிரீமியம்
A
1
4 லட்சம்
5130
B
2
5 லட்சம்
9234
C
4
10 லட்சம்
21,826
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல்
பஜாஜ் அலயன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியால் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு இவை போன்ற பல்வேறு சானல்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளித்து உங்களைத் திரும்ப அழைக்கும்படி கோரலாம்.
பொருத்தமான திட்டங்களுக்கு எதிரே ‘இப்போது வாங்கவும்’ டேப் ஐ கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
கடைசியாக, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் கிளைகளுக்குச் சென்றோ, அல்லது ஒரு முகவரைத் தொடர்பு கொண்டோ தேவைப்படும் திட்டங்களை வாங்கலாம்.
*காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும் எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி வழங்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் விதிமுறைகளும், நிபந்தனைகளும் பொருந்தும்.
பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
விடை: பட்டியலிடப்பட்ட பயனர்கள் தங்கள் பாலிசியின் நிலையை ஆன்லைனில் உறுதி செய்யலாம். இவ்வாறு செய்வதற்கு, நீங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உங்கள் தனிப்பட்ட ஐ டி மற்றும் கடவுச் சொல் மூலம் லாகின் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பஜாஜ் அலயன்ஸ் இணையதளத்திலிருந்து காப்பீடு நிறுவனத்தின் ‘வாடிக்கையாளர் போர்ட்டல்’ என்ற மொபைல் செயலியை டவுன்லோட் செய்து பாலிசி விவரங்களை உள்ளிட்டு பாலிசி நிலையைச் சரிபார்க்கலாம்.
விடை: பஜாஜ் அலயன்ஸின் இணையதளத்தில் லாகின் செய்து மருத்துவக் காப்பீடு டேப் ஐ கிளிக் செய்யவும். இந்த டேப்-இல் ஹெல்த் டூல்ஸ் விருப்பத் தேர்வுகளின் கீழ், நெட்வொர்க் மருத்துவமனைகள் என்ற ஒரு விருப்பத் தேர்வை நீங்கள் பார்க்கலாம். அதில் பட்டியலிடப்பட்ட எல்லா மருத்துவமனைகளையும் நீங்கள் பார்க்கலாம். உங்களுக்கு மிக அருகாமையில் இருப்பதற்குச் செல்லவும்.
Aவிடை: பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஆன்லைனில் புதுப்பிப்பதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
படி 1: காப்பீடு நிறுவனத்தின் ஈ-போர்ட்டலில் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் மூலம் லாகின் செய்யவும்.
படி 2; கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் பாலிசியைத் தேர்வு செய்து, புதுப்பித்தல் கட்டணத்தைச் செலுத்த, செலுத்தல் முறையைத் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் செலுத்தல் முறைகள், டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் அல்லது இன்டர்நெட் பாங்கிங்
படி 3: ஆவணங்களைப் பராமரிப்பதற்காக, பிரீமியம் செலுத்தல் அல்லது புதுப்பித்தல் ரசீதை சேமிக்கவும், அல்லது பிரின்ட்அவுட் எடுக்கவும்
விடை: முறையாக நிரப்பப்பட்ட சரண்டர் படிவத்துடன் உங்கள் பாலிசி ஆணவத்தின் அசலை அருகாமையில் இருக்கும் காப்பீடு நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாலிசியை ரத்து செய்வது நிறைவடைந்திருந்தால், சிறிது காலத்தில், உங்கள் பாலிசி பிரீமியம் திரும்ப அளிக்கப்படுதல் துவக்கப்படும்.
விடை: பஜாஜ் அலயன்ஸ் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸின் மருத்துவமனை நெட்ஒர்க்கின் ஒரு பகுதியாக உள்ள மருத்துவமனைகளில் பஜாஜ் அலயன்ஸ் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் ரொக்கமில்லா வசதியை அளிக்கின்றன.
விடை: இந்த நேரத்தில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அது பற்றி நீங்கள் காப்பீடு நிறுவனத்துக்குத் தெரிவித்து, உங்கள் உறுப்பினர் எண், நீங்கள் சிகிச்சை பெறப் போகும் மருத்துவமனை எது என்பது போன்ற விவரங்களைத் தெரிவித்தால் மட்டும் போதும். பிறகு, காப்பீடு நிறுவனம் ரொக்கமில்லா சிகிச்சையைத் தொடங்கும்படி அந்த மருத்துவமனையிடம் தெரிவிக்கும்.
விடை: உங்கள் உறுப்பினர் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால், காப்பீடு நிறுவனத்தை 1800-22-5858 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைத்து தொலைந்ததைப் பற்றி உடனே தெரிவிக்க வேண்டும். தெரிவிக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் ஒரு டியூப்ளிகேட் உறுப்பினர் கார்டை காப்பீடு நிறுவனம் அளிக்கும். ஆயினும், இது கூடுதல் கட்டணத்துக்கு உட்பட்டது.
ஜனவரி 6, 2016. பஜாஜ் அலயன்ஸ் ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் காப்பீடை எளிதாகப் புரிந்து கொள்வதாக ஆக்க Google+ இல் தொடர்ந்து அமர்வுகளை நடத்தி வருகிறது. ச சிகுமார் அதிதாமு, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, நான்-மோட்டார் தெரிவித்துள்ளபடி, காப்பீடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதன் மூலம் பார்வையாளர்கள்/ வாடிக்கையாளர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகம் இவர்களுக்கிடையே ஆரோக்கியமான விவாதங்களை வளர்ப்பதையும் Google+ ஹேங்க் அவுட்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. பல்வேறு காப்பீடு பாலிசிகளின் முக்கியமான அம்சங்களையும், நிலையான பாதுகாப்புக்கு அவற்றை எப்படிப் பராமரிப்பது என்பதையும் விளக்க காப்பீடு நிறுவனம் Google+ ஹேங்க்அவுட்களில் இதுவரை 8 அமர்வுகளை நிகழ்த்தி இருக்கிறது.
மோட்டார், பயணம், ஆரோக்கியம், வீடு இவற்றுக்கான காப்பீடுக்கான புராடக்ட்கள் பற்றி பாலிசிதாரர்களை அறியச் செய்ய ட்விட்டர், முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் நிறுவனம் பிரசாரங்களை மேற்கொள்வதாக சசிகுமார் மேலும் கூறினார். காப்பீடு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பல்வேறு 1-நிமிடப் படங்களையும் கூட இிந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.