நாள்தோறும் ஏறி வரும் மருத்துவ செலவுகளில் இருந்து உங்களை காப்பாற்றவும் மருத்துவகட்டணங்கள் மற்றும் மருத்துவமனை செலவுகள் இவற்றை பற்றி கவலை கொள்ளாமல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின ருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை அளிக்கும் ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசி தேர்ந்து எடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.அது மட்டுமின்றி மருத்துவ காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது எந்த வகையான திட்டத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது அடுத்த ஒரு குழப்பமூட்டும் விஷயம்.
உங்கள் தேவையை நிறைவு செய்யக்கூடிய ஒரு தலை மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க பாலிசி பஜார் நிறுவனத்தில் இருக்கும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பும் அதன் பின்னரும் தேவைப்படும் அனைத்து மருத்துவ செலவுகள், பகல் நேர கவனிப்பு செலவுகள், கொரோனா சிகிச்சை, சிக்கலான நோய்களுக்கான மருத்துவம் போன்றவைகளில் இருந்து காப்பீடு அளிக்கும் பல மருத்துவ பாதுகாப்பு திட்டங்களை ஒப்பீடு செய்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற திட்டத்தை நீங்களே தேர்ந்து எடுக்க உதவுகிறோம்.
மருத்துவக்காப்பீட்டுதிட்ட த்தைதேர்ந்தெடுப்பதுஎவ்வாறு?
உங்கள் தேவை அனைத்தையும் நிறைவு செய்யும் ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்ய இயலாது. பல்வேறு வகையான மருத்துவ பாலிசிகள் இருந்தாலும் ஒவ்வொரு பாலிசியும் ஒரு தனித்துவப்பட்ட காப்பீட்டு வசதியை அளிக்கின்றன. அவற்றின் பலன்களையும் காப்பீட்டில் அடங்கியவை எவை மற்றும் விலக்கப்பட்டவை எவை என்பதை உறுதி செய்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யவேண்டும். ஆன்லைனில் தேடி தெரிந்துகொண்டோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் விசாரித்தோ உங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்ந்து எடுக்கலாம்.
ஒரு திட்டத்தை தேர்வு செய்ய நீங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை பற்றிய சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போதுமானதொகைக்குகாப்பீடுஎடுக்கவும்
அவசர மருத்துவ நெருக்கடியில் இருந்து உங்களை பாதுகாக்க தேவையான அதிக பாதுகாப்பு வசதிகளும் அதிக பட்ச காப்பீடு தொகையும் அளிக்ககூடிய ஒரு திட்டத்தையே தேர்ந்து எடுங்கள். பண வீக்கம் காரணமாக மருத்துவ செலவுகள் உயர்ந்து கொண்டே இருப்பதால், விலைவாசி உயர்வை ஈடு செய்ய தேவையான தொகை உங்களுக்கு அவசியம்.
தற்சமயம் ஒரு சாதாரண இருதய சிகிச்சைக்கு ரூ 4 முதல் ரூ 5 லக்ஷம் வரை தேவைப்படும் இது நடுத்தரவர்க குடும்பதிற்கு ஒரு பெரிய தொகையாகும். எனவே உங்கள் எதிர்கால மருத்துவ செலவுகளை சந்திக்க போதுமான தொகையை தேர்ந்து எடுப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
தேவைப்படும்சரியானபாதுகாப்புகளைஅளிக்கும்திட்டத்தைதேர்ந்துஎடுக்கவும்
தனி மனிதர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு தனி மனித மருத்துவ பாதுகாப்பு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உங்கள் குடும்பத்தில் அதிகமான நபர்கள் இருக்கும் சமயம், குடும்பத்தினர் அனைவரையும் பாதுகாக்க குடும்ப பிளோட்டர் திட்டத்தை தேர்ந்து எடுக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியே பாலிசி எடுக்க தேவையின்றி ஒரே பாலிசி மூலம் அனைவருக்கும் பாதுகாப்பு எடுக்க முடியும்.
இத்திட்டத்தின் ப்ரீமியம் தொகை தனி மனித பரீமியத்தொகையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு அதே சமயம் காப்பீட்டு தொகையையும் மிக அதிகம். முக்கியமாக இத்திட்டதை எந்த ஒரு நபரின் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்திக்கொள்ள இயலும் சற்று அதிக ப்ரீமியம் செலுத்தி நீங்கள் மூத்த குடிமக்களான உங்கள் பெற்றோர்களையும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள்செய்துள்ளபாதுகாப்பீட்டுதொகையைஅதிகரிக்
கும்வசதிஉள்ளதாஎன்றுதெரிந்துகொள்ளவும்
ஒவ்வொரு வருடமும் விலைவாசி ஏற்ற தாழ்வுடன் மாறிக்கொண்டே இருப்பதால் மருத்துவ கட்டணங்களும் அதையொட்டி மாறிக்கொண்டே இருக்கின்றன. குறித்த கெடுவிற்குள் பாலிசியை நீங்கள் புதுப்பிக்கும்போது தற்போதுள்ள திட்டத்தின் கீழ் “ நோ க்ளைம் போனஸ்” எதுவும் இருப்பின், காப்பீடு தொகையை அதிகரிப்பதன் மூலம் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு வெகுமதி அளிக்கிறது.
பாலிசிஎடுக்கும்சமயம்முன்இருக்கும்நோய்களுக்
கானகாத்திருப்புகாலத்தைசரிபார்க்கவும்
பாலிசி எடுக்கும் சமயம் உங்கள் உடலில் இருக்கும் நோய்கள் பற்றிய சட்ட திட்டங்கள் ஒவ்வொரு மருத்துவ பாதுகாப்பு திட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது பாலிசி எடுக்கும் சமயம் உங்கள் உடலில் முன்னரே இருக்கும் நோய்களுக்கு சிகிச்சை செலவுகள் முன்னர் குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
பல திட்டங்களில் இந்த காத்திருப்பு காலம் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரை இருந்தாலும், மெடி க்ளைம் போன்ற சில திட்டங்களில் குறைந்த காத்திருப்பு காலம் அளிக்கப்பட்டு உள்ளன. நீங்கள் பாலிசி வாங்கும் சமயம் , குறைந்த காத்திருப்பு காலம் இருக்கும் பாலிசியை தேர்வு செய்யவும்.
புதுப்பிக்கும்அதிகபட்சவயதுவரம்புஎன்னஎன்பதைதெரிந்துகொள்ளவும்
உங்கள் குடும்பதிற்கான மருத்துவ பாதுகாப்பு பாலிசியை தேர்வு செய்யும் சமயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமானது பாலிசி புதுப்பித்தல். அதிகமான பாலிசிகளை 65 வயது வரையே புதுப்பிக்க இயலும். சில பாலிசிகள் மட்டும் வாழ் நாள் வரை புதுப்பிக்கும் வசதியை அளிக்கின்றன. உங்கள் குடும்பத்தினரின் கடந்த கால உடல்நல சரித்திரத்தையும் உடல்நல அளவீடுகளையும் கருத்தில் கொண்டும் தகுந்த ஒன்றை தேர்வு செய்யவும்.
மிகஉயர்ந்தவிகிதாசாரத்தில்காப்பீட்டுகோரிக்கை
களைஅனுமதித்துள்ளகாப்பீட்டுநிறுவனம்
காப்பீட்டு அளிப்பு விகிதாச்சாரம் என்பது ஒரு நிறுவனத்தில் மொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட காப்பீட்டு கோரிக்கைகளில் எத்தனை காப்பீடுகள் வழங்கப்பட்டன என்பதாகும். இந்த விகிதாச்சாரம் அதிக அளவு இருக்கும் நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களையே எப்போதும்தேர்வு செய்யவும். காப்பீட்டு நிறுவனம் தகுந்த காரணம் இன்றி உங்கள் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்காது என்பதை இதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ள இயலும். காப்பீட்டு கோரிக்கையை சமர்ப்பிக்கும் சமயம் கவனமாக இருக்கவும். காப்பீட்டு கோரிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மற்றும் அவற்றை உறுதிசெய்ய தேவையான ஆதாரங்களையும் தவறாமல் இணைத்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
காப்பீட்டுகோரிக்கையைதடையின்றிபரிசீலிக்கும்செயல்முறை
இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மெண்ட் அதாரிட்டி அறிவுறுத்தலில் காப்பீட்டு கோரிக்கை பரிசீலிக்கும் செயல்முறை அனைத்து காப்பீட்டு நிறுவனங்களிலும் ஒன்று போலவே இருக்கும். நிறுவனங்களின் நிர்வாக அமைப்பையொட்டி சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம். பாலிசி வாங்கும் போது பணமில்லா காப்பீட்டு வசதி, மற்றும் காப்பீட்டு தொகையை உங்களுக்கு திரும்ப அளிக்கும் செயல்முறை இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம்.
பணமில்லா மருத்துவ சிகிச்சை
மருத்துவ பாதுகாப்பு திட்டம் குறிப்பிட்டமருத்துவ காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்பிலுள்ள மறுத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள உங்களுக்கு உரிமை அளிக்கிறது. வெவ்வேறு இடங்களில்இருந்து ஆவனங்களை சேகரித்து அவற்றை நிரப்பி பின்னர் சமர்ப்பிக்கும் துன்பங்களில் இருந்து உங்களை காப்பாற்ற ஒவ்வொரு மருத்துவ பாதுகாப்பு காப்பீட்டு நிறுவனமும் பணமில்லா சிகிச்சை திட்டத்தை அளிக்கின்றன. இந்த சலுகை அவற்றின் இணைப்பிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
காப்பீட்டு கோரிக்கை நடைமுறையை எளிதாக்கி பாலிசிதாரர்களுக்கு எந்த சிரமமும் இன்றி உதவுவதே பணமில்லா மருத்துவ உதவி திட்டமாகும். காப்பீட்டு படிவத்தை சமர்ப்பிக்குமுன் இணைப்பிலுள்ள மறுத்துவமனைகளின் பட்டியலை ஒப்பிட்டு பார்த்தபின் செய்வது நல்லது.
ப்ரீமியத்தொகையைஒப்பீட்டுபார்க்கதவறாதீர்கள்
பல்வேறு திட்டங்களையும் அவற்றின் பரீமியத்தொகையையும் ஒப்பீட்டு பார்ப்பது அவசியமான ஒன்று. மருத்துவ பாதுகாப்பு பாலிசிகளின் நன்மைகள் , சட்ட திட்டங்கள், ப்ரீமியம், உச்சபட்ச வரவுதொகை போன்றவற்றை ஒப்பீட்டு தெரிந்துகொள்ள பல காப்பீட்டு ஆன்லைன் விற்பனையாளர்கள் உள்ளனர். இவற்றை கருத்தில் கொள்ளாமல் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுப்பது நாமே துன்பத்தை வரவழைப்பது போன்றதாகும்.
மதிப்புரைகளைகவனிக்கவும்
ஆன் லைனில் மருத்துவ பாதுகாப்பு பாலிசிகளை வாங்கும் சமயம் வெவ்வேறு மருத்துவ பாதுகாப்பு நிறுவங்களை பற்றி மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை பரிசீலிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று. அவற்றின் நன்மை தீமைகளை பற்றிய கருத் துக்களின் ஒரு கலவையே அங்கு காணப்படும் மதிப்புரைகள் ஆகும். இவற்றை தெரிந்து கொள்வதின் மூலம் நீங்கள் ஒரு புரிதலுடன் நிலையான முடிவை எடுக்க முடியும்.
விலக்குகளைபடிக்கவும்
பல பாலிசிதாரர்கள் மருத்துவ பாதுகாப்பு பாலிசியில் வரையறுக்கப்பட்ட விலக்குகளை புறக்கணிப்பதால் எதிர்பாராதவற்றை சிக்கலை பின்னர் சந்திக்கின்றனர். ஒரு திட்டம் எவ்விதம் சில நோய்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதோ அதேபோன்று ஆரம்ப காலத்தில் ஹெர்னியா, கண்புரை, சைனசிடிஸ், இரப்பை, மூட்டு மாற்றம், போன்றவற்றிக்கு காப்பீடு அளிக்க மறுக்கவும் உரிமையுள்ளன. சில பாலிசிகளில் பல் மருத்துவ செலவுகள், எச் ஐ வீ மற்றும் எய்ட்ஸ், கண்கள் தொடர்புடைய மருத்துவ செலவுகள், எஸ்டிடி, அழகுபடுத்தும் அறுவைசிகிச்சை போன்றவை கட்டாய விலக்குகள் ஆகும். குறைந்த எண்ணிக்கையில் விலக்குகள் உள்ள திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
ஆட்ஆன்ரைடர்கள்/ சிக்கலானநோய்ரைடர்/ விபத்துரைடர்
திட்டமிடப்படாத மருத்துவ செலவுகளால் பொருளாதார நிலைமை சீர் கெடாமல் இருக்க சிக்கலான நோய் ரைடர் உங்களை பாதுகாக்கிறது. மேலும் சற்று ப்ரீமியம் செலுத்தி இந்த சிக்கலான நோய் ரைடர் ஐ நீங்கள் பெறலாம். இதனால் உயிர் கொல்லி நோய்களான கேன்சர், சிறுநீரக செயலிழப்பு, உடலில் உள்ள கட்டிகள் போன்றவற்றிற்கு மருத்துவ பாதுகாப்பு பெற முடியும்.
இந்தியாவில்உள்ளமருத்துவபாதுகாப்புதிட்டங்களின்நன்மைகள்
மருத்துவ பாதுகாப்பு திட்டங்கள் உங்கள் மருத்துவமனை செலவுகளுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்றாகும். நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலத்தில் அளிக்கப்படும் நிதி உதவியை தவிர மற்ற பல நன்மைகளையும் இந்தியாவில் உள்ள பல மருத்துவ பாதுகாப்பு திட்டங்கள் அளிக்கின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்
- பணமில்லா சிகிச்சை முறை : ஒரு மருத்துவ பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நீங்கள் அதன் இணைப்பிலுள்ள மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெறலாம். நீங்கள் உடனடியாக பணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லாததால் இது உங்களுக்கு ஒரு வரமாகும். பாதுகாப்பு எடுத்துக்கொண்ட நபர் மருத்துவ மனையில் சில தகவல்களை பூர்த்தி செய்து இந்த வசதியை பெறலாம். நீங்கள் கட்ட வேண்டிய தொகை சம்மந்தமானவற்றை காப்பீட்டு நிறுவனம் கவனித்துக்கொள்ளும்.
- தினசரி பண உதவி:சில மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலத்திற்கு தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கின்றன. இது நீங்கள் காப்பீடு செய்துள்ள தொகையை எந்த வகையிலும் பாதிக்காது. இந்த தொகையை குறிப்பிட்ட தினசரி வரம்பு வரை பெற்றுக்கொள்ளலாம். இவற்றை மருந்துகள் வாங்கவும் மற்ற மருத்துவ சம்பந்தப்பட்ட செலவுகளுக்கும் உபயோகிக்கலாம்.
- வரி சலுகைகள்: இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80 D யின் கீழ் பாதுகாப்பீடு செய்து கொண்டவர் மருத்துவ பாதுகாப்பு ப்ரீமியம் செலுத்திய தொகையை வரி சலுகையாக பெற்றுக்கொள்ளலாம். மருத்துவ பாதுகாப்பு ப்ரீமியம் செலுத்தும் தனி நபர் ரூ 25,000 வரையும் அவர் தன்னுடைய வயது முதிர்ந்த பெற்றோர்களுக்காக செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு ரூ 30,000 வரையும் வரி சலுகையாக பெற்றுக்கொள்ள இயலும்.
- உயிர்க்கொல்லி நோய் பாதுகாப்பு: வாழ்க்கை முறை நோய்கள் மிக கொடூரமானதும் சிகிச்சை செலவுகள் மிக விலை உயர்ந்தவையாகவும் இருக்கும். . சாதாரண வருமானம் உள்ள மனிதர்கள் இப்படிப்பட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகளை சமாளிக்க இயலாது. இப்படிப்பட்ட சிக்கலான நோய் காப்பீடு அடங்கிய மருத்துவ பாதுகாப்பு பாலிசியை ஒருவர் எடுத்திருந்தால், ஆய்வுறுதிக்கு பின்னர் சிகிச்சைக்காக அவர் செலவழித்த மருத்துவ செலவுகளுக்காக ஒரு மொத்த தொகை வழங்கப்படும். இது ஒரு ‘இணைத்துக்கொள்ளும் ரைடர்’ ஆக இருப்பதால், அதற்குரிய அதிகப்படியான ப்ரீமியம் செலுத்தி, இந்த சிக்கலான நோய்பாதுகாப்பு ரைடர் ஐ தங்கள் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில் இணைத்துக்கொள்ளாம்.
- மற்ற பிற நன்மைகள்: ஒரு அடிப்படை மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில் இடம் பெறாத முன் பாதுகாப்பு உடல் பரிசோதனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆய்வுறுதி போன்றவற்றை சில மருத்துவ பாதுகாப்பு நிறுவனங்கள் அளிக்கின்றன. கீழ் கண்ட நன்மைகளை அளிக்கும் இவை நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமான நகர்வாகும்.
- இலவச மருத்துவ பரிசோதனை
- மருத்துவருடன் இலவச மருத்துவ ஆலோசனை
- ஊட்டச்சத்து நிபுணருடன் ஆலோசனை
- மருத்துவ சேவை அளிப்பவர்களுடன் தொடர்பு
- சுகாதார சேவைகளில் கவர்ச்சிகரமான சலுகைகள்
Explore in Other Languages
மருத்துவ பாதுகாப்பு திட்ட விவரங்களின் சுருக்கம்
ஆதித்ய பிர்லா ஆக்டிவ் அஸ்யூர் டைமன்ட் மருத்துவ பாதுகாப்பு பிளான்
ஆதித்ய பிர்லா மருத்துவ காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் ஒரு திட்டம் ஆதித்ய பிர்லா ஆக்டிவ் அஸ்ஷுர் டைமன்ட் பிளான் ஆகும். இந்த திட்டம் விரிவான காப்பீட்டு பாதுகாப்பு வசதிகளையும் உயர்ந்த பட்ச காப்பீட்டு தொகையையும் தேடும் தனி நபர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்காகவும் வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். மருத்துவமனை செலவுகளையும் மற்றும் சிக்கலான நோய்களுக்கு இரண்டாவது ஆலோசனை பெறவும், உள்நாட்டு/ வெளிநாட்டு அவசர மருத்துவ பாதுகாப்பு சேவை செலவுகளுக்கும் இத்திட்டம் காப்பீடு அளிக்கிறது. கேன்சர் மருத்துவ அதிகப்படி செலவுகளையும் மருத்துவமனை அறை வாடகை மேம்பாடு மற்றும் முன்னரே இருக்கும் நோய்களின் காத்திருக்கும் காலத்தை குறைக்கவும் விருப்ப வசதி இருப்பது இந்த பாலிசியின் சிறப்பு அம்சமாகும்.
சிறப்புஅம்சங்களும்நன்மைகளும்
- காப்பீட்டு தொகை ரீலோட் பெனிஃபிட்: இந்த மருத்துவ பாதுகாப்பு திட்டம் ‘நோ க்ளைம் போனஸ்’ / சூப்பர் நோ க்ளைம் போனஸ் தொகை முழுதும் உபயோகப்படுத்திய பின்னரோ அல்லது முன்னர் கோரிய காப்பீடுகளால் காப்பீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இல்லாவிட்டாலும், மீண்டும் காப்பீட்டு தொகையை அதிகரித்துக்கொள்ளும் வசதியை அளிக்கிறது. இதன்படி, காப்பீடு செய்தவர் காப்பீட்டு தொகையை 150 சதவீதம் (உயர்ந்த பட்சம் ரூ.50 லக்ஷம்) வரை எதிர்பாராத நோய்வாய்பட்டால் பெற இயலும்.
- தினசரி பண உதவி: மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தினத்திற்கும் ரூ 500 ஐ தினசரி பண உதவியாக பெற்றுக்கொள்ள இத்திட்டம் வழி வகுக்கிறது. இந்த பயன் ரூ 4 லக்ஷம் வரை செய்த காப்பீடுகளுக்கு 5 நாட்களுக்கு மட்டும் கொடுக்கப்படும்.
- தடுப்பூசி பயன்கள்: தேர்ந்து எடுக்கப்பட்ட விருப்ப பாதுகாப்பு பாலிசியில், 18 வயது வரையுள்ள காப்பீடு எடுத்துக்கொண்ட தனி நபர்களுக்கு, தடுப்பூசி கட்டணத்தை இத்திட்டம் அளிக்கிறது. ரூ 1 கோடியும் அதற்க்கு மேலும் காப்பீடு செய்யப்பட்ட பாலிசிகளுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
- மருத்துவ பரிசோதனை வசதி: இலவச மருத்துவ பரிசோதனை இந்த பாலிசியில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது. காப்பீடு செய்துகொண்டவரின் வயதையும் காப்பீடு செய்த தொகையையும் ஒட்டி இது உருவாக்கப்படுகிறது.
- உடல் உறுப்பு தானம் செய்பவரின் மாற்று அறுவைசிகிச்சை செலவுகள்: இந்த பாலிசியின் கீழ் உடல் உறுப்பு தானம் செய்பவருக்கான செலவை குறிப்பிட்ட தொகை வரை உடல் உறுப்பை எடுப்பதற்காக காப்பீடு அளிக்கிறது.
- வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை: காப்பீடு செய்யப்பட்ட நோய்களை குணப்படுத்த காப்பீடு செய்யப்பட்டவரின் உடல் நிலையை கருதியோ இல்லை மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாத காரணத்தாலோ இல்லத்திலேயே வைத்து செய்யப்படும் மருத்துவ சிகிச்சசை செலவுகளுக்கு இந்த திட்டம் காப்பீடு அளிக்கிறது.
- பகல் நேர சிகிச்சை முறைகள்: இது டயாலிசிஸ் போன்ற 24 மணி நேர மருத்துவ மனை அனுமதி தேவையற்ற 586 பகல் நேர சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கிறது.
- மருத்துவமனை செலவுகள்: இத் திட்டம் அறை வாடகை, உணவு செலவுகள், மருத்துவ ஆலோசகர் கட்டணம், மருத்துவ வல்லுனர்களின் கட்டணம், ஆக்ஸிஜன் விலை, நர்ஸிங் கட்டணம், அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம், மயக்க மருந்து நிபுணர்கள் கட்டணம், மருத்துவரின் கட்டணம், அறுவை சிகிச்சை கூட கட்டணம், ஆய்வக கட்டணம், மருத்துவ இமேஜிங் முறைகளுக்கான கட்டணம், மருந்து செலவுகள், இரத்தம் விலை, மற்றும் பேஸ்மேக்கர் விலை போன்ற செலவுகளுக்கு காப்பீடு அளிக்கும்.
- அவசரகால ஆம்புலன்ஸ் கட்டணம்: அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல தேவையான ஆம்புலன்ஸ் கட்டணத்திற்கும் இத்திட்டம் காப்பீடு அளிக்கிறது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரும் அதன் பின்னரும் ஆகும் செலவீனங்களுக்கான காப்பீடு: இத் திட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கபபடும் 30 நாட்களுக்கு முன்னரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டபின்னர் 60 நாட்கள் வரை செலவழிக்கப்படும் மருத்துவர் கட்டணம், ஆய்வக கட்டணம், பிஸியோதெரபி, மருந்துகள், மற்ற தேவைப்பட்ட மருத்துவ பொருள்கள் போன்றவற்றிற்கும் காப்பீடு அளிக்கிறது. இல்லதில் இருந்து சிகிச்சை, பகல் நேர சிகிச்சைமுறைகள் மற்றும் உள்நோயாளி சிகிச்சை போன்றவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பின் அளிக்கப்படும் காப்பீட்டில்
அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.
- ஆயுஷ் உள்நோயாளி சிகிச்சை: முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொகை வரை ஆயுர்வேத, யுனானி, சித்த, மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு இந்த பாலிசி காப்பீடு அளிக்கிறது.
- தீவிர சிக்கலான நோய்களுக்கு இரண்டாவது வல்லுனரின் கருத்து: அதி தீவிர சிக்கலான கேன்சர், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கு இணைப்பிலுள்ள மறுத்துவமனைகளில் இருக்கும் மற்றொரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது கருத்துக்களைசேகரிக்க ஆகும் செலவீனங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அவசர சிகிச்சை பயணம்: தேர்வு செய்யப்பட்ட காப்பீட்டு தொகைக்கு தகுந்தாற்போல் காயமடைந்தவரை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆகும் செலவை இந்த திட்டம் அளிக்கிறது. தேவைப்படும் சமயங்களில் ஆகாய ஆம்புலன்ஸ் கட்டணமும் அளிக்கப்படும்.
- உயர் ரத்த அழுத்தம், உடலில் அதிக கொழுப்பு சத்து, ஆஸ்த்மா, சர்க்கரை நோய் போன்ற வியாதிகளால் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு தனி பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் செலவையும் இந்த திட்டம் அளிக்கிறது.
- உடலில் முன்னரே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு கால குறைப்பு: இந்த திட்டத்தை நீங்கள் விரும்பி இணைத்துக்கொண்டால், பாலிசி எடுக்கும் சமயத்தில் உங்களுக்கு இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்கப்படும்.
- நோ க்ளைம் போனஸ்:எவ்விதமான காப்பீட்டு கோரிக்கையும் இல்லாத ஒரு வருட முடிவில் காப்பீட்டு தொகையில் 10 முதல் 50 சதம் வரை ஊக்க தொகையாக பாலிசி புதுப்பிக்கும் சமயம் அளிக்கப்படும்.
- அளவில்லா காப்பீட்டு தொகை ரீலோட்: சமர்பிக்கபட்ட காப்பீட்டு கோரிக்கைகளால், குறைந்த அடிப்படை காப்பீட்டு தொகையை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப நிரப்ப இந்த திட்டததை நீங்கள் விரும்பி தேர்வு தேர்வு செய்யலாம்.
- சூப்பர் நோ க்ளைம் போனஸ்: ஒவ்வொரு க்ளைம் ஃப்ரீ வருடத்திற்கு பிறகும் பாலிசியை புதுப்பிக்கும் போது இந்த திட்டத்தில் உங்கள் காப்பீட்டு தொகை அதிகரி க்கப்படும். இந்த சூப்பர் நோ க்ளைம் போனஸ் நடைமுறையில் உங்கள் பாலிசியின் நோ க்ளைம் போனஸ் தொகைக்கு ஒரு ஆட் ஆன் போல அளிக்கப்படும்.
- விபத்து மருத்துவ செலவு பூஸ்டர்:உங்கள் விருப்பத்தை ஒட்டி இணைக்கப்படும் இந்த வசதி, சாலை விபத்தால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் போது, நீங்கள் காப்பீடு செய்த தொகை அதே அளவு மேற்கொண்டு உன் நோயாளி சிகிச்சைகக்காக அதிகரிக்கப்படும்.
- கேன்சர் மருத்துவ பூஸ்டர்:இந்த விருப்ப பாதுகாப்பை நீங்கள் தேர்வு செய்திருந்தால், கேன்சர் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் சமயம், காப்பீட்டு செய்த தொகைக்கு சமமான அதிகப்படியான தொகை இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
- விரும்பிய அறை மேம்பாடு: இந்த விருப்ப பாதுகாப்பை நீங்கள் தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு தேவைப்படும் தங்கும் அறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அளிக்கப்படும். இந்த பாதுகாப்பு காப்பீட்டை டு ரூ 5 லக்ஷம் மற்றும் அதற்கு மேல் பாலிசி எடுக்கப்படும் நபர் மட்டுமே பெற முடியும்.
பாலிசிவிலக்குகள்
- அனைத்து நோய்கள் மற்றும் சிகிகிச்சைகளுக்கும் முதல் 30 நாட்கள் காத்திருப்பு காலம்
- கேடராக்ட், கிளைகோமா, சைனசிடிஸ், இனப்பெருக்கம் தொடர்புடைய கட்டிகள்மற்றும் நார் கட்டிகள், மூட்டு எலும்பு மாற்று சிகிச்சை, பித்தப்பையில் கல், சிறுநீரக கற்கள் , ஹெர்னியா, தோல் கட்டிகள், வெரிகோஸ் வெயின், மற்றும் பிறப்பில் இருந்தே இருக்கும் உள் உறுப்பு ஒழுங்கின்மை போன்ற சில குறிப்பிட்ட நோய்களுக்கும் அவற்றின் சிகிச்சைகளுக்கும் இரண்டு வருட காத்திருப்பு காலம்.
- மரபணு கோளாறுகளுக்கு நான்கு வருட காத்திருப்பு காலம்
- போர் அல்லது போரின் காரணமான செயல்பாடுகள், சட்ட மீறல், அணுகுண்டு செயல்பாடுகள், வெடிப்புகள் இவற்றால் ஏற்பட்ட காயங்கள்
- துணிகர விளையாட்டுகள், இராணுவ செயல்பாடுகள், தன்னை தானே காயப்படுத்திக்கொள்ளுதல் போன்ற தெரிந்து தன்னை தானே ஆபத்திற்கு வெளிப்படுத்தும் செயல்கள்.
- போதை தரும் மற்றும் மாய கிறக்கம் கொடுக்கும் மருந்துகளை தவறாக உபயோக கப்படுத்தல்
- உடல் எடை குறைப்பு, கண் பார்வை சரி செய்தல், அழகு படுத்தும் அறுவை சிகிச்சைகள், மற்றும் தலை சொட்டைக்கான சிகிச்சை.
- அலோபதி அல்லாத மற்ற மருத்துவமுறை சிகிச்சை செலவு
- வழக்கமான சாதாரண உடல் சோதனை மற்றும் உடல் உறுப்பு தானம் அளிக்கப்போகிறவர்களை தேர்வு செய்யும் முதல் சோதனை
- அவசியமற்ற சிகிச்சை, உடல் சோதனை, புதிய சோதனைகள், நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகள், சம்பந்தம் இல்லாத பரிசோதனை கூட சோதனைகள்
- பார்கின்சன் நோய், எச்ஐவி , எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்
- காண்டாக்ட் லென்ஸ், கண் கண்ணாடிகள், காது கேட்க உதவும் கருவி, போன்ற மருத்துவ சாதனங்களின் விலை
- பல் கட்டுதல், மற்ற பிற பற்கள் தொடர்புடைய சிகிச்சைமுறைகள்
- நோய் குணமடைந்ததபின் ஓய்வு காலம், புணர்வாழ்வு காலம், மற்றும் நடத்தை வேறுபாடுகள்
- ஸ்டெம் செல் தெரப்பி, கர்ப்பம் மகப்பேறு தொடர்புடைய சிகிச்சை, மலத்து தன்மை
- உடல் பருமன் குறைப்பு மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை
- இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் எடுத்துக்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைகள்
பஜாஜ்அலையன்ஸ்ஹெல்த்கார்ட்ஹெல்த்இன்சூரன்ஸ்பிளான்
பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் கார்ட் பிளான் ஒரு விரிவான மருத்துவ பாதுகாப்பிட்டு திட்டம், இத் திட்டம் காப்பீடு செய்யப்பட்ட நபர் சந்திக்க நேரிடும் ஒரு பெரிய மருத்துவ செலவுகளில் இருந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இது தனி நபருக்கும் அவர் குடும்பதிதினருக்கும் விரிவான பாதுகாப்பீடு அளிக்கும் திட்டமாகும். குழந்தை பேறு மற்றும் பிறந்த குழந்தைக்கும் மருத்துவ காப்பு அளிப்பதே இந்த மருத்துவ பாதுகாப்பிட்டு திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- உள்நோயாளி மருத்துவ சிகிச்சை: தங்கும் அறை வாடகை, தீவிர கண்காணிப்பு பிரிவு கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம் மற்றும் நர்ஸிங் கட்டணம் உள்ளடங்கிய அனைத்து உள் நோயாளி மருத்துவ செலவுகளுக்கும் இந்த திட்டம் காப்பீடு செய்கிறது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் செலவழித்த தொகைக்கும் காப்பு: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 60 நாட்கள் முன்பு வரை ஏற்பட்ட மருத்துவ செலவுகளுக்கு இந்த திட்டத்தில் காப்பீடு கிடைக்கும்.
- மருத்துவ சிகிச்சைக்கு பின்னர்: மருத்துவ மனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் 90 நாட்கள் வரை உண்டாகும் மருத்துவ செலவுகளுக்கு இந்த திட்டத்தில் காப்பீடு கிடைக்கிறது.
- சாலை ஆம்புலன்ஸ்: ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் செலவழித்த அவசர சாலை மருத்துவ ஊர்தி கட்டணம் ரூ 20,000 வரை இத்திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.
- பகல் நேர சிகிச்சை முறைகள்: வெளி நோயாளி துறையிலோ அல்லது வெளி நோயாளியாகவோ இல்லாமல் மருத்துவ மனையில் உள் நோயாளியாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், இந்த பகல் நேர சிகிச்சைக்கு உண்டான செலவுகளை இத் திட்டம் கவர் செய்கிறது.
- உறுப்பு தானம் செய்பவருக்கான காப்பீடு: உறுப்பு மாற்று சிகிச்சையில் நன்கொடையாக உறுப்பை கொடுக்கும் நபறுக்கு அளிக்கப்படும் செலவுகளுக்கு இத் திட்டத்தில் கவர் அளிக்கப்படுகிறது.
- நோய் நீங்கியபின்உடல் தேறும் கால காப்பீடு பயன் :இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துகொண்ட நபர் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் நோய்/ காயங்களுக்காகவோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தால், அவருக்கு ரூ 5000 ஒவ்வொரு பாலிசி வருடத்திற்க்கும் அளிக்கப்படும். ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட பாலிசிகளுக்கு இந்த பயன் அளிக்கப்படும்.
- தின பண உதவி: 12 வயதிற்குட்பட்ட காப்பீடு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுடன் மருத்துவ மனையில் தங்கி இருக்கும் பெற்றோருக்கோ அல்லது சட்ட ரீதியான அதன் காப்பாளருக்கோ தினசரி பண உதவியாக ரூ 500 இத்திட்டத்தில் அளிக்கப்படும்.
- ஆயுர்வேத/ ஹோமியோபதி சிகிச்சை : இத்திட்டம் காப்பீடு செய்துகொண்ட நபர் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், ஆயுர்வேதா அல்லது ஹோமியோபதி முறையில் எடுத்துக்கொண்ட சிகிச்சைக்கான கட்டணம் அனுமதிக்கப்படும்.
- மகப்பேறு மருத்துவ செலவுகள்: இத் திட்டம் குழந்தை பிறப்பு, கருக்கலைப்பு. குறைப்பிரசவம் மற்றும் அதன் தொடர்புள்ள மருத்துவ செலவுகளுக்கும் காப்பு அளிக்கிறது.
- பிறந்த சிறு குழந்தைகளுக்கான கவர்: பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் இத்திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்த தினத்தில் இருந்து 90 நாள் வரை ஆகும் மருத்துவ மனை சிகிச்சை மற்றும் தடுப்பூசி கட்டணம் போன்ற மருத்துவ செலவுகள் அனுமதிக்கப்படுகிறது.
- உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை கவர்: காப்பீடு செய்யப்பட்டவர் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவறாக இருந்தால் உடல் பருமன் குறைக்கும் சிகிச்சை கட்டணம் அனுமதிக்கப்படும்.
- இலவச முன் பாதுகாப்பு மருத்துவ பரிசோதனைகள்: இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று ஆண்டின் முடிவிலும் காப்பீடு செய்துகொண்டவருக்கு இலவச மருத்துவ பரிசோதனை வசதி அளிக்கப்படும்.
விலக்குகள்:
- காத்திருப்பு காலம்:பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் இந்த திட்டம் சில குறிப்பிட்ட காத்திருப்பு கால வரையரைகளுக்கு உட்பட்டது.
- முன்னரே இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலம் 36 மாதங்கள்.
- சில குறிப்பிட்ட நோய்களுக்கு காத்திருப்பு காலம் 24 மாதங்கள்.
- இத்திட்டத்தின் கீழ் முதல் 36 மாதங்களுக்குள் செலவழிக்கப்படும் மருத்துவ செலவுகளுக்கு காப்பு அளிக்கப்படாது.
- பல் மருத்துவ சிகிச்சை: பற்கள் சம்மந்தப்பட்ட எந்த விதமான சிகிச்சை செலவுகளும் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
- உள் நோயாளி காப்பு: மருத்துவர் மற்றும் செவிலியர் மேற்பார்வை இல்லாமல் தேவையற்ற உள் நோயாளி மருத்துவ மனை செலவுகளுக்கு இத்திட்டம் காப்பு அளிக்காது.
- போர்: போரினால் ஏற்பட்ட, அல்லது போர், ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் அமைதியின்மை, கிளர்ச்சி போன்றவைகளால் உண்டாகும் மருத்துவ செலவுகளுக்கு இத்திட்டம் காப்பு அளிக்காது.
- இந்தியநாட்டிற்க்கு வெளியே பெற்ற மருத்துவ சிகிச்சை: இந்திய நாட்டிற்கு வெளியே காப்பீடு செய்து கொண்டவர் மேற்கொண்ட எந்த ஒரு சிகிச்சை கட்டணமும் இந்த திட்டத்தில் அடங்காது.
- அழகூட்டுவதற்கான அறுவை சிகிச்சை: அழகு மேம்படுத்த மேற்கொள்ளப்படும் ஒப்பனை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மற்றும் பாலின மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றை இத் திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
- வெளியே பொருத்தப்படும் சாதனங்கள்: உடலுக்கு வெளியே பொருத்தப்படும் காண்டாக்ட் லென்ஸ், மூக்கு கண்ணாடிகள், ஊன்று கோல், பல் வரிசைகள், காது கேட்ட உதவும் கருவி, போன்ற கருவிகளுக்கு ஆகும் செலவுகள் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
- வெளியே தேவைப்படும் கருவிகள்: மறுத்துவ மனையில் இருந்து விடுவீக்கப்பட்ட பின் இல்லத்தில் குணமடையும் சமயம் வேண்டிய தூக்க அப்னேயே நோய் அறிகுறி கண்காணிக்கும் கருவி போன்ற இதர பிற கருவிகள் வாங்கும் ஆகும் செலவுகள் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
- வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொள்ளும் சுய காயங்கள்: தற்கொலை, தற்கொலை முயற்சி, மதுபானம்/ மருந்துகள் இவற்றை அதிகமாக உட்கொள்ளுதல் போன்று தானாகவே உடலை காயப்படுத்திக்கொள்ளும் செயல்களை குணமாக்கும் மருத்துவ செலவுகளுக்கு இந்த திட்டத்தில் காப்பு அளிக்கப்படாது.
- எச்ஐவி : பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் எச்ஐவி அல்லது அது தொடர்பான வியாதிகளை குணப்படுத்தும் செலவுகளுக்கு காப்பு அளிக்கப்படாது.
- குழந்தையின்மை: குழந்தையின்மை, மலட்டுத்தனம், விறைப்புத்தன்மை கோளாறுகள் போன்றவற்றிற்கும் இந்த திட்டம் காப்பு அளிப்பதில்லை.
- உடல் பருமன்: உடல் பருமனை குறைக்கும் எந்த ஒரு மருத்துவ சிகிச்சை முறைக்கும் ஆகும் செலவுகள் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
பாரதி அக்ஸா ஸ்மார்ட் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்
பாரதி அக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் இந்த திட்டம் அனைத்து மருத்துவ மற்றும் அவசர சிகிச்சை மருத்துவ சிகிச்சைகசெலவுகளுக்கும் காப்பீடு அளிக்கிறது. 2019 ம் ஆண்டின் வாடிக்கையாளர் சேவைக்கான விருது இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வரி சேமிப்பு, நோ க்ளைம் போனஸ் வடிவில் புதுப்பிக்க தள்ளுபடி, இலவச மருத்துவ பரிசோதனை போன்றவ அடங்கிய தனித்தன்மை பெற்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் அடங்கும். இந்த திட்டத்தின் அம்சங்களை இங்கே கவனிக்கவும்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- 91 நாட்கள் முதல் 65 ஆண்டுகள் வரை வயது உள்ள எந்த நபரும் இந்த பாலிசி வாங்கலாம்.
- காப்பீடு செய்யப்படும் தொகை ரூபாய் மூன்று, நான்கு மற்றும் ஐந்து லக்ஷம்.
- ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழ், உங்களுக்கும், உங்களது மனைவி, மற்றும் 90 நாட்கள் முதல் 23 வயது வரை இருக்கும் உங்களது இரண்டு குழந்தைகளுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது. .
- பாலிசி புதுப்பிக்கப்படும் போது 5% முதல் 25% வரை நோ க்ளைம் தொகை, தள்ளுபடியாக அளிக்கப்படும்.
- மிக சிக்கலான நோய்களுக்கு கிரிடிகல் இல்னஸ் கவர் அளிக்கப்படும்
- கொடிய வியாதிகளுக்கும் சிக்கலான நோய்களுக்கும் குணமடையும் கால உதவி அளிக்கப்படும்.
- 30 முதல் 40 நாட்கள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரும் விடுவிக்கப்பட்ட பின்னர் 60 நாட்கள் வரையும் காப்பீடு அளிக்கப்படும்.
- காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை பகல் நேர சிகிச்சை கட்டணமும் அளிக்கப்படும்
- ஆயுஷ் மருத்துவ செலவு காப்பீடு
- காப்பீடு செய்த தொகையில் 10% வரை வீட்டிலிலேயே தங்கி எடுத்துக்கொள்ளும் மருத்துவ செலவுகளுக்கு அனுமதி. .
விலக்குகள்:
- பாலிசி (பயன் அளிக்கும் திட்டம்) எடுத்த முதல் 30 நாட்களுக்குள்ளும் , பாலிசி (திரும்ப வழங்கும் திட்டம்) எடுத்த 60 நாட்களுக்குள்ளும் கண்டுபிடிக்கப்படும் சிக்கலான நோய்கள்
- ஒரு வருட காலத்திற்கு முன்னர் காப்பீடு அனுமதிக்கப்படாத குறிப்பிட்ட வியாதிகள்
- கர்ப்பம் அடைந்த முதல் 12 வாரங்களுக்குள் ஏற்படும் மகப்பேறு தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் குறைபிரசவம், சிசேரியன் டெலிவரி போன்றவை. ஆனால் இவை எகோடாபிக் கருத்தரித்தல் முறைக்கு பொருந்தாது.
- 48 மாத காத்திருப்பு காலத்திற்கு முன்னர் இருந்தே உடலில் உள்ள நோய்களுக்குக்கான மருத்துவ காப்பு கோரிக்கை
- மருத்துவமனையில் அனுமதிக்க அவசியம் இல்லாத பல் மருத்துவ செலவுகள்
- குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை
- ஹார்மோன் தொடர்புள்ள சிகிச்சைகள்
கேர்ஹெல்த்கேர்இன்சூரன்ஸ்திட்டம்
கேர் ஹெல்த் கேர் இன்சூரன்ஸ் திட்டம் ஒரு விரிவவான அனைவருக்கும் பிரபலமான திட்டம். இது கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனியால் (ரேலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி என்று முன்னர் அழைக்கப்பட்ட திட்டம் ) அளிக்கப்படும் திட்டமாகும். தனி மனிதர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. அவற்றோடு காப்பீடு செய்துகொண்டவர்களுக்கு அவர்கள் இல்லத்தில் இருந்தே மருத்துவ சிகிச்சை, மாற்று மருத்துவமுறைகள், ஆகாயவழி ஆம்புலன்ஸ் காப்பு, மற்றும் அயல்நாட்டு இரண்டாம் மருத்துவ அறிவுரை போன்ற பல வகையான மருத்துவ காப்பீட்டு வசதிகளை அளிக்கின்றன.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- தனிமனித மற்றும் ஃப்ளோட்டர் காப்பு: காப்பீடு செய்யப்படும் தொகை தனி மனிதர் அல்லது குடும்ப ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமுன் ஆகும் செலவுகளின் காப்பு: இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் 30 நாட்களுக்கு முன்னர் வரை ஆன பரிசோதனைகள் மற்றும் ஆய்வக கட்டணம் போன்ற அனைத்து செலவுகளும் அனுமதிக்கப்படும்.
- உள் நோயாளி சிகிச்சை:; மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் சமயம் தீவிர சிகிச்சை கட்டணம், அறை வாடகை போன்ற அனைத்து உள் நோயாளி கட்டனங்களையும் இந்த திட்டம் அளிக்கிறது.
- பகல் நேர சிகிச்சை முறை செலவுகள்: மருத்துவ மனையில் 24 மணி நேரத்திற்கு அதிகமாக அனுமதிக்கப்பட தேவையற்ற சிகிச்சைகளுக்கும் மற்றும் பகல் நேர சிகிச்சை முறைகளுக்கும் உண்டான கட்டணங்கள் இந்த திட்டத்தில் கவர் ஆகின்றன.
- மருத்துவ சிகிச்சைக்கு பின்னர்: மருத்துவ மனையில் இருந்து நீங்கள் விடுவி க்கப்பட்ட பின்னரும் 60 நாட்கள் வரை மருந்தக பில், பரிசோதனை சாலை கட்டணம், மற்றும் மருத்துவரின் கட்டணம் போன்ற மருத்துவ செலவுகளுக்கு இந்த திட்டம் காப்பீடு அளிக்கிறது.
- வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதிக்க இயலாத காரணத்தால் இல்லத்திலேயே வைத்து மூன்று நாட்களுக்கு மேற்ப்பட்டு செய்யப்படும் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு இந்த திட்டம் காப்பீடு அளிக்கிறது.
- ஆம்புலன்ஸ் கவர்: அவசர நேரத்தில் சாலை வழி ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டணம் இத்திட்டத்தில் திருப்பி வழங்கப்படும். காப்பீடு செய்யப்பட்டவர் விரும்பினால் ஆகாய ஆம்புலன்ஸ் கட்டணத்தையும் தேர்ந்து எடுக்க சில திட்டங்களில் இயலும்.
- தினசரி மருத்துவ உதவி: மருத்துவமனையில் ஆகும் தினசரி செலவுகளுக்காக தினசரி பண உதவி அளிக்க இந்த திட்டம் வழி வகுக்கிறது.
- உறுப்பு தானம் செய்பவருக்கான காப்பீடு: உறுப்பை தானம் செய்யும் நபருக்கு மாற்று அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகளுக்கு இத் திட்டத்தில் கவர் அளிக்கப்படுகிறது.
- ஆயுர்வேத, ஹோமியோபதி, சித்த. மற்றும் யுனானி போன்ற மாற்று மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்ள ஆகும் செலவுகளுக்கும் இந்த திட்டத்தில் காப்பு அளிக்கப்படுகிறது.
- இரண்டாம் கருத்து: அயல் நாட்டு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது கருத்தை பெற ஆகும் செலவுகளும் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படும்.
- வரி சலுகைகள்: இந்திய வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் செலுத்திய ப்ரீமியம் தொகை மீது வருமான வரி சலுகை பெற இந்த திட்டம் அனுமதி அளிக்கிறது.
விலக்குகள்
- காத்திருப்பு காலம்: இந்த திட்டத்தின் கீழ் காத்திருப்பு காலம் முதல் 30 நாட்கள்
என்பது பொருந்தும். இந்த காலத்தில் எந்த விதமான மருத்துவ செலவுகளுக்கும்
காப்பீடு அளிக்கப்படாது.
- தானாகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்கள்:சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்களுக்கும், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி போன்றவற்றிக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு இந்த திட்டம் காப்பு அளிக்காது.
- குடி மற்றும் போதை மருந்துகள்: குடிபோதையாலோ அல்லது போதை மருந்து காரணமாகவோ ஏற்பட்ட காயங்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகளுக்கு இத்திட்டம் காப்பு அளிக்காது.
- எய்ட்ஸ்: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை செலவுகள் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
- பிரசவம் மற்றும் அதன் தொடர்பான வியாதிகள்: கர்ப்பம், குழந்தைபேறு. கருக்கலைப்பு, குரை பிரசவம் மற்றும் அது தொடர்புடையவைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் போன்றவை இந்த திட்டத்தில் கவர் செய்யப்படாது.
- பிறவி வியாதிகள்: பிறவியில் இருந்தே தொடரும் வியாதிகளுக்கான மருத்துவ செலவுகள் இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படாது.
- குழந்தையின்மை : மலட்டுதன்மை நீங்க அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை முறைகளுக்கான செலவுகள் இத்திட்டத்தில் கவர் ஆவதில்லை.
- போர்: போர், கலவரம், வேலை நிறுத்தம், அணு ஆயுதம்/ குண்டு வெடிப்பு போன்றவற்றால் ஆகும் மருத்துவ செலவுகள் இந்த திட்டத்தில் கவர் ஆவதில்லை.
சோழாஎம்எஸ்ஃபேமிலிஹெல்த்லைன்இன்சூரன்ஸ்பாலிசி
சோழா எம்எஸ் ஹெல்த் லைன் ஒரு விரிவான மருத்துவ பாதுகாப்பு திட்டம். இத்திட்டம் காப்பீட்டை குடும்ப ஃப்ளோட்டர் முறையில் அளிக்கிறது. அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவை திருப்பி அளிப்பதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். ஒரே திட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து பயன்களும் உங்களது வாழ்க்கை துணைக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் விரிவு படுத்தப்படுகின்றன.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- காப்பீட்டு தொகை ரூ 15 லக்ஷம்
- குழந்தை பேறு செலவுகளுக்கும் காப்பு அளிக்கப்படுகிறது
- 55 வயது வரை மருத்துவ பரிசோதனை கிடையாது
- ஸ்டாண்டர்ட், சுபீரியர், மற்றும் அட்வான்ஸ்டு திட்டங்களை தேர்ந்து எடுக்கும் வசதி
- உறுப்பு தானம் செய்பவரின் மருத்துவ செலவுகள் (உறுப்புகள் விலை இன்றி) உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செலவுகள்
- மூக்கு கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ், ஹியரிங் எய்ட், போன்ற வெளிப்புற உபகரணங்கள் மற்றும் வெளி நோயாளி பல் மருத்துவ செலவுகள் போன்றவை அனுமதிக்கப்படுகின்றன
விலக்குகள்
- விபத்து தவிர பாலிசி எடுத்த முதல் 30 நாட்களுக்குள் ஆகும் மருத்துவ செலவுகள்
- ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்கள் ( பாலிசியில் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களை பார்க்கவும்)
- இரண்டு தொடர் பாலிசி வருடங்கள் வரை முன் இருப்பு நோய்கள்
டிஜித்ஹெல்த்இன்சூரன்ஸ்
சில விசித்திரமான நோய்களுக்கும் அதை குணப்படுத்தும் முறைகளுக்கும் காப்பு அளிக்கும் இந்த திட்டம் ஒரு புதிய விரிவான மருத்துவ பாதுகாப்பு திட்டமாகும். மிக குறைந்த விலக்குகளுடன் இருக்கும் இந்த திட்டம் இன்றைய காலத்தில் உங்களுக்கு தேவையான ஒரு திட்டமாகும்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- கோவிட் 19 போன்ற பெரிய தொற்று நோய்களுக்கு இந்த திட்டம் காப்பு அளிக்கிறது
- வயதை ஒட்டிய ‘கோ பே” கட்டுப்பாடு இல்லை
- அறை வாடகையில் எந்த கட்டுப்பாடும் கிடையாது
- கூட்டுமுறை போனஸ் அளிக்கப்படும்
- மன நோய்க்கான மருத்துவ சிகிச்சை காப்பு
- காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை அனைத்து மருத்துவ செலவுகளுக்கும் காப்பு
- நீங்கள் விரும்பினால் பிரசவ வசதி, ஆயூஷ் காப்பு, மற்றும் மண்டல வாரியான மேம்பாட்டு வசதிகள் இவற்றை ‘ஆட் ஆன்’ வசதிகளாக சேர்த்துக்கொள்ளலாம்.
விலக்குகள்
- பிரசவதிற்கு முன்னும் அதன் பின்னும் ஆகும் செலவுகள்
- முன்னரே இருக்கும் நோய்கள்
- மருத்துவர் சிபாரிசு இல்லாமால் மருத்துவமனை சிகிச்சை
எடெல்வீஸ்ஹெல்த்பிளான்
இந்த நிறுவனம் சில்வர், கோல்ட், மற்றும் பிளாட்டினம் என்ற மூன்று பாலிசிகளை அளிக்கிறது. நீங்கள் விரும்பும் காப்பீட்டு தொகைக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்யலாம். நீங்கள் கொடுக்க இயலும் ப்ரீமியத்தில் மிக விரிவான காப்பீட்டு வசதிகளை இந்த திட்டம் அளிக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- தீவிர சிகிச்சை கட்டணங்களுக்கு உச்ச வரம்பு கிடையாது
- பகல் நேர சிகிச்சை முறைக்கும் காப்பீடு வசதி உண்டு
- உடல் உறுப்பு தானம் கொடுப்போருக்கான செலவுகளும் அளிக்கப்படும்
- ஆயுஷ் மருத்துவ செலவுகளுக்கும் காப்பீடு உண்டு
- பிரசவ செலவுகளும் மற்ற சிக்கலான நோய் காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது
- மருத்துவ பரிந்துரை வசதி
- கருணை முறை பயணங்களுக்கு அனுமதி
விலக்குகள்
கீழே குறிப்பிட்ட செலவுகளுக்கு இந்த திட்டம் காப்பு அளிக்காது
- தற்கொலை முயற்ச்சி
- தன்னிச்சையான மருத்துவம்/ சிகிச்சை
- பால் வினை நோய்கள்/ சிக்கல்கள்
- வேண்டுமென்றே எடுத்த எந்தவிதமான புது முயற்சிகள்
ஃப்யூச்சர்ஜெனரலிகிரிடிகல்கேர்ஹெல்த்இன்சூரன்ஸ்பிளான்
ஃப்யூச்சர் ஜெனரலி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் இந்த ஃப்யூச்சர் ஜெனரலி கிரிடிகல் கேர் பிளான் சிக்கலான நோய்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு திட்டமாகும். இதன் கீழ் பாலிசியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி 12 சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை செலவுகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதும், அதை குணமாக்க காப்பீடு செய்த மொத்த தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கிறது. இந்த கிரிடிகல் நோய் பாலிசியின் கீழ் காப்பீடு அளிக்கப்படும் தொகையை ரூ 1 லக்ஷம் முதல் ரூ 50 லக்ஷம் வரை தேர்வு செய்யலாம்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- தனி நபர் மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் இவர்கள் உள்ளிட்ட குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டம்.
- கேன்சர், சிறுநீரக பாதிப்பு போன்ற சிக்கலான 12 நோய்களுக்கு உரிய வரி வில க்குகள் அடங்கிய காப்பீடு.
- மொத்த தொகை அளிக்கும் வசதி
- இணைப்பிலுள்ள மறுத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை
விலக்குகள்
- முன்னரே இருக்கும் நோய்கள்
- பால்வினை நோய்கள்/ சிக்கல்கள்
- வேண்டுமென்றே செய்துகொண்ட எந்த முயற்சிகளும்
- கருத்தரித்தல் சிகிச்சை முறைகள்
- உள் அல்லது வெளியே உள்ள பிறவி நோய்கள்
- தற்கொலை முயற்சி
- தன்னிச்சையாக மருந்து உட்கொள்ளுதல்/ சிகிச்சை செய்துகொள்ளுதல்
- மன அழுத்தம் அல்லது அனாவசியமாக கவலை கொள்ளும் நிலை HDFC
இஃப்கோடோக்கியோஹெல்த்புராடக்ட்டர்பிளஸ்பாலிசி
இப்ப்கோ டோக்கியோ ஹெல்த் புராடக்ட்டர் திட்டம் விலை உயர்ந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படும் எந்த விதமான நோய்/காயங்களாக இருந்தாலும் தனி மனிதர் மற்றும் குடும்பதிற்கும் தேவையான காப்பை இந்த திட்டம் அளிக்கிறது. மொத்த மருத்துவ செலவில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய கழிவு தொகையை கூட நீங்களே செலுத்தவோ அல்லது தற்போது உள்ள மருத்துவ பாதுகாப்பு திட்டதிலோ தேர்வு செய்யவோ இதில் வசதி உள்ளது. கட்டாய கழிவு தொகைக்கு மேல் ஆகும் கட்டணத்திற்கு தேவையான அதிகப்படியான காப்பீட்டை செய்துகொள்ள இயலும். அதிக விலை உயர்ந்த மருத்துவ சிகிச்சை செலவுகளை எளிதாக சந்திக்க இந்த ஹெல்த் புராடக்ட்டர் திட்டம் உதவுகிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- 18 முதல் 65 வருடங்கள் வரை வயது உள்ள எவரும் இத்திட்டதில் சேர முடியும்
- ஒரு வருட திட்டம் அல்லது டாப் அப் ஆர் சூப்பர் அப் திட்டங்களை தேர்வு செய்யும் விருப்பம்
- அடிப்படை மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லாவிடினும், நீங்கள் இந்த பாலிசியை வாங்க முடியும்
- சிகிச்சை முறையின் ஒரு பகுதியாக வாங்கும் டானிக்ஸ் மற்றும் வைட்டமின் போன்றவை வாங்கும் செலவுகளும் அனுமதிக்கப்படும். .
விலக்குகள்
கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் கோரப்படும் காப்பீட்டு தொகைகள் அனுமதிக்கப்படாது.
- பாலிசி எடுத்த தேதியில் இருந்து முதல் 30 நாட்களுக்குள் மேற்கொண்ட எந்த ஒரு சிகிச்சைக்கும் ஆன கட்டணம்
- பிளாஸ்டிக் மற்றும் அழகு செய்துகொள்ளும் அறுவை சிகிச்சைக்கான மருத்துவசெலவுகள்
- எச்ஐவி / பால்வினை மருத்துவ செலவுகள்
- மன நோய், மன உளைச்சல், மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிக்கான மருத்துவ சிகிச்சைகள்
- மரபியல் குறைபடுகளுக்கான மருத்துவ சிகிச்சை
கோடக் ஹெல்த் ப்ரீமியர் பிளான்
பாலிசிதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டையும் மேலும் பல மதிப்பு கூட்டப்பட்ட பலன்களையும் அளிக்கும் ஒரு விரிவான திட்டமாகும் கோடக் ஹெல்த் ப்ரீமியர் பிளான். இந்த பாலியின் கீழ் உடல் ஆரோக்கியம் மற்றும் அதை சிறப்பாக வைத்துக்கொள்ள வெகுமதியும் அளிக்கப்படுகிறது.
- தனிப்பட்ட மற்றும் ஃபேமிலி ஃப்ளோட்டர் விருப்பங்களை இந்த திட்டம் அளிக்கிறது
- 3 வாலிப வயதினருக்கும் மற்றும் 3 சார்ந்த குழந்தைகளுக்கும் ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தில் காப்பு அளிக்கப்படும்.
- பாலிசி காலம் 1, 2 மற்றும் 3 ஆண்டுகள்
- குடும்பத்திற்கான தள்ளுபடியும் மற்றும் நீண்ட கால பாலிசிக்கான தள்ளுபடியும் உள்ளன
- திட்டங்களின் அனைத்து வேறுபட்ட பாலிசிகளிலும் வாழ் நாள் வரை புதுப்பிக்கும் விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது
- உங்களுக்கு தேவையான சிக்கலான நோய்களுக்கும் மற்றும் தனி நபர் விபத்து காப்பையும் எடுக்கும் வசதி உள்ளது.
விலக்குகள்
- சோதனைமுறை, நிரூபிக்கப்படாத மற்றும் தரமற்ற சிகிச்சை முறைகள்
- ஒப்பனை சிகிச்சைகள்
- பால்வினை மற்றும் அதன் தொடர்பான சிகிச்சைகள்
- அழகு படுத்தும் சிகிச்சைகள்
- சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள்
லீபெர்டிஹெல்த்கனெக்ட்சுப்ராடாப்அப்
உங்களுடைய தற்போதைய மருத்துவ காப்பீட்டு தொகை செலவாகிய நிலையில் ஒரு மாற்று திட்டமாக ஹெல்த் கனெக்ட் சுப்ரா டாப் அப் திட்டம் லீபெர்டி காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. டாப் அப் திட்டத்தின் கீழ் ரூ 20 லக்ஷம் வரையும் சூப்பர் டாப் அப் திட்டத்தின் கீழ் ரூ 1 கோடி வரையும் காப்பீட்டு தொகை அளிக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- மருத்துவமனை மனையில் அனுமதிக்கபடும் முன்னரும் அதன் பின்னரும் ஆகும் மருத்துவ செலவுகளுக்கு இந்த பாலிசி காப்பு அளிக்கிறது.
- தங்கும் அறை வாடகை, தீவிர சிகிச்சை பிரிவு கட்டணம் போன்ற உள் நோயாளி கட்டணங்களை அளிக்கிறது,
- 405 வகையான பகல் நேர சிகிச்சைகளுக்கு காப்பு அளிக்கப்படுகிறது
- காப்பீடு செய்த தொகையை மீண்டும் அதிகரித்தல், ஆயுஷ் மருத்துவம், வெளிநாட்டில் சிகிச்சை, மற்றும் ஆரோக்யமாக இருக்க உதவும் பயிற்சி போன்ற விருப்ப இணைப்பு திட்டங்கள்.
விலக்குகள்
- முன்னரே உடலில் இருக்கும் நோய்களுக்கு 36 மாத பாலிசி காலம் முடியும் வரை காப்பீடு அளிக்கப்பட மாட்டாது
- பாலிசி துவங்கியபின் 30 நாள் காத்திருப்பு காலம்
- உடலுக்குள் உள்ள கட்டிகள், ஹெர்னியா, கண்புரைநோய், போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு இரண்டு ஆண்டு காத்திருப்பு காலம் உள்ளது.
மாக்ஸ்பூபாஹெல்த்கம்பேனியன்இண்டிவிஜூவல்பிளான்
மாக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் மாக்ஸ் பூபா கம்பேனியன பிளான் ஒரு திட்டமாகும். தனி மனிதர்களுக்கும் இன்றைய தனி குடும்பங்களும் வாங்க இயலும் விரிவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். காப்பீடு செய்தவருக்கு மூன்று வகையான வெவ்வேறு மருத்துவ காப்பீட்டு வசதிகளை அளிக்கிறது. இந்த திட்டம் இரண்டு ஆண்டு பாலிசி காலம் மற்றும் விலங்கு கடிகளுக்கான தடுப்பூசி போன்ற விருப்ப காப்பீடுகளுடன் உள்ளன.
பலவகை திட்டங்கள்
அனைத்து பாலிசிதாரர்களின் தேவைகளை நிறைவு செய்யும் இந்த திட்டம் மூன்று வகையான பாலிசிகளை அளிக்கிறது.
வேறுபாட்டு வகை 1
இதன் கீழ் காப்பீட்டு தொகையை ரூ 3 லக்ஷம் மற்றும் ரூ 4 லக்ஷம் என்ற இரண்டு வகைகளில் விரும்பியதை தேர்வு செய்யும் வசதி உள்ளது. காப்பீடு செய்த தொகையை அதிகரிக்க, வருடாந்திர மொத்த கழிவு தொகையை டாப் அப் செய்து கொள்ள ரூ 1 லக்ஷம், ரூ 2 லக்ஷம், ரூ 3 லக்ஷம், ரூ 4 லக்ஷம், ரூ 5 லக்ஷம் மற்றும் ரூ.10 லக்ஷம் வரை தேர்வு செய்யும் வசதி அளிக்கிறது.
வேறுபாட்டு வகை 2
இதன் கீழ் காப்பீட்டு தொகையை ரூ 5 லக்ஷம், ரூ 7.5 லக்ஷம், ரூ 10 லக்ஷம் மற்றும் ரூ 12.5 லக்ஷம் போன்ற நான்கு வகைகளில் விரும்பியதை தேர்வு செய்யயும் வசதி உள்ளது. காப்பீடு செய்த தொகையை அதிகரிக்க, வருடாந்திர மொத்த கழிவு தொகையை டாப் அப் செய்து கொள்ள ரூ 1 லக்ஷம், ரூ 2 லக்ஷம், ரூ 3 லக்ஷம், ரூ 4 லக்ஷம், ரூ 5 லக்ஷம் மற்றும் ரூ.10 லக்ஷம் வரை தேர்வு செய்யும் வசதி அளிக்கிறது.
வேறுபாட்டு வகை 3
இதன் கீழ் காப்பீட்டு தொகையை ரூ 15 லக்ஷம், ரூ 20 லக்ஷம், ரூ 30 லக்ஷம், ரூ 50 லக்ஷம் மற்றும் ரூ 1 கோடி போன்ற ஐந்து வகைகளில் விரும்பியதை தேர்வு செய்யும் வசதி உள்ளது. காப்பீடு செய்த தொகையை அதிகரிக்க, வருடாந்திர மொத்த கழிவு தொகையை டாப் அப் செய்து கொள்ள ரூ 1 லக்ஷம், ரூ 2 லக்ஷம், ரூ 3 லக்ஷம், ரூ 4 லக்ஷம், ரூ 5 லக்ஷம் மற்றும் ரூ.10 லக்ஷம் வரை தேர்வு செய்யும் வசதி அளிக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- உள் நோயாளி சிகிச்சை: இந்த திட்டத்தில் காப்பீடு செய்துகொண்ட நபர் காப்பு அளிக்கப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ செலவுகள் அனுமதிக்கப்படுகின்றன.
- அறை வாடகை வரையறுப்பு: இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ மனையில் தங்கும் அறை வாடகைக(ஸூயீட் அறை மற்றும் அதற்கு மேல்படும்) உச்ச வரம்பு எதுவும் இல்லாமல் அனுமதிக்கப்படும்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் மற்றும் பின்னர் ஆகும் செலவுகள்: இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நோய் அல்லது காயங்களுக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் 30 நாட்கள் முன்னரும் மருத்துவ மனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 60 நாட்கள் வரையும் ஆகும் செலவுகளை அளிக்கும்.
- பகல் நேர சிகிச்சை முறைகள்: அனைத்து பகல் நேர சிகிச்சை முறைகளுக்கும் இதன் கீழ் காப்பு அளிக்கப்பட்டது இருந்தாலும், அத்தகைய சிகிச்சை முறைகள் வெளி நோயாளி பிரிவில் அளிக்கப்பட்டதாக இருக்க கூடாது.
- மீண்டும் அதிகரிக்கும் நன்மை: காப்பீடு செய்துகொண்ட நபர் காப்பீட்டு தொகை முழுவதும் செலவு செய்த சமயத்தில் மறுபடியும் காப்பீட்டு தொகை அதிகரிக்கும் பயன் உண்மையில் ஒரு உயிரை காப்பாற்றும் செயலாக உதவுகிறது. இதன் தொடர்பில்லாத வேறு ஒரு நோய்க்கு காப்பீடு அளிக்க உதவியாக காப்பீட்டுதொகைக்கு சமமான தொகையை இந்த திட்டம் நிரப்ப உதவுகிறது.
- மாற்று மருத்துவ முறைகள்: ஆயுர்வேதா, யுனானி, சித்தா, மற்றும் ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளுக்கு உள் நோயாளி காப்பை இந்த திட்டம் அளிக்கிறது.
- நீண்ட கால பாலிசி பலன்கள் பாலிசி இரண்டு ஆண்டு காலத்திற்கு எடுக்கப்பட்டால், பரீமியத்தொகையில் 12.5% தள்ளுபடியாக அளிக்கப்படுகிறது.
- புதுப்பிக்கும் பலன்கள்: ஒரு ஆண்டு பாலிசி காலத்திற்கு பிறகு பாலிசி புதுப்பிக்கும் சமயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அளிக்கப்படுகின்றன.
- நோ க்ளைம் போனஸ்: ஒவ்வொரு க்ளைம் எதுவும் சமர்ப்பிக்கப்படாத வருடத் திற்கும் வருட முடிவில் 20 முதல் 100 சதவீதம் வரை அடிப்படை காப்பீட்டு தொகை அதிகரிக்கப்படும்.
- இலவச மருத்துவ பரிசோதனை : முதல் வேறுபாட்டு வகையில் காப்பீடு செய்து கொண்டவருக்கும் அவர் குடும்பதினருக்கும்(பொருந்தினால்) வழக்கமான இலவச மருத்துவ பரிசோதனை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் மற்ற இரண்டு வேறுபாட்டு வகைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படும்.
- அவசகரகால ஆம்புலன்ஸ் செலவு: அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஆகும் அவசரகால ஆம்புலன்ஸ் கட்டணம் இந்த திட்டத்தில் ரூ 3000 வரை அளிக்கப்படும்.
- உடல் உறுப்பு தானம்: இந்த திட்டம் உறுப்பு தான செலவுகள், காப்பீடு செய்யப்பட்ட நபருக்காக தானம் கொடுப்பவரிடம் இருந்து உடல் உறுப்பை எடுக்க ஆகும் மருத்துவ செலவுகளை அளிக்கும்.
- வீட்டிலிருந்தே பெறும் சிகிச்சை: மருத்துவமனையில் படுக்கை இல்லாத காரணத்தாலோ அல்லது சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அறிவுறைப்படியோ இல்லத்தில் இருந்து அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான செலவுகள் இந்த திட்டத்தில் அளிக்கப்படும். வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறும் இந்த திட்டத்தின் நன்மைகளை பெற தேவையான விதிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
- காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை அல்லது மருத்துவ மனையில் படுக்கை வசதி இல்லை. என்று அவரை குணப்படுத்தும் மருத்துவர் சான்று அளிக்கவேண்டும்
- சிகிச்சை குறைந்தது மூன்று நாட்களுக்காவது தொடரப்படவேண்டும்
- விலங்கு கடி தடுப்பூசி: விலங்கு கடியை குணப்படுத்த தேவையான தடுப்பூசி அல்லதுகுணப்படுத்தும் ஊசி போடுவதற்கான வெளி நோயாளி சிகிச்சை செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் ரூ 7500/- வரை (அல்லது விரும்பி எடுத்த திட்டப்படி) திரும்ப அளிக்கப்படும்.
- மருத்துவமனை பண உதவி: காப்பீடு செய்துகொண்ட நபர் விரும்பி தேர்வு செய்து இருந்து குறைந்தது இரண்டு நாட்களுக்காவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், தினசரி பண உதவியாக மொத்த தொகை ரூ 4000 (அல்லது தேர்வு செய்த திட்டப்படி) அளிக்கப்படும். இந்த தொகை 30 நாட்கள் வரை வழங்கப்படும்.
- திட்டத்தில் சேர வயது வரம்பு கிடையாது: இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான குறைந்த பட்ச வயது 90 நாட்கள். மூத்த குடிமக்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை,
- வரி சலுகைகள்: இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80 d யின் கீழ் வரி சலுகை அளிக்கப்படும்.
- வாழ் நாள் வரை புதுப்பிக்கும் பலன்கள்: தடையின்றி புதுப்பிக்கும் பாலிசி தாரர்களுக்கு வாழ்நாள் வரை புதுப்பிக்கும் வசதி அளிக்கப்படுகிறது.
- நேரடி க்ளைம் தீர்வை: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சொந்த வாடிக்கையாளர் சேவை மையம் க்ளைம்களை பரிசோதிப்பதால் சிரமங்கள் இல்லாமல் க்ளைம் தொகை விரைவில் கிடைக்க இந்த திட்டம் உதவுகிறது.
- பணமில்லா பலன்கள்: தொடர்பு மறுத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையை இந்த திட்டம் வழங்குகிறது.
- திரும்ப நோக்கும் காலம்: 15 நாட்கள் இலவச திரும்ப நோக்கும் காலத்தை அளிப்பதன் மூலம் வெளிப்படையாகவும் பூரண திருப்தியையும் இந்த திட்டம் அளிக்கிறது. இந்த காலத்தில் தகுந்த காரணத்தை காட்டி எடுத்த திட்டத்தை ரத்து செய்துகொள்ள இயலும்.
விலக்குகள்
- செயற்கை முறை உயிர் நீட்டிப்பு
- மருத்துவமனை இதர துணை கட்டணம், தேவைப்படாத சிகிச்சை மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை அல்லது மருத்துவர்
- அபாயகரமான செயல்கள், குழப்பம் ,பேரழிவு மற்றும் சட்ட விரோத செயல்கள்
- சுன்னத் சிகிச்சை மற்றும் வெளிப்புற பிறவி கோளாறுகள்
- காம்ப்ளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேடிவ் மெடிசன் (CAM), சோதனை /ஆராய்ச்சி அல்லது நிரூபிக்கப்படாத முறைகள், பொருந்தாத / தேவையற்ற அல்லது மற்ற நோய் நிர்ணய முறைகள், வெளிப்புற நோய் சிகிச்சை அல்லது பெயரிடப்படாத மருந்துகள் மற்றும் குணப்படுத்தும் முறைகள்.
- அழகு அதிகரிக்கும் மற்றும் சீர் செய்யும் அறுவை சிகிச்சை, உடல் பருமன் மற்றும் எடை குறைப்பு முறைகள்
- பல் மருத்துவ சிகிச்சை முறைகள் , கண் பார்வை மற்றும் கண் கண்ணாடி சேவைகள்
- எச்ஐவி , எய்ட்ஸ் மற்றும் அது தொடர்புடைய பால் வினை நோய்கள்
- சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறுதல், மறு வாழ்வு, மன நலம், போதை மருந்து பழக்கம் மற்றும் தூக்கம் தொடர்பான குறைபாடுகள்
- மருத்துவ செலவுகள் அல்லாதவை
- பருவமடைதல், மாதவிடாய் நிறுத்தம்,தொடர்புடைய குறைபாடுகள், பிரசவ மற்றும் இனப்பெருக்க மருந்துகள்
- ரோபோட்டிக் அறுவை சிகிச்சை , லேசர் மற்றும் ஒளியை அடிப்படையாக கொண்ட சிகிச்சைகள்
- இந்திய நாட்டிற்கு வெளியே பெற்ற சிகிச்சைகள்
மணிபால்சிக்னாப்ரோஹெல்த்பிளஸ்திட்டம்
மணிபால் சிக்னா அளிக்கும் ப்ரோ ஹெல்த் பிளஸ் திட்டம் ஒரு சமமான காப்புகளை அளிக்கும் திட்டம். குறைந்த தொகையவுள்ள வெளிப்புற நோயாளி சிகிச்சை செலவுகள் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் போது ஏற்படும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளுக்கும் காப்பு அளிக்கின்றன. இந்த பாலிசி காப்பீட்டு தொகை மீண்டும் அதிகரிக்க வரம்புகள் இல்லாத விருப்பம் அளிப்பதுடன் உடலை ஆரோக்கியமாக வைக்க ஊக்குவிக்கும் விதம் பல பலன்களை அளிக்கிறது. இந்த திட்டம் பிரசவ செலவுகள், மகப்பேறு மற்றும் முதல் வருட தடுப்பூசி செலவுகளையும் அளிக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- உயர்தப்பட்ட காப்பீட்டு தொகை: ஒவ்வொருவரின் தனிப்பட்ட காப்பீட்டு தேவைகளை நிறைவேற்றும் விதம் அதிகபட்ச காப்பீட்டு தொகையை இந்த திட்டம் அளிக்கிறது. காப்பீடு செய்ய விரும்புவோர் ரூ.4.5 லக்ஷம், ரூ.5.5 லக்ஷம் ரூ.7.5 லக்ஷம், ரூ.10 லக்ஷம், ரூ.15 லக்ஷம், ரூ.20 லக்ஷம் ,ரூ.25 லக்ஷம், ரூ.30 லக்ஷம், மற்றும் ரூ.50 லக்ஷம் போன்ற 9 காப்பீட்டு தொகை விருப்பங்களை தேர்வு செய்யலாம்.
- காப்பீட்டில் அடங்கும் மருத்துவ செலவுகள்: இந்த திட்டத்தில் மருத்துவமனை
கட்டணம், பரிசோதனை சாலை கட்டணம், மருந்துகள் மற்றும் மருத்துவ பொருள்கள், தனி படுக்கை அறை கட்டணம், தீவிர சிகிச்சை பிரிவு கட்டணம், அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம், ஆக்ஸிஜன் விலை, ரத்தம் விலை, அறுவை சிகிச்சை அறை கட்டணம், நர்ஸிங் கட்டணம், மயக்க மருந்து நிபுணர் கட்டணம், அறுவை சிகிச்சை உபகரணங்கள் கட்டணம் போன்றவை தேர்ந்து எடுத்த விருப்பத்தை ஒட்டி அனுமதிக்கப்படும்.
- புதுப்பிக்கும் பலன்கள்: இந்த திட்டம் வாழ் நாள் வரை புதுப்பிக்கும் விருப்பத்தை அளிக்கிறது.
- நீண்ட கால பாலிசி காலம்: காப்பீட்டை எடுப்பவரின் விருப்பம் போல 1 ஆண்டு, 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் வரை உள்ள நீண்ட கால பாலிசிகளை எடுக்கலாம்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரும் அதன் பின்னரும் ஆகும் செலவுகள் : இத் திட்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்படும் 60 நாட்களுக்கு முன்னர் வரை செலவாகிய மருத்துவர் கட்டணம், மருந்துகள் விலை, மற்றும், ஆய்வக கட்டணம், போன்றவற்றை அளிக்கிறது மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டபின்னர் மருத்துவர் கட்டணம் மருத்துவர் கட்டணம், மருந்தக்க கட்டணம் ஆய்வக கட்டண போன்றவை 180 நாட்கள் வரை அனுமதிக்கப்படும்..
- பகல் நேர சிகிச்சை காப்பு: டயாலிசிஸ், கண் புரை சிகிச்சை, கதிர் வீச்சு முறை சிகிச்சை போன்ற 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவ மனையில் இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட பகல் நேர சிகிச்சைகளுக்கும் இந்த தீட்டத்தில் காப்பீடு அளிக்கப்படும்.
- வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாத / கிடைக்காத காரணத்தினாலோ அல்லது மருத்துவர் பரிந்துரையின் பேரிலோ இல்லத்திலேயே வைத்து செய்யப்படும் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் வரை காப்பீடு அளிக்கிறது.
- அவசகரகால ஆம்புலன்ஸ் செலவு: அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஆகும் அவசரகால ஆம்புலன்ஸ் கட்டணம் ஒவ்வொரு முறையும் காப்பீடு செய்துகொண்ட நபருக்கு ரூ 3000 வரை அளிக்கப்படும்.
- உடல் உறுப்பு தானம்: இந்த திட்டம் உறுப்பு தான செலவுகள், காப்பீடு செய்யப்பட்ட நபருக்காக தானம் கொடுப்பவரிடம் இருந்து உடல் உறுப்பை எடுக்க ஆகும் மருத்துவ செலவுகளை அளிக்கும்.
- உலகளாவிய அவசர மருத்துவ சிகிச்சை காப்பீடு: பாலிசியின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் அவசர மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள இந்த திட்டம் உதவுகிறது. பாலிசி எடுத்த நபர் வெளி நாட்டில் பயணம் செய்து கொண்டு இருக்கும்போது இந்த திட்டத்தின் கீழ் செலவு செய்த பணம் குறிப்பிட்ட தொகை வரை திரும்ப அளிக்கப்படும்.
- காப்பீட்டு தொகை உயர்வு: முன்னர் சமர்ப்பித்த க்ளைம் காரணாமாக காப்பீடு செய்த தொகை, மொத்த போனஸ் தொகை மற்றும் போனஸ் பூஸ்டர் (எதுவும் இருப்பின்) போன்ற அனைத்தும் தீர்ந்து போய் இருந்தால், இந்த திட்டத்தில் காப்பீட்டு தொகையை மீண்டும் அதே அளவு உயர்த்தும் வசதி உள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் ஒரு முறை 100 சதவிகிதம் காப்பீட்டு தொகையை உயர்த்த அனுமது உள்ளது.
- உடல்நல சீராக வைக்க காப்பீடு: இந்ததிட்டத்தின்மொத்ததொகையாக ஒவ்வொரு ஆண்டும் ரூ 2000 வரை உடல் நலம் காக்க வெளி நோயாளி சிகிச்சை செலவுகளான மருந்தக கட்டணம், மருத்துவர் கட்டணம், ஆராய்ச்சி சாலை கட்டணம், மற்றும் ஆயுஷ் போன்ற மாற்று மருத்துவ கட்டணங்கள் போன்றவற்றிக்கு வழங்கப்படும்
- மகப்பேறு செலவுகள்: சாதாரண பிரசவத்திற்கு ரூ.15,000 வரையும் சி செக்ஷன் பிரசவதிற்கு ரூ 25,000 வரையும் மகப்பேறு செலவுகளை இந்த திட்டம் அளிக்கிறது,
- பிறந்த குழந்தைக்கான காப்பு: பிறந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ செலவை இந்த திட்டம் காப்பீடு செய்கிறது.
- முதல் வருட தடுப்பூசி: பிறந்த குழந்தைக்கு தேவையான தடுப்பூசி செலவுகளுக்கு இந்த திட்டத்தில் காப்பீடு அழிக்கப்படுகின்றன,
- மருத்துவ பரிசோதனை: 18 வயது நிரம்பிய காப்பீடு செய்துகொண்ட அனைவருக்கும் விரிவான மருத்துவ பரிசோதனை வசதியை இந்த திட்டம் அளிக்கிறது.
- சிக்கலான நோய்களுக்கான மருத்துவ வல்லுனர் கருத்து: காப்பீடு செய்யப்பட்ட சிக்கலான நோய்களான பக்கவாதம், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருத்துவ வல்லுனர்களிடம் இருந்து அவர்கள் கருத்தை பெற செலுத்த வேண்டிய கட்டணம் இத்திட்டத்தில் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த வல்லுனர் இணைப்பிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனையில்பணி புரிபாராக இருப்பவராக இருக்கவேண்டும்.
- கட்டாய கழிவுகள்: கட்டாய கழிவு தொகையை தேர்வு செய்யும் விருப்பமாக ரூ 1 லக்ஷம், ரூ 2 லக்ஷம், மற்றும் ரூ 3 லக்ஷம் போன்ற மூன்று விருப்பங்கள் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த பாலிசி காலத்திற்கு மட்டுமே அவை பொருந்தும்.
- விருப்ப கோ-பே: காப்பீடு செய்துகொண்டவர் செலுத்த வேண்டிய ‘கோ-பே’ தொகையை முதல் 10 அல்லது 20 சதவிகிதமாக நிர்ணயிக்கும் விருப்பத்தை இந்த திட்டம் அளிக்கிறது.
- குறைக்கப்பட்ட காத்திருப்பு காலம் – மகப்பேறு: அதிகப்படியான ப்ரீமியம் தொகை செலுத்தி பிரசவ செலவுகளுக்கான காப்பீட்டு காலத்தை குறைக்க இயலும். பிறந்த குழந்தையின் முதல் வருட காப்பீட்டிற்க்கும் இந்த விருப்ப வசதி பொருந்தும். இதற்கான காத்திருப்பு காலமும் 4 ஆண்டுகளில் இருந்து 2 வருடமாக( பாலிசிதொடங்கிய காலம் முதல் ) குறைக்கப்படும்.
- மூத்த குடிமக்களுக்கான கட்டாய ‘கோ-பே’ தள்ளுபடி: ஒரு சிறிய தொகையை அதிகப்படி ப்ரீமியம் ஆக செலுத்தி 65 வயதிற்கு மேற்பட்ட காப்பீடு செய்துகொண்ட நபர் மூத்த குடிமக்களுக்கான கட்டாய ‘கோ-பே’நிபந்தனையை இந்த திட்டத்தின் கீழ் விருப்பப்பட்டால் தேர்வு செய்யலாம்.
- சிக்கலான நோய்களுக்கான கூடுதல் காப்பீடு: 18 முதள் 65 வயது வரை உள்ள பாலிசிதாரர்களுக்காக சிக்கலான நோய் கூடுதல் காப்பீட்டை இந்த திட்டத்தில் மேற்கொண்டு இணைக்க இயலும். இந்த விருப்ப இணைப்பின் கீழ் சிக்கலான நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு சமமான தொகை மொத்தமாக அளிக்கப்படும். குடும்ப ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை 100 சதவிகிதம் அளவு மீண்டும் திரும்ப உயர்த்தப்படும்.
- கட்டணமில்லா நோக்கு காலம்: பாலிசி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 15 நாட்கள் கட்டணமில்லா நோக்கு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது தகுந்த காரணத்தை காட்டி பாலிசிதாரர் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளாம். காப்பீட்டு கோரிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை எனில், செலுத்திய ப்ரீமியம் திரும்ப அளிக்கப்படும்.
- கருணை காலம்: பாலிசி முடிவு பெற்றபின் கருணைக்காலமாக ஒரு மாதம் அளிக்கப்படும். இந்த காலத்தில் பாலிசியை புதுப்பிக்க இயலும் காப்பீட்டு வசதியும் தொடரப்படும்.
- வரி சலுகைகள்: இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 80 d யின் கீழ் வரி சலுகை அளிக்கப்படும்.
- பாலிசி ரத்து செய்தல்: இந்த திட்டததை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து கொள்ள இயலும். செலுத்திய ப்ரீமியம் திரும்ப அளிக்கப்படும்.
மேலும் அளிக்கப்படும் தள்ளுபடிகள்:
- குடும்பத்திற்கான தள்ளுபடி: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப த்தினரை தனி நபர் திட்டத்தில் இணைத்தால் ப்ரீமியம் தொகையில் 25% தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
- நீண்ட கால பாலிசி தள்ளுபடி: பாலிசி காலமாக இரண்டு ஆண்டுகளை தேர்வு செய்தால் 7.5% தள்ளுபடியும் மூன்று ஆண்டு கால தேர்வு செய்தால் 10% தள்ளுபடியும் அளிக்கப்படும்.
- நோ க்ளைம் போனஸ்: நஷ்ட ஈட்டு கோரிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாத ஒவ்வொரு வருடத்திற்கும் ஊக்க தொகையாக காப்பீட்டு தொகை 10 முதள் 200 சதவீதம் வரை உயர்த்தப்படும்.
- நல்ல உடல் நலனுக்கு வெகுமதி: ப்ரீமியம் தொகையில் 1% க்கு சமமான புள்ளிகளை வெகுமதியாக வருடாந்திர அடிப்படியில் இந்த திட்டம் அளிக்கிறது. சிக்னா வின் ஆன் லைன் வெல்னஸ் திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் பிரிமியம் தொகைக்கு 19% சமமான வெகுமதி புள்ளிகளை மேலும் சேர்க்க முடியும். பாலிசி புதுப்பிக்கும் சமயம் இந்த புள்ளிகளை நீங்கள் பணமாக மாற்றிக்கொள்ளலாம். ஒவ்வொரு புள்ளியின் மதிப்பும் ரூ 1 ஆகும்.
ப்ரோ ஹெல்த் பிளஸ் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கீழ் கண்டவை பாலிசி காலத்தின் விலக்குகள் ஆகும்.
- மகப்பேறு காப்பு: பாலிசி துவங்கிய 48 மாதங்களுக்கே பிறகே மகப்பேறு காப்பீட்டு அளிக்கப்படும்.
- முதலாம் ஆண்டு தடுப்பூசி: 48 மாத காத்திருப்பு காலத்திற்கு பின்னரே இந்த காப்பீடு அளிக்கப்படும்.
- 30 நாள் காத்திருப்பு காலம்: பாலிசி தொடங்கிய 30 நாள் காத்திருப்பு காலதிற்கு பின்னரே எந்த விதமான காப்பீட்டு கோரிக்கையும் சமர்பிக்க இயலும். இந்த காத்திருப்பு காலம், விபத்து தொடர்பானவற்றிற்கும் மற்றும் வேறு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மாற்றப்பட்ட பாலிசிக்கும் (போர்டெட் பாலிசி) பொருந்தாது.
- சர்வைவல் காலம்: சிக்கலான நோய் தொடர்புடைய எந்த க்ளைமையும் பாலிசி தொடங்கிய 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க முடியாது.
- இரண்டு வருட காத்திருப்பு காலம்: முன்னரே நிர்ணயிக்கப்பட்ட நோய்களுக்கு காத்திருப்பு காலம் பாலிசி தொடங்கியதில் இருந்து இரண்டு வருடங்கள்.
ப்ரோ ஹெல்த் பிளஸ் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கீழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளவை நிரந்தர விலக்குகள் ஆகும்
- எச்ஐவி , எய்ட்ஸ் மற்றும் அது தொடர்புடைய பால் வினை நோய்களுக்கு செலவழித்த மருத்துவ செலவுகள்.
- மரபியல் குறைபாடுகள்: மரபியல் குறைபாடுகளுக்காக மேற்கொண்ட சிகிச்சை செலவுகள்
- மன நோய்கள்: மன நோய்கள் தொடர்பாக மேற்கொண்ட சிகிச்சை செலவுகள்
- போதை மருந்து துர் பிரயோகம் மற்றும் தற்கொலை: போதை மருந்து துர் பிரயோகம் மற்றும் தற்கொலை முயற்சிகளுக்கு செலவழித்த தொகை
- கர்ப்பம் மற்றும் மகப்பேறு: கர்ப்பம் மற்றும் மகப்பேறு தொடர்புடைய மருத்துவ செலவுகள்
- ரிஸ்டோரேஷன் பெனிஃபிட்: மகப்பேறு காப்பீடு, பிறந்த குழந்தைகக்கான காப்பீடு, வெளிநாடுகளில் அவசர மருத்துவ உதவி காப்பீடு போன்றவற்றின் கீழ் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளால் ரிஷ்டோரேஷன் பெனிஃபிட் அளிக்கப்படமாட்டாது.
- வாலண்டரி கோ பே மற்றும் தள்ளுபடி செய்யப்படுபவை: இந்த திட்டத்தில் வாலண்டரி கோ பே மற்றும் கட்டாய தள்ளுபடிகளை தேர்வு செய்ய முடியாது.
- முன்னரே இருக்கும் நோய்கள்: உடலில் பாலிசி எடுக்கும் முன்னரே இருக்கும் நோய்களுக்கு 36 மாத காத்திருப்பு காலத்திற்கு பின்னரே காப்பு அளிக்கப்படும்.
- வரி சலுகைகள்: ப்ரீமியம் தொகை கேஷ் மூலம் செலுத்தப்பட்டால், வருமான வரி சட்டம் 80 Dயின் கீழ் உள்ள வரி சலுகை அனுமதிக்கப்படமாட்டாது.
நேஷனல்பரிவார்மெடிகளைம்பிளஸ்:
நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி அளிக்கும் இந்த பிரபலமான திட்டம் அதிக பட்ச காப்பீட்டு தொகையாக ரூ.50 லக்ஷம் மட்டும் இல்லாமல் உங்களுக்கு உகந்த பல கவர்ச்சிகரமான காப்பீட்டு பலன்களையும் வசதிகளையும் அளிக்கிறது. நீங்கள் உங்களையும், குழந்தைகள், மனைவி/கணவர், பெற்றோர், மாமனார்/மாமியார் உள்பட உங்களுடைய மொத்த குடும்பத்தையும் ஃப்லோட்டர் முறையில் காப்பீடு செய்யலாம்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு
பெரியவர்கள்: 18 முதல் 65 வருடங்கள் வரை
குழந்தைகள் : 3 மாதம் முதல் 18 வருடங்கள் வரை
- பணமில்லா மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது
- 1, 2 மற்றும் 3 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்ய இயலும்
- வாழ் நாள் வரை செல்லுபடியாகும் பாலிசி
- புதுப்பிக்கும் வசதிகள்
- மலிவான பரீமியத்தில் விரிவான காப்பீட்டு திட்டம்
- தனி மனித மற்றும் குடும்ப ஃப்லோட்டர் பாலிசிகள்
- காத்திருப்பு காலத்திற்கு பின் முன்னரே இருக்கும் நோய்களுக்கும் காப்பீடு வசதி
- ப்ரீமியம் தொகைக்கு வருமான வரி சலுகைகள்
விலக்குகள்;
- காத்திருப்பு காலம் வரை முன்னரே உள்ள வியாதிகள்
- கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள்
- மரபு நோய்களுக்கும் உடல் பருமன் குறைக்கவும் ஆன மருத்துவ செலவுகள்
- அழகு மேம்படுத்தும் சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் மாற்று முறைகள்
- பால்வினை நோய்களுக்கான சிகிச்சை
- நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளுக்கான மருத்துவ செலவுகள்
- உளவியல் மற்றும் மன நல கோளாறுகள்
நியூஇந்தியாஅஷ்யூரன்ஸ்சீனியர்சிட்டிசன்மெடிக்ளைம்பாலிசி:
யாராக இருந்தாலும் நிச்சயமாக திடீர் மருத்துவ செலவுகள் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சீனியர் சிட்டிசன் மெடிக்ளைம் பாலிசி மருத்துவ செலவுகள் மட்டும் இன்றி பாலிசியின் காப்பீட்டை அதிகரிக்க மேலும் பல விருப்ப சேர்க்கை பலன்களையும் அளிக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- 60 முதல் 80 வயதுள்ள எவரும் இந்த திட்டத்தை வாங்கலாம்.
- காப்பீட்டு தொகை ரூ.1 லக்ஷம் அல்லது ரூ.1.5 லக்ஷம்
- பாலிசி புதுப்பிக்கும் போது ஒவ்வொரு க்ளைம் எதுவும் இல்லாத வருடத்திற்கும் 5% வீதம் கூட்டு போனஸ் ஆக அதிகபட்சம் 30% வரை அளிக்கப்படும்.
- கணவர்/மனைவி யும் காப்பீடு செய்து இருந்தால், 10% குடும்ப தள்ளுபடி வழங்கப்படும்.
- அரசாங்க மருத்துவ மனைகளில் எடுத்துக்கொண்ட ஆயூர்வேதிக்/ ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட தொகையே அளிக்கப்படும் விவரங்களுக்கு பாலிசி டாக்குமென்ட் ஐ பார்க்கவும்.
- 18 மாத காத்திருப்பு காலத்திற்கு பின் முன்னரே இருக்கும் நோய்கள்/வியாதிகளுக்கு காப்பீடு அளிக்கப்படும்.
- முன்னரே இருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்கள் 18 மாத காலத்திற்கு பின் அதிகபபடியான ப்ரீமியம் செலுத்தியபின் காப்பீட்டில் இணைக்கப்படும்.
விலக்குகள்:
- முன்னரே இருக்கும் நோய்களுக்கு 18 மாத தொடர் பாலிசி காலம்
- பாலிசி தொடக்கத்தில் இருந்து 30 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களுக்கான காப்பீடு
- முன்னரே இருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்கள் 18 மாத காலத்திற்கு பின் அதிகபபடியான ப்ரீமியம் செலுத்தியபின் காப்பீட்டில் இணைக்கப்படும்
- விபத்துகள் தவிர மற்ற அழகூட்டும் ஒப்பனை அறுவை சிகிச்சைகள்
- கர்ப்பம் மற்றும் குழந்தை பேறு தொடர்புள்ள சிக்கல்கள்
- எச்ஐவி மற்றும் பால்வினை நோய் சிகிச்சை
ஓரியண்டல்இண்டிவிஜூவல்மெடிக்ளைம்ஹெல்த்இன்சூரன்ஸ்பாலிசி
ஓரியண்டல் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் இந்த மெடிக்ளைம் பாலிசி ஒரு பிரபலமான திட்டமாகும். 18 முதல் 65 வயது வரை உள்ள தனி மனிதர்கள் இதில் சேர இயலும். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் ஃபேமிலி ஃப்லோட்டர் திட்டத்தில் அளிக்கப்படும் தள்ளுபடி ஆகும்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- அனுமதிக்கப்படும் உயர்ந்த பட்ச வயது 70 வருடங்கள் வரை நீட்டிப்பு
- காப்பீட்டு தொகை ரூ 1 லக்ஷம் முதல் ரூ 10 லக்ஷம் வரை வேறுபடுகிறது
- குடும்பத்திற்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது
- 55 வயது வரை மருத்துவ பரிசோதனை தேவை இல்லை
- அறுவை சிகிச்சை மருத்துவர் கட்டணம், தீவிர சிகிச்சை பிரிவு கட்டணம், தங்கும் அறை வாடகை, அறுவை சிகிச்சை அறை கட்டணம், எக்ஸ்ரே, பரிசோதனை கட்டணம், டயாலிசிஸ், கீமோதெரபி, ஆய்வக கட்டணம் போன்ற பொது மருத்துவ செலவுகளை இந்த திட்டம் அளிக்கிறது.
விலக்குகள்
- போதை மருந்து மற்றும் மதுபானம் போன்றவற்றால் தோன்றிய நோய்கள்
- சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள்
- தற்கொலை முயற்சி
- அபாயகரமான செயல்களில் ஈடுபட்டதால் ஏற்பட்ட காயங்கள்
ரகேஜாகியூப்காம்பிரெஹென்சிவ்பிளான்
ரகேஜா கியூப் ஹெல்த் கியூப் காம்பிரெஹென்சிவ் பிளான் பேசிக், காம்பிரெஹென்சிவ் மற்றும் சூப்பர் சேவர் என மூன்று வடிவில் கிடைக்கின்றது. 90 நாள் முதல் 65 வருடம் வயது உள்ளவர்களுக்கு இந்த திட்டம் காப்பீட்டை அளிக்கிறது. சார்ந்து இருப்பவர்களுக்கு வயது வரம்பு 18 வருடம் முதல் 65 வருடங்கள் வரை ஆகும்.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- வாழ் நாள் வரை புதுப்பிக்கும் வசதி உள்ளது
- பாலிசி காலம் 1 அல்லது 2 வருடங்கள்
- தனிப்பட்ட காப்பீடும் ஃபேமிலி ஃப்லோட்டர் திட்டமும் உள்ளது
- காப்பீடு செய்யப்பட்ட நபர் பெரும் உடல் உறுப்பை தானமாக அளிப்பவரின் மருத்துவ செலவிற்கு காப்பீடு அளிக்கிறது
- ஃபேமிலி ஃப்லோட்டர் காப்பு அதிக பட்சம் 2 வாலிப வயதினருக்கும் 2 குழந்தைகளுக்கும் அளிக்கிறது
- சில குறிப்பிட்ட மருத்துவம் அல்லாத செலவுகளும் அனுமதிக்கப்படும்
விலக்குகள்
- இந்தியாவிற்கு வெளியே பெற்ற சிகிச்சை
- அல்லோபதி அல்லாத சிகிச்சை
- கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள்
- பால்வினை நோய்களும் அது தொடர்பான வியாதிகளும்
ராயல்சுந்தரம்லைப்லைன்சுப்ரீம்ஹெல்த்இன்சூரன்ஸ்பிளான்
மருத்துவ சிகிச்சை செலவுகள், பகல் நேர சிகிச்சை முறைகள், வீட்டிலேயே தங்கி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, மற்றும் ஆயுஷ் சிகிச்சை முறைகள் போன்ற அனைத்து மருத்துவ செலவுகளுக்கும் காப்பீடு அளிக்கும் இந்த லைப்லைன் சுப்ரீம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி ஒரு பிரபலமான திட்டமாகும். தனி மனிதர்களுக்கும் குடும்பதினருக்கும் இந்த திட்டம் ஒரு விரிவான காப்பீட்டை அளிக்கிறது. விலங்கு கடிகளுக்கான தடுப்பூசி, வருடாந்திர உடல் பரிசோதனை, 11 சிக்கலான நோய்களுக்கு இரண்டாவது மருத்துவர் கருத்து மற்றும் உள்நாட்டு அவசர வெளியேற்றம் போன்ற செலவுகளையும் இந்த திட்டம் அனுமதிக்கிறது.
காப்பீட்டு வகைகள்
இந்த திட்டம் தேவையான பல வகையான காப்பீடுகளோடு வேறு பல விருப்ப மருத்துவ பலன்கள் மற்றும் சிக்கான நோய் பாதுகாப்பு (விரும்பி எடுத்திருந்தால்) இவற்றை அளிக்கிறது. லைப்லைன் சுப்ரீம் பாலிசி ரூ.5 லக்ஷம், ரூ.10 லக்ஷம், ரூ.15 லக்ஷம், ரூ.20 லக்ஷம் மற்றும் ரூ.50 லக்ஷம் போன்ற பல காப்பீட்டு தொகைகளோடு கிடைக்கின்றன.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- உள் நோயாளி மருத்துவ செலவுகள்: காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை மருத்துவ செலவுகள் அனுமதிக்கப்படுகின்றன.
- மருத்துவ சிகிச்சைக்கு முன் மற்றும் பின்னர் ஆன செலவுகள்: இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நோய் அல்லது காயங்களுக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் 60 நாட்கள் முன்னரும் மருத்துவ மனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 90 நாட்கள் வரையும் ஆகும் செலவுகளை அளிக்கும்
- பகல் நேர சிகிச்சை முறைகள்: அனைத்து பகல் நேர சிகிச்சை முறைகளுக்கும் காப்பீடு செய்த தொகை வரை அனுமதிக்கப்படும்.
- ஆம்புலன்ஸ் கட்டணம்: அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ரூ.5000 வரை ஆம்புலன்ஸ் கட்டணம் அனுமதிக்கப்படும்.
- உடல் உறுப்பு தான மாற்று சிகிச்சை செலவுகள்: காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை உறுப்பு உறுப்பை எடுக்க தானம் கொடுப்போருக்கான செலவுகள் அனுமதிக்கப்படும்.
- வீட்டிலேயே தங்கி எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சை: காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை வீட்டிலேயே தங்கி எடுக்கப்படும் சிகிச்சை செலவுகளுக்கு காப்பு அளிக்கப்படும்.
- நோக்ளைம் போனஸ்: பாலிசி புதுப்பிக்கப்படும் போது நோ க்ளைம் போனஸ் தொகை காப்பீடு செய்த தொகையில் 20 முதல் 100 சதவீதம் வரை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். காப்பீட்டு கோரிக்கை சமர்ப்பித்து இருந்தாலும், நோ களைம் போனஸ் தொடர்ந்து கொடுக்கப்படும்.
- காப்பீடு செய்த தொகையை மீண்டும் நிரப்புதல்: காப்பீடு செய்த தொகை முழுவதும் உபயோகிக்கப்பட்ட சமயத்தில், மீண்டும் அந்த தொகை 100% வரை திரும்ப நிரப்பப்படும்.
- ஆயுஷ் சிகிச்சை: இந்த திட்டத்தின் கீழ் ரூ.30,000 வரை உள் நோயாளி பிரிவில் ஆயுர்வேதா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி வகைகளில் எடுக்கும் சிகிச்சை செலவுகள் காப்பீடாக அளிக்கப்படும்.
- விலங்குகடி தடுப்பூசி: விலங்கு கடிக்கான தடுப்பூசி/ எதிப்பு ஊசி செலவுகள் ரூ 5000 வரை காப்பு அளிக்கப்படும்
- வருடாந்திர மருத்துவ சோதனை பலன்: காப்பீட்டு கோரிக்கை சமர்ப்பித்து இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் 18 வயது நிரம்பிய நபர்களுக்கான வருடாந்திர மருத்துவ பரிசோதனை செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.
- இரண்டாவது மருத்துவர் கருத்து வசதி: குறிப்பிடப்பட்டுள்ள 11 சிக்கலான நோய்களுக்கானகண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக இரண்டாவது மருத்துவரின் கருத்தை பெறுவாதவதற்கான செலவுகள் காப்பீட்டில் அடங்கும்.
- அவசர உள்நாட்டு வெளியேற்ற செலவுகள்: அவசர காலத்தில் இந்திய நாட்டிற்குள் கட்டாய வெளியேற்ற தேவை ஏற்பட்டால் அதன் செலவுகள் ரூ 1 லக்ஷம் வரை அனுமதிக்கப்படும்.
- மருத்துவமனை பண உதவி: காப்பீடு செய்து கொண்ட நபர் இரண்டு நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ 2000 வீதம் 30 நாட்களுக்கு மருத்துவமனை நிதியாக அளிக்கும் வசதியை இந்த திட்டம் அளிக்கிறது. இந்த திட்டத்தை அதற்க்கு உரிய அதிக ப்ரீமியம் செலுத்தி பெற இயலும்.
காலத்தை ஒட்டிய விலக்குகள்
லைப்லைன் சுப்ரீம் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள காலத்தை ஒட்டிய விலக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன
- முன்னரே இருக்கும் நோய்கள்: திட்ட காலத்திற்கு முன்னரே உடலில் உள்ள பாலிசியில் குறிப்பிடப்பட்ட நோய்கள் மற்றும் அதன் விளவுகள் 36 மாத தொடர் பாலிசி காலம் வரை காப்பீட்டில் சேராது. பாலிசிகாலம் முடிந்த பின் எந்த விதமான க்ளைமும் அதன் கீழ் அனுமதிக்கப்படாது.
- காத்திருப்பு காலம்: பாலிசியின் முதல் 30 நாட்களுக்குள் காப்பீடு செய்துகொண்டவருக்கு ஏற்படும் எந்த விதமான எந்தவிதமான நோய்களுக்கும், வியாதிகளும் காப்பீடு கிடையாது.
- சிக்கலான நோய்கள்: திட்டம் துவங்கிய முதல் 90 நாட்களுக்குள் காப்பீடு செய்துகொண்டவறுக்கு ஏற்படும் எந்த சிக்கலான நோய்களுக்ம் இந்த திட்டத்தில் காப்பீடு கிடையாது.
- குறிப்பிட்ட நோய்கள்: பிநென் புரோஸ்டேடிக் ஹைபர்டிராபி, கண் புரை நீக்கல், இடுப்பு அல்லது முழங்கால் மாற்று சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பின் இறுதி நிலை போன்ற குறிப்பிட்ட வியாதிகளுக்கள் பாலிசி வாங்கிய முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் காப்பீட்டில் அடங்காது.
விலக்குகள்:
- சாகச மற்றும் ஆபத்தான விளையாட்டுகளில் பங்கு கொண்டதனால் ஏற்பட்ட சிகிச்சை செலவுகள்
- பருவம் அடைய மற்றும் முதுமை அடையாமல் இருக்க எடுத்துக்கொண்ட சிகிச்சை செலவுகள்
- செயற்ககை முறையில் உயிர் வாழ தேவையான செலவுகள்
- மருத்துவ பேப்பர் மற்றும் ஆவணங்கள் தொடர்பான செலவுகள்
- சுன்னத்சிகிச்சை செய்தவற்றிக்கு சிகிச்சை செலவுகள்
- கோளாறுகள் மற்றும் பூசல்கள் தொடர்பாக செலவிட்ட தொகை
- பிறவி கோளாறுகளை நிவர்த்திக்கும் சிகிச்சை செலவுகள்
- உடல் நிலை தேற மற்றும் மறு வாழ்வு செலவுகள்
- அழகு மேம்படுத்தும் சிகிச்சை செலவுகள்
- பல் மற்றும் வாய் வழி சிகிச்சை மருத்துவ செலவுகள்
- போதை மருந்து சிகிச்சை செலவுகள்
- வெளி நோயாளி சிகிச்சை பிரிவில் காயத்திற்கு மருந்து போடும் செலவு
- கண் பார்வை தொடர்பான செலவுகள்
- ஹெல்த் ஸ்பா செலவுகள்
- இயற்கை வைத்திய முறை செலவுகள்
- நல்வாழ்வு களினிக்ஸ் செலவுகள்
- எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் சிகிச்சை செலவுகள்
- பரம்பரை நோய்கள் குணமாக்கும் செலவுகள்
- நோய் கண்டுபிடிக்க அல்லது அதன் தன்மையை அறிய தேவைப்பட்ட மருத்துவமனை செலவுகள்
- சுய நலன் மற்றும் வசதிக்கு தேவைப்பட்ட பொருள்கள் விலை
- மன நல கோளாறு மற்றும் உளவியல் சிகிச்சை செலவுகள்
- உடல் பருமன் தொடர்பான செலவுகள்
- வெளி நோயாளி சிகிச்சை செலவுகள்
- முன் தடுப்பு பராமரிப்பு மற்றும் இனப்பெருக்க மருந்து செலவுகள்
- சுயமாக ஏற்ப்படுத்திக்கொண்ட காயங்களுக்கு சிகிச்சை செலவுகள்
- பாலியல் சிக்கல்கள், செயலிழப்பு, மற்றும் பாலின தொடர்பான குறைபாடுகள் இவற்றிக்கான சிகிச்சை செலவுகள்
- எச்ஐவி மற்றும் பால் வினை நோய் சிகிச்சை செலவுகள்
- தூக்க குறைபாடுகள் மற்றும் பேச்சு குறைபாடுகள் போன்றவற்றின் மருத்துவ செலவுகள்
- ஸ்டெம் செல் மாற்றுதல்
- தலை வழுக்கை தொடர்பான சிகிச்சை செலவுகள்
- வளர்ச்சி குறைபாடுகள் சிகிச்சை செலவுகள்
- இந்திய எல்லைகளுக்கு வெளியே பெற்ற சிகிச்சை செலவுகள்
- சோதனை முறை மற்றும் நிரூபிக்கப்படாத முறை சிகிச்சை செலவுகள்
- அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை மற்றும் மருத்துவரிடம் பெற்ற சிகிச்சை செலவுகள்
- தொடர்பில்லாத பரிசோதனை சாலை செலவுகள்
- சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதானல் ஏற்ப்பட்ட காயங்களின் சிகிச்சை செலவுகள்
ரிலையன்ஸ்கிரிடிகல்இல்னஸ்இன்சூரன்ஸ்
ரிலையன்ஸ் கிரிடிகல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி சில குறிப்பிட்ட வாழ்வை அச்சுறுத்தும் நோய்களுக்கும் மிக கொடிய சிக்கலான நோய்களுக்கும் காப்பீட்டை அளிக்கிறது. மிக விலை உயர்ந்த சிகிச்சை செலவுகளை அடங்கிய சில குறிப்பிடப்பட்டுள்ள சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை செலவுகளை காப்பீட்டு நிறுவனம் அளிக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- 45 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு முன் மருத்துவ பரிசோதனை இல்லை
- 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாங்கலாம்
- கேன்சர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைமல்டிபிள் ஸ்களீரோசிஸ் (தண்டுவட நோய்), இதய வால்வு மாற்றுதல்/சரி செய்தல்
மூன்றாம் தர தீ காயங்கள், வழுக்கை தலை முடி பொருத்துதல், கோமா, கண் பார்வை இல்லாமை, சிறுநீரக செயலிழப்பு போன்ற வியாதிகள்
- நேப்ட், UPI டெபிட் / கிரெடிட் கார்ட் போன்ற சுலபமான ஆன்லைன் பேமண்ட்வசதிகள்
விலக்குகள்
- எச்ஐவி மற்றும் பால் வினை நோய் சிகிச்சை செலவுகள்
- சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் மற்றும் தற்கொலை முயற்சி சிகிச்சை செலவுகள்
- போதை மருந்து மற்றும் மதுபானம் தொடர்பான உடல் வியாதிகளுக்கான சிகிச்சை செலவுகள்
- சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதானல் ஏற்ப்பட்ட காயங்களின் சிகிச்சை செலவுகள்
- பிறவி கோளாறுகளை நிவர்த்திக்கும் சிகிச்சை செலவுகள்
- பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை செலவுகள்
- மன நோய்களுக்கான மருத்துவ செலவுகள்
- அழகூட்டும் மற்றும் மேம்படுத்தும் சிகிச்சை செலவுகள்
ஸ்டார்சீனியர்சிட்டிசன்ரெட்கார்பெட்ஹெல்த்இன்சூரன்ஸ்பிளான்
ஸ்டார் சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வயது முதிர்ந்தவர்களுக்கான ஒரு திட்டமாகும். மூத்த வயது காரணமான நோய்களால் மூத்த குடி மக்கள் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் இந்த திட்டம் அவர்களுக்கு விரிவான காப்பீட்டை முன்னரே இருக்கும் நோய்களுக்கும் சேர்த்து அளிக்கிறது. பாலிசி எடுக்கும் முன் தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளில் இருந்து விலக்கு அளிப்பதோடு இல்லாமல் அவர்களின் மருத்துவ ஆலோசனைகளுக்கான கட்டணத்தையும் அளிப்பது இந்த பாலிசியின் சிறப்பு அம்சமாகும். அது மட்டுமின்றி இந்த திட்டம் தனி நபருக்கும் ஃபேமிலி ஃப்லோட்டர் முறையிலும் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- காப்புகள்: 60 முதல் 75 வயது வரையான மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் உதவுகிறது.
- முன் மருத்துவ பரிசோதனை இல்லை: எந்த முன் மருத்துவ பரிசோதனையும் இன்றி இந்த திட்டம் அளிக்கப்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், யூரியா, கிரியேடின் மற்றும் ஸ்ட்ரெஸ் தள்ளியம் போன்றவற்றின் சோதனை முடிவுகள் கொடுக்கப்பட்டால், தள்ளுபடி 10% அதிகம் அளிக்கப்படும்.
- முன்னரே இருக்கும் நோய்களுக்கு காப்பீடு: ஒரு வருட காத்திருப்பு காலத்திற்கு பின்னர் முன்னரே இருந்த நோய்களுக்கும் காப்பீடு அளிக்கப்படுகிறது.
- மருத்துவ ஆலோசனை காப்பு: காப்பீட்டு நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் மருத்துவ ஆலோசனை பெற இந்த திட்டம் காப்பு அளிக்கிறது.
- அதிகரிக்கப்பட்ட காப்பீடு தொகை: இந்த திட்டம் அதிகரிக்கப்பட்ட காப்பீட்டு தொகையாக ரூ 25 லக்ஷம் வரை அளிக்கிறது.
- வாழ் நாள் வரை புதுபித்தல்: வாழ் நாள் வரை புதுப்பிக்கும் உத்திரவாதம் அளிக்கும் திட்டத்தை அளிக்கிறது.
- தள்ளுபடிகள்: ஆன்லைன் மூலம் இந்த ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் வாங்கும்போது ப்ரீமியம் தொகையில் தள்ளுபடியாக 5% அளிக்கப்படும்.
- மருத்துவ காப்பீடுகள்: காப்பீடு சேந்துகொண்டவர் உள்நோயாளியாக குறைந்தது 24 மணி நேரம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இந்த திட்டம் அவருடைய செலவுகளுக்கு காப்பு அளிக்கிறது.இதன் கீழ் நர்ஸிங் மற்றும் உணவு கட்டணம், அறை வாடகை, அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம், மயக்கமருந்து நிபுணர் கட்டணம், மருத்துவர் கட்டணம், சிறப்பு மருத்துவர் கட்டணம், மருத்துவ ஆலோசனை நிபுணர் கட்டணம், மருந்துகள் மற்றும் மருத்துவ செலவுகள் போன்றவை அவர் தேர்வு செய்யப்பட்ட தொகை வரை காப்பு அளிக்கப்படுகிறது.
- அவசர ஆம்புலன்ஸ் காப்பு: இந்த திட்டத்தின் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன்னரே முடிவு செய்யப்பட்ட அவசர ஆம்புலன்ஸ் தொகைஅளிக்கப்படும்,.
- மருத்துவ சிகிச்சைக்கு பின் ஆகும் செலவுகள்: இந்த திட்டம் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ஆகும் மருத்துவ செலவுகளை முன்னரே முடிவு செய்த தொகை (மொத்த தொகை ) வரை அளிக்கிறது.
- பகல் நேர சிகிச்சை முறை : குறிப்பிட்ட பகல் நேர சிகிச்சை முறைகளுக்கு காப்பு அளிக்கிறது.
- உள் வரம்புகள்: குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் உள் வரம்புகள் விதிக்கப்படுள்ளன.
- தொல்லை இல்லா தீர்வு: மூன்றாம் தரப்பு நிர்வாகியின் தலையீடு இல்லாத காரணத்தால் களைம் தீர்வு சுலபமாக இருக்கும். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சொந்த களைம் துறை துரிதமாக தீர்வு அளிக்கிறது,
- பணமில்லா மருத்துவ சிகிச்சை: இந்த திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சை அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு மருத்துவமனைகளில் அளிக்கப்படும்.
- பரந்த தொடர்பு மருத்துவ மனைகள்: இந்தியா முழுவதும் 8400 இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.
- வெளிப்புற நோயாளி ஆலோசனை: இணைப்பிலுள்ள மருத்தவ மனைகளில் வெளி நோயாளி பிரிவில் மருத்துவ ஆலோசனை பெற்றால், இந்த திட்டம் ஒரு ஆலோசனைக்கு ரூ.200 திரும்ப அளிக்கிறது.
- மருத்துவ பரிசோதனை: ஒவ்வொரு களைம் இல்லாத வருடத்திற்கும் தொடர்பு மருத்துவமனைகளில்மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால் இந்த திட்டத்தின் கீழ் அந்த கட்டணம் திரும்ப அளிக்கிறது.
- இலவச மீண்டும் நோக்கு காலம்: இந்த பாலிகயின் கீழ் இலவச மீண்டும் நோக்கும் காலமாக 15 நாட்கள் அனுமதிக்கபடுகிறது. அந்த காலத்தில் எந்த பிடித்தமும் இல்லாமல் பாலிசியை ரத்து செய்து கொள்ள இயலும்.
- வரி சலுகை: இந்த திட்டத்தில் பாலிசிதாரர் வருமான வரி சட்டம் பிரிவு 80 d யின் கீழ் வரி சலுகை பெற இயலும்.
விலக்குகள்
- அனைத்து நோய்களுக்கும் காத்திருப்பு காலம் முதல் 30 நாட்கள்
- கண் புரை நீக்கம், தைராய்டு தொடர்பான நோய்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஹெர்னியா, இனப்பெருக்க மருத்துவ சிகிச்சை, புரோஸ்டேட், வரிகோஸ் வைன், பிறவி உள் நோய்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கு காத்திருப்பு காலம் இரண்டு வருடங்கள்.
- முன்னரே இருக்கும் நோய்களுக்கு காத்திருப்பு காலம் ஒரு வருடம்.
- சுன்னத் மற்றும் அதன் தொடர்பான முறைகள்
- தடுப்பூசி( விலங்கு கடி தொடர்பான சிகிச்சைகளை தவிர்த்து)
- வெளிப்புற பிறவி மாறுபாடுகள்/குறைகள்
- பல் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் லேசிக் லேசர் அறுவை சிகிச்சை
- உடல் நலம் தேறும் காலம்
- உளவியல், மன நோய்கள், நடத்தை வேறுபாடுகள், சுயமாக காயப்படுத்திக்கொள்ளுதல்
- போதை மருந்துகள், மதுபானம், புகை பிடித்தல் உபயோகம்
- பால்வினை நோய்கள், விரை வீக்கம், எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் அது தொடர்பான நோய்கள்
- போர் மற்றும் போர் போன்ற காலம், அந்நிய நாட்டு எதிரி செயல்கள்
- கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்ற தொடர்புடைய முறைகள், குழந்தை இல்லாமைக்கு
- மருத்துவம், செயற்கை முறை கர்ப்பம்
- உடல் பருமன் குறைக்கும் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை
- தூக்க நோய்களுக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
- அதி தீவிர ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்ட், டீப் ப்ரெய்ன் ஸ்டிமுலேஷன், ஃபஐப்ரொய்ட் எம்போலிசெஷன், பலூன் சினாபிளாஸ்டி மற்றும் அது தொடர்புடைய முறைகள் போன்றவற்றின் கட்டணம்.
- ஒப்பாத பரிசோதனை முறைகள் மற்றும் தேவையற்ற மருத்துவமனை அனுமதி
- நிரூபிக்கப்படாத, சோதனை முறை, பழக்கத்தில் இல்லாத மற்றும் தேவையற்ற சிகிச்சைகள்
- ஸ்டெம் செல் தெரப்பி, பிளேட்லேட் ரிச் பிளாஸ்மா முறைகள், மற்றும் காண்ட்ரோசைட் உள் புகுத்துதல்
- ஓரல் கீமோதெரபி
- ஒப்பனை மற்றும் அழகு மேம்படுத்தும் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி
- காண்டாக்ட் லென்ஸ், கண் கண்ணாடி, மற்றும் ஊக்க சத்து மருந்துகள், விட்டமின்கள்
- இன்ன பிற மருத்துவ மனை செலவுகள்
எஸ்பிஐஆரோக்யபிரிமியர்பாலிசி
சிகிச்சைக்கு முன்னர் 60 நாட்களுக்கும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் 90 நாட்கள் வரையும் அடங்கிய மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு அளிக்கும் எஸ்பிஐ ஆரோக்ய பிரிமியர் பாலிசி எஸ்பிஐ ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒரு விரிவான மருத்துவ பாதுகாப்பு திட்டமாகும். ஆகாய ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ.1 லக்ஷம் வரையும் 9 மாத காத்திருப்பு காலத்திற்கு பிறகு மகப்பேறு செலவுகளையும் அளிக்கும் இவை இரண்டும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
எஸ்பிஐ ஆரோக்ய பிரிமியர் பாலிசியின் முக்கிய அம்சங்கள்:
- காப்பீட்டு தொகை ரூ.10 லக்ஷம் முதல் ரூ.30 லக்ஷம் வரை
- பகல் நேர சிகிச்சை முறை செலவுகள் 142 நாட்கள் வரை அனுமதிக்கப்படுகிறது
- 55 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ சோதனை இல்லை
- தனிப்பட்ட மனிதர் பாலிசி மற்றும் ஃப்லோட்டர் திட்டங்கள் கிடைக்கின்றன
- இந்திய வருமானவரி சட்டம் பிரிவு 80 ட இன் கீழ் வரிசலுகை அளிக்கப்படுகிறது
எஸ்பிஐ ஆரோக்ய பிரிமியர் பாலிசியில் அனுமதிக்கப்பட்டவை
- ஹோமியோபதி, ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி போன்ற மாறுபட்ட மருத்துவ முறைகள்
- நான்கு தொடர் களைம் எதுவும் இல்லாத காலத்திற்கு பி, மருத்துவ பரிசோதனை செலவு ரூ,5000 வரை திரும்ப அளிக்கப்படும்
- களைம் காரணமாக காப்பீட்டு தொகை குறைந்து போனால், மீண்டும் 100% காப்பீட்டு தொகை திரும்ப அளிக்கப்படும்
- உறுப்பு தானம் அளிக்கும் நபருடைய செலவுகள் அனுமதிக்கப்படும்
* வீட்டிலேயே தங்கி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை செலவுகள் அடங்கும்
- மயக்க மருந்து செலவுகள்,ஆக்ஸிஜன், மருந்துகள், அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சை உபகரணங்கள், கீமோதெரபி, டயாலிசிஸ், ரேடியோ தேரபி, பேஸ்மேக்கர் விலை, போன்ற தொடர் செலவுகள்
- பிஸியோதெரபி மற்றும் பரிசோதனை முறைகள்
- அறை வாடகை, மருத்துவர் ஆலோசனை கட்டணம், காயம் கட்டுபோடும் செலவுகள், நர்சிங் செலவுகள்
எஸ்பிஐ ஆரோக்ய பிரிமியர் பாலிசியின் விலக்குகள்
- எய்ட்ஸ் / எச்ஐவி மற்றும் பால்வினை நோய்கள்
- சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள், மன அழுத்தம் மற்றும் மன கோளாறுகள்
- போதை மருந்து பழக்கம் நீங்க எடுத்தக்கொண்ட மருத்துவ செலவுகள் மற்றும் மது அடிமைத்தனம் நீங்க எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள்
டாடா ஏஐஜி மெடிப்ரைம் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்
டாடா ஏஐஜி ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பனி வழங்கும் பிரபலமான திட்டம் டாடா ஏஐஜி மெடிப்ரைம் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஆகும். மருத்துவ செலவுகளுக்கான விரிவாக்கப்பட்ட இந்த திட்டம் அவசர மருத்துவ செலவுகளை அளிக்கிறது. மற்ற பிற காப்பீட்டு பலன்களோடு ஆயுஷ் மருத்துவ செலவுகளையும் இது அளிக்கிறது.
சிறப்பு அம்சங்களும் நன்மைகளும்
- 140 வெவ்வேறு பகல் நேர மருத்துவ சிகிச்சை முறைகள்
- வீட்டிலேயே தங்கி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை செலவுகள் காப்பு
- உறுப்பு தானம் செய்வோருக்கான செலவுகளுக்கு இழப்பீடு
- குறிப்பிட்ட தொகை வரை உள்நோயாளி செலவுகள் ஆயுர்வேதம், யுனானி. சித்தா மற்றும் ஹோமியோபதி போன்றவற்றிற்கு காப்பீடு
- 100 % உள் நோயாளி தடுப்பூசி செலவுகள் அளிக்கப்படும். வெளி நோயாளியாக இருந்தால் ரூ.5000 வரை வழங்கப்படும்
விலக்குகள்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் அழகு படுத்தும் ஒப்பனை சிகிச்சை
- நிரூபிக்கப்படாத மற்றும் சோதனை முறை மருத்துவம்
- பால்வினை நோய்கள், எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி
- மேக நோய்கள்
- உறுப்பு தானம் செய்வோருக்கான முதல் கட்ட தேர்வு செலவுகள்
யுனைடெட்இந்தியாயுஎன்ஐகிரிடிகேர்ஹெல்த்இன்சூரன்ஸ்பிளான்
யுனைடெட் இந்தியா யுஎன்ஐ கிரிடிகேர் பாலிசி 11 குறிப்பிட்ட உயிர் கொல்லி நோய்களுக்கு காப்பீடு அளித்து நீங்களும் உங்களுக்கு பிரியமானவர்களும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்கிறது. குறிப்பிட்ட சிக்கலான நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பாலிசிதாரருக்கு ஒரு மொத்த தொகை அளிக்கப்படும்.
சிறப்புகளும் பலன்களும்
- 21 வயது முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த திட்டத்தில் சேரலாம்
- ரூ.1 லக்ஷம், ரூ,3 லக்ஷம் மற்றும் ரூ,5 லக்ஷம் தொகைக்கு காப்பீடு செய்து நோய் சிகிச்சைகளுக்கு பாலிசிதாரர் மொத்த தொகையாக திரும்ப பெறலாம். 3 மாத காத்திருப்பு காலத்திற்கு பின்னும் மற்றும் 30 நாட்கள் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பின்னும் காப்பீட்டு நிறுவனம் நீங்கள் செலவழித்த தொகையை திரும்ப அளிக்கும்.
- கேன்சர், மாரடைப்பு, இதய வால்வு மாற்றம், கரோனரி ஆர்ட்ரி அறுவை சிகிச்சை, சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், உறுப்பு/ எலும்பு மாரோ மாற்றம், கோமா, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை, மல்டிபில் ஸ்க்லரோசிஸ், மோட்டார் நுறான் டீசிஸ், நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு போன்ற சிக்கலான நோய்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்கப்படும்.
விலக்குகள்
- எச்ஐவி / எய்ட்ஸ்
- பிறவி நோய்கள்
- உடல் எடை குறைப்பு திட்டம் மற்றும் அறுவை சிகிச்சை
- கர்ப்பம் மற்றும் அதன் தொடர்பு சிக்கல்கள்
- சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் மற்றும் தற்கொலை முயற்சி
யூனிவர்சல்சோம்போஇண்டிவிஜூவல்ஹெல்த்இன்சூரன்ஸ்
பெயரில் உள்ளது போல யூனிவர்சல் சோம்போ இண்டிவிஜூவல் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் தனி மனிதர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஏற்ற ஓரு திட்டமாகும். குறிப்பிட்ட நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டாளோ அல்லது விபத்து காயங்களாளோ ஏற்ப்பட்ட மருத்துவ செலவுகளுக்கு நஷ்ட ஈடு அளிப்பதோடு வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெரும் செலவுகளையும் அளிக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
- நுழைவு வயது 55 ஆண்டுகளுக்கு குறைவு
- சிக்கலான நோய்களுக்கு விருப்ப தேர்வு
- காப்பீடு நிறுவனத்தின் அலுவலர்களால் அவர்கள் அலுவலத்திலேயே சோதனையிடப்பட்டு தீர்வு வழங்கப்படும்
- வருமான வரி பிரிவு 80 Dயின் கீழ் வரி சலுகை அளிக்கப்படும்
பாலிசியில் அனுமதிக்கப்பட்டவை/பலன்கள்
- சிகிச்சை மற்றும் நர்ஸிங் செலவுகள், அறை வாடகை, தங்கும் மற்றும் உணவு செலவுகள், ரத்தம், ஆக்ஸிஜன் கட்டணம், சிறப்பு மருத்துவர்களின் கட்டணம் போன்றவை.
- நோயாளியை நகர்த்த இயலாத நிலைமையிலோ அல்லது மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காத சமயங்களிக்ளோ, மூன்று நாட்களுக்கு மேற்பட்ட சிகிச்சைகளுக்கு வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுக்கும் வசதி
- காப்பீடு செய்யப்பட்ட தொகை மற்றும் காப்பீடு செய்யப்பட்டவரின் வயது இவை இரண்டையும் பொருத்து ப்ரீமியம் கணக்கிடப்படுகிறது.
- 45 வயதிற்கு குறைந்தவர்களுக்கு முன் மருத்துவ பரிசோதனை இல்லை
- முன்னரே உடலில் இருக்கும் நோய்க்களுக்கு காப்பீடு அனுமதிக்கப்படாது
- பாலிசி தொடங்கிய முதல் 30 நாட்களுக்குள் தோன்றும் எந்த நோய்களுக்கும்
காப்பீடு இல்லை.
- எதிரி நாடு ஆக்கிரமிப்பு மற்றும் போர் காலம்
- கண் கண்ணாடிகள் மற்றும் ஹியரிங் எய்ட்ஸ் விலை
- மருத்துவமனையிள் அனுமதிக்கப்பட தேவை அல்லாத பல் மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை.
- பால்வினை நோய்களுக்கு இந்த திட்டத்தில் காப்பீடு அனுமதிக்கப்படாது
முடிவுரை
ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதென்பது ஒரு சிறு பிள்ளை விளையாட்டு அல்ல. பல காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் பாலிசி வாங்க நீங்கள் நிறைய நேரம் செலவழித்து அவற்றை ஒப்பிட்டு பார்க்க அதிகம் உழைக்க வேண்டும். இந்தியாவில் இருப்பதில் உங்களுக்கு பொருத்தமான ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் சரியான முடிவை நீங்கள் எடுக்க பாலிசிபஜார்ல் இருக்கும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். ஒரு திட்டத்தை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
பொறுப்பு துறப்பு: *எந்தவொரு தனி காப்பீடு நிறுவனரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட காப்பீடு நிறுவனரால் உருவாக்கப்பட்ட திட்டத்தையோ பாலிசிபஜார் உயர்த்தி காட்டவோ , பரிந்துரைக்கவோ , ஒப்புவிக்கவோ இல்லை.